ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

5 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by சிவா Sun Aug 15, 2021 7:23 pm

First topic message reminder :

* ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது
* தாலிபான் ஆட்சியின் இருண்ட நாட்கள் திரும்புகிறதோ என்ற அச்சத்தில் பெண்கள்
* ஆப்கான் தலைநகர் காபுலை கைப்பற்றிய தாலிபான்கள்


ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!


#ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் #தலிபான் களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது. 1996 மற்றும் 2001 க்கு இடையில், நாடு #தாலிபான் களால் ஆளப்பட்டது. அது பெண்களுக்கான இருண்ட காலம். இது மிகவும் மோசமான காலகட்டம். பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது.

பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகள் போல் வாழ்ந்தனர்




ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான் காலத்தில், பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகளாக வாழ்ந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு ஆண் உறவினர் துணையோடு தான் செல்ல வேண்டும். இருப்பினும், #தலிபான்கள் பல மாகாணங்களைக் கைப்பற்றிய பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு இளம் பெண் இறுக்கமான ஆடை அணிந்திருந்ததால் தாலிபான்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.

நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததற்காக தாக்குதல்




வீடுகளை விட்டு வெளியேறி, காபூலில் சாலையோரத்தில் அல்லது பூங்காக்களில் தஞ்சமடையும் குடும்பங்களின் நிலைமையை விவரித்துள்ளது அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை ஒன்று . இந்த குடும்பங்களில் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தகர் மாகாணத்தைச் சேர்ந்தது, அங்கு பெண்கள் ரிக்ஷாவில் வீட்டுக்குச் சென்ற போது, அவர்கள் நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது #தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி.

பெண்கள் சந்தித்த இருண்ட காலம் திரும்புகிறதா




சமீபத்திய நாட்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்த கொடூர சம்பவங்கள், 2001 -க்கு முன்பு இருந்த பழைய தலிபான் ஆட்சியை மக்களுக்கு நினைவூட்டியது. 1996 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் நுழைந்தபோது, காபூலைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் #ஜெர்மினா கக்கருக்கு ஒரு வயது. அவரது தாயார் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அவரை வெளியே அழைத்துச் சென்றார், அப்போது சாப்பிட அவர் முகத்தில் இருந்த முக்காட்டை அகற்றினார், இதன் காரணமாக ஒரு தலிபான் போராளி அவரை கடுமையாக தாக்கினார். 'இன்று மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால், நாம் மீண்டும் அந்த இருண்ட நாட்களுக்குத் திரும்புவோம் என்று எனக்குத் தோன்றுகிறது' என அவர் கூறுகிறார்

அந்த நேரத்தில், தலிபான்கள் விபச்சார குற்றச்சாட்டின் கீழ் பகிரங்கமாக பெண்களை தூக்கில் தொங்க விடுவது, தலையை வெட்டுவது மற்றும் பெண்களைக் கல்லால் அடிப்பது போன்ற கொடூர சம்பவங்களை அரங்கேற்றினர். இப்போது பெண்கள் அந்த இருண்ட காலம் திரும்புமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty Re: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by சிவா Wed Aug 18, 2021 6:59 pm

ஆப்கன் மக்களை பாதுகாக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பாகிஸ்தான் மாணவி மலாலா கோரிக்கை

அகதிகளுக்கு உலக நாடுகள் அடைக்கலம் தரவும் வலியுறுத்தல்.

ஏற்கனவே ரோஹிங்யாக்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகள் தீவிரவாதத்தால் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது, எனவே எந்த நாடும் இவர்களை ஏற்க தயாராக இல்லை என்பதே உண்மை!.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty Re: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by சிவா Wed Aug 18, 2021 7:16 pm


பழையன கழிதலும் புதியன புகுதலும், ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நடக்கிற சம்பவங்கள்தான்.

தலைநகர் காபூலுக்குள் புதியவர்கள் கம்பீரமாகக் கால் வைப்பதும், பழையவர்கள் ‘சரோஜா! சாமான் நிக்காலோ’ என்று கடையைக் கட்டுவதும் ஆப்கானிஸ்தானைப் பொருத்தவரை அவ்வப்போது நடக்கிற ஒன்று.

ஆப்கானிஸ்தானில் பாப்ராக் கார்மல் தலைமையிலான பொதுவுடைமை அரசைக் காப்பாற்ற, 1979, டிசம்பர் 27ஆம் தேதியன்று அமுதார்யா ஆற்றைக் கடந்து அட்டகாசமாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த ரஷியப் படை, 1989ல் அப்போதைய ரஷிய ஆதரவு ஆப்கன் அதிபர் முகமது நஜிபுல்லாவைக் கைவிட்டுவிட்டு சோகம் கப்பிய முகத்துடன் அதே அமுதார்யா ஆற்றைக் கடந்து ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியது.

1992ல் அமெரிக்க ஆதரவு முஜாஹிதின் படைகள் இதேபோன்ற ஒரு ஆரவாரத்துடன்தான் தலைநகர் காபூலுக்குள் புகுந்தன.

அப்போது சிப்கதுல்லா மொடெடி என்பவர்தான் தற்காலிக அதிபராக இருந்தார்.

இருந்தும் வெற்றிப் பெருமிதத்துடன் தலைநகர் காபூலுக்குள் புகுந்த முஜாஹிதின்கள் நஜிபுல்லாவைக் கைது செய்தனர்.

1008 கசையடிகள், வாகனத்தின் பின்புறம் கட்டிவைத்துத் தெருத்தெருவாக இழுப்பு, ஆணுறுப்பு துண்டிப்பு போன்ற தண்டனைகளுக்குப் பிறகு, விளக்குக் கம்பம் ஒன்றில் நஜிபுல்லாவின் உயிரற்ற உடல் 2 நாள்களுக்குத் தொங்க விடப்பட்டிருந்தது.

முகமது நஜிபுல்லா, தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி மாதிரி பணப்பெட்டியுடன் ஹெலிகாப்டரில் ஏறி தஜிகிஸ்தானுக்கோ, உஸ்பெகிஸ்தானுக்கோ பறந்துவிடவில்லை. வருவது வரட்டும் என்று காபூல் நகரிலேயே துணிச்சலுடன் இருந்தார், படுகொலை செய்யப்பட்டுவிட்டார்.

நஜிபுல்லாவுக்கு முஜாஹிதின்கள் அளித்த ‘தண்டனையை’ க் காட்டுமிராண்டித்தனம் என்று யாரும் கண்டிக்கவில்லை. காரணம், முஜாஹிதின்கள் அமெரிக்க ஆதரவாளர்கள். தலிபான்கள் இப்படிச் செய்திருந்தால் மட்டும்தான் அது காட்டுமிராண்டித்தனம்.

ஆப்கானிஸ்தானில் அதன்பிறகு பர்கானுதீன் ரபானி தலைமையில் முஜாஹிதின்களின் ஆட்சி நடக்க, ஒரு கட்டத்தில் அது அமெரிக்காவுக்குப் பிடிக்காமல்போக, தலிபான் என்ற அமைப்பை அமெரிக்கா கோடிகளைக் கொட்டி உருவாக்கியது.

பாகிஸ்தானில் உள்ள மதப் பள்ளிகளில் தலிபானை உருவாக்க அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அள்ளிவிட்ட தொகை 450 கோடி டாலர்கள்.

தாலிப் என்றால் மதப் பள்ளி மாணவன். தலிபான் என்பது பன்மை.

1994ல் இதேபோலத்தான், இப்போது நடந்ததைப் போலத்தான், தலிபான் படைகள் வெற்றிகரமாக காபூல் நகருக்குள் புகுந்தன. ரபானி ஆதரவாளர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று எஸ்கேப்.

அமெரிக்கா அதன் ஆய்வறையில் மெனக்கெட்டு உருவாக்கிய ஒரு பிராங்கென்ஸ்டீன்தான் (Frankenstein) தலிபான்.

பிற்காலத்தில், 2001ல் அமெரிக்க இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டபோது, ஆப்கானிஸ்தானில் இருந்த - தாங்கள் வளர்த்த கடாவான தலிபான் அரசையும், அங்கே தங்கியிருந்த பின்லேடனையும் ‘தண்டிக்க’ முடிவுசெய்தது அமெரிக்கா.

தலிபானை எதிர்த்துப் போர் செய்ய அப்போது வடக்குக் கூட்டணிப் படையினருக்கு அமெரிக்கா அள்ளி இறைத்த தொகை 70 மில்லியன் டாலர்கள். அதாவது தலிபானை வளர்க்க 450 கோடி டாலர். ஒழித்துக்கட்ட 70 மில்லியன் டாலர்கள்!

2001ல் ஒருநாள். இதேபோலத்தான் அமெரிக்காவும், அதன் ஆதரவுப் படைகளும் காபூல் நகரத்துக்குள் வெற்றிகரமாகக் கால் வைத்தன. தலிபானின் முல்லா முகமது ஓமரும், பின்லேடனும் டோராபோரா மலைகளை நோக்கி ஓடிப்போனார்கள்.

அதன் பிறகு 20 ஆண்டுகாலம் டிரில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவு செய்தும் தலிபானை ஒழிக்க முடியாமல் அமெரிக்கா ஓய்ந்து போய்விட, இப்போது 2021ல் காட்சிகள் மாறி மீண்டும் காபூல் நகருக்குள் தலிபான் படை வெற்றிகரமாக கால்வைத்து இருக்கிறது.

அமெரிக்கப் படைகளும், அதன் ஆதரவாளர்களும் இப்போது எஸ்கேப்.

ஆக, ஆப்கன் என்ற சினிமா படத்துக்கான திரைக்கதையை யாரோ மாற்றி மாற்றித் திருத்தித் திருத்தி எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் இதற்கு முன் தலிபான் ஆட்சி நடந்தபோது, ஆண்கள் கண்டிப்பாகத் தாடி வளர்க்க வேண்டும் என்பது போன்ற சட்டம் இருந்தது. தாடியை டிரிம் செய்தால் பதிலுக்குத் தலை கழுத்தில் இருந்து டிரிம் செய்யப்படும் என்று சட்டத்திட்டம் இருந்தது.

ஆண்கள் அரைக்காற்சட்டை அணியத் தடை, கூலிங்கிளாஸ் அணியத் தடை, போட்டோ எடுக்கத் தடை, பட்டம் விடத் தடை என்று பல தடைகள் இருந்தன (பெண்களைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். ரத்தக்கண்ணீர் வந்துவிடும்).

அதே தலிபான்கள்தான் இப்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். இந்த முறை பழைய மாதிரி கெடுபிடிகள் இருக்காது என்று தலிபான்கள் கூறுகின்றனர்.

2001ல் பாமியான் புத்தர் சிலையைத் தலிபான்கள் தகர்த்தபோது, உருவ வழிபாடு கூடாது என்ற மதக்கொள்கையின் அடிப்படையில் புத்தர் சிலையைத் தலிபான்கள் தகர்த்ததாக உலகம் சொன்னது.

ஆனால், உருவ வழிபாடு கூடாது என தலிபான்கள் நினைத்திருந்தால் ஆட்சிக்கு வந்த ஆண்டே முதல் வேலையாக புத்தர் சிலைத் தகர்ப்பை அவர்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் தலிபான்கள் அப்படிச் செய்யவில்லை.

பாமியான் புத்தர் சிலைத் தகர்ப்புக்கு தலிபான்கள் அப்போது சொன்ன காரணம் நெருடலானது. ‘உலகம் எங்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. உலகத்தின் கவனத்தை ஈர்க்கவே புத்தர் சிலையைத் தகர்த்தோம்’ என்பதுதான் தலிபான்கள் சொன்ன காரணம்.

இந்த முறை, ஆப்கனில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில், தலிபான்கள் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவருகிறார்கள்.

'வெளிநாட்டவர்கள் ஆப்கானிஸ்தானில் நிம்மதியாக வாழ முடியும். வெளிநாடுகளுடன் உறவை வளர்க்கவே விரும்புகிறோம். பெண்களுக்குப் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இருக்காது’ என்பதெல்லாம் அந்த வாக்குறுதிகளில் சில.

உலகம் இதை நம்பித்தான் ஆக வேண்டும்.
[thanks]தினமணி [/thanks]


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty Re: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by சிவா Wed Aug 18, 2021 7:22 pm


ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வருகின்றன.

தலிபான்கள் வசம் ஆப்கானின் (Afghanistan) பெரும்பகுதி சென்றுவிட்ட நிலையில், இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெண்களே. தாலிபான்கள் மிக விரைவாக ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலையும் (Kabul) தாலிபான்கள் கைப்பற்றினர். மேலும் ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் கட்டுக்குள் அதிகாரப்பூர்வமாக செல்வது உறுதியானது. சுமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

தாலிபான்கள் நாடு தழுவிய இராணுவ வெற்றியை உறுதிப்படுத்திய பின்னர் அதிபர் கானியுடன் நாட்டின் பல முக்கிய தலைவர்களும் நாட்டை விட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தாலிபான் கிளர்ச்சிக் குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தனின் புதிய அதிபராகக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனைத் தொடர்ந்து, மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

எனவே ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒருவித அசாதாரண சூழல் நிலவியது. இதையடுத்து தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது தலிபான்கள் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்காக வாட்ஸ் அப்பை பயன்படுத்தியதால் இந்த நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty Re: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by சிவா Thu Aug 19, 2021 9:19 am

நேற்று உலகின் கவனத்தை பெற்றவர் ஆப்கானிய முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி

அன்னார் மில்லியன் டாலர் பணத்துடன் தஜிக்கிஸ்தான் நோக்கி சென்றபொழுது அவர் ரஷ்ய ஆதரவு முகாமில் விழுந்துவிட்டார் என்ற தோற்றம் இருந்தது, ஆனால் திடீரென ஐக்கிய அமீரகத்தில் தோன்றி "நான் இங்கே இருக்கின்றேன்" என அறிவித்துவிட்டார்

"மைடியர் மார்த்தாண்டன்" கவுண்டமணி போல அவரின் சுமார் 160 பில்லியன் டாலர் பண குவியலை கண்ட அமீரகமும், "அவர் பாவமுங்கோ, சாப்பிடாம தூங்காம அலைஞ்சாருங்கோ, அந்த ஏழைக்கு அடைக்கலம் கொடுத்தோமுங்கோ" என சொல்லிகொண்டிருகின்றது

அந்த அஷ்ரப் கனி சும்மா வெட்டியாக இருந்து அமெரிக்காவால் பதவியில் அமர்த்தபட்டவர் அல்ல‌

நம்ம ஊர் ரகுராம் ராஜனை போல் பெரிய படிப்பு மற்றும் அனுபவம் கொண்டவர். அமெரிக்காவின் கொலம்பியாவில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் வாங்கியவர்

உலக வங்கியின் அதி முக்கிய பொறுப்பில் இருந்தவர், அவர் எழுதிய புத்தகம் "தோல்வியுற்ற நாடுகளை மீட்பது" எப்படி என்பது

ஆப்கன் திரும்பாமல் அவர் படிப்பினையே செய்து கொண்டிருந்தால் நோபல் பரிசுக்கும் தகுதி பெற்றிருப்பார் என்பதுதான் நிஜம்

ஆனால் அமெரிக்கா அந்த மெத்த படித்தவரை நம்ம ஊர் திமுக அரசு போல் "நாட்டை வழிநடத்த வருகின்றார் அதி மேதை பராக், பராக், பராக்" என அழைத்து வந்தது

வந்தபின்புதான் தெரிந்தது, ஏசி ரூமில் படிப்பது வேறு ஏழ்மைபட்ட நாட்டை வழிநடத்துவது வேறு என்பது

தன் அறிவால் புத்தகமெல்லாம் எழுதிய அவரால் புத்தகத்தில் சொன்னபடி நாட்டை 1% கூட நடத்தமுடியவில்லை

ஆனால் அவரின் பெரும் அறிவு தப்பி செல்லும் பொழுது பணத்தோடு சென்றால்தான் மதிப்பு என்பதை மட்டும் மறக்காமல் சொல்லியிருக்கின்றது

இதெல்லாம் ஏன் சொல்கின்றோம் என்றால் மெத்த படித்தவர்களெல்லாம் களத்துக்கு சரிவரமாட்டார்கள்

உலகின் சில நாடுகளின் மாநிலங்களில் மெத்த படித்த அமைச்சர்களின் "வெள்ளை அறிக்க்கை" குபீர் திட்டங்களெல்லாம் வருகின்றன, அவர்களின் சுயபெருமையும் வெற்று அறிக்கையும் ஆப்கனைத்தான் நினைவுபடுத்துகின்றன‌

அந்த மாநில மக்கள் நிலை ஆப்கானியர் போல் ஆகிவிடாமல் இருந்தால் நல்லது, அதற்கு பிரார்த்திப்போம்

ஒருவேளை அம்மாநிலத்தில் ஆப்கன் போல விமான நிலையத்தில் மக்கள் வாழ வழியின்றி தப்பிஓடும் நிலைவந்தாலும் அங்குள்ள முன்களபணியாளர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

"அனைத்து மக்களையும் பறக்க வைக்கும் கனவில் மாநில அரசு வெற்றிபெற்று கொண்டிருக்கின்றது, உறுதியளித்தபடியே இந்தியாவிலே முதல்முறையாக எல்லா மக்களுக்கும் கட்டாய விமான பயணம் கொடுத்து அசத்துகின்றது இந்த அரசு, மக்களும் மகிழ்ச்சியோடு பறக்கின்றார்கள்"

முகநூல் பகிர்வு


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty Re: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by சிவா Thu Aug 19, 2021 10:02 am

ஆப்கனில் இந்திய அரசு மிக கவனமான நடவடிக்கையில் ராஜதந்திரமாக வென்றிருக்கின்றது

ஆம், ஆப்கனில் தாலிபன்கள் முன்னேற ஆரம்பித்தபொழுதே தன் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப மீட்டது இந்திய அரசு

காபூலை தாலிபன்கள் கைபற்ற 3 மாதமாகும் என அமெரிக்க உளவு தகவலே இருந்த நிலையில் காபூல் தூதரகம் உள்ளிட்ட சில இடங்களில் இந்தியர் தங்கியிருந்தனர், ஆனால் எதிர்பாரா விதமாக தாலிபன்கள் காபூலை கைபற்றியதில் பெரும் அதிர்ச்சி உலகை தாக்கியது

எல்லா நாடும் அவரவர் மக்களை மீட்பது போல இந்தியாவும் தம் மக்கள் சுமார் 150 பேரை மீட்க போக்குவரத்து ராணுவ விமானத்தை அனுப்பியது

இப்பொழுது வெளிநாட்டவர் வெளியேற ஒரே வழி காபுல் விமான நிலையம், அதன் கட்டுப்பாடு அமெரிக்கா கையில் ஆனால் காபூல் கட்டுப்பாடு தாலிபன் கைகளில்

அதாவது தாலிபன் அனுமதியில்லாமல் இந்தியர்கள் விமான நிலையம் வரமுடியாது

பொதுவாக தாலிபன்களுக்கும் இந்தியாவுக்கு உரசல் அதிகம், காந்தகார் விமான கடத்தல் முதல் காஷ்மீர் வரை இன்னும் பல உரசல் உண்டு

தாலிபன்களை நம்பவும் முடியாது, எப்பொழுது எப்படி திரும்புவார்கள் என்பதும் தெரியாது, பாகிஸ்தானின் ஆதரவு கொண்டவர்கள் என்பதால் இன்னும் அச்சம்

அந்த 150 பேரும் முதலில் கிளம்பும்பொழுது தாலிபன்கள் அனுமதிக்கவில்லை மாறாக "சில நாட்கள் கழித்துத்தான் அனுப்பமுடியும்" என முடக்கிவிட்டனர்

இது இந்திய தரப்புக்கு மிக சிக்கலான நிலையில் களத்துக்கு வந்தார் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அவரின் மிக அபாரமான ராஜதந்திர வலைபின்னலில் தாலிபன்கள் யார் சொன்னால் கேட்பார்களோ அவர்கள் மூலமாக சொல்ல வைத்தார்

அதன் பின் இந்திய தூதரகம் சென்ற தாலிபன்கள் இந்தியர்களை மிக மரியாதையோடு பாட்சா படத்து தாளாளர் போல் , "அண்ணே இதெல்லாம் சிக்கலாண்ணே, வாங்கண்ணே வாங்கண்ணே" என 20 வாகனங்களில் அழைத்து விமான நிலையம் வரை பாதுகாப்போடு அழைத்து வந்து "போயிட்டு வாங்கண்ணே மோடி அய்யாவ கேட்டதா சொல்லுங்க" என சொல்லி வழியனுப்பினார்கள்

இந்தியர்கள் பாதுகாப்பாக விமான நிலையத்தில் நுழைந்தபொழுது தாலிபான்கள் சொன்னதுதான் கிளாசிக்

"நாங்கெல்லாம் முன்னமாதிரி இல்லண்ணே, திருந்திட்டோம். அடிக்கடி வந்து போய் இருங்கண்ணே, நிலமை சரியானதும் நாங்களும் உங்க நாட்டுக்கு வருவோம்"

அதை கேட்ட இந்தியர் மனநிலை எப்படி இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

ஆக மோடி அரசு ஜெய்சங்கர் மூலம் இந்தியருக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் ஆப்கனில் இருந்து மீட்டு வந்திருக்கின்றது

இதுபற்றி தமிழக மீடியா சொல்லாது, தமிழக பாஜக சொல்லவே சொல்லாது

ஆனால் தேசாபிமானியாக சொல்ல வேண்டியது நம் கடமை, அதை நாம் சொல்லி கொண்டே இருப்போம்

ஸ்டான்லி ராஜன்


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty Re: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by T.N.Balasubramanian Thu Aug 19, 2021 1:23 pm

விரிவான தகவல்கள் நன்றி.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty Re: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by சிவா Thu Aug 19, 2021 6:13 pm


செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசிய தலிபானின் மூத்த உறுப்பினர், இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சி பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.



காபூல் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களது ஆட்சி, ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரையிலான முந்தைய தலிபானின் கொடுங்கோல் ஆட்சியை நினைவூட்டுகிறது. ஒட்டு மொத்த உலமும் ஆப்கானில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்ப்பாக கவலையுடன் கவனித்து வருகிறது.

தலிபானின் மூத்த உறுப்பினரான வஹீதுல்லா ஹாஷிமி, செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசுகையில், இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சிப் பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.

ஆப்கானில் ஜனநாயக ஆட்சி கிடையாது



தலிபான்கள் அரசாங்கத்தை பற்றிய கேள்விக்கு பதிலளித்த தாலிபானின் மூத்த உறுப்பினர், "ஆப்கானிஸ்தானின் ஷரியா சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய அரசாங்கம் அமையும், அது ஜனநாயக முறையாக இருக்காது என திட்ட வட்டமாக தெரிவித்தார்

ஆப்கானிஸ்தான் (Afghanistan) ஆயுதப் படைகளைச் சேர்ந்த முன்னாள் விமானிகள் மற்றும் வீரர்களையும் ஆட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றக் காரணமான வீரர்க்களுடன், ஆப்கான் ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றார். இராணுவத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்ய, சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் அதற்கு, துருக்கி, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற ரணுவ வீரர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

தலிபான் தலைவர் வஹீதுல்லா ஹாஷிமி



ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஒரு ரகசிய இடத்தில் ஒரு நேர்காணலின் போது மூத்த தலிபான் தளபதி வஹீதுல்லா ஹாஷிமி ராய்ட்டர்ஸிடம் பேசினார்

ஆப்கானிஸ்தான் அதிபர்



ஆப்கானை ஆளும் தலிபான் அதிபருக்கு தோஹாவில் உள்ள அப்துல் கானி பராதர் முல்லா உமரின் மகன் மவ்லாவி யாகூப், ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் சிராஜூதீன் ஹக்கானி ஆகிய 3 துணை அதிபர்கள் இருப்பர் கூறப்படுகிறது.

இருப்பினும், பராதர் தான் அடுத்த அதிபர் என இதுவரை ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. 1968 இல் உருஸ்கான் மாகாணத்தில் பிறந்த பராதர், ஹைபத்துல்லா அகுந்த்ஸடாவுக்குப் பிறகு இரண்டாவது மூத்த தலைவராக உள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அப்துல் கானி பராதர், மிகவும் பேசப்படும் தாலிபானின் மிகவும் குறிப்பிடத்தக்க பொது முகமாகவும் இருக்கிறார்.


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty Re: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by சிவா Thu Aug 19, 2021 6:32 pm


ஆப்கானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் உணவின்றி பசியால் 1.40 கோடி மக்கள் தவித்து வருவதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்க மக்கள் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் எனக்கூறி, தலிபான்கள் துப்பாக்கி முனையில் வீடுவீடாக சென்று விரட்டி வருகின்றனர்.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதால், அந்நாட்டின் மீதான சர்வதேச பார்வை அதிகரித்து வருகிறது. அங்கு நடக்கும் சம்பவங்கள் சர்வதேச சமூகத்தை கவலையடைய செய்து வருகிறது. அமெரிக்க அரசுப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளதால், அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. சர்வதேச நாடுகள் தலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை என்பதால், ஆப்கான் நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. தலிபான்களின் கைக்கு ஆப்கான் நிர்வாகம் சென்றதால், உயிருக்கு பயந்து மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். தற்போதும் மக்கள் நடமாட்டம் வெளியே இல்லாததால், எவ்வித நிறுவனங்களும் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள நகரங்களில் ஆயுதமேந்திய தலிபான்கள், ஒவ்வொரு வீடாக சென்று பூட்டியிருக்கும் கதவுகளை தட்டி வருகின்றனர். அவர்கள், வீட்டிற்குள் முடங்கியிருக்கும் மக்களிடம், மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு அச்சுறுத்தி வருகின்றனர். இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல் அச்சத்துடனும், வறுமையிலும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் தலைவரான மேரி எலன் மெக்ரோர்டி கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் கிட்டதிட்ட 14 மில்லியன் (1.40 கோடி) மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளனர். அங்கு மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் கடுமையான வறட்சியால் மக்கள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். கடும் வறட்சியால் 40 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் நாசமடைந்துள்ளன. குளிர்காலம் நெருங்குவதால் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்’ என்றார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் 100 சர்வதேச ஊழியர்கள் ஆப்கானில் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இவர்கள் கஜகஸ்தானில் இருந்து வேலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றும் முன், பெண்களுக்கான சுதந்திரம் அதிகமாக இருந்தது. தற்போது தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் பெண்களின் நிலைமை மோசமடைந்து வருகிறது.

காபூலின் முக்கிய நகரங்களில் உள்ள அழகு நிலையத்தின் முகப்பு பகுதி, பொழுதுபோக்கு இடங்கள், ஓட்டல்கள் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை கறுப்பு மையை ஊற்றி தலிபான்கள் அழித்து சிதைத்து வருகின்றனர். ஜலாலாபாத் நகரில் உள்ளூர் ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்களை தலிபான்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற புகைப்படங்கள், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty Re: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by சிவா Thu Aug 19, 2021 6:34 pm

தாலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானில் அத்யாவசிய பொருட்கள் விலை 4 மடங்கு உயர்வு!: உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்... ஆப்கான் மக்கள் கவலை..!!


ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் அங்கு அத்யாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முடங்கியிருந்த பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. அத்யாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மளிகை, காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் திறந்திருந்தாலும் பொருட்களின் விலை சுமார் 4 மடங்கு உயர்ந்துவிட்டதாக ஆப்கான் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, ஆப்கனை தாலிபான்கள் பிடித்த உடனே அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. முன்னர் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களை தற்போது 4 ரூபாய் கொடுத்து வாங்குகின்றோம். பகலான் மாநிலம் 3 மாதங்களாக தாலிபான்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அப்போது கூட தொழில்கள் அனைத்தும் அமைதியான முறையில் நடைபெற்று வந்தன. அவர்கள் ஆப்கன் முழுவதையும் பிடித்த நாள் முதல் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டனர்.

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமாகி உள்ள நிலையில் அங்கு எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதனால் அத்யாவசிய பொருட்களை வாங்கி மக்கள் வீடுகளில் குவித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக கடைகளில் அத்யாவசிய பொருட்களின் இருப்பு குறைந்து வருவதால் வர்த்தகர்கள் காய்கறிகள், மளிகை உள்ளிட்ட பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்தியிருக்கின்றனர். இதனிடையே பால், காய்கறிகள், மருந்து உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் வரத்து முடக்க தொடங்கியிருக்கிறது. இதனால் அடுத்த சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty Re: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by ayyasamy ram Fri Aug 20, 2021 5:08 pm

தாலிபான்களால் தூக்கிலிடப்படுவதை தவிர்க்கவே தப்பி ஓடினேன்
- மவுனம் களைத்த அஷ்ரப் கனி !


-
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Main-qimg-31973522ed76cd6116705ee0774c144f-mzj
-
தாலிபான்களால் தூக்கிலிடப்படுவதை தவிர்க்கவே தப்பி ஓடினேன் என்று ஆப்கனிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி மீது பல்வேறு தரப்பிலிருந்து அவர் விமர்சிக்க பட்டார். இந்நிலையில் அஷ்ரப் கனி தனது சமூகவலைதள பக்கம் மூலம் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காபூலிலேயே இருந்திருந்தால் நிச்சயம் வன்முறை வெடித்திருக்கும் என குறிப்பிட்டுள்ள அஷ்ரப் கனி, 1996- ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லா, தாலிபான்களால் சிக்னல் கம்பத்தில் தூக்கிலிடப்பட்டார். அவரைப் போல் தூக்கிலிடப்படுவதை தவிர்க்கவே தப்பி ஓடியதாக தெரிவித்துள்ளார்.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் உடனே வெளியேறுமாறு ஆலோசனை வழங்கியதாகவும், அதன் அடிப்படையிலேயே தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ள கனி, காலணிகளை கூட அணிய நேரம் இல்லாத நிலையில், எப்படி அவ்வளவு பணத்தை எடுத்து செல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தாலிபான்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளிப்பதாகவும் தாலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க எண்ணியதாகவும் கூறினார். மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அஷ்ரப் கனி குறிப்பிட்டுள்ளார்.

நன்றி-குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 5 Empty Re: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics
» குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்
» ஆப்கானிஸ்தானில் 150 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்
» ஆப்கானிஸ்தானில் ஆயிரம் அமெரிக்க வீர்ர்கள் பலி
» ஆப்கானிஸ்தானில் 10 வெளிநாட்டு டாக்டர்கள் சுட்டுக்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum