உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
2 posters
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
First topic message reminder :

பிறப்பு : 17 செப்டம்பர் 1950
ஊர் : வத்நகர், குஜராத்
பெற்றோர் : தாமோதர தாஸ் முல்சந்த் மோடி, ஹீராபென்
பணி : இந்திய பிரதமர், அரசியல்வாதி
கட்சி : பாரதிய ஜனதா கட்சி
நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு
பிறப்பும் இளமையும்
நரேந்திர மோடி 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று பிறந்தார். குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகர் என்ற ஊர் தான் மோடியின் சொந்த ஊர். இவரது தந்தையின் பெயர் தாமோதர தாஸ் முல்சந்த் மோடி, தாயாரின் பெயர் ஹீராபென். மோடியின் முழுப்பெயர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி என்பதாகும். மோடிக்கு 6 உடன்பிறந்த சகோதரர்கள் உள்ளனர்.
டீக்கடை, ஆர்.எஸ்.எஸ் ஈடுபாடு
இளம் வயதில் மோடியும், அவரது சகோதரர்களும் வத்நகரில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தனர். பள்ளிக்கல்வியை வத்நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து முடித்தார் மோடி. பள்ளி மாணவனாக இருக்கும் போதே பேச்சுப்போட்டிகள், விவாதங்கள் பலவற்றில் கலந்துகொண்டு தனது பேச்சாற்றலை வளர்த்து சிறந்த பேச்சாளனாக விளங்கினார் அவர். மோடி தனது சகோதரர்களோடு இணைந்து நடத்திய டீக்கடைக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் பலர் அடிக்கடி வருவது வழக்கமாக இருந்தது.
இதனால் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களோடு நெருங்கிய தொடர்பும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கைகளின் மீது ஈர்ப்பும் மோடிக்கு சிறுவயதிலேயே ஏற்பட்டது. இதனால் 1958 ஆம் ஆண்டு 8 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தொண்டரானார் நரேந்திர மோடி.
திருமணம்
சிறுவயதிலேயே மோடியின் பெற்றோர் நிர்பந்தித்து யசோதா பென் மோடி என்பவருடன் நரேந்திர மோடிக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனால் மோடிக்கு திருமண வாழ்க்கையில் கொஞ்சம்கூட நாட்டமில்லை. அவரது எண்ணமெல்லாம் தேசத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்பதிலேயே இருந்தது. இதனால் மோடி தனது வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு இமயமலை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மோடி பயணித்தார்.
கல்லூரி படிப்பு
1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டமும், 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார் நரேந்திர மோடி. கல்லூரிப்படிப்பை படித்து முடித்த பிறகு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார் மோடி.
அரசியல் வாழ்க்கை
பிறகு #சங்பரிவார் என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சங்பரிவார் இயக்கத்தின் மாணவர் பிரிவான 'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' -ன் குஜராத் மாநில பொருப்பாளராக பதவி வகித்தார் நரேந்திர மோடி. இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இருந்தபோது, அதனை எதிர்த்து மோடி பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். இதன் மூலம் பல முன்னணி தலைவர்களின் நெருங்கிய தொடர்பு மோடிக்கு கிடைத்தது.
பாரதிய ஜனதா கட்சி
1985 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியோடு இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியது. பாரதிய ஜனதாவில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார் மோடி. 1987ஆம் ஆண்டு குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் பல முக்கிய பொறுப்புகள் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டன. 1995ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் மோடி. இதனால் கட்சியின் பல முக்கியப் பதவிகள் மோடிக்கு வழங்கப்பட்டன. 1998ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பான 'தேசிய செயலாளர்' பொறுப்பு நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
குஜராத் முதல்வர்
குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவியேற்றார். பிப்ரவரி 7 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட கலவரங்களை அரசால் கட்டுப்படுத்த இயலவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டினார். இதனால் மோடி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் சட்டமன்றத்தையும் கலைத்து புதிய சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்.
அந்தத் தேர்தலில் மோடி பெருவாரியான மக்களின் ஆதரவோடு மீண்டும் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சரானார். விவசாயம், மின்சாரம், தொழில் வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு என முதல்வராக சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மக்களின் பேராதரவோடு பெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் முதல்வரானார் நரேந்திர மோடி.
அப்போதும் சிறப்பாக பல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்று அசைக்க முடியாத ஆளுமையாக மாறினார் மோடி. இதனால் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று குஜராத் முதலமைச்சர் ஆகினார் நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி. பல்வேறு நலத்திட்டங்களை குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பேசப்பட்டார் நரேந்திர மோடி. குறிப்பாக மின்சாரத் துறை, வேளாண்மை துறை உள்ளிட்டவற்றின் வளர்ச்சியில் மோடியின் சாதனைகள் நாடு முழுவதும் பேசப்பட்டன.
இந்தியாவின் பிரதமர்
நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்து அம்மாநிலத்தின் வளர்ச்சியிலும், பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக்கிட்டியதை அங்கீகரிக்கும் விதத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.
வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட நரேந்திர மோடி, இரண்டு தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாரதத் திருநாட்டின் பிரதமராக 2014 மே 26 அன்று பொறுப்பேற்றார் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு, அந்நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான நட்புறவை மேம்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டினார் மோடி. 5
ஆண்டுகள் சிறப்பாக மக்கள் பணியாற்றிய பிரதமர் நரேந்திர மோடியை 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றிபெறச் செய்து இந்திய மக்கள் மீண்டும் இந்தியாவின் பிரதமர் ஆக்கினர். மக்களின் பேராதரவுடன் இந்தியாவின் வளர்ச்சிக்காக தற்போது செயல்பட்டு வருகிறார் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.
நம்பிக்கை நாயகர் மோடி
சாதாரண ஒரு டீக்கடை நடத்தி வந்த நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற ஒருவர் இன்றைக்கு நம் பாரதத் திருநாட்டில் பிரதமராக உயர்ந்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது கடின உழைப்பும், தேசத்தின் மீது அவர் கொண்ட பக்தியும், மக்களுக்காக அவர் ஆற்றிய ஆகச்சிறந்த தன்னலமற்ற தொண்டுகளும் தான் காரணம். பலதரப்பட்ட துறைகளை சார்ந்த பல இந்திய இளைஞர்களுக்கும் நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி நம்பிக்கைக்கும், கடின உழைப்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்த திரியில் பார் புகழும் எம் பாரத தேசப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் செய்திகள், தகவல்கள், கட்டுரைகள் இடம்பெறும்.
2014 - ல் இதே தலைப்பில் ஒரு திரி துவங்கினேன். ஆனால் அது இப்பொழுது எனக்கு கிடைக்கவில்லை.
நான் மோடியின் பக்தன், அவரைப் புகழ்வது ஒன்றே என் மனதிற்கு இன்பமளிக்கும் செயலாக உள்ளது. மோடிஜியை பிடிக்காதவர்கள் இந்த திரியிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கலாம்.
என்னப்போல் அவரை நேசிப்பவர்கள் இங்கு பதிவுகள் எழுதலாம்.

ஸ்ரீ நரேந்திர மோடி |

Last edited by சிவா on Mon Aug 09, 2021 1:56 pm; edited 4 times in total
Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்

உலகின் மிகத் தொன்மையான தேசமான பாரதத்தில் சறுக்கல் ஏற்படும் பொழுதெல்லாம், பாரதத் தாய் தன் தேசக் குழந்தைகளைக் காக்கத் தகுதியான திறன்மிகுந்த புத்திரர்களைப் பெற்றுக் கொள்கிறாள்.
அறம் சரிந்த பொழுது திரு வள்ளுவன் போன்றோரையும், மறம் சரிந்த பொழுது சத்ரபதி சிவாஜி போன்றோரையும்,
உரிமை சரிந்த பொழுது #நேதாஜி, திலகர், காந்தி, பாரதி போன்றோரையும்,
ஆன்மா தளர்ந்த பொழுது, விவேகானந்தர், ரமணர், போன்றோரையும் ஈன்றெடுத்து சரிவைச் சரிகட்டிக் கொள்வது வழக்கம்.
அது போலவே, ஊழலாலும், அந்நியச் சதியாலும் நாடு நிலை தடுமாறிக் கொண்டிருந்த பொழுது #நரேந்திர_மோடி என்றொரு புதல்வனை ஈன்று ஈடுகட்டிக் கொண்டிருக்கிறாள்.
அமெரிக்காவுக்கொரு ஜார்ஜ் வாசிங்டன், வியட்நாமிற்கொரு ஹோ சி மின், சிங்கப்பூருக்கொரு லீ க்வான் யூ, மலேசியாவுக்கொரு மஹாதீர்...
போல, புதிய பாரதத்திற்கு #நரேந்திர_தாமோதரதாஸ்_மோடி என்று உலக வரலாற்றில் நிலைக்கப் போகும் மனிதர்.
நிஜமாகவே தனக்காகவின்றி முழு மூச்சையும் நம் நாட்டுக்காக அர்ப்பணித்து உழைத்து வரும், நம் பிரதமர் நிறைந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ உங்களுடன் சேர்ந்து நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
One Man Army என்பார்களே அது போல் இவர் தனி ஒரு மனிதராக இருந்து போராடுகிறார்.
பலமான பக்க பலம் இருந்தால் இன்னும் விரைவாக பல விஷயங்களை சாதிக்கலாம்.
மார்க்கெட்டிங் மிகவும் முக்கியம்.எந்த ஒரு விஷயத்தையும் சட்டமாக மாற்றும்போது
நேரம், காலம், பொது ஜன கவர்ச்சி முதலியவை தேவை.அதற்கு தக்க தானை தலைவர்கள்
தேவை.ஓரிரு நல்ல விஷயங்களும் போதிய marketting இல்லாததால் அவப்பெயர் சேர்ந்துள்ளது.
அதை பிடித்துக்கொண்டு எதிர் கட்சிகள், தாங்கள்தான் நாட்டுமக்கள் நன்மை விரும்பிகள்
போல ரீல் காண்பிக்கிறார்கள்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
சிவா likes this post
Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்

உலக அரங்கில் இந்தியாவின் இடம் மிக உயரமான இடத்திற்கு சென்றிருக்கின்றது, வல்லரசுகளுக்கு இடையே அமைதிபேச்சு நடத்தும் அளவுக்கு சக்திமிக்க நாடாக மாறிவிட்டது இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கொடுத்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டனுடன் பிரான்ஸுக்கு கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நேரத்தில்தான் அமெரிக்காவில் ஐ.நா பொதுகுழு கூட்டமும் நடக்கின்றது
இந்த நேரத்தில் பிரான்ஸை கொஞ்சம் ஆறுதல்படுத்தும் முயற்சிகள் தொடங்கின ஆனால் பிரான்ஸ் அடங்கியதாக தெரியவில்லை ஆனால் உலக வல்லரசுகளுக்கு பொதுவான நாட்டை பிரான்ஸ் தேடியது
இந்த நேரத்தில்தான் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் மோடியினை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார், இதில் மோடியடனான பேச்சுவார்த்தைக்கு பின் பிரான்ஸின் நிலைபாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிகின்றது
குவாட் அமைப்பில் பிரான்ஸ் இல்லை, அதே நேரம் இப்பொழுது அமெரிக்கா செய்யும் மூவர் கூட்டணியிலும் அந்நாடு இல்லை
ஆனால் இந்தியாவோடு சேர்ந்து சீனகடலில் சில திட்டங்களை செய்ய விரும்புகின்றது பிரான்ஸ், இந்தியா இனி
பிரான்ஸ் கூட்டணியிலும் உண்டு அமெரிக்க ஜப்பான் கூட்டணியிலும் உண்டு
மோடியோடு நடந்த பேச்சுவார்த்தை மிகுந்த திருப்தி என்கின்றது பிரான்ஸ், இது ஒரு புரிந்துணர்வுக்கு அந்த நாடு வந்துவிட்டதன் அறிகுறி
பிரான்ஸை இந்தியா சமாதானபடுத்தி அந்த தகவல் அமெரிக்காவினை எட்டிய நிலையில் நேற்று மாலை அமெரிக்காவில் கால்பதித்தார் மோடி
உலகின் வல்லரசுகளுக்கிடையே முக்கிய பேச்சுவார்த்தையினை நடத்திய மோடிக்கு மிகபெரிய வரவேற்பை வழங்கியது அமெரிக்க வல்லரசு
உலகின் மிகபெரிய தலைவராக உயர்ந்து நிற்கின்றார் மோடி, அவரின் ஐநாவின் பேச்சுக்கும் அதை தொடர்ந்த பிடனுன்டனான சந்திப்புக்கும் பெரும் எதிர்பார்ப்பு உலகில் எழுந்துள்ளது
பாரதம் மோடியால் தலைநிமிர்ந்து நிற்கின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
T.N.Balasubramanian likes this post
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|