ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Today at 10:32 am

» ஒரு மொக்க ஜோக்!
by ஜாஹீதாபானு Yesterday at 5:03 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (67 - 69 )
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» அறிமுகம்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 10:50 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (408)
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 7:38 pm

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 3:30 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

» இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 5:56 pm

» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:58 pm

» டார்க் தீம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:34 pm

» பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:18 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Sep 17, 2021 12:15 pm

» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:38 pm

» மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் வேண்டும்
by Arivueb Thu Sep 16, 2021 8:22 pm

» ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:59 pm

» கைபேசி (தனி) உலகம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:22 pm

» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:55 pm

» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:27 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

» புன் சிரிப்பு
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 11:13 am

» சன்னல்
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 10:07 am

» யோகாவின் எட்டு நிலைகள்..!
by shivi Wed Sep 15, 2021 9:49 pm

» சமூக கடமை --மகா பெரியவா உரை.
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 9:04 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 4:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

4 posters

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்  காலமானார் Empty மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

Post by சிவா Sat Aug 14, 2021 11:49 am

தமிழ்நாட்டின் முக்கியமான, மிகப் பழமையான ஆன்மீக பீடங்களில் ஒன்றான மதுரை ஆதினத்தின் தலைவராகச் செயல்பட்டு வந்த மதுரை ஆதீனம் நேற்று இரவு 9.15 மணியளவில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அருணகிரிநாதர் என்ற இயற்பெயரைக் கொண்ட அவருக்கு வயது 77. உடல் நலக் குறைவால் அவர் காலமானார். தமிழகத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வரும் மதுரை ஆதீனத்தின் தலைவராக அவர் பொறுப்பு வகித்த காலத்தில் பல சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளை வெளியிட்டார்.

அதன் மூலம் பல விவாதங்களுக்கு உள்ளானார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை சர்ச்சைக்குரிய நித்தியானந்தா சுவாமிகளிடம் அவர் ஒப்படைத்ததும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எனினும் பின்னர் அந்தப் பொறுப்பை நித்தியானந்தா சுவாமிகளிடம் இருந்து மீண்டும் ஏற்றுக் கொண்டார்.

மதுரை ஆதீனம் மலேசியாவுக்கும் வருகை தந்து பல்வேறு இடங்களில் உரையாற்றியிருக்கிறார்.

மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

“ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது இரங்கல் செய்தில் ஸ்டாலின் தெரிவித்தார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87176
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்  காலமானார் Empty Re: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

Post by Dr.S.Soundarapandian Sat Aug 14, 2021 12:42 pm

மதுரை ஆதீனம், மற்ற மதத்தினரையும் மதிப்பவராகத் திகழ்ந்தார்!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6394
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3305

http://ssoundarapandian.blogspot.in

சிவா and ayyasamy ram like this post

Back to top Go down

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்  காலமானார் Empty Re: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

Post by T.N.Balasubramanian Sat Aug 14, 2021 3:25 pm

ஆன்மீக பணிகள் பல செய்தவர். அரசியலிலும் இடம் பெற்றவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை ஆதரித்தவர். 

292 ம் மதுரை  ஆதீனம் அருணகிரிநாதர் அவர்கள்  1980ல் மடாதிபதியாக பொறுப்பேற்கும் முன் தி மு க வின் முரசொலியில் நிருபராக பணியாற்றியவர், டைம்ஸ் செய்தி.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29971
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10684

சிவா and ayyasamy ram like this post

Back to top Go down

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்  காலமானார் Empty Re: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

Post by சிவா Sat Aug 14, 2021 6:40 pm

அடுத்த மதுரை ஆதீனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது


மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்  காலமானார் Sda7XmV

கடந்த 2019ஆம் ஆண்டு இளைய மடாதிபதியாக மதுரை #ஆதினம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்ட, ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87176
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்  காலமானார் Empty Re: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

Post by சிவா Sat Aug 14, 2021 7:05 pm


மதுரை ஆதினம், ஞானசம்பந்த அருணகிரிநாதர், உடல் நல்லடக்கம்


மதுரை: உடல் நலக்குறைவால் முக்தியடைந்த மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் உடல், மடத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழகத்தின் மிகத்தொன்மையான சைவ சமய மடங்களில் ஒன்று மதுரை ஆதின மடம். 1500 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட இம்மடத்தின் 292வது ஆதினமாக அருணகிரி நாதர் இருந்தார். பத்திரிகையாளரான இவர், 1975ல் இளைய ஆதினமாக பொறுப்பேற்றார். 1980ல் மூத்த ஆதினம் சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் இறந்ததை தொடர்ந்து மடத்தின் பொறுப்பை ஏற்றார். இதன்பின் அரசியல்வாதிகள், பிரபலங்களுடன் தொடர்பு ஏற்பட்டு, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் 2012ல் இளைய ஆதினமாக நித்யானந்தாவை நியமித்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவரை நீக்கிவிட்டு, 2019ல் தருமபுரம் ஆதினத்தின் மூத்த தம்பிரானான சுந்தரமூர்த்தியை இளைய ஆதினமாக அறிவித்தார்.

சில ஆண்டுகளாக மூச்சுத்திணறால் அவதிப்பட்டவர், ஒருவாரத்திற்கு முன் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருநாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு முக்தியடைந்தார்.

உடல் ஆதின மடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை கலெக்டர் அனீஸ் சேகர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் பொது மக்கள், பல அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, அவரது உடலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவை காமாட்சிபுரி, குன்றக்குடி, தருமபுரம் திருவாவாடுதுறை ஆதினங்கள் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். தொடர்ந்து தொன்மை வாய்ந்த பூப்பல்லக்கில் அவரது உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி முன்சென்றது.

மதுரை முனிச்சாலையில் மடத்திற்கு சொந்தமான இடத்தில் , மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87176
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்  காலமானார் Empty Re: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

Post by ராஜா Sat Aug 14, 2021 10:30 pm

சைவமும் தமிழும் தழைக்க அயராது பாடுபட்டவர் , அத்துடன் அல்லாமல் அனைத்து மதத்தினரையும் மதிப்பவர்.
ஈசன் திருவடியில் இளைப்பாற பிரார்திக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31336
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

சிவா and T.N.Balasubramanian like this post

Back to top Go down

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்  காலமானார் Empty Re: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை