புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10டீமேட். ஏன்? எதற்கு? Poll_m10டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10 
70 Posts - 54%
heezulia
டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10டீமேட். ஏன்? எதற்கு? Poll_m10டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10டீமேட். ஏன்? எதற்கு? Poll_m10டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10டீமேட். ஏன்? எதற்கு? Poll_m10டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10டீமேட். ஏன்? எதற்கு? Poll_m10டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10டீமேட். ஏன்? எதற்கு? Poll_m10டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10டீமேட். ஏன்? எதற்கு? Poll_m10டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10டீமேட். ஏன்? எதற்கு? Poll_m10டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10டீமேட். ஏன்? எதற்கு? Poll_m10டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10 
1 Post - 1%
Guna.D
டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10டீமேட். ஏன்? எதற்கு? Poll_m10டீமேட். ஏன்? எதற்கு? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீமேட். ஏன்? எதற்கு?


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 15/09/2009

Postkavinele Sun 17 Jan 2010 - 21:07

ஷேர்
மார்க்கெட்டில் அடிக்கடி டீ-மேட் ஷேர், டீ-மேட் அக்கவுண்ட் என்று
சொல்லிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்றால் என்னவென்று பல பேருக்குப்
புரிவதில்லை. கேட்கவும் கூச்சமாக இருக்கும். என்னய்யா? இலட்சங்களில்
டிரேடிங் செய்கிறீர்? டீ-மேட் தெரியாதா என்று கேட்டு விட்டால் அசிங்கமாகப்
போகுமே என்று பொத்தாம் பொதுவாக தலையாட்டி விட்டுப் போவார்கள். ஷேர்
வாங்கினோமா, விற்றோமா? இலாபமோ நஷ்டமோ வந்ததா? புலம்பி விட்டு
வீட்டுக்குப் போனோமா என்றே இருப்பார்கள் பலர். ஆனால் இது ரொம்ப
சிம்பிள் விஷயம். புரிந்து கொள்வதும் சுலபம் தான். ஒரு சிம்பிள்
உதாரணத்தோடு பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.





மெட்டீரியல் என்றால் பொருள். டீ-மெட்டீரியல் என்றால் அந்தப் பொருளை
இல்லாமல் ஆக்குவது. உங்களிடம் பணம் இருந்தால் எங்கே கொண்டு போய்
வைப்பீர்கள். கொஞ்சமாக இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால்
ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கையில் இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொண்டா
திரிய முடியும். பேங்கில் போட்டு வைப்பீர்கள் அல்லவா? அதற்கு என்ன
அத்தாட்சி? வங்கிக் கணக்குப் புத்தகம். அதையும் பாக்கெட்டில் வைத்துக்
கொண்டு திரிய முடியாது. பணம் பரிவர்த்தனை செய்ய என்ன வழி? அதற்குத்தான்
செக் புத்தகம் கொடுத்தார்கள். சரி. ஓக்கே! ஆனால் அவசரமாக அகால நேரத்தில்
பணம் தேவைப்பட்டால்? என்ன வழி? அதற்கும் ரொம்ப நாள் யோசித்து டெபிட் கம்
ஏடிஎம் கார்டு கொண்டு வந்தார்கள். அதாவது, பொருளாக / மெட்டீரியலாக,
அதாவது நாணயங்களாக இருந்த பணத்தை டீ-மெட்டீரியலாக ஆக்கினார்கள். இப்போது
உங்களிடம் இருப்பவை வெறும் எண்களே!

இன்னோரு விஷயம். ஏடிஎம்
கார்டு மூலம் நம் காசை, நம் கைக்காசை மட்டும் தான் செலவு செய்ய முடியும்.
நூறு இருநூறு, அல்லது அதற்கு மேலே, சேர்த்து செலவு செய்ய வேண்டுமென்றால்?
அப்போ கடன் அட்டை ஒன்று உருவாக்கினால் நன்றாக இருக்குமல்லவா?
....க்கினார்கள். இந்தா வைத்துக்கொள் என்று கொடுத்தார்கள். எவ்ளோ வேணா
செலவு செய் என்றார்கள். முப்பது நாளோ ஐம்பது நாளோ கழித்து கட்டு.
போதும். (கட்ட முடியவில்லையா? அப்படி வா வழிக்கு. அதுதான் வேணும் எனக்கு
என்று வட்டிக்குட்டியை பெற்றுப்போடுகின்றது நாம் செய்த கடன்) இன்னும்
ஒன்றே ஒன்று தான் பாக்கி. கைரேகையை வைத்தே ஏ.டி.எம் மில் பணம் எடுக்கவோ,
பணம் செலவு செய்யவோ வசதி வந்தால் நன்றாக இருக்கும்.. ஃபோர்ஜரி
(ஏமாற்றம்) நடக்க வாய்ப்புண்டு என்றால் ரெட்டினா ஸ்கேன் (கண் பாப்பா) வசதி
கொண்டு வரப் பாருங்களேன். இன்னும் வேலை சுலபமாகிப் போகுமே..

சரி. அதை விடுங்கள். பண விஷயத்துக்கு வருவோம். அதாவது நான் சொல்ல வந்தது
என்னவென்றால் நாம் உபயோகப் படுத்தும் ரூபாய் நோட்டுக்களே கிட்டத்தட்ட
டீ-மெட்டீரியல் தான். ஆதி காலத்தில் பொருளுக்குப் பொருள், அதாவது உப்பு,
புளி, பருப்பு, புளியாங்கொட்டை போன்றவை பணமாக செயல்பட்டு பரிமாற்றம்
செய்யப் பட்டன. நீண்ட நாள் கழித்து ஷெர்ஷா சூரி காலத்தில் தான் நாணயங்கள்
என்று ஒரு வடிவத்தை உருவாக்கி அவை அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டன.
ஆரம்பத்தில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் நாணயங்களை உபயோகித்தவர்கள்
நாளாக நாளாக இவ்வளவு எடையாக இருக்கிறதே இதைத் தூக்கித் திரிய முடியாது
என்று புலம்ப ஆரம்பித்தார்கள். ஆக வேறு என்ன செய்யலாம்?

இங்கே
தான் நமக்கு உதவினான் நம் பக்கத்து வீட்டு சைனாக்காரன். பேப்பர் / காகிதம்
என்ற ஒன்றை உருவாக்கிக் காண்பித்தான் அவன். நம்மாட்களும் நாமும் ஏன் அதை
உபயோகித்துப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். பணம்
காகிதத்தில் அச்சிடப்பட்டது. காகிதமா? காகிதத்தில் அச்சடித்தால் அது பணம்
தான் என்று என்ன ருசு? மக்கள் பயந்தார்கள். மக்கள் பயத்தைப் போக்க
அவற்றில் ஒரு ஒழுங்கு முறை ஏற்படுத்தப் பட்டது. மேலும் மேலும் ரூபாய்
நோட்டுக்கள் மேம்படுத்தப் பட்டன. மக்களிடையே பிரபலப் படுத்தப் பட்டன.

அதை விடப் பெரிய பிரச்சினை... காகிதத்தில் அச்சடித்தால் யார்
பொறுப்பேற்பது? நீங்களோ நானோ கோடி வீட்டு காமேஸ்வரனோ பொறுப்பேற்க
முடியுமா? அதற்கு ஒரு ஆள் வேண்டாமா? யார்? கவர்னர் என்று முடிவானது. எந்த
ஊரு கவர்னர்? உங்க ஊரா? எங்க ஊரா? பணத்தைக் கையாள்கிற பெரிய தலை யாரு?
ரிஸர்வ் பேங்க் தானே. அப்போ அதோட கவர்னரை போடச் சொல்லு.. என்று
முடிவாகியது. உங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாயை உருவிப்
பாருங்கள். அதில் "இந்தக் காகிதத்தை வைத்திருப்பருக்கு நூறு ரூபாய்
மதிப்புள்ள பொருளைத்தர நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கவர்னர்
கையெழுத்துப் போட்டிருப்பார். ஆக நாம் வைத்திருப்பது நூறு ரூபாய் இல்லை.
நூறு ரூபாய் மதிப்புள்ள நோட்டு, வெறும் பேப்பர். இதுதான் டீ-மெட்டீரியல்.
சுருக்கமாக டீ-மேட்.

அதே கான்செப்ட் தான் இங்கு ஷேர்
மார்க்கெட்டிலும். பொருளாக / மெட்டீரியலாக, அதாவது பேப்பர் பத்திரங்களாக
பரிவர்த்தனை செய்யப் பட்டுக்கொண்டிருந்த ஷேர் டாக்குமெண்டுகளை
டீ-மெட்டீரியலாக அதாவது பேப்பர் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் நம்பர்
சிஸ்டத்துக்கு மாற்றினார்கள். NSE (தேசிய பங்குச் சந்தை) இதற்கு பெரும்
பங்களித்தது. இம்முறையில் ஏற்பட்ட வெற்றி மற்றும் தெளிவுத்தன்மை
(transperency) காரணமாக வேறு வழியின்றி BSE யும் பின் தொடர
வேண்டியதாயிற்று. பங்கு பத்திரங்கள் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த
மோசடிகள் குறைக்கப் பட்டு டூப்ளிகேட் பிரச்சினைகளுக்கு முழுதாக ஒரு பெரிய
முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

இப்போது ஷேர் மார்க்கெட்டில்
நீங்கள் வாங்கும் கம்பெனியின் பேப்பர் பத்திரங்களை எங்கும் தூக்கிச்
சுமக்க வேண்டாம். அவற்றை எலக்ட்ரானிக்கில் மாற்றி நம்பராக உங்களிடம்
சொல்லி விடுவார்கள். அந்த நம்பரை நினைவு வைத்திருந்தால் போதும்.
இந்தியாவில் எங்கு போனாலும் அதைச்சொல்லி உங்கள் ஹோல்டிங்
(கையிருப்பு)கை பார்த்துக்கொள்ளலாம். திருடு போகவோ, தொலைந்து போகவோ,
எரிந்து போகவோ, எலி கடிக்கவோ வாய்ப்பில்லை. என்ன ஒன்று? அவற்றை விற்று
பணமாக்க வேண்டுமென்றால் அது உங்கள் எண்தான் என்பதற்கான சான்று தர
வேண்டும். (அது ஏற்கனவே உங்களிடம் கொடுக்கப் பட்டிருக்கும்) பின்னே?
உங்கள் நம்பரைச்சொல்லி வேறு யாராவது விற்று விட்டால்? அதற்குத்தான் இந்த
ஏற்பாடு.

டீ-மேட் கணக்கு துவங்குவது எப்படி?

ரொம்ப சிம்பிள். பதிவு பெற்ற ஏதேனும் ஒரு புரோக்கரிடம் செல்லுங்கள்.
இன்றைய தினம் எல்லா பெரிய நிறுவனங்களும் புரோக்கிங் நிறுவனங்கள் துவங்கி
நடத்தி வருகின்றன. ரிலையன்ஸ், பிர்லா முதல் ஏபிசி பிரைவேட் லிமிடெட் வரை
பல நூறு நிறுவனங்கள். எல்லா ஊரிலும் இன்று பல நிறுவனங்களின் கிளைகள்
இருக்கின்றன. சந்தோஷமாகச் செய்து தருவார்கள். அதுதானே அவர்கள் வேலை.
அவர்கள் கேட்கும் சில ஆவணங்கள் மட்டும் தர வேண்டியிருக்கும். பான் கார்டு
கட்டாயம் தேவை. இருப்பிடத்தை நிரூபிக்க இருப்பிடச் சான்று. உங்கள் முகத்தை
அவர்கள் நினைவு வைத்துக்கொள்ள இரு புகைப்படங்கள். பணப்பரிவர்த்தனை செய்ய
வங்கிக் கணக்கு கண்டிப்பாக வேண்டுமே. அதன் சான்று. பணம் கொடுக்க செக்
லீஃப். அவ்வளவுதான்.

கூடுதலாக மார்க்கெட் ரிஸ்க்(சந்தை அபாயம்)கை
விளக்கும் பத்திரங்கள் புத்தகத்தில் பிரிண்ட் அடிக்கப் பட்டிருக்கும்.
(முடிந்தால் படித்துப் பார்த்து விட்டு) கையெழுத்துப் போட வேண்டும்.
சுமாராக இருபது, இருபத்தைந்து (புரோக்கரைப் பொறுத்து) கையெழுத்துக்கள்
போட வேண்டியிருக்கும். மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? எத்தன..............?
விட்டா மடுவுக்கு ஒண்ணு கேப்பீங்க போலருக்கு? என்று வடிவேல் புலம்புவது
போல புலம்ப வேண்டியிருந்தாலும் வேறு வழயில்லை. கையெழுத்துப் போட
முடியாது என்று சொல்லி வேறு புரோக்கரிடம் போனால் அவரும் ஒரு கட்டு
டாக்குமெண்டுகளை நீட்டுவார். ஒன்றிரண்டு க்ளாஸ் (முக்கியமான வரிகள்)
மாறியிருக்கும், அவ்வளவுதான்.

ஆக பங்குச் சந்தையில் பங்குகளை
வாங்கி வைக்க டீ-மேட் கணக்கு தேவை என்று புரிந்து கொண்டீர்களா? டீ-மேட்
அக்கவுண்ட் என்பது ஒரு பெட்டி போல, லாக்கர் போல. ஷேர்களை வாங்கி
அவற்றில் டெபாஸிட் செய்து வைக்கலாம். விற்க வேண்டுமென்றால் எடுத்து
விற்றுக்கொள்ளலாம். அந்த அக்கவுண்டை உங்களுக்கு வழங்கும் நிறுவனங்களை
டெபாஸிட்டரி என்பார்கள். இந்தியாவில் NSDL, CDSL என்று இரு டெபாஸிட்டரிகள்
உள்ளன. இவற்றிற்கு கிளைகள் கிடையாது. ஆகவே DP - Depository Participant
எனத் தன்னிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் (புரோக்கர்களும் உண்டு) மூலம்
இந்த வசதியை வழங்குவார்கள். எப்படி உங்களுக்கு விருப்பப்பட்ட வங்கியில்
சேமிப்புக் கணக்கு துவங்குகிறீர்களோ அது மாதிரி இவை இரண்டில் எவற்றில்
வேண்டுமானாலும் கணக்கு துவங்கிக் கொள்ளலாம். பெரிய வித்தியாசம் ஒன்றும்
இல்லை. நீங்கள் சந்தித்த புரோக்கரிடம் அந்த வசதி உள்ளதா என்று மட்டும்
பார்த்துக்கொள்ளவும்.

ஆனால் டீ-மேட் அக்கவுண்டில் டிரேடிங்
(பரிவர்த்தனை) செய்ய இயலாது. அப்படி என்றால்? குழம்பாதீர்கள். இதுவும்
சிம்பிள் தான். அதே புரோக்கரிடம் ஒரு (பரிவர்த்தனை) டிரேடிங்
அக்கவுண்டும் ஆரம்பிக்க வேண்டும். இந்த டிரேடிங் அக்கவுண்ட் மூலம் NSE,
BSE என்ற இரண்டு சந்தைகளிலும் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும. டீ-மேட்
அக்கவுண்டும் டிரேடிங் அக்கவுண்டும் அக்கா தங்கை (உடன்பிறவா சகோதரிகள்)
போல. இரண்டும் இருந்தால் தான் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும். வாங்கும்
போது டிரேடிங் அக்கவுண்ட் மூலம் வாங்கி டீ-மேட்டில் அக்கவுண்டில்
வைத்துக் கொள்கிறீர்கள். விற்கையில் டீ-மேட்டில் அக்கவுண்டில் இருந்து
எடுத்து டிரேடிங் அக்கவுண்ட் மூலம் விற்கிறீர்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக