ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

Go down

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் Empty பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

Post by ayyasamy ram Mon Jul 26, 2021 9:46 pm

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் Tamil_News_large_2809980

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில்
நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி(76) உடல்நலக்
குறைவால் காலமானார். வயது மூப்பு காரணமாகவும்,
சில ஆண்டுகளாக ஆஸ்துமாவாலும் அவதிப்பட்டு
வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 26) காலமானார்.

தமிழ் திரைப்படத் துறையில் மறக்க முடியாத நடிகைகளில்
ஜெயந்தியும் ஒருவர். கதாநாயகி, குணசித்திர வேடம்,
நகைச்சுவை என பன்முகத் திறமை வாய்ந்த நடிகையாக
1960 - 70 களில் தமிழ் திரை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்
பட்ட நடிகையாக வலம் வந்தவர்.

கர்நாடக மாநிலம், பெல்லாரியில் 1945ம் ஆண்டு ஜனவரி்
6ம் தேதி பாலசுப்ரமணியம் - சந்தான லக் ஷ்மி தம்பதிக்கு
மகளாக பிறந்தார். ஆரம்ப காலங்களில் சிறு சிறு துணை
கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த இவருக்கு கே.பாலசந்தரின்
'பாமா விஜயம்' திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில்
ஒருவராக நாகேஷிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு
கிடைக்க பெற்றார்.

அதன்பின் தொடர்ந்து கே.பாலசந்தரின் படங்களில் முக்கிய
கதாபாத்திரம் ஏற்று நடித்து புகழடைந்தார். கே.பாலசந்தர்
இயக்கத்தில் ஜெயந்தி நடித்த அத்தனை படங்களும்
வெற்றிப் படங்களாக அமைந்தது என்றால் அது மிகையல்ல
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் Empty Re: பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

Post by ayyasamy ram Mon Jul 26, 2021 9:47 pm

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் Gallerye_105503243_2809980


. 'எதிர் நீச்சல்" 'இரு கோடுகள்' 'புன்னகை' 'கண்ணா நலமா'
வெள்ளி விழா என்று இவருடைய வெற்றிப் பயணம் தமிழ்
திரையுலகில் தொடர்ந்தது. அன்றைய முன்னணி
கதாநாயகர்களாக போற்றப்பட்ட அத்தனை பேருடனும்
நடித்த பெருமையும் இவருக்கு உண்டு.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர்,
முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் என்று எல்லோருடனும்
நடித்தவர் ஜெயந்தி.

இதே காலகட்டத்தில் கன்னடத்தில் நம்பர் ஒன்
கதாநாயகியாக ராஜ்குமார், உதயகுமார், கல்யாண் குமார்
போன்ற முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து அங்கே
தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே ஏற்படுத்தி
இருந்தார்.

இவர் ராஜ்குமாருடன் ஜோடியாக 30 கன்னட படங்களுக்கு
மேல் நடித்த பெருமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும்
மராத்தி மொழிகளில் ஏறக்குறைய 500 படங்களுக்கு மேல்
நடித்த பெருமை கொண்டவர். அபிநய சாரதே என
திரையுலகில் அழைக்கப்படும் இவர் 6 முறை கர்நாடக
மாநில அரசின் விருதை பெற்றுள்ளார்.

இதுதவிர நிறைய தனியார் அமைப்புகளின் விருதுகளையும்
பெற்றுள்ளார். நடிகையாக மட்டுமல்லாது சில படங்களை
தயாரிக்கவும் செய்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான பெகடி சிவராமனை திருமணம்
செய்த இவருக்கு கிருஷ்ண குமார் என்ற மகன் உள்ளார்.
ஜெயந்தியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும்
இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
நன்றி-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் Empty Re: பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

Post by ayyasamy ram Mon Jul 26, 2021 9:48 pm

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் Gallerye_105508758_2809980

ஜெயந்தி நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்

1. மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் - துணை நடிகை
2. நினைப்பதற்கு நேரமில்லை - துணை நடிகை
3. இருவர் உள்ளம் - துணை நடிகை
4. அன்னை இல்லம் - துணை நடிகை
5. படகோட்டி - துணை நடிகை
6. கர்ணன் - துணை நடிகை
7. கலைக்கோயில் - துணை நடிகை
8. நீர்க்குமிழி - துணை நடிகை
9. முகராசி - துணை நடிகை
10. கார்த்திகை தீபம் - துணை நடிகை
11. காதல் படுத்தும் பாடு - துணை நடிகை
12. பாமா விஜயம் - கதாநாயகி
13. பக்த பிரகலாதா - துணை நடிகை
14. எதிர் நீச்சல் - கதாநாயகி
15. இரு கோடுகள் - கதாநாயகி
16. நில் கவனி காதலி - துணை நடிகை
17. புன்னகை - கதாநாயகி
18. நூற்றுக்கு நூறு - துணை நடிகை
19. புதிய வாழ்க்கை - துணை நடிகை
20. கண்ணா நலமா - கதாநாயகி
21. வெள்ளி விழா - கதாநாயகி
22. கங்கா கௌரி - கதாநாயகி
23. பெண்ணை நம்புங்கள் - கதாநாயகி
24. மணிப்பயல் - கதாநாயகி
25. நல்ல முடிவு - துணை நடிகை

26. சண்முகப்ரியா - துணை நடிகை
27. எல்லோரும் நல்லவரே - துணை நடிகை
28. குல கௌரவம் - கதாநாயகி
29. தேவதை - கதாநாயகி
30. மாப்பிள்ளை சார் - துணை நடிகை
31. நானும் இந்த ஊருதான் - துணை நடிகை
32. பாலைவனப் பறவைகள் - துணை நடிகை
33. சார் ஐ லவ் யூ - துணை நடிகை
34. ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ
மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய
கிருஷ்ண காமராஜன் - துணை நடிகை
35. வீட்டைப்பாரு நாட்டைப்பாரு - துணை நடிகை
36. கோபாலா கோபாலா - துணை நடிகை
37. செங்கோட்டை - துணை நடிகை
38.புதல்வன் - துணை நடிகை
39. ஹவுஸ்புல் - துணை நடிகை
40. அன்னை காளிகாம்பாள் - துணை நடிகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் Empty Re: பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum