ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் Empty தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

Post by சிவா Sat Aug 14, 2021 2:08 am



சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

*தொல்லியல் துறைக்கு ரூ. 29.43 கோடி
*தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்ய ரூ.5 கோடி
*தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.80.26 கோடி

தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் எந்த துறைக்கு எவ்வளவுக்கு நிதி ஒதுக்கீடு ?

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்



*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி
*சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ரூ. 4,807 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
*தமிழக போலீசாருக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு.14,317 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
*தீயணைப்பு துறை ரூ.405.13 கோடி
*பேரிடர் மேலாண்மை துறைக்கு ₹1,360 கோடி ஒதுக்கீடு.
*சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.500 கோடி
*நீதித்துறை நிர்வாகத்திற்கு ரூ.1,713.30 கோடி
*பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்கு ரூ.8,437.57 கோடியாக அதிகரிப்பு
*29 குளங்களின் தரம் உயர்த்த ரூ.111.24 கோடி
*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி
*ஊரக வேலை உறுதி திட்ட ஊதியத்தை ரூ.300 ஆகவும், பணிநாட்களை 150 நாட்களாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்
*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்
*நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி
*மீன்வளத்துறைக்கு ரூ.303.66 கோடி
*6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
*150 கோடியில் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் மேம்படுத்தப்படும்
*மீனவர்கள் நலனுக்காக ரூ. 1,149.79 கோடி

தடுப்பணைகள்



*10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்
*610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
*தமிழ்நாடு நீர்வள தகவல் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்
*மேட்டூர், அமராவதி, வைகை அணை நீர்த்தேக்க அளவை பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை

வீட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.2000 கோடி



*காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பெரும் சவால்
*தமிழகத்தின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை 33 சதவீதம் உயர்த்த ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்ககம், முதல்வர் தலைமையில் உருவாக்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
* ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.150 கோடி
* 2021-22ம் ஆண்டில் 2,49,877 வீடுகள் கட்ட ரூ.8,017.41 கோடி
* கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்
* ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.2000 கோடி
* அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு
* மாநில ஊரக வாழ்வாதார திட்டம் ரூ.809.79 கோடி
*அம்ருத் திட்டததிற்கு ரூ.1450 கோடி

மீண்டும் தொகுதி மேம்பாட்டு நிதி


*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி
*கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் ரூ.1,000 கோடி
*சென்னையில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கீடு
*எம்எல்ஏ மேம்பாட்டு திட்டங்களுக்கு தலா ரூ.3 கோடி வழங்கப்படும்
*சென்னையி்ல 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு
*பள்ளிகல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி
*உயர்கல்வித்துறைக்கு ரூ.5369.09 கோடி
*மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933.20 கோடி

நெடுஞ்சாலைகள் மேம்பாடு



* ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க ரூ.623.59 கோடி
*நெடுஞ்சாலை துறைக்கு 17,899.17 கோடி
*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2350 கோடி
*சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டம் 1,750 கோடி
*16 மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாடு ரூ.6448.28 கோடி
*வேளாண்மைக்கான இலவச மின்சாரம் வீட்டு மின்சார மானியத்திற்காக ரூ.19,872.77 கோடி
*கொரோனா கால நிவாரணமாக ரூ.9370.11 கோடி செலவிடப்பட்டுள்ளது.
*நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி

பாதாள சாக்கடை திட்டம்



*சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டத்திற்கு ரூ.2,371 கோடி
*சென்னையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2056 கோடி ஒதுக்கீடு
*குடிசை மாற்று வாரியம் திட்டங்களுக்கு ரூ.3954.44 கோடி
*மகளிர் இலவச பஸ் பயணத்திற்கு டீசல் மானியமாக ரூ.703 கோடி ஒதுக்கீடு
*தேவையுள்ள இடங்களில் புதிய ரேஷன் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
*ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்
*திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் செயல்படுத்தப்படும்.
* நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண்சாலைகள் தரம் உயர்த்தப்படும்
*சென்னை - குமரி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும்
*சிங்கார சென்னை 2.0 பணிகள் துவங்கப்படும்.
*புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரில் ஏற்படுத்தப்படும்.

மதுரையில் மெட்ரோ ரயில்



*மெட்ரோ 2ம் கட்ட பணிகள் 2026ல் முடிவடையும்
*சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும்
*கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை 4 ஆண்டுகளுக்குள் துவங்கும்
*தமிழகத்தை மின்மிகை மாநிலம் எனக்கூறுவது தவறு.
*2500 மெகாவாட் மின்சாரத்தை மின்சந்தையில் கொள்முதல் செய்தே தமிழக அரசு சமாளிக்கிறது.
*மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்.
*அடுத்த 5 ஆண்டுகளில் வாடகை கட்டடங்களில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு போதிய கட்டடங்கள் கட்டப்படும்.
*உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி கல்வித்துறை



*கற்றல் செயல்பாட்டில் முதல் 3 இடங்களில் தமிழகத்தை கொண்டு வர நடவடிக்கை.
*ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு ரூ.20.76 கோடி
* அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை உறுதிசெய்ய எண்ணும் எழுத்தும் இயக்கத்திற்கு ரூ.66.70 கோடி ஒதுக்கீடு
* அரசுப்பள்ளி மாணவர்களின் கணினி திறனை உறுதிசெய்ய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்க ரூ.114.18 கோடி நிதி
*மலைப்பாங்கான தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப்பள்ளிகள் புதிதாக அமைக்கப்படும்.
*865 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
* கூடுதல் வகுப்பறைகள் ஆய்வு கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ரூ.123.02 கோடி
* விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதனம் ரூ.25 கோடி

உயர்கல்வித்துறை



* முனைவர் பட்ட கல்வி உதவித்தொகை திட்டம் ரூ.16 கோடி
* 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்
*ரூ.10 கோடியில் 25 கலை அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
*413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கணினிகள் 13.22 கோடியில் ஏற்படுத்தப்படும்.
*தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம் துவங்கப்படும்

மசூதி, தேவாலயங்கள் புதுப்பிப்பு



*டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி
*108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1,033 ஆக உயர்த்தப்படும்.
* ஆதிதிராவிடர் சிறப்பு கூறுகள் திட்டத்திற்கு மொத்த செலவீனம் ரூ.14,696.60 கோடி
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டம் ரூ.1884.70 கோடி
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நலனுக்கு ரூ. 4142.33 கோடி
* குடிசை மாற்று வாரிய திட்டங்களுக்கு ரூ.3955.44 கோடி நிதி
* குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் ரூ. 2536.69 கோடி நிதி
* எம்ஜி ஆர் மதிய உணவு திட்டம் ரூ.1,725.41 கோடி நிதி ஒதுக்கீடு
* 3ம் பாலினத்தவர்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
* அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடு ரூ.48.48 கோடி நிதி ஒதுக்கீடு
* ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்திற்கு ரூ.2,536.69 கோடி நிதி
* கல்விக்காக வெளிநாடு செல்ல ரூ.5 கோடி உதவி
* வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு ரூ.60 கோடி
* அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய மானியத்திற்கு ரூ.215 64 கோடி
* மசூதிகள் மற்றம் தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 கோடி நிதி

2022ல் அகவிலைப்படி


* புவியியல் புகைபடிவ பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக ரூ.225.62 கோடி ஒதுக்கீடு
* 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும்
* மோசடி ஆவணங்களின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் பதிவாளருக்கே வழங்கப்படும்
*வரி ஏய்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பல்வேறு அம்சங்களை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தினமலர்


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

Post by சிவா Sat Aug 14, 2021 2:13 am

தமிழக பட்ஜெட்; தலைவர்கள் கருத்து

சென்னை: தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக இன்று (ஆக.,13) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பல்வேறு துறைகளுக்கும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பெட்ரோல் மீதான வரி குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

திமுக எம்.பி., கனிமொழி



தொழில்துறை அலகுகளுக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், அறைகலன்கள் சர்வதேச பூங்கா, புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிய திட்டங்களை தூத்துக்குடி மக்களின் நலனுக்காக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி மக்களின் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றி. தமிழக சுற்றுச் சூழலை மேம்படுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள இயக்கம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. வளர்ச்சியோடு சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வருக்கு நன்றி.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை



எதிர்பார்த்தைபோல் தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டம் இல்லை. ஆட்சிக்கு வருவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மறந்து போன பட்ஜெட்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி



தியாகராஜனுக்கு நிதித்துறையுடன் தமிழ் துறையையும் சேர்த்து வழங்குங்கள். செந்தமிழ் நன்கு 'வறளும்'. கொடுத்த வாக்குறுதிகளில் ஓரிரண்டை கூட நிறைவேற்ற வக்கில்லை. விடியல் யாருக்கு? நிதி பற்றாக்குறையால் மாநில அரசு திண்டாட்டம், எனினும், ரூ 5,000 கோடி ஒதுக்கீடு அணைகளை மேம்படுத்தவா? அணியை மேம்படுத்தவா? வெள்ளை அறிக்கை புராணம் பாதி, சா(நீ)திக்கட்சி புராணம் மீதி. இதற்கு ஏன் 'பட்ஜெட்' எனும் பில்டப்?.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்



திமுக ஆட்சியின்போது வைத்துள்ள கடனுக்கு அதிமுக.,வில் தான் அடைத்தோம். தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சம் கோடி என்பது 2022ல் எதிர்பார்க்கப்படும் கடன் தான், அதிமுக ஆட்சியின் முடிவில் 4.5 லட்சம் கோடி தான். அதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6000 கொடுத்துள்ளோம், பொங்கலுக்கு ரூ.2000 வழங்கினோம். வாக்குறுதிகளாக சொல்லாததை கூட செய்தோம். திமுக எல்லா வாக்குறுதிகளையும் தள்ளிப்போடுகிறது. இந்த பட்ஜெட் டிஜிட்டல் டிமிக்கி என்று தான் சொல்ல முடியும். அனைத்திற்கும் ஆராயப்படும், தெரிவிக்கப்படும் என்றே நிதியமைச்சர் கூறுகிறார்.

அதிமுக



பெட்ரோல் விலை குறைப்பு - ஏமாற்றம். திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையை ரூ.4 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி



தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிற மகத்தான பயணத்திற்கு வித்திட்டுள்ளது பட்ஜெட்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ



பொற்கால ஆட்சிக்கான திறவுகோளாக பட்ஜெட் அமைந்துள்ளது

முத்தரசன், இந்திய கம்யூ.,



தமிழகம் தலைநிமிர்ந்து நடைபோட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்

ஜி.கே.வாசன், த.மா.கா.,



மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத பற்றாக்குறை நிறைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்



தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

Post by சிவா Sat Aug 14, 2021 2:48 am

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 3வது மாநிலம் தமிழகம்



முதல்முறையாக #மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பொது பட்ஜெட்டை இன்று (ஆகஸ்ட் 13) தாக்கல் செய்தது. நாளைக்கு (சனிக்கிழமையன்று) வேளாண்மைத் துறைக்காக தனி #பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் குறித்து தமிழக ஆளுநரால் அறிவிக்கப்பட்டது. ஆளுநர் #பன்வாரிலால் புரோஹித் (Banwarilal Purohit) ஜூன் மாதம் 16 வது சட்டசபையின் முதல் அமர்வில் உரையாற்றி போது இதைத் தெரிவித்தார்.

தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்வார்.

ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய #திமுக அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் தனி விவசாய வரவு செலவுத் திட்டமும் (Agriculture Budget) ஒன்றாகும். சனிக்கிழமையன்று, #கர்நாடகா (Karnataka) மற்றும் ஆந்திராவுக்குப் (Andhra Pradesh) பிறகு, தமிழ்நாடு தனி விவசாய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலமாக மாறும்.

விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்கள், புதிய சாகுபடி முறைகள் மற்றும் விவசாயிகளின் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் நலச் சங்கங்கள் மற்றும் வல்லுநர்களின் பங்களிப்புடன் விவசாயத்தை நவீனமயமாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது தான் இந்த #வேளாண்துறை பட்ஜெட்டின் நோக்கமாக உள்ளது.

"விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, கால்நடை வளர்ப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களை வளர்ப்பது போன்ற தொடர்புடைய நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும். வேளாண் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மற்றும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் விவசாயத்திற்கான தனி ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையின் போது தெரிவித்திருந்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் (M Karunanidhi) நிறுவப்பட்ட உழவர் சந்தை (Uzhavar Santhai) மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் ஆளுநர் தனது உரையில் வலியுறுத்தி இருந்தார். பட்ஜெட் இதுபோன்ற பல சந்தைகளை மாநிலத்தில் நிறுவ முயற்சிக்கும்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் (Tamil Nadu Legislative Assembly) ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 வரை நடைபெறும்.

இன்று #தமிழக_அரசு பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (P. T. R. Palanivel Thiagarajan) தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால #அதிமுக ஆட்சியில் நிதி முறைகேடு குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை நேற்று வெளியிட்டார்.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

Post by சிவா Sat Aug 14, 2021 2:50 am

மகளிருக்கான திட்டங்கள் மற்றும் ஒதுக்கீடுகள் குறித்த விபரங்கள்:



#மகளிர் நலன் தொடர்பான அறிவிப்பில், மிக முக்கிய அறிவிப்பாக, மகளிர் அரசு ஊழியர்களுக்கான #மகப்பேறு கால விடுப்பு காலம், 9 மாதங்களிலிருந்து 13 மாதங்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, 2021, ஜூலை 1ம் தேதி முதல், முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது தவிர #திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியான, இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்துப் பேசிய நிதி அமைச்சர் #பழனிவேல்_தியாகராஜன், ''குடும்பத்தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவித்தொகை கிடைக்கும் என்பது தவறான புரிதல். உதவித் தொகை என்பது இல்லத்தரசிகளுக்கானது என்பதால், குடும்பத்தலைவர் பெயரை மாற்றத் தேவையில்லை எனவும், இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பின்னர், அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மகளிருக்கான பிற திட்டங்களில், மகளிர் இலவச பயணத்திற்கு மானிய நிதி ஒதுக்கீடு ரூ.703 கோடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,500 கோடி சிறப்பு #கொரோனா கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும். மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, மகளிர் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் Empty Re: தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum