புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 2%
prajai
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%
சிவா
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
432 Posts - 48%
heezulia
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
29 Posts - 3%
prajai
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_m10வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 24, 2021 3:08 pm

அர்த்தமுள்ள இந்துமதம்-70

‘‘விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல்
கேட்டேன்’’
- என்றான் மகாகவி பாரதி.

மனம் சொல்ல வேண்டுமாம்; உடல் ஆட வேண்டுமாம்!
மனம் ‘போ’ என்றால், உடல் போக வேண்டும். ‘ஐயோ,
எல்லோரும் போகிறார்கள்! நாம் போக முடியவில்லையே’
என்று மனது ஏங்க, உடம்பு போக முடியாமல் தள்ளாட,
அந்த நிலைமை வருமானால், மனித வாழ்க்கையில் என்ன
சுகம் இருக்கிறது?

அதனால்தான், ‘மனதை அடக்கி உடம்பை நன்றாக வைத்துக்
கொள்ளுங்கள்’ என்று நான் அடிக்கடி போதிக்கிறேன்.
-
வாழ்க்கை என்பது வாழவே! - கண்ணதாசன் 6
-
நான் ஒரு போதகாசிரியன் அல்ல; உபந்நியாசியும் அல்ல;
உலகை முற்றிலும் உணர்ந்தவனுமல்ல; துறந்தவனுமல்ல;
என்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் பலவற்றையே
இதுகாறும் நான் உங்களுக்குத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.

இப்போது அதனை இந்தப் பத்தாவது பாகத்திலும் சொல்ல
விரும்புகிறேன். ஏனென்றால், வாழ்க்கையை இந்திய மக்கள்
சுகமாக நடத்த வேண்டும்.

மலேசியாவிலேயோ, சிங்கப்பூரிலோ, மற்ற நாடுகளிலேயோ
பார்க்கும்போது, இந்தியாவில் இருக்கின்ற அளவுக்கு நோயாளிகள்
அங்கே இல்லை.

இங்கே உடல் நோயாளிகளைவிட, மனநோயாளிகள் அதிகம்,
கவலைப்படுபவர்கள் அதிகம். கஷ்டப்படுபவர்கள் அதிகம்.
வறுமைக் கஷ்டம் என்றால், ஏதாவதொரு பரிகாரம் தேட முடியும்.
‘இனம் தெரியாத ஒரு துயரம் உங்களுக்குள்ளேயே மண்டிக்
கிடக்கிறதே! என்ன செய்வேன்?’ என்று அழுகிறவர்கள் அதிகம்.

அந்தத் துயரத்தாலே உடம்பு ஆட்டி வைக்கப்பட்டு மனதைக்
கெடுத்துக் கொண்டவர்கள் அதிகம். இவர்களெல்லாம் ஒரு
கட்டத்தில் சீராக வாழ வேண்டும்; துணிந்து வாழ வேண்டும்.

துணிச்சலோடு, எதையும் எதிர்த்து நிற்கின்ற தன்மையோடு,
‘‘வந்தோம்; பிறந்தோம்; வாழ்வோம்; சாவோம்!’’ என்று முடிவு
கட்டிக்கொண்டு, வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய
ஆசையாகும்.

‘வருவதைக் கண்டு மயங்காதே போவதைக் கண்டு கலங்காதே!’
பெரிய பதவி வருமானால், ‘எனக்கு மேல் எவன் பெரியவன்?’
என்று திமிர் பிடித்து அலையாதே. பதவி போய் விடுமானால்,
‘ஐயோ! போய் விட்டதே!’ என்று அழாதே. வருவதும் போவதும்
ஆண்டவனுடைய போக்குவரத்துச் சாலை விதி.
ஆண்டவன் அதிலே டிராபிக் கமிஷனர். அவன் போட்ட
உத்தரவின்படியேதான் சில விஷயங்கள் வருகின்றன;
சில விஷயங்கள் போகின்றன.

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 24, 2021 3:14 pm

ஆறு வயதிலேயே குழந்தைகள் இறந்துபோகின்றன;
பதினாறு வயதிலேயும் இறந்து போகின்றன; போகின்ற
குழந்தைகளுக்காக நாம் அழ முடிகிறதே தவிர, திரும்பிக்
கொண்டு வரமுடிவதில்லை.

நூறு வயது வரையில் சில பேர் வாழ்கிறார்கள்;
ஏன் வாழ்கிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை. எல்லாம்,
எல்லாக் கதைகளும் எங்கே போய் முடிகின்றன? எவனோ
ஒருவன் இருக்கிறான்; ஏதோ ஒரு சக்தி இயங்குகிறது;
அந்தச் சக்தியினுடைய கரங்களில் இருந்து அத்தனையும்
புறப்படுகின்றன;
திரும்ப அந்தக் கால்களிலேயே அவை போய்ச் சேர்ந்து
விடுகின்றன.

அந்த லயத்தை உணர்ந்துகொண்ட பின்னாலே, உடல் மறத்து,
உள்ளம் மறத்துப் போய், ‘நாம் பிறந்தது ஆண்டவனை எண்ண,
அடுத்தவருக்கு உதவ, நியாயமாக வாழ என்கிற எண்ணம்
பிறந்து விடுகின்றது. அந்த நியாயத்தை மதித்து
, ‘உன்னையே நீ அறிந்து’ உலகையும் அறிந்து, எல்லோருக்கும்
வேண்டியவனாகவும், எல்லோருக்கும் நல்லவனாகவும்,
எல்லோரையும் புரிந்துகொண்டவனாகவும், எல்லோராலும்
புரிந்துகொள்ளப் பட்டவனாகவும் வாழ வேண்டும் என்பதே
என்னுடைய ஆசை.
எல்லாம் வல்ல கண்ணன், எல்லோர்க்கும் அருள்வானாக.

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 24, 2021 3:14 pm

நல்லவன் வாழ்வான்

இந்தப் பத்துப் பாகங்களில், பல்வேறு விஷயங்களைக் கூற
நான் முயன்றிருக்கிறேன். எத்தனை விஷயங்களில் நான்
முழுமை பெற்றிருக்கிறேன் என்பதை, என்னால் நிர்ணயிக்க
முடியவில்லை. ஆனாலும், மதம் மனித குலத்துக்கு
இன்றியமையாதது என்பதை நான் வற்புறுத்தி இருக்கிறேன்.

மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இன்ப
துன்பங்களில் நானும் பங்கு கொண்டு, இன்பங்களைப்
பகிர்ந்துகொள்ளவும், துன்பங்களிலிருந்து விடுதலை பெறவும்
அவர்களுக்கு வழி சொல்லி இருக்கிறேன்.

ஆனால், இவ்வளவுக்கிடையிலேயும், ஒரு மயக்கம்
உங்களுக்கிருப்பதைப் போலவே எனக்கும் உண்டு. அது என்ன
மயக்கம்? எவ்வளவுதான் நாணயமாக இருந்தாலும், நேர்மையாக
இருந்தாலும், ஒழுங்காக நடந்தாலும், வாழ்க்கையில் துன்பம்
என்பது வந்துதான் தீரும்.

அது சரிதான். ஆனால், நாணயம் கெட்டவன், நேர்மை கெட்டவன்,
ஒழுக்கம் கெட்டவன், மரியாதை கெட்டவன் இவனெல்லாம்
உற்சாகமாகவும், வசதியாகவும் வாழுகிறானே, அதுவும் நீண்ட
காலம் வாழுகிறானே, ‘எப்படி’ என்கிற மயக்கம்தான் அது.

‘நான் யாருக்கும் தீங்கு இைழக்கவில்லை! எனக்கு ஏன்
இந்தக் கஷ்டம்?’ என்று கலங்குவார் உண்டு. ‘நான் தினமும்
கோயிலுக்குப் போகிறேனே, ஆண்டவன் என்னை ஏன்
சோதிக்கிறான்?’ என்று வருந்துவார் உண்டு.

‘நான் யாருக்கும் துரோகம் செய்ததில்லை; யாருடைய
குடும்பத்தையும், நிலத்தையும் அபகரித்ததில்லை; நான்
படாதபாடும் இல்லை’ என்று ஆதங்கப்படுவார் உண்டு.

அவர்களுடைய ஆதங்கத்தில் ஓரளவுக்கு நான் பங்கு கொள்ள
முடியும். ஆண்டவன் அப்படித்தான் சோதிப்பான்.

வேண்டியவர்களைத்தான் சோதிப்பான். காரணம், இந்தப்
பக்தி உண்மையானதா என்று கண்டுகொள்ள விரும்புவான்
என்றெல்லாம் நான் சமாதானம் கூற முடியும்.

‘எந்த மனைவியிடம் காதல் இருக்கிறதோ, அந்த மனைவியிடம்
தான் சந்தேகம் அதிகம் வரும்’ என்பதுபோல,
‘எந்த மனிதனிடம் ஆண்டவனுக்கும் பீரிதி இருக்கிறதோ,
அந்த மனிதனிடம்தான் சோதனைகள் அதிகமாக ஏற்படுத்திப்
பார்ப்பான்’ என்பதும் உண்மையாகும்.
ஆனால், அடுத்த கேள்விதான் யாரும் பதில் காண முடியாத
ஒரு கேள்வியாகும்.

அது, நல்லவர்கள் வருந்துகிறார்கள் என்பதைவிட, தீயவர்கள்
வாழுகிறார்களே, அது எப்படி? எனக்குத் தெரியும். ஒரு நண்பர்,
வாழ்க்கையில் எந்தவிதமான நன்மையையும் யாருக்கும்
அவர் செய்தது கிடையாது. எதை அனுபவிக்க வேண்டும்
என்றாலும், தானும், தன் குடும்பமும் மட்டுமே அனுபவிக்க
வேண்டும் என்று வாழ்ந்தவர்; வாழ்பவர்; ஆம், இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார். எவ்வளவு சிரமங்கள் வந்தாலும்கூட,
அவருக்கு வசதி குறையவில்லை;
பதவி குறையவில்லை; புகழ் குறையவில்லை! எப்படி இது
இயங்குகிறது? எப்படி இது நடக்கிறது?

லட்சோப லட்சமாகப் பணத்தைக் குவித்தார், அதுவும் தவறான
வழியில்; அதுவும் நிலைத்து விட்டது. தவறான வழியில் சேர்ந்த
பணம் நிலைக்காது என்பார்கள்; நிலைத்து விட்டதே! கண்
முன்னாலே கண்டிருக்கிறோமே! தப்பான வழியில் அபகரித்த
பதவி நிலைக்காது என்பார்கள்; அது பல வருடங்கள் அவர்
கையில் இருந்ததே, அது எப்படி?

இவையெல்லாம் மனதில் ஏற்படுத்தக்கூடிய மயக்கம் என்ன?
ஆண்டவனுடைய இயக்கம் என்பதிலே ஒரு சந்தேகத்தை
இதுதான் உண்டாக்குகிறது. இதைப் பொறுத்தவரை, உங்களுக்கு
நான் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான்.

இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்கள், இருபது வருஷம், இருபத்தைந்து
வருஷம் நிம்மதியாக வாழ்ந்தாலும்கூட இவர்களுடைய கடைசிக்
காலம் மோசமாக இருக்கும். அவர்கள் படாதபாடு பட்டுத்தான்
தங்களுடைய வாழ்க்கையை முடிக்க வேண்டியிருக்கும்.

இல்லையென்றால் அவர்கள் செய்த பாவங்களுக்கு அவர்களுடைய
குழந்தைகள் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
நான் ஒரு கட்டுரையிலே சொன்னபடி, பதினான்காவது லூயி
செய்த தவறுகளுக்கான தண்டனைகளை, பதினாறாவது லூயி
அனுபவிக்க வேண்டியிருந்தது.

பழைய ஜார்ஜ் மன்னன் செய்த தவறுகளை, அடுத்து வந்த வாரிசு
அனுபவிக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் நீங்கள் எண்ணிப்
பார்த்தால், நீண்டகாலம் அயோக்கியன் நிம்மதியாக வாழுவான்;
ஆனால், அதே நேரத்தில் அவனுக்கு வரப்போகிற தண்டனை
நல்லவர்களுக்கு வராது.

நமக்கெல்லாம் வருகிற கஷ்டம், விடிந்தால், எழுந்தால் மிகச் சிறிய
கஷ்டமாகவேதான் இருக்கும். நமக்கு அது பெரியதாகத் தோன்றும்.
ஆனால், அவர்களுக்கு வருகின்ற கஷ்டம் இருக்கிறதே,
அது நிச்சயமாக தற்கொலை செய்துகொள்ளலாமா? என எண்ணும்
அளவுக்குத் தோன்றும்.

‘‘எப்போது அது வரும்? என்றைக்கு அந்தத் தீர்ப்பு
ஆண்டவனிடமிருந்து கிடைக்கும்?’’ என்று நீங்கள் கேள்வி
கேட்கக் கூடாது. சிலபேர் ஏழு வருஷங்களில் தண்டிக்கப்
படுகிறார்கள்; சிலபேர் ஒன்பது வருஷங்களில் தண்டிக்கப்
படுகிறார்கள்;
சிலபேர் இருபது வருஷங்களில் தண்டிக்கப்படுகிறார்கள்!
கடைசி அடி என்பது சரியான மரண அடியாக இருக்கும். எந்த ஒரு
அயோக்கியனும் நிம்மதியாகச் செத்து, அவனுடைய குடும்பம்
நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறே இல்லை.
இதுவரையிலும் ஆண்டவன் ஒரு நியதியை அப்படி வகுத்து
வைத்திருக்கிறான்.

ஒரு இயக்கத்தை அப்படி நடத்திக் கொண்டிருக்கிறான்.
இல்லையென்றால் உலகத்தில் போராட்டங்கள் ஏது?
அயோக்கியர்கள் இல்லையென்றால், இறைவன் இயக்கத்தைப்
பற்றிய சிந்தனை ஏது? ஒரு பக்கம் அயோக்கியர்கள் இருந்து
கொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் ஆரவாரம் செய்து
கொண்டேதான் இருப்பார்கள். அந்த ஆரவாரத்தைப் பார்த்து,
‘நாம் நல்லவனாக இருந்தும் நமக்கு எதுவும் இல்லையே?
சீ! இது என்ன தெய்வ நம்பிக்கை?’ என்று நாம் கலங்கிவிடக்
கூடாது. பற்றிய கைகள் அப்படியே தெய்வத்தைப் பற்ற
வேண்டும்.

அப்படியே, அவனைப் பின்பற்றித் தொடருமானால்
நல்லவர்களுடைய குடும்பம், ஏழேழு தலைமுறைக்கும்
நிம்மதியாக இருக்கும். அயோக்கியர்களுடைய குடும்பம்,
ஏழேழு தலைமுறைக்கும் கஷ்டப்பட்டே தீரும் என்பது
ஆண்டவன் வகுத்துவிட்ட விதி.

நானே மயங்குகிற ஒரு விஷயத்தைத்தான், பத்தாவது
பாகத்தில் கடைசியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆனால், அந்த மயக்கத்திலிருந்தும் நான் விடுபடுகிறேன்.
என் கண் முன்னாலேயே பலபேர் தண்டிக்கப்பட்டதைப் பார்த்து
முன்பும் எழுதியிருக்கிறேன்; இப்பொழுதும் எழுதிக்
கொண்டிருக்கிறேன்; இன்னும் பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்.
மற்றவர்களுடைய தண்டனையையும் நான் பார்த்துவிட்டுத்தான்
சாவேன் என்று கருதுகிறேன். ஆண்டவன் அந்த வாய்ப்பை எனக்கு
அளிப்பானானால், நிச்சயமாக அயோக்கியர்கள், அக்கிரமக்காரர்கள்
புழுப்போல துடித்துச் செத்ததற்குப் பின்னாலேயே என்னுடைய மரணம் நிகழும்.

கவிஞர் கண்ணதாசன்
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 24, 2021 9:49 pm

அதனால்தான், ‘மனதை அடக்கி உடம்பை நன்றாக வைத்துக்
கொள்ளுங்கள்’ என்று நான் அடிக்கடி போதிக்கிறேன்.

தான் அனுபவித்து அதனால் கஷ்டப்பட்டு, மற்றவர்களும் கஷ்டப்படக்கூடாதே என்று நல்லெண்ணத்தில் எழுந்த /எழுதிய வார்த்தைகள்.

மலேசியாவிலேயோ, சிங்கப்பூரிலோ, மற்ற நாடுகளிலேயோ
பார்க்கும்போது, இந்தியாவில் இருக்கின்ற அளவுக்கு நோயாளிகள்
அங்கே இல்லை

கவிஞர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை. எண்ணிக்கையை மட்டும் வைத்து 
சொல்லி இருந்தால் சரியா? மொத்த ஜனத்தொகையில் இத்தனை விழுக்காடுகள் என்பதுதானே சரியாகும்.மன நோயாளிகளை பற்றி கூறுகிறார்.மக்கள் நலனில் கவலைப்படாது சுயநலத்திற்காக, திட்டங்கள் போட்டு மக்களை அடிமையாக்கி மன நோயை அவருக்கும் உண்டாக்கி அவரது குடும்பத்தினரையும் உள்ளாக்கும் கட்சிகள் /ஆட்சியை சொல்லி இருக்கிறாரோ?

கவிஞர் அவர்களுக்கு எப்போதுமே  நன்றி நன்றி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 24, 2021 9:58 pm

ஆறு வயதிலேயே குழந்தைகள் இறந்துபோகின்றன;
பதினாறு வயதிலேயும் இறந்து போகின்றன; போகின்ற
குழந்தைகளுக்காக நாம் அழ முடிகிறதே தவிர, திரும்பிக்
கொண்டு வரமுடிவதில்லை.

பிறப்பதும் நம் கையில் இல்லை.
இறப்பதும் நம் கையில் இல்லை.
90/100+ என்பது நாம் கண்கூடாக காண்கிறோம்.
"கடவுளே  அழைத்துக்கொள் என தினம் தினம் வேண்டுகிறேன் இருப்பினும் ஆண்டவன் கருணை இல்லை" என வருத்தப்பட்டு கொள்பவர்களை காண்கிறேன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக