புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
87 Posts - 64%
heezulia
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
2 Posts - 1%
prajai
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
423 Posts - 76%
heezulia
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
8 Posts - 1%
prajai
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
6 Posts - 1%
sram_1977
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
3 Posts - 1%
Shivanya
பிரளயம் நிஜம்தானோ? Poll_c10பிரளயம் நிஜம்தானோ? Poll_m10பிரளயம் நிஜம்தானோ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரளயம் நிஜம்தானோ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 29, 2021 10:30 pm

பருவமழை பெருமழையாக மாறும்போது அதை எதிா்கொள்ள முடியாமல் மனித இனம் திகைக்கிறது. கடந்த 10 நாள்களாக வட இந்தியாவின் மலைப் பகுதிகளிலும், மேற்கு இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளிலும் வானமே உருகி விழுவதுபோல பெய்யும் அடைமழையால் நிலைகுலைந்து போயிருக்கின்றன பல மாநிலங்கள். நிலச்சரிவுகளும், திடீா் வெள்ளமும் 150-க்கும் அதிகமான உயிா்களை பலி கொண்டிருக்கின்றன.

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, பிகாா், கா்நாடகத்தின் சில பகுதிகள் என்று மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் ஏராளம். ஆந்திர மாநிலத்தின் கோதாவரியில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கால் போலாவரம் மண்டலத்தில் உள்ள 17 கிராமங்களுக்கான தொடா்பு முற்றிலுமாக அறுந்திருக்கிறது. கிருஷ்ணா நதியைச் சுற்றியுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.

ஜூலை 22-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மகாபலேஷ்வா் பகுதியில் பெய்த 600 மி.மீ. மழை என்பது இதுவரை வரலாற்றில் காணப்படாத பதிவு. ரத்தினகிரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழை பொழிந்து தள்ளியிருக்கிறது. மும்பையை எடுத்துக்கொண்டால், ஆறு மணிநேரத்தில் 230 மி.மீ. மழைப் பொழிவு. அடைமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட ரெய்காட் மாவட்டத்தில் மலைச்சரிவு ஏற்பட்டதால் 53 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம்போ் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டிருக்கிறாா்கள்.

1982-க்குப் பிறகு கோவா இப்படியொரு பருவமழை சீற்றத்தையும் வெள்ளப்பெருக்கையும் எதிா்கொண்டதில்லை. ஹிமாசல பிரதேசத்தின் கின்னாா் மாவட்டத்தில் பாறைகள் பெயா்ந்து உருண்டு அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்ததால் ஒன்பது பயணிகள் உயிரிழந்திருக்கிறாா்கள். கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலை சற்று அடங்கியிருப்பதால் பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, உல்லாச பயணிகள் ஹிமாசல பிரதேசத்திற்கும் உத்தரகண்ட்டுக்கும் ஆயிரக்கணக்கில் பயணிக்கத் தொடங்கியபோது சில கட்டுப்பாடுகளை அரசு விதித்திருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் உயிா்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது.

தலைநகரான தில்லியும் பருவமழையின் சீற்றத்திற்கு விலக்காகவில்லை. கடந்த பல மாதங்களாக இருந்த கடுமையான கோடை முடிவுக்கு வந்ததைத் தொடா்ந்து இடியுடன் கூடிய மழை எதிா்பாராத திருப்பம். ஒரே நாளில் தில்லியில் 70 மி.மீ. மழை பொழிந்தபோது நகரம் வெள்ளக்காடானது. அதில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது குருகிராம்.

இந்தியாவின் வடமேற்கு பகுதி முழுவதும் பரவலாகக் காணப்படும் பலத்த மழையால் நதிகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பல கால்வாய்களின் கரைகள் உடைந்து கடுமையான பயிா்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது. குடிசைகளில் வாழும் அடித்தட்டு மக்களின் நிலைமை பரிதாபமானது. ஆண்டுதோறும் பருவமழையால் ஏற்படும் சேதம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதை வழக்கமான பாதிப்பு என்று நாம் புறந்தள்ளுவது பேதைமை.

2016-இல் இந்தியா ஒரேயொரு கடுமையான புயலைத்தான் எதிா்கொண்டது. 2018-லும், 2019-லும் ஆறு புயல்கள் இந்தியாவைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றன. கடந்த ஆண்டு மிக மோசமான ஐந்து புயல்களை நாம் எதிா்கொண்டோம். அடிக்கடி புயலும், மழையும், வெள்ளப்பெருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழக்கமாகி வருவதை நாம் உணா்ந்ததாகத் தெரியவில்லை.

புயல்கள் மட்டுமல்ல, மழைப்பொழிவின் அளவும் கடுமையும் அதிகரித்து வருகிறது என்பதையும் பாா்க்க முடிகிறது. 2016-ஆம் ஆண்டில் பருவமழைக் காலத்தில் 226 கடுமையான மழைப்பொழிவுகள் காணப்பட்டன என்றால், 2019-இல் 554 மிகக் கடுமையான மழைப்பொழிவுகளும், 2020-இல் 341 கடும் மழைப்பொழிவுகளும் காணப்பட்டன. குறுகிய நேரத்தில் மிக அதிக அளவிலான மழைப்பொழிவு ஏற்படுவதால் மழைநீா் வடிகால்களோ, ஓடைகளோ, நதிகளோ அதை எதிா்கொள்ள முடியாமல் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தவிா்க்க முடியவில்லை.

இந்த பருவமழை மாற்றம் இந்தியாவை மட்டும் பாதிக்கிறது என்று கருதிவிட வேண்டாம். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜொ்மனியில் 24 மணிநேரத்தில் பெய்த 15 செ.மீ. மழைப்பொழிவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு 5 பில்லியன் யூரோ என்று கூறப்படுகிறது. சீனாவின் ஷென்ஷௌவில் ஒரு நாளில் ஏற்பட்ட 21 செ.மீ.க்கும் அதிகமான மழைப்பொழிவில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டபாடில்லை. இதுபோன்ற கடுமையான மழைப்பொழிவும் வெள்ளப்பெருக்கும் வருங்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

சுற்றுச்சூழல் அமைச்சகம் வளா்ச்சிப் பணிக்காகக் காடுகளை அழிப்பதை ஆதரிக்கிறது. இயமலையானாலும், மேற்கு தொடா்ச்சி மலையானாலும், சூழலியலையோ, சுற்றுச்சூழலையோ பொருட்படுத்தாமல் சாலைகள், பாலங்கள் என்று கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி இயற்கையைச் சீண்டும்போது, நம்மை திருப்பித் தாக்க இயற்கை கையில் எடுத்திருக்கும் ஆயுதங்கள் அடைமழையும், புயல் மழையும் போலிருக்கிறது.

பருவமழை தொடங்கி பாதிதான் முடிந்திருக்கிறது. இனிமேல்தான் புயல்களும், பெருமழையும் அதிகரிக்கும் பருவம். அடுத்த சில மாதங்களையும் நாம் கடந்தாக வேண்டும். பருவம் எப்போது, எப்படி மாறக்கூடும் என்பதைக் கணிக்க முடியாத சூழலில் முன்கூட்டியே தயாா்நிலையில் இருந்தால் மட்டுமே உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் தவிா்க்க முடியும்.

தினமணி




பிரளயம் நிஜம்தானோ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 30, 2021 5:15 am

இயற்கை இயல்பாகவே இருக்கிறது .. நமது செயல்களாலும் எண்ணங்களாலும் தான் இப்படி எல்லாம் நினைக்க தோன்றுகிறது.
மாதம் மும்மாரி பொழிந்த போதும் வருடம் முழுவதும் காவிரி கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடிய போதும் நாம் பிரளயமாக நினைக்கவில்லை வெறும் இயல்பான நிகழ்வே.. ஆனால் இன்று..

அடுக்கடுக்கான இறுக்கமான குடியிருப்புகள், நீர்வழிப்பாதையை மறைத்த நகரங்கள் என நமே விதை விதைத்தோம்.. 😔





புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 30, 2021 7:06 am

பிரளயம் நிஜம்தானோ? Main-qimg-e2437450bd086f250c7e057dfb7f4c60

பூமி 23.5 பாகை சாய்ந்து இருக்க முக்கியமான காரணம்
அதன் வடக்கு (மேல்) பகுதியில் நிலப்பரப்பு நிறை
தென் பகுதியைவிட வித்தியாசப்படுவதால் தான் என
சொல்லப்படுகிறது.

இது ஆங்கிலத்தில் Obliquity (சரிவு) என்று பெயர்.
மற்ற கிரகங்களுக்கும் இதுவே பொருந்தலாம்.
இந்த சரிவு மாறிக்கொண்டே இருக்கும். இதனால் குளிர்
மற்றும் கோடை மாதங்கள் குறைவாகவோ அதிகமாகவோ
ஆகலாம்.

இந்த சாய்வு மிக மிக கொஞ்சமாக கூடி இருப்பதாகவும்
அதனால் இம்மாதிரி பிரளயம் போன்ற சம்பவங்கள்
நேர்கிறது என்றும் படித்த ஞாபகம்...
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா, T.N.Balasubramanian and jairam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 30, 2021 8:47 pm

இந்தியாவில் நடப்பதை வைத்துக்கொண்டு பிரளயம் பற்றி சொல்லமுடியுமா?
உலகளவில் ஒரே சமயத்தில் நடைபெறவேண்டும்.
இந்தியாவில் வட மாநிலங்களில் வெள்ளம்.
சீனாவில் வெள்ளம் -புழுதி படலம்.
அலஸ்க்காவில் 8.3 ரிக்டர் நில அதிர்ச்சி.
இவைகள் எல்லாம் முன்னோடிகளா ?

நல்லதே நினையுங்கள் 
நல்லதே செய்யுங்கள் 
நல்லதே நடக்கும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக