புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
89 Posts - 38%
heezulia
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
340 Posts - 48%
heezulia
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
24 Posts - 3%
prajai
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Barushree
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மருத்துவம்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 27, 2021 11:51 pm

First topic message reminder :



கோட்பாடு விளக்கம்

சித்த மருத்துவக் கோட்பாடு என்பது, அம்மருத்துவம் எந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்யப் படுகின்றதோ அக்கொள்கையின் அடிப்படையைக் குறிப்பிடுவதாகும்.

மருத்துவக் கோட்பாடு

உடலைப் பற்றி அறிவது; உடலில் தோன்றும் நோய்களைக் கண்டறியும் கருவிகளை உருவாக்குதல்; நோய்களுக்கான காரணங் களைக் கூறல்; நோய்களுக்குரிய மருந்துகளை உடலியலுக்கு ஏற்றவாறு அமைத்தல்; மருந்துகளால் நோய்களைத் தீர்க்கும் முறைகளை வகுத்தல்; நோயிலிருந்து விடுபடல்; தடுத்தல்; பாது காத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கோட்பாடு உருவாக்கப்படும்.

சித்த மருத்துவக் கோட்பாடு

சித்த மருத்துவக் கோட்பாடு ஐம்பூதக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டது. இந்த உலகம் ஐம்பூத மயமானது; இந்த உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் அவற்றால் உருவானவையே; மனித உடலும், உடல் உறுப்புகளும் ஐம்பூதங்களை ஆதாரமாகக் கொண்டு உருவானவை; உடலில் தோன்றும் நோய்களுக்குக் காரணமாக அமைவதும், அந்நோய்களைத் தீர்க்கும் மருந்துப் பொருள்களும், மருந்தும் பஞ்சபூதச் சேர்க்கையினாலேயே உருவா கின்றன. இயற்கையாகத் தோன்றிய பஞ்சபூத முறைக்கு மாறாக அமையும் மருந்துகள், பயன் தர மாட்டா என்னும் கருத்துகளின் அடிப்படையில் வகுக்கப் பெற்றதாகும்.

பஞ்சபூதம்

பஞ்சபூதம் என்பது, நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் என்னும் ஐந்தாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லா விட்டாலோ, குறைந்தாலோ உயிர்கள் தோன்றவும் வாழவும் வழியில்லை. உயிர்கள் தோன்றவும் உய்யவும் காரணமாக அமைவது பஞ்ச பூதமாகும்.

"" நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''1

இந்த உலகம், பஞ்சபூதங்களின் கலவையால் உருவானதே என்று, தொல்காப்பியம் உரைக்கிறது.

உலகமும் பஞ்சபூதமும்

உலகம் பஞ்சபூதங்களின் கலவையினால் உருவாகியிருப்பதைப் போல, நிலவுலகில் உருவாகி யிருக்கும் பொருள்களும் பஞ்சபூதங் களின் கலவையால் அல்லது சேர்க்கையால் உருவானவை.2 பஞ்ச பூதங்களின் தொகுதியே உயிரினங்களை உருவாக்கின என்பதால், உயிர்த் தோற்றத்திற்குப் பஞ்சபூதங்களே ஆதியாக அமைவது தெரிய வருகிறது.3

“ வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம்
மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம்
தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்
கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்
குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு''4

என்று, சட்டைமுனி உரைக்கின்றார். ஐம்பூதங்களால் உருவானவை மனிதர் மட்டுமல்ல, தேவதைக்கும் அவைதாம். சதாசிவமாய் நின்ற தெய்வத்துக்கும் அவைதாம். உயிரினங்கள் அனைத்துக்கும் அவைதாம். அவற்றால்தான் அனைத்துமே உருவாயிற்று என்று தெளிவுபடுத்துவர்.

உயிரினங்கள் பஞ்சபூதங்கள் அல்லாமல் வேறு முறையில் உருவானவை அல்ல என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

ஒரு பொருளின் மூலத்தைக் கண்டுரைப்பதைப் போல, உயிரினங்கள் அனைத்திற்கும் மூலமாய் நிற்பது பஞ்சபூதங்கள் என எண்ணினர்.




தமிழ் மருத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:00 am


சுத்திப் பொருள்கள்

உலோகங்கள், பாடாணங்கள், நச்சுத்தன்மையுடைய கொட்டை, பருப்பு, விதை போன்ற பொருள்களைச் சுத்தி செய்வதற்காக, மூலிகைச் சாறு, கள், நீர், பால், மோர், பூநீர், இளநீர், சிறுநீர், சுண்ணாம்பு நீர், காடி நீர், எண்ணெய், பழநீர், செம்மண், செங்கல்தூள் போன்ற பல பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன.

ஒரு பொருளால் எல்லாவித மருந்துகளையும் சுத்தி செய்ய முடியாது. பொருள்களின் குணமும், சுத்திக்காகப் பயன்படுத்தப் படுகின்ற பொருள்களின் குணமும் கண்டறிந்து, அவற்றின் சேர்க்கை யால் உண்டாகும் எதிர் விளைவுகளையும் கண்டறிந்தே சுத்தி செய்யப் படும். மருந்துகளைச் சுத்தி செய்யும் முறை விரிவாகவும் விளக்க மாகவும் சித்தர்கள் கலைக் களஞ்சியத்தில் விளக்கப் பட்டுள்ளது.

மூலிகைகள்

தாவர இனங்களில் மூலிகைகள் தலை சிறந்தவை. உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் தாவரங்களைச் சார்ந்து வாழ்ந்திருப்பதைப் போல, மருத்துவ முறைகள் நேர் முகமாகவோ மறைமுகமாகவோ மூலிகைகளைச் சார்ந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக சித்த மருத்துவம் மூலிகைகளையே மூலப் பொருளாகக் கொண்டுள்ளது. இயற்கை வழி அமைந்த இலக்கியங்களும், மருத்துவமும் இயற்கைப் பொருளான மூலிகைகளின் குண நலன்களை அறிந்து அவற்றின் பண்புகளையும், மருத்துவக் குணங்களையும் தம்முள் சேர்த்துக் கொண்டுள்ளன.

தமிழ் மருத்துவ நூலார் அவற்றின் குணங்களை அறிந்து அவற்றைப் பயன்படுத்தி வந்தனர். மண்ணில் தோன்றிய பல்லாயிரக் கணக்கான தாவரங்கள் அனைத்தையும் மருத்துவம் ஏற்றுக் கொள்ளா விடினும், அறிந்தவற்றைப் பயன்படுத்தத் தக்கவை என்றுணர்ந்த வற்றை ‘மூலிகை’ எனப் பெயரிட்டுப் பயன்படுத்தி வருகிறது.

"" மூலி யனேக மூவாயிரத்து முன்னூ ரெனினுங்
காலியின் வேகங் கடற் சூழ்ந் தகில காட்ட கத்திற்
பாலினம் நீரினம் நீரில்லா வேரினம் படரினமுஞ்
ஜோலிய தாட்டம் வாதத்தின் மூலியுஞ் சொர்ணமிதே.''

கடல் சூழ்ந்த நில உலகத்திலுள்ள காடுகளில் பாலினம், நீரினம், வேரினம், படரினம் எனும் வகைப்படுத்தப் பெற்ற மூலிகைகள் என்பர். இதனால் இத்தனை மூலிகைகளைச் சித்தர்கள் அறிந்திருந்தனர் எனக் கருதலாம்.

"" சொன்னதொரு மூலிகையின் தொகுப்புக் கேளு
சுளுக்காக நானூற்று யெழுபத்து மூன்று''

என்று, மூலிகைகளின் பெயர்கள் பட்டியலிட்டுக் காட்டப் பட்டுள்ளன. இதனால், இந்நூலாசிரியர் தொகுத்த மூலிகை எனக் கொள்ள வேண்டும். திருவருட்பாஉரைநடைப் பகுதியில், சீந்தில் தொடங்கி துளசி ஈறாக மூலிகைப் பெயர்களும், அவற்றின் மருத்துவக் குணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மருந்தாகும் மூலிகைகளாக இருக்கக் காணலாம். அவை, வடலூர் இராமலிங்க வள்ளலார் அறிந்திருந்த மூலிகைகள் எனக் கருதலாம்.

இந்தியாவில் சுமார் வகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன. அதில் வகைகள் நாட்டு மருத்துவத்திலும் வகை ஆங்கில மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன என்பர். இது, இந்நூலாசிரியர் அறிந்திருந்த செய்தியாக இருக்கலாம். என்றாலும், இவர் வகை மூலிகைகளின் பெயர்களைத் தான் பட்டியலிட் டுள்ளார். எனவே, அவரவர் தொகுத்த காலத்திற்கு ஏற்ப மூலிகைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக இருக்கக் காண்கிறோம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் என்பவை மருத்துவ மூலிகையின் தொகுப்பு பெயர் பெற்று விளங்கக் காணலாம்.

ஏலாதி : சுக்கு, இலவங்கம், சிறுநாவல் பூ, மிளகு, திப்பிலி, ஆகிய ஆறு மருந்துப் பொருள்களும் முறையே ,,,,, என்ற எடை அடிப் படையில் கலந்ததற்கு ஏலாதி எனப்பெயர்.

திரிகடுகம் : சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் சேர்ந்தது திரிகடுகம் எனப்படும்.

சிறுபஞ்சமூலம் : கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெரிஞ்சில்நெரிஞ்சில் இவ்வைந்தின் வேர்கள் சிறுபஞ்ச மூலமெனக் கருதப்பெறும்.

இவ்வாறு தொகுப்பு மூலிகைகளாகக் காணப்படுபவை, திரிகண்டம், திரிஏலம், திரிகந்தம், திரிகாயம், திரிகாரசிகம், திரிகுமரி, திரிசாதம், திரிநிம்பம், திரிபலை, திரிபழம், திரிமஞ்சள், திரிமதம், திரிமூலம் எனவும்,

இரு ஓமம், இருகரந்தை, இருகுமிழ், இருசங்கன், இருசண்பகம், இரு சந்தனம், இரு சீரகம், இருதொட்டி, இரு நன்னாரி, இரு நாபி, இரு நிம்பம், இரு நெரிஞ்சில், இரு நொச்சி, இருபகம் எனவும்,

பஞ்ச கந்தம், பஞ்சகமம், பஞ்சகற்பம், பஞ்சகசாயம், பஞ்ச காயம், பஞ்ச காரகம், பஞ்ச கோலம், பஞ்ச சருக்கரை, பஞ்ச சீதம், பஞ்ச தரு, பஞ்ச நிக்தம், பஞ்ச திரவியம், பஞ்ச தீபாக்களி, பஞ்ச நிம்பம், பஞ்ச பட்டை, பஞ்ச பத்திரம், பஞ்ச லோதகம், பஞ்ச பாணப்பூ, பஞ்ச பூதமூலம், பஞ்ச பூடணம், பஞ்ச முட்டி, பஞ்ச மூலம், இடைப்பஞ்ச மூலம், பெரும் பஞ்ச மூலம், புற்பஞ்சமூலம், பஞ்ச மூலிகற்பம், பஞ்ச மூலிக் குடிநீர், பஞ்ச மூலித்தைலம், பஞ்ச லோகச் சாயம், பஞ்ச வர்க்கம், பஞ்ச வலக்கம், பஞ்சவாசம், பஞ்ச வில்வம், பஞ்சாக்கினிக் கொடி, பஞ்சாமிலம் எனவும் மருத்துவத் தொகையகராதி தெரிவிக்கக் காணலாம்.

""மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய்வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக் கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்
மீண்டேயும் தம்உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும், உள; நீ, வீர
ஆண்டு ஏகி, கொணர்தி என அடையாளத் தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்''

எனக் கம்பன் உரைக்கக் காணலாம். மாண்டாரை உய்விப்பதும், உடலை இரு வேறாக வகிர்ந்தாலும் பொருந்துவிக்கச் செய்வதும், படைக்கலங் களைக் கிளர்ச்சி செய்யச் செய்வதும், இழந்த உருவத்தை மீளச் செய்வது மாகிய மருந்து மூலிகையாகும் என்றதனால் மூலிகையின் சிறப்பு விளங்கச் செய்யும்.

தமிழ் மருத்துவத்தில் இடம் பெற்ற ‘இருவேலி’ வேலூர்ப்பாளையச் செப்பேட்டிலும், ‘வழுதிலை’யைச் சேலம் மாவட்டம் தாரமங்கலம் செப்பேட்டிலும் காண முடிகிறது. செவ்வல்லி, செவ்வாம்பல், செங்குவளை எனப்படுகின்ற செங்கழுநீர் சமயத்தோடு தொடர்புடைய மூலிகையாகும். இதனை நடுவதற்கு அரசிடம் உரிமை பெற வேண்டும் எனவும், இதை ‘உரிமை மலர்’ என்று தேவாரமும், தாரமங்கலம், செங்கம் இடங்களிலுள்ள சோழர் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. செங்கழுநீர் சிவனுக்கு உகந்த மலர் என்பதால், இதற்கு வழங்கப்பட்ட வரி ‘குவளைக் காணம்’ எனப்பட்டது. அதே போல், மருத்துவக் குணமிக்க நீலமலர் வளர்க்க ‘குவளை நடுவரி’யும், கண்ணோய், ஆஸ்துமா, காமாலை, இரத்தக் குறைபாடு முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும் ‘கரிசலாங்கண்ணிக்கு ‘கண்ணிட்டுக் காணம்’ என்னும் வரி செலுத்தி வளர்க்க வேண்டும் என்று, பல்வேறு வரி முறைகள் முடியாட்சிக் காலத்தில் மூலிகைகளுக்கு இருந்ததை அறியலாம். மூலிகைகளின் சிறப்பினையும் அதன் தன்மையையும் கருத்திற்கொண்டு, மூலிகைகளைக் கடவுளோடு இணைத்துக் கொண்டனர்.

சிவனுக்குரிய மூலிகை வில்வம்; விநாயகனுக்குரிய மூலிகை அருகு

சக்திக்குரிய மூலிகை வேம்பு;முருகனுக்குரிய மூலிகை கடம்பு

திருமாலுக்குரிய மூலிகை துளசி; பிரம்மாவுக்குரிய மூலிகை அத்தி

கிருஷ்ணணுக்குரிய மூலிகை ஆல்; கலைமகளுக்குரிய மூலிகை தாமரை

தேவதைகளுக்குரிய மூலிகை வெற்றிலை

என வகுத்துக் கொண்டனர்.




தமிழ் மருத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:00 am


மூலிகைகளும் மருத்துவ மலர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் வனங்கள் (கச்ணூடு) ஏற்படுத்தப்பட்டு பாதுகாக்கப் பட்டன. அவற்றைப் பராமரிக்கும் பொருப்பும் கோயில்களைச் சார்ந்தே இருந்தால், அவை பாதுகாக்கப்பட்டதுடன் அவற்றின் புனிதமும் போற்றப்பட்டதெனலாம்.

. கடம்பவனம் – மதுரை . மதுவனம் – நன்னிலம்

. குண்டலி வனம் – திருவக்கரை . மறைவனம் – வேதாரணியம்

. சண்பகவனம் – திருநாகேச்சுரம் . மாதவிவனம் – திரு முருகன் பூண்டி

. சூதவனம் – திருவுச்சாத்தானம் . முல்லைவனம் – கருகாவூர், திருமுல்லைவாயில்

. பாரிஜாதவனம் – திருக்களர் . வில்வவனம் – திருவாடனை

. மகிழவனம் – திருநீடூர் . வேய்வனம் – திருநெல்வேலி

மூலிகை எனக் கொண்ட மரம், செடி, கொடி ஆகிய அனைத்தையும் பாதுகாப்பதில் சைவத் திருக்கோயில்கள் அதிக ஆர்வம் கொண்டன வாகக்காணப்படுகின்றன. சைவத் திருக்கோயில்கள் (தமிழ கத்தில் உள்ளவை மட்டும்) அனைத்திலும் ‘தல விருட்சம்’ எனும் பெயரில் ஏதேனும் ஒரு மூலிகைக் குணங்கொண்ட தாவரத்தைப் பாதுகாக்க முற்பட்டிருக்கின்றன.

தல விருட்சங்களாக உள்ள தாவரங்களில் ஒருசில வற்றின் குறிப்புகள்:

ஏர் இழிஞ்சி : பொன்னேரி சின்னக் காவணம் சிவன் கோயில், இதன் பழம் கீழே விழுந்து மறுபடியும் கிளையில் சென்று ஒட்டிக் கொள்ளும்.

தில்லை : தில்லை, நடராசர் திருக்கோயில். இதன் நிழல் வெய்யிலில் குளிர்ச் சியையும் குளிரில் வெப்பத்தையும் தரும்.

மாமரம் : காஞ்சி, ஏகாம்பர நாதர் திருக்கோயில். ஆயிரம் ஆண்டிற்கும் முற்பட்டது. நான்கு கிளைகள் ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வாரு சுவையுடைய பழங்கள்.

பிறவாப்புளி : பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில். விதை எப்போதும் முளைத்ததில்லை.

இறவாப் பனை: பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில். சாகாவரம் பெற்ற மரம்.

நாவல் : பழமுதிர்சோலை. நாவல் மரம் இயல்பாக ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியின் போது தான் பழம் பழுக்கும். ஆனால், இங்குள்ள மரம் மட்டும் கார்த்திகையில் கந்த சஷ்டியின் போதுதான் பழம் பழுக்கும். (ஒளவையிடம் கந்தன் சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்றதும் நினைவிற் கொள்ளத்தக்கது.).

ஏகமூலிகை : ஏகமூலிகை என்பது கையான் தகரையைக் குறிக்கும். முறைப்படி செய்தால் அம்மூலிகை உலோகங்கள், பாடாணங்களையும் புடமிட்டுப் பற்பமாக்கப்பயன்படும். அதனாற்றான் அதற்கு அப்பெயர்.

வேலு மூலிகை:“பல்லுக் கடுத்த பலநோ யகற்றியரைக் கல்லுக்கு நேராகக் காட்டுமே’’ வேல் என்னும் மூலிகை பற்களின் நோய்கள் பலவற்றையும் நீக்கு வதுடன், பற்களை வலிமையடையச் செய்து கற்களைப் போல உறுதிப் படுத்தும்.

பூனைக்காலி : வாத, பித்த, ஐயம் என்னும் இம்மூவகைக் குற்றங்களால் வரும் நோய்களைப் போக்கும்.

காந்தனள் : சங்க இலக்கியம் குறிப்பிடும் காந்தளை. அதன் கிழங்கு ஏர்போல வளைந்து காணப்படுவதனால் கலப்பைக் கிழங்கு என்றும் பெயர் பெறும். அக்கிழங்கின் மேல்பகுதியும் கீழ்ப் பகுதியும் பண்பால் வேறு பட்டவை. ஒரு பகுதி இதய ஓட்டத்தை ஊக்குவிக்கும். மறுபகுதி, எதிராகப் பணிபுரியும். அதில் அடங்கிய கோகோசின் என்ற ‘அல்கலாய்ட்’ புற்றுநோய்க்கு நல்ல மருந்து. விஷமும் அதில்; மருந்தும் அதில். அமுதமும் நஞ்சும் ஒரே இடத்து

என்னும் சிறப்பிற்குரியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான சிறப்புகள் மட்டுமல்லாது மேலும் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண் டிருப்பவை மூலிகைகளாகும்.

“அவுரி, ஓரிலைத் தாமரை, செவ்வல்லி, பிளியறணை, அமுரி, கோவை, பிடர்முக்கி, கொடியொளிச் சிகப்பு, செந்திராய், கரிய சாலை, சிறுகீரை ஆகியவற்றின் சாற்றைத் தனித்தனியே பாண்டத்தில் வைத்து, வெண்கரு, குன்றி, சீனம் இவற்றைப் பொடி செய்து, மேற்கண்ட சாற்றில் போட்டுக் காய்ச்சும் போது தாரம், இந்துப்பு, மெழுகு, வெண்ணை சேர்த்து மூடிசீலை செய்து எரித்தெடுத்து,அதன் சாம்ப லுக்கு எட்டுக்கு ஒன்று ஆவின் நெய், வெண்காரம், வெல்லம், குன்றி இவற்றைச் சேர்த்துப் பிசைந்து, பத்துக்கு ஒன்று குடோரி சேர்த்து மூன்று நாள் அரைத்து வெய்யலில் காய வைத்துசரஉலையில் ஊத மூலிகை செம்பாகும்”

என்பதனால், மூலிகையிலிருந்து செம்பு உருவாகும் என்பதுடன்,

இந்தச் செயற்கைச் செம்பினால் செய்யப்படுகின்ற மருந்து வீரிய மிக்கதாகவும் நோயையும், நோயின் மூலத்தையும் அழிக்க வல்லதாகவும் இருக்கு மென்பர்.

"" விழலாகப் போகாமல் கரிசாலை கரந்தை

மிக்கான பொற்றலையும் நீலிவல் லாரை

பழலாகப் பாக்களவு பாலில் கொள்ளு

பாங்கான மண்டலந்தான் உண்டா யானால்

கழலாக காயந்தான் ஆயிரத் தெட்டு

கனகம்போல் சடந்தானும் கனிந்து மின்னும்

மழலாக வார்த்தையது கின்னரத்தின் ஒலியாம்

மகத்தான வாசியுமே இறுகும் பாரே.''

கரிசாலை, கரந்தை, பொற்றலை, நீலி, வல்லாரை ஆகிய ஐந்து மூலிகைகளைத் தினமும் பாக்களவு ஒரு மண்டலம் உண்டு வந்தால், உடல் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னாகக் கனிந்து மின்னுவதுடன், குரல் கின்னரம் போன்ற இனிமை யானதாகவும்மூச்சும் இறுகி உடலை வளப்படுத்தும் என்று தெரிகிறது.




தமிழ் மருத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:01 am


கறுப்பு மூலிகை

மூலிகைகள் இயல்பாக இருக்கும் நிறத்திலிருந்து மாறுபட்டு கறுப்பு வண்ணத்தில் அவற்றை வளர்த்து அதைக் கற்பமுறையில் உண்டால், நீண்ட நாள் வாழலாம் என்பது சித்தர்களின் கருத்தாக இருக்கிறது.

“இரண்டாள் மட்டம் குழியில் நிறையச் சேங்கொட்டையைப் போட்டு மூடி, அதன்மேல் கரு நெல்லி, கருநொச்சி, கஞ்சா, கொடி வேலி வைத்து வளர்க்க அவை கருத்து வளரும். அவற்றை முறையாக உண்ண கற்பமாகும்.”

“இடுப்பளவு குழியில் சேங்கெட்டை இரண்டு முழ உயரம் கொட்டி, மண்போட்டு மூடி, நீர் பாய்ச்சி நன்றாக அழுகச் செய்து மூன்று திங்களுக்குப் பின்,

குமரி, ஓமம், கஞ்சா, வல்லாரை, கரிசாலை, செருப்படி, நீலி, வீழி, பொற்றலை, நொச்சி, கரந்தை, மத்தை, தும்பை, கொல்லன் கோவை, வாழை ஆகியவற்றைப் பதியமிடவும். அவை நன்றாக வளர்ந்து காய்ந்த பின் அவ்விதைகளை முன்போலவே சேங்கெட்டை யிட்டுப் பாத்திக் கட்டி, வளர்த்துஇவ்வாறு நான்கு முறை வளர்த்தால் சிறப்பான கருப்பு மூலிகையாகும். இவ்வகை மூலிகைகைளை மலைதோறும் சித்தர்கள் வளர்த்துள்ளார்கள். அவ்வகை இலையைக் கசக்கி, கொக்கின் இறகில் பூச, அவ்விறகு காக்கை நிறம் போலாகும். அவ்விலைகளைத் தின்றால் காய சித்தி அடைந்து பல்லாண்டு வாழலாம். மேற்கண்டவாறு வளர்க்கப் பெற்ற கறுப்பு மூலிகை களை உண்டு காயசித்தி பெற்ற சித்தர்கள் வருமாறு:

மச்சமுனி வல்லாரை பலர் குமரி

கமலமுனி கொடுவேலி காலாங்கி ஓமம்

பிரமமுனி செறுப்படை சிவயோகமுனி இராமதேவர் கரிசாலை

வாசமுனி பொற்றலை பிரமமுனி நீலி

கோரக்கர் கஞ்சா/பொற்றலை கஞ்சமலைச் சித்தர் வீழி

கொங்கணர் கரிசாலை பதஞ்சலி கரந்தை

சொரூபாநந்தர் திருமேனி நந்தீசர் கோவை

போகர் கொல்லங் கோவை

மேற்கண்டவர்கள் மூலிகைகளை முறைப்படி உண்டு காயசித்தி பெற்று நீண்ட நாள் வாழ்ந்திருந்ததாக அறியப்படுவதனால் மூலிகையின் சிறப்புகள் அறியப்படும்.

மூலிகைகளைப் பற்றிய அறிவு சித்தர்களிடையே மிகுந்திருந் தற்குச் சான்றாகக் கீழ்க்கண்ட பாடல் விளங்கக் காணலாம்.

"" போக்கான கிளிமூக்கு மரமொன் றுண்டு

புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்

வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்

மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு

நோக்கான வழிநடக்கச் சுறுக்காய் ஓடும்

நொடியிலே காயசித்தி கிடைக்கு மப்பா

போக்கான பூ பூத்த மற்றாநாள் பழமாம்''

என்று, கிளிமூக்கு மரம் அதன் காயின் வடிவத்தால் ஆகுபெயராய் அம்மரத்திற்குப் பெயர் அமைந்துள்ளது. இலையின் வடிவம், பூ பூத்த மறுநாளே பழம் பழுக்கும் என்னும் அரிய செய்தியுடன்,அதன் பழத்தை உண்ட உடனே காய சித்தி கிடைக்குமென்று கூறுவதைக் காணும் போது, மூலிகைகளைச் சித்தர்கள் நுட்பமாக ஆராய்ந்திருந்ததை உணரலாம்.

“ போக்கான கிளிமூக்கு மரம தொன்று

புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்

வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்

மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு.

என்று, பிறநூல்களும் ஒத்த பாடல்களால் அம்மரத்தைப் பற்றி கூறக் காணலாம்

“இந்தியா முழுவதும் ஏறக்குறைய , மூலிகைகள் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் ஒவ்வொன்றிலும், சராசரியாக முதல் மூலிகைகள் வரை பயன்படுத்தப் படுகின்றன. இவை தவிரவும், கிராமிய மருத்துவ முறைகளில் (ஊணிடூடு டஞுச்டூtட tணூச்ஞீடிtடிணிண) பயன் படுத்தப்படும் மூலிகைகளின் எண்ணிக்கை அதிகமானதாக உள்ளதைப் பெங்களூரைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ‘பாரம்பரிய மருத்துவ மறுமலர்ச்சி’ அறப் பேரவை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய , பூக்கும் வகைத் தாவரச் சிறப்பினங்களில் பாதியளவு தாவரங்கள் மருத்துவப் பயன்பாடு உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்த அளவில், ஏறக்குறைய தாவரங்கள் பல்வேறு மருத்துவ முறைகளில் பயன்படுத்தப் படுகின்றன. இதில் பல தாவரங்கள் தமிழகத்தில் விளையாமல், பத்து சதவீதம் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டு, கச்சா மருந்துகளாகக் கிடைக்கின்றன என்று மருத்துவ மூலிகை ஆய்வறிஞர் முனைவர். என். லோகநாதன் தெரிவிக்கிறார்.’’

இவற்றிலிருந்து மருத்துவத்துக்குப் பயன்படும் மூலிகைகளின் உண்மையான நிலைமை புலப்படும். ஆனால், சித்த மருத்துவ நூல்களில், மருத்துவத்துக்காகப் பயன்பட்ட மூலிகைகளின் முழு விபரங்கள் காணப்படவில்லை. காரணம், அவ்வாறான நூல்கள் அருகி விட்டன போலும்.

சென்னை, அரும்பாக்கத்தில் செயல்படும் இந்திய மருத்துவத் துறை வெளியிட்ட குணபாடம்மூலவர்க்கம் நூலில் ஏறக்குறைய மூலிகை இனங்களின் பெயர்களும், அவற்றின் மாற்றுப் பெயர்களும் குறிப்பிடப் பட்டுள்ளன.

மருத்துவக் கலைக் களஞ்சியத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மருத்துவத் தாவர இனங்கள் இடம் பெற்றுள்ளன.

மூலிகைக் கலைக்களஞ்சியத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களுடன், அவற்றின் உபயோகங்களும் தாவரவியல் பெயர் களும் குறிப்பிட்டுள்ளன.

ஆனால் மூலிகைகளின் எண்ணிக்கை இருபது இலட்சம் என்று சித்தர்கள் கூறியுள்ளதாகக் குன்றத்தூர் இராமமூர்த்தி குறிப்பிடுகிறார். அவை,

. கற்ப மூலிகைகள் (Refuvemating Herbs)

. ஞான மூலிகைகள் (Spiritual Herbs)

. இரசவாத மூலிகைகள் (Alchemical Herbs)

. வசிய மூலிகைகள் (Psychie Herbs)

. மாந்திரீக மூலிகைகள் (Magic Herbs)

. வழிபாட்டு மூலிகைகள் (Religious Herbs)

. பிணி தீர்க்கும் மூலிகைகள் (Therapeutic Herbs)

. உடல் தேற்றி மூலிகைகள் (Tonic Herbs)

. உலோக மூலிகைகள் (Metallogenic Herbs)

. வர்ம மூலிகைகள் (Chiropratic Herbs)

. விஷ மூலிகைகள் (Toxic Herbs)

. நஞ்சை முறிக்கும் மூலிகைகள் (Antidotes)

. எலும்பொட்டும் மூலிகைகள் (Bone Sectors)

. சதை ஒட்டும் மூலிகைகள் (Muscle Tones)

. பச்சை குத்தும் மூலிகைகள் (Tattooing Herbs)

. காதணி ஓம்பி மூலிகைகள் (Ear Boring Herbs)

. பல்பிடுங்கும் மூலிகைகள் (Herbs for Dental Extraction)

. கருச்சிதைவு மூலிகைகள் (Abortifacient Herbs)

என்று மூலிகைகள் வகைப்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

மேற்கண்ட நூல்களில் இடம் பெற்றுள்ள மூலிகைகள், மூலிகை பற்றிய ஆய்வுகள் மேலும் விரிவடைந்து மருத்துவப் பயனுக்குத் துணைபுரிய வேண்டும்.

மூலிகைகளின் பட்டியல்கள் மட்டும் பயன்தந்து விடாது. அத்தகைய மூலிகைகள் எந்தெந்த மருந்துகளுடன் இணைந்து மருந்தாகி, எவ்வகையான நோய்களைத் தீர்க்கின்றன என்பதும் கண்டறியப் படவேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால் தான், மூலிகை ஆய்வு முழுமை கொண்ட தாக அமையும்.




தமிழ் மருத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:03 am


மருந்தியல்

சித்த மருந்தியல் அணுவை அடிப்படையாகக் கொண்டது. மருந்துப் பொருள்களில் உள்ள அணுவை நுண்ணணுவாகவும்’ பரமாணுவாகவும் மாற்றுவது, சித்த ‘மருந்தியல்’ ஆகும்.

ஒரு பொருளிலுள்ள அணுக்களை வேறொரு பொருளிலுள்ள அணுக்களுடன் இணைத்து, வேதியல் முறைப்படி புதிய அணுக்களை உருவாக்கி, அதன் மூலம் நோய்களைக் களைவது சித்த மருந்தியலின் அடிப்படை யாகும்.

இவ்வாறு, அணுவியல் மாற்றங்களை உருவாக்க, வெப்பம், தீ, நெருப்பு போன்ற உலைகளின் மூலம் அணுக்கள் தயாரிக்கப் படுகின்றன. மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்ற உலைகள், ‘புடம்’ என்னும் சொல்லால் குறிப்பிடப் படுகின்றது.

புடம்

மருந்துகள் தயாரிக்கும் போது, அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர்.

தீயின் அளவு

புடமிடும் போது, விறகின் மூலம் எரிக்கப்படும் தீ நான்கு வகைப் படும். அவை,

தீபாக்கினி : விளக்கின் சுடரைப் போல எரிவது.

கமலாக்கினி : தாமரைப் பூப்போல எரிவது.

கதலியாக்கினி: வாழைப் பூப்போல எரிவது.

காடாக்கினி : தீப்பந்தம் போல எரிவது.

புடத்தின் வகை

எரு, வறட்டி இவற்றைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும்.

"" புடம் போடச் சொல்வேன் பேஷான காடை

நடமாடு விராட்டி நல் ஒன்று திடமாக

கவுதாரி விராட்டி கனமா யெருமூன்று

நவுதாரி சேவல் நலம்பத்துப் பவமாகும்

பண்ணி புடவிராட்டி பதமாக ஐம்பது தான்

எண்ணிக் கனபுடமே எழுநூறாம் பின்னாம்

கசபுடமே விராட்டி கடிபடவே ஆயிரமாம்

தசமாக இப்படியே சாற்றுவீர்''

என்று, உலாநூலில் உரைக்கக் காணலாம்.

காடைபுடம் ; கவுதாரி ; சேவல் ; பன்றி ; கனம் ; கசம் என்றும், வறட்டி எண்ணிக்கையைக் கொண்டு புடத்தின் வகை குறிப்பிடப்படும்.

"" புடம்போடுந் திட்டங்கள் பேசக் கேளு

பேரான யெருவொன்று காடை யாகும்

நடம்போடுங் கவுதாரிப் புடமும் நல்ல

நாடியே யெருமூன்று ஞானிக்குத்தான்

விடம்போடு பத்தெருவில் புடமு மாகும்

விராட்டிதான் ஏனத்தின் செயலுக்குத்தான்

கடம்போடு அறைதோறு மழுக்கி நல்ல

களமாகப் போடுவது கணக்கு மாமே

திடமா யெருநூறு கன புடந்தான்

திடமான கெசபுடமும் ஆயிரந்தான்''

என்னும் வாத சூத்திரம், காடை ; கவுதாரி ; ஏனம் ; கனம் ; கெசம் என்னும் எண்ணிக்கையைத் தருகிறது.

மருந்துகள் ஒவ்வொன்றுக்கும் அவற்றின் சேர்க்கைக்கும், தயாரிப்புக்கும் ஏற்றவாறு புடங்களின்வகை இருக்கும். மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் புடங்களின் பட்டியல் வருமாறு;

வரிசை எண் புடம் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கை

. காடைப் புடம்

. கவுதாரிப் புடம்

. குக்குடப் புடம் (அ)

. வராக புடம்

. கஜம் (அ) யானை புடம் (அ)

. கன புடம் (அ)

. மணல் மறைவுப் புடம்

. கோபுடம்

என்னும் செயற்கைப் புட வகையால் மருந்து தயாரிக்கப் பட்டன. தீயினால் உண்டாகும் வெப்பத்தைக் கொண்டு மட்டுமே மருந்து தயாரிக்கப் படுவதில்லை. இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பத் தைக் கொண்டும் தயாரிக்கப்படும். அவ்வாறு தயாரிக்கப் பயன்படும் புடங்கள் இயற்கைப் புடம் எனப்படும்.



தமிழ் மருத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:04 am

அவற்றின் விபரம் வருமாறு:

. கோபுர புடம் மணல்

. பாணிடப் புடம் தண்ணீர்

. உமிப் புடம் உமி

. தானியப் புடம் நெல்

. சூரியப் புடம் வெயில்

. சந்திரப் புடம் நிலவொளி

. பருவப் புடம் பௌர்ணமி நிலவு

. இருள் புடம் அமாவாசை இரவு

. பனிப்புடம் பனி

. பட்டைப் புடம் மரத்தூள்

. நிழற்புடம் சூரிய ஒளி படாத அறை

எரி பொருள்கள்

தைலம், எண்ணெய், களிம்பு, குழம்பு போன்ற மருந்துகள் எரிப்பு முறையால் தயாரிக்கப்படுபவை. அவை, எரித்தெடுக்கப் பயன்படும் விறகுகள் பல வகையாகும். ஒரே வகையான விறகுகளால் தயாரிக்கப் படாமல், மருந்தின் குணத்திற்கு ஏற்ற விறகுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

விறகின் வகையும் அவற்றால் தயாரிக்கப்படும் மருந்தின் விபரமும் வருமாறு:

. ஆவாரை உடலில் ஏற்படும் வெப்பு முதலிய

. சிற்றா முட்டி நோய்களுக்கான தைலம்

. உசில் கண், காது, மூக்கு, பாதம் ஆகிய

. இலந்தை இடங்களுக்கு இடும் நெய், தைலம்

. இலுப்பை உடலில் பூசுவதற்காகப் பூசும்

. புளி பிடித் தைலம்

. வேம்பு வாத நோய்களுக்குப் பயன்படும்

. பூவரசு குடிநீர், தைலம்

. அரசு

. நுணா

. வன்னி வாத நோய் தைலம்

. மாவிலிங்கம்

. நெல்லி

. வேம்பு பித்த நோய் தைலம்

. விளா

. உசில்

. வேலன் ஐய நோய் தைலம்

. கொன்றை

. வேங்கை

. பனை

. தென்னை இரசம் சேர்ந்த மருந்து

. வேம்பு

. வேலன் இரும்பு சேர்ந்த மருந்து

. வேங்கை

மேற்கண்ட பட்டியல்களைக் கொண்டு சித்த மருத்துவ மருந்துகள் தயாரிக்கப்பட்ட முறைகளை அறியலாம்.




தமிழ் மருத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:07 am


மருந்து செய்முறை

சித்த மருத்துவத்தில் பயன்படும் அகமருந்துகள் முப்பத்திரண்டு. இவற்றின் செய்முறைகள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட முறைகளைக் கொண்டிருக்கும். அவற்றை முறைப்படி செய்து முடிக்க வேண்டுமானால், மருந்துப் பொருளின் குணத்தையும், செய்யப்படும் மருந்துக்கு உரிய காலத்தையும் அறிந்திருக்க வேண்டும். செய்யப்படும் மருந்து ஒவ்வொன்றும் ஒவ்வொறு கால எல்லைக்குள் பலனளிப்பது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அம்மருந்து பலனளிப்ப தில்லை என்பன போன்றவை மருத்துவர் அறிந்து செய்ய வேண்டியவை.

அக மருந்துகள் செய்முறையும், மருந்தின் கால எல்லையும் வருமாறு:

வரிசை மருந்தின் செய்முறை (சுருக்கம்) கால எண் பெயர் அளவு

. சுரசம் மூலிகைகளின் இலை, வேர், பட்டை, மணி

பூ, காய் இவற்றைத் தனித்தோ சேர்த்தோ நேரம்

இடித்து, காய்ச்சி, முரித்து எடுப்பது

. சாறு மூலிகைகளின் சாறு பிழிவது மணி

நேரம்

. குடிநீர் மருந்துகளை இடித்துக் காய்ச்சி மணி

வடிகட்டி எடுப்பது நேரம்

. கற்கம் இரும்புத்தூளை மருந்துகளுடன் சேர்த்துக் மணி

கெட்டியாக அரைப்பது நேரம்

. உட்களி வறுத்து அரைத்த அரிசி மாவுடன் உளுந்து, மணி

விதைப் பொடி கலந்து வெல்லம், சர்க்கரை நேரம்

சேர்த்துக் காய்ச்சி, களிபோலக் கிளறி வைப்பது

. அடை அரிசிமாவுடன் சில மூலிகைகள் மணி

கூட்டியரைத்துத் தட்டி, வேகவைப்பது நேரம்

. சூரணம் மருந்து, மூலிகை உலர்த்தி, வறுத்து,

பொடித்து, வடிப்பது தினங்கள்

. பிட்டு மருந்துகள் உலர்த்திப் பொடித்துப் பாலின்

ஆவியில் இட்லிபோல் அவிப்பது திங்கள்

. வடகம் பிட்டு அவிப்பது போல் அவித்து, உரலிட்டு

இடித்து, உருண்டையாக உருட்டுவது திங்கள்

. வெண்ணெய் மருந்துகளைப் பொடித்து

ஆவின் நெய்விட்டு இரும்புக் திங்கள்

கரண்டியில் எரித்து, கடைவது.

. மணப்பாகு தேவையான மருந்துகளுடன் மூலிகைச்சாறு

விட்டு, கற்கண்டு, சர்க்கரை கலந்து திங்கள்

காய்ச்சி மணப் பக்குவத்தில் காய்ச்சுவது.

. நெய் மூலிகைச்சாறு, கிழங்குச் சாறு, கற்கம்,

சிலவகைக் குடிநீர் ஆகியவற்றுடன் நெய் திங்கள்

கூட்டிக் காய்ச்சி, நெய் பதத்தில் வடிப்பது.

. இரசாயனம் மருந்துப் பொருள்களைச் சூரணஞ் செய்து

(சுவைப்பு) சர்க்கரை, நெய் சேர்த்துக் குழம்பு போலச் திங்கள்

செய்வது.

. இளகம் மூலிகைச் சாறு வகைகளுடன் சர்க்கரை,

வெல்லம் சேர்த்து வற்றக் காய்ச்சி, திங்கள்

மருந்துப் பொடிகளைத் தூவி, நெய்

சேர்த்துக் கிளறி இளக்கமாக எடுப்பது.

. எண்ணெய் நல்லெண்ணெய்யுடன் மருந்துகளைச் ஓராண்டு

சேர்த்துக் காய்ச்சி வடிப்பது.

. மாத்திரை மருந்துகளை மூலிகைச்சாறு, பால், குடிநீர் ஓராண்டு

இவற்றில் அரைத்து உருட்டி உலர்த்துவது.

. கடுகு மருந்துகளை நெய், எண்ணெய் விட்டுக் ஓராண்டு

காய்ச்சிக் கடுகு பதத்தில் எடுப்பது.

. பக்குவம் மருந்துகளைப் பக்குவப்படுத்த ஓராண்டு

ஊறவைப்பது, கழுவுவது,பொடிப்பது

போன்ற செயல்களாகும்.

. தேனூறல் நெல்லிக்காய், கடுக்காய், இஞ்சி ஓராண்டு

போன்றவற்றை நீரில் ஊறவைத்து,

அவற்றின் மேல் துளை செய்து,

உள்ளிருக்கும் நீரைப் போக்கி, பாகு,

தேன் போன்றவற்றில் ஊறவைப்பது.

. தேனீர் மருந்துகளை வாலையில் நீர்விட்டு ஓராண்டு

எரித்து எடுப்பது.

. மெழுகு இரச கலப்புள்ள மருந்துகளைத் ஐந்தாண்டு

தனியாகவோ, மருந்துப் பொருள்களுடனோ

தேன், மூலிகைச் சாறுகளில் அரைத்து

மெழுகு பதத்தில் செய்வது.

. குழம்பு மூலிகைச்சாறு, மருந்து, சர்க்கரை ஐந்தாண்டு

போன்றவற்றைக் குழம்பு பதத்தில் காய்ச்சி வடிப்பது.




தமிழ் மருத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:07 am


வரிசை மருந்தின் செய்முறை (சுருக்கம்) கால எண் பெயர் அளவு

. பதங்கம் இரசம் தனியாகவோ கலப்புள்ள பத்து

மருந்துகளையோ மண்சட்டியில் உப்பு ஆண்டுகள்

செங்கல் தூள் நடுவில் மருந்துகளை

வைத்துச் சீலை செய்து எரித்து, மேல்

சட்டியில் படிந்திருப்பதை வழித்தெடுப்பது.

. செந்தூரம் உலோகம், பாடாணம் போன்றவற்றை

மூலிகைச்சாறு, புகை நீர், செயநீர் இவற்றில் ஆண்டுகள்

அரைத்துப் புடம் போட்டு எடுப்பது.

. பற்பம் உலோகம், பாடாணம், உபரசம் ஆகிய

இவற்றை மூலிகை, புகைநீர், செயநீர் ஆண்டுகள்

இவற்றில் அரைத்துப் புடமிட்டு நீறாக்குவது.

. கட்டு பாடாணங்களைச் சுருக்குக் கொடுத்து,

பற்பம், செந்தூரம் போன்ற பொருள்களுடன் ஆண்டுகள்

சேர்த்து அரைத்து மாத்திரையாகச் செய்வது.

. உருக்கு பாடாணம், உலோகம் இவற்றுடன் நட்பு,

பகைப் பொருள்களைக் கூட்டி எரித்து ஆண்டுகள்

எடுப்பது.

. களங்கு இரசம், பாடாணம் போன்ற மருந்துகளை

மூலிகை, செயநீர், புகைநீர் முதலியவற்றால் ஆண்டுகள்

சுருக்குக் கொடுத்து, புடமிட்டு, மணியாக்கி,

தங்கம் நாகம் சேர்த்துக் கூட்டி எடுப்பது

. சுண்ணம் இரசம், பாடாணம், உலோகம் என்னும் இவை

தனியாகவோ கலந்தோ மூலிகை, செயநீர், ஆண்டுகள்

புகைநீர் இவற்றில் அரைத்து சீலை செய்து

நெருப்பில் ஊதி எடுப்பது.

. கற்பம் மூலிகை, உலோகம், உபரசங்கள் போன்ற பல

வற்றைப் பக்குவத்துடன் செய்வது. ஆண்டுகள்

. சத்து காந்தம், இரும்புத்தூள் முதலியவற்றுடன் பல

பாடாணங்களைச் சேர்த்து அரைத்து ஆண்டுகள்

ஊதி இரசம், கந்தகம், தங்கம் சேர்த்து

எரித்து எடுப்பது.

. குளிகை வாலை ரசத்தை மணியாக்கிக் கோவை பல

யாக்கிக் கொள்வது. ஆண்டுகள்

மேற்கண்ட பட்டியலின்படி மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப் படும் என்பது குறிப்பிட்டுக் காட்டப்பட்டது. இம்மருந்துகள் செயல்புரியும் கால அளவு மூன்று மணி நேரத்திலிருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் என்று குறிப்பிடப்படுவதைக் கொண்டு, அம்மருந்துகளின் வன்மையைக் கண்டறியலாம். சுண்ணம் ஐந்நூறு ஆண்டுகளும், களங்கு, உருக்கு, கட்டு, பற்பம் ஆகிய மருந்துகள் நூறு ஆண்டுகளும் வன்மையுடையது என்றால், அவற்றை உண்பவர் உடம்பில் அத்தனை ஆண்டுகள் மருந்தாக நின்று செயல்படும் என்பதே சரியாம். அத்தனை ஆண்டுகள் உடலைக் காக்கக் கூடிய மருந்தென்றால், அவை மக்களைக் காக்கும் மகத்தான மருந்தெனலாம்.




தமிழ் மருத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:08 am


பத்தியம்

பத்தியம் என்பது நன்மை செய்யும் ஒன்று (தீடச்t டிண் ஞ்ணிணிஞீ) எனவும், நோயாளிக்கு இசைந்த உணவு (கணூஞுண்ஞிணூடிஞஞுஞீ ஞீடிஞுt ஞூணிணூ ணீச்tடிஞுணt) என்றும் பொருளுரைக்கப்படுகிறது.

நோய்வாய்ப்பட்ட நோயாளிக்கு வந்துற்ற நோயின் வீரியத்தை அதிகப்படுத்துகின்ற உணவை உண்டால் நோய் தீவிரமடையும். அதனால், விலக்க வேண்டிய பொருள்களை விலக்கிவிட வேண்டும். நோய்க்கு ஆதரவாக இல்லாமல், நோயாளியின் உடல் நலத்துக்கு ஆதரவாக அமையும் பொருள்களைப் பத்தியப் பொருள் என்றும், அதனைக் கடைப்பிடித்து வருவதற்குப் பெயர் பத்தியம் என்றும் கூறுவர். பத்தியம் என்பதை ஒழுங்கு, ஒழுக்கம் என்னும் கருத்துடைய சொல்லாகக் கொள்ளலாம்.

பத்தியம் என்னுஞ்சொல் ‘லங்கணம்’ என்னுஞ் சொல்லாலும் வழங்கப்படுகிறது. லங்கணம், பட்டினி என்னும் பொருளைத் தருகின்ற வட சொல்லாகும். அச்சொல், இங்கு காரணவாகு பெயராக நின்று பொருள் தருகிறது. அதாவது, பட்டினி என்னும் காரணத்தால், நோயாளியின் நோய்க்காக ஊட்டப்பட்ட மருந்துக்கு எதிர்ப்பாக உள்ளது கொழுப்புச் சத்தும், நோயாளியின் உடல் நல இழப்புமாகும். அவ்விரண்டும் பட்டினியால் குறைக்கப்படுகின்றன என்பர்.

நோயாளி மருந்துகளை உண்ணும் போது, மருந்தின் வீரியம் உடலுக்குள் சென்றடைய சில பொருள்கள் தடையாக இருக்கின்றன. மருந்தின் தன்மையை மாற்றக் கூடிய அல்லது நோயாளிக்கு எதிர்வினைகளை உண்டாக்கக் கூடிய உணவுகள் உண்ணப்படாமல் தடுக்கப்படுவதும் பத்தியமாம்.

பத்தியத்தின் தேவை

நோய் வந்த போதும், நோய்க்கான மருந்துண்ணும் போதும் ஒதுக்கப்பட வேண்டிய பத்தியப் பொருள் ஒதுக்கப் படாவிட்டால் நோய் குணமாகாது என்பது சித்த மருத்துவக் கொள்கையாகக் கூறப் படுகிறது.

"" பத்தியம் இல்லார்க்கு என்றும் பகர்பிணி நீங்காது என்று

சத்திய சித்த வேதம் சாற்றிய உண்மை யாலே.''

பத்திய ஒழுக்கம் பிணி நீங்கத் தேவையான ஒன்று என்பதே மருத்துவ உண்மை என்கிறது.

"" திருப்பாகும் பத்தியந்தான் இல்லாவிட்டால்

தீராது சொல்லிவிட்டேன் திறந்தான் காணே''

என்று, பத்தியம் இல்லாவிட்டால் நோய் குணமாகாது என்று அகத்தியர் நூல் உறுதிப்படுத்துகிறது.

நோயைக் குணப்படுத்திக் கொள்ள தேவைப்படுகின்ற மருத்துவத் தின் அங்கமாகவே பத்தியமும் கருதப்படுகிறது.

பத்தியத்தின் பயன்

பத்தியத்தினால் நோய்க்காக உண்ணப்படும் மருந்து நோயைப் போக்கக் கூடிய பலனைத் தருவதாக அமையும். பத்தியம் தவறிவிட்டால், நோய் தீர்க்கும் பணியிலிருந்து மருந்தும் தவறிவிடும். நோயைத் தீர்க்கும் மருந்துவப் பணியைச் செய்கின்ற மருத்துவனுக்கு, அவன் தருகின்ற மருந்தை விடவும், அவன் கூறுகின்ற பத்தியமே அவனின் மருத்துவ வெற்றிக்குக் காரணமாக அமையும். பத்தியமுறை மருத்துவமே சித்த மருத்துவத்தின் நுண்ணறிவுக்கு எடுத்துக் காட்டாகும். பத்தியம், மருந்துவம் சார்ந்த முறை என்பதுடன், மருந்தினும் சிறந்ததாகவும் கூறப்படுகிறது.

பத்தியக் குற்றம்

பத்தியத்தில் எவ்விதமான தவறும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதே மருத்துவ நெறியாகக் கூறப்பட்டு வருகிறது. பத்தியத்தில் தவறு நேர்ந்து விட்டால் என்ன ஆகும்.

“பத்தியத்தின் குற்றத்தினால் மருந்தின் பயன் கெடுவது மட்டு மல்லாமல், உடம்பிலுள்ள தாதுக்களில் எலும்பு வரை நோயின் கடுமை தீவிரமாகி நோயாளியை வருத்தும்.”

என்பதால், பத்தியத்தில் குற்றம் நிகழக் கூடாது என்பது குறிப்பிடத் தக்கது.




தமிழ் மருத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:09 am


பத்தியக்குற்ற விளைவு

எந்தச் செயலுக்குமே பயன் என ஒன்றிருந்தால், எதிர் விளைவு என ஒன்று இருந்தே ஆகவேண்டும். எதிர்வினை ஆற்றல் என்பதே செயலுக்குரிய ஆற்றலாகக் கூறுவர். அதைப் போல, பத்தியத்தினால் உண்டாகக் கூடிய பயன் என ஒன்று இருக்கும் போது, எதிர்விளைவு என்ன என்பதையும் அறிந்தால் பத்தியத்தின் தேவை புலப்படும்.

நோய்க் காலங்களில் மட்டுமல்லாமல், நோயைத் தடுக்கும் கற்ப முறை மருந்துகளை உண்ணுகின்ற காலத்திலும், புளிக்கறி உண்டால் பெருவயிறு உண்டாகும். கிழங்கு வகை உண்டால் சோகை முற்றி பாண்டு நோயை உருவாக்கும். மீன் மயக்கம், கெடுதி, சுரம் போன்ற நோய்களை வருவிக்கும். மோர், குன்ம நோயைத் தரும். பச்சை உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் கண்ணிரண்டும் பாதிக்கும் என்று பத்தியப் பொருள்களினால் வரக்கூடிய விளைவுகள் உரைக்கப்பட்டன.

ஒரு நோய்க்காக மருந்தை உண்ணும் போது, அந்நோய் தீராமல், வேரொரு நோயை வருவித்துக் கொள்வது அறிவுடைமையாக அமையாது என்பதால், மருத்துவக் காலங்களில் மருத்துவர் கூறும் பத்திய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறியலாம்.

பத்தியப் பொருள் பொதுவிதி

பத்தியப் பொருள் என்பது விலக்க வேண்டிய பொருள், விலக்க வேண்டாப் பொருள் என்னும் இரண்டையும் குறிக்கும். இங்கு, விலக்க வேண்டிய பொருளைக் குறிக்கவே பத்தியம் என்னும் சொல் பயன் படுத்தப்படுகிறது.

பொதுவாகப் பத்தியப் பொருள்களில் முதலிடம் வகிக்கக் கூடிய பொருளாக அமைபவை, புளி, புகை ஆகிய இரண்டுமாகும்.

"" தீருந்தான் புகையோடு புளியுந் தள்ளு''

"" சங்கற்பம் புளியுடனே புகையிலையுந் தள்ளு''

"" வெறுத்திடுவாய் புளிபுகை மாங்கிஷங்கள்''

எனக் கூறக் காணலாம்.

புளி, புகை ஆகிய இரண்டும் மருந்துக்கு எதிர்வினை ஆற்றலைத் தூண்டக் கூடிய பொருளாகக் கண்டறியப் பட்டிருப்பது தெரிகிறது. அதனால் தான் குறிப்பாக, புளி என்றும் புகை என்றும் கூறக் காண்கிறோம்.

இவை மட்டும் பத்தியப் பொருள்களல்ல. பொதுவான பத்தியப் பொருள்களாகக் கூறப்படுகின்றவை, உப்பு, புளி, கடுகு, எள், இறைச்சி, மீன், பூசுணைக்காய், பெண்போகம், வரகு, கொள்ளு, புகையிலை என்பன முக்கியமானவை.

நோய்க்குறிய பத்தியம், சிறப்பு விதி

பத்தியம், உடல் வகை–நோய் வகை என வகைப்படுத்தப் பட்டிருக்கின்றது. உடல் வகையில் வாதம், பித்தம், ஐயம் என மூன்றும், நோய் வகையில் வாதம், பித்தம், ஐயம் என மூன்றும் குறிப்பாகக் கொள்ளப்படும்.

வாத உடலினர், வாத நோய்க்கு உரிய பத்தியத்தையும், பித்த உடலினர், ஐய உடலினர் அவரவருக்குரிய பத்தியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

பத்திய வகை

வாதம் பித்தம் ஐயம்

புடல் அகத்தி வெள்ளரிப் பிஞ்சு ஆட்டுப்பால்

அவரைக்கீரை சிறுபயறு சீனி, கற்கண்டு கோதுமை

அவரைக்காய் தண்டுக்கீரை மல்லி மணத்தக்காளிக்கீரை

அரைக்கீரை கதளிப்பிஞ்சு சீரகம் முளைக்கீரை

துவரை வெந்தயம் முந்திரிகை மீன்

மிளகு பேரீச்சை பசும்பால் கருவாடு

மஞ்சள் நெய் மோர் ஊறுகாய்

வெள்ளுள்ளி பழம் நெல்லி

கடுக்காய் புளி

ஏலம் சம்பா

இம்முறையைச் சிறப்பு விதியாகக் கருதலாம். கூறப்பட்டுள்ள பொருள்களைக் கொண்டு பத்தியம் எந்த அளவுக்கு ஆழ்ந்த நுண்ணறிவுடன் கண்டறியப்பட்டுள்ளது என்பது விளங்கும்.




தமிழ் மருத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:10 am


பத்திய விலக்கு

சலுகை முறையில் அளிக்கப்படுகின்ற விதிவிலக்கைப் போல, பத்தியத்துக்கும் விலக்கு அளிக்கக் கூடிய முறை கூறப்படுகிறது.

"" இல்லையேல் முப்பதின்மேல் பத்தியங்கள்

இடம்வேணும் பொருள்வேணும் ஏவல்வேணும்

வல்லையே முப்பதுக்குள் வந்த தானால்

வலுக்குமே பத்தியங்கள் வேணும் வேணும்.''

பொது விதியாக முப்பது வயதுக்கு மேல் பத்தியம் வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டாலும், இடம், பொருள், ஏவல் என்னும் மூன்றையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் பத்தியத்தை முடிவு செய்க என்று, மருத்துவர்க்குக் கூறப்பட்டுள்ளது.

இடம் என்பது, நோயாளி வாழுகின்ற இடத்தையும், நோயாளி யின் உடல் வகையும், பொருள் என்பது நோய், நோயினால் நோயாளிக்கு ஏற்பட்ட பாதிப்பையும், ஏவல் என்பது மருந்தையும், மருந்து தரப்பட வேண்டிய காலத்தையும் கருத்தில் கொண்டு பத்தியம் தேவை. தேவையில்லை என்பதை முடிவு செய்ய வேண்டிய முடிவு, மருத்துவரிடம் விடப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் உடலைக் காக்கவும், உடற்பிணியைப் போக்கவும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை அறிவார்ந்த ஒழுங்குமுறை போல, வகுக்கப்பெற்றது.

அகத்தியர் குழம்பு

சித்த மருத்துவ மருந்துகளில் மிகவும் புகழ்பெற்ற அரிய மருந்து களில் அகத்தியர் குழம்பும் ஒன்றாகும். நோயாளிக்கு இம்மருந்தைத் தரும்போது, அனுபான முறைகளை மாற்றித் தருவதாலேயே பல நோய்களைத் தீர்க்கும் வன்மை இம்மருந்துக்கு உண்டு எனக் கூறப்படுகிறது.

இம்மருந்து, அகஸ்தியர் குழம்பு, அகத்தியர் குழம்பு, அருவு குழம்பு என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறது. இதன் செய்முறை களை, அகத்தியர் குழம்பு, சித்த மருத்துவத்திரட்டு, வைத்திய சார சங்கிரகம், அனுபோக வைத்திய பிரம்ம இரகசியம், சகஸ்ர சித்த யோகம், தன் வந்திரி வைத்திய காவியம், யூகி முனிவர் கும்மி, அகத்தியர் அமுத கலைஞானம், தேரையர் சேகரப்பா, வைத்தியத் திருப்புகழ், நோய்களுக்கான சித்த பரிகாரம் ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளன.

செய்முறைகளில் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் மருந்தும் அதன் பயன்பாடுகளும் ஒன்றாகக் காணப்படுகின்றன.

அகத்தியர் குழம்புக்கு அனுபானங்களால் சுமார் நோய்களைக் குணமாக்கும் எனத் தெரிகிறது.

ஒரே மருந்து இத்தனை நோய்களைத் தீர்க்கிறது என்பது சித்த மருத்துவ முறைக்கு அரியதல்ல. இம்மருந்தை விடவும் அதிக எண்ணிக்கையில் நோய்களைக் குணப்படுத்துகின்ற மருந்துகள் பல காணப்படுகின்றன. ஆனால், அகத்தியர் குழம்பு ஒன்றே, நோய்க்குத் தக்க அனுபானங்களைக் கொண்டு குணப்படுத்தக் கூடியதாக இருக் கிறது என்பது குறிப்பிடதக்கது. (அகத்தியர் குழம்பு இணைப்பு ).

சித்த மருத்துவம் பயிலத் தொடங்கும் ஒருவர், முதன் முதலில் இந்த மருந்து ஒன்றை மட்டும் செய்து கொண்டு பயிற்சி பெறத் தொடங்கி னால் நல்ல மருத்துவராக வளர முடியும்.

அகத்தியர் குழம்பு மூல மருந்து, குரு மருந்து என வழங்கப் படுகிறது. சித்த மருத்துவத்தில் குரு மருந்து என வேறுமுறை கூறப்படுகிறது. அந்தக் குரு மருந்துக்கு இணையான பயனை அகத்தியர் குழம்பும் தருகின்றது என்னும் காரணத்தினால், இதற்கும் குரு மருந்தென பெயர் கூறப்படுகிறது



தமிழ் மருத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக