ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அறிமுகம்
by musafir.world Today at 1:52 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» Novel
by Periya Yesterday at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Yesterday at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Yesterday at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Fri Sep 24, 2021 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Fri Sep 24, 2021 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Fri Sep 24, 2021 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Fri Sep 24, 2021 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


மனோவசிய ரகசியம்

மனோவசிய ரகசியம் - Page 2 Empty மனோவசிய ரகசியம்

Post by சிவா Fri Jul 23, 2021 12:41 am

First topic message reminder :

மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் என்னும் மனோவசிய ரகசியம்
ஆசிரியர்: k.வெங்கட்ராவ்

நினைப்பது கைகூட வேண்டும்

நமது நண்பர்கள் நமக்கு எல்லா நன்மைகளும் செய்ய வேண்டும். நமது காதலி நம்மையே நேசிக்க வேண்டும். நமது மனைவி நம்முடன் கருத்து வேற்றுமையில்லாமல் இல்லறம் நடத்த வேண்டும். நாம் நினைப்பது போலவே' கைகூட வேண்டும் என்று யார்தான் நினைப்பதில்லை? எல்லோரும் நினைக்கிறோமல்லவா?

நமது மனதில் சிந்திப்பது நடக்க வேண்டும் என்று எண்ணாதவர்கள் யார் என்று கூற முடியாது. நாம் கோரிய காரியம் கைகூட வேண்டும். கடவுள் கூட நமது இச்சைக்கு இணங்க வேண்டும் என்று ஆசைப்படுவோரும் உண்டு. எல்லாம் நியாயமான ஆசைகள் தான், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் எண்ணுவது போல் பிறரும் எண்ண வேண்டும்; நாம் நல்லவர் என்று மற்றவர் சொல்ல வேண்டும் என்று யார்தான் நினைப்பதில்லை? இது தான் கலைக்கு அஸ்திவாரமாகும்.

இந்த அஸ்திரவாரத்தைக் கொண்டே நாம் நமது திட்டங்களை உருவாக்க வேண்டும்.

'கெட்ட எண்ணங் கொண்டவன்; கெட்ட செய்கை செய்பவன்' என்று பிறரை நாம் பழிக்கிறோமல்லவா? பிறர் நம்மைப் பார்த்து இப்படி பேசாதிருக்க வேண்டுமல்லவா? அதாவது நம்மைப் பிறர், பொய்சொல்பவன், நன்றி கெட்டவன். ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவன் என்று சொல்லாமலிருக்க வேண்டுமானால் நாம் பொய் சொல்லக் கூடாது. பிறர் செய்யும் உபகாரத்தை எப்போதும் மதித்து போற்ற வேண்டும். மனமார பிறரை வஞ்சிக்க எண்ணவே கூடாது. பிறர் எப்படி நல்லவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோமோ அந்த நல்ல குணங்களுடன் நல்ல எண்ணங்களுடன் நாம் வாழ வேண்டும்.

'மனம் அழுக்கில்லாமல் பரிசுத்தமாயிருக்க வேண்டும். இதுவே மனேவசியக் கலைக்கு அடிப்படையாகும். இக் கலையால் பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது மற்றவன் ஏமாந்திருக்கும் வேளையில் அவனது பொருளை அபகரிக்க வேண்டுமென நினைக்கக்கூடாது.

மற்றவன் மனைவியை வேறு எண்ணமே இல்லாத பதிவிரதையை ஏமாற்றி அவளது கற்பைப் பறிக்க வேண்டுமென்ற ஆசையை வைக்கக்கூடாது. கல்யாணமாகாத பெண்ணை வசியப் படுத்தி பலாத்காரத்தால் அவளைக் கெடுத்து பிறகு நடுத்தெருவில் அலைய விட்டுவிடலாம் என்று கற்பனை கூட செய்யக்கூடாது.

நமது மனம் பரிசுத்தமாக, நல்ல எண்ணங்களுடன் நல்ல குறிக்கோள்களாக இருந்தால்தான் மனோவசியக் கலை நல்லப் பலனைத் தரும். இல்லாவிடில் இது பலிக்காது.

மனோவசிய மின்சாரம்

மின்சார வசதி இருந்தால் தான் இரும்புத் தூள்களை இழுக்க முடியும். இந்த சக்தி இல்லாவிட்டால் ஒன்றுமே முடியாது. இதுபோலவே நமது மனம் நல்ல நிலைமையில் இருந்தால்தான், பிறர் மனதை இழுக்க முடியும். நமது மனதில் அன்பு இருந்தால்,

இதன் மூலம் பிறரை வசியப்படுத்தலாம். நாம் விசுவாசம் காட்டி பிறரை நம்மை விசுவாசிக்கும்படி செய்யலாம். வெறுப்பும், கடுமையும், கெட்ட எண்ணமும் இருந்தால் இவைகளின் பிரதிபலிப்பே பிறரிடம் நாம் காண நேரிடும். ஆகையால் மனோவசியக் கலைக்கு நாம் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களுடன் நமது மனம் துள்ளி விளையாட வேண்டும். நல்ல சக்தியுடன் நமது மனம் இருந்தால்தான் பிறர் மனதையும் நமக்கு ஆதரவாக இழுத்துக் கொள்ள முடியும் பிறருடைய சக்தி நமக்கு அடிமைப்பட வேண்டுமென்று நாம் கோரும்போது அதைவிட நமது சக்தி அதிகமாக இருக்க வேண்டுமென்று தெரிகிறதல்லவா?

ஒரு ஆசிரியரையும் மாணாக்கர்களையும் எடுத்துக் கொள்வோம். மாணாக்கர்களுக்குத் தெரியாத விஷயங்கள் ஆசிரியருக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியருடைய அறிவுக்கு மாணாக்கர்கள் மதிப்புக் கொடுத்து அடங்குவார்கள். மாணாக்கர்களின் சந்தேகங்களைப் போக்க அறிவில்லாத ஆசிரியரை, மாணாக்கர்கள் மதிக்க மாட்டார்கள். அதுபோலவே மற்றவர்கள் நமது இஷ்டங்களுக்கு இணங்க வேண்டும்.

மற்றவர்கள் நமக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நாம் நினைக்கும் போது அவர்களுடைய மனோசக்திக்கு மீறிய சக்தி நம்மிடம் இருக்க வேண்டுமென்று பொருள் படுகிறதல்லவா? இந்த சக்தியை நாம் எப்படி அடையலாம்? இதற்கு வழிமுறைகள் என்னென்ன? கவனிப்போம்.

எதுவும் நினைத்தவுடன் நடந்து விடாது. சிறிதேனும் பயிற்சி வேண்டும் அல்லவா?


Last edited by சிவா on Fri Jul 23, 2021 12:58 am; edited 2 times in total


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down


மனோவசிய ரகசியம் - Page 2 Empty Re: மனோவசிய ரகசியம்

Post by சிவா Fri Jul 23, 2021 11:52 pm


பிறரை வசப்படுத்த

உணர்ச்சியற்ற மரக்கட்டை போல் காணப்படுவார், அவருடைய உடலுக்கு எந்த வகையான தீங்கு செய்தாலும் அதை அவர் உணரமாட்டார், கத்தியின் மூலம் அவருடைய உடலில் சில காயத்தை ஏற்படுத்தினாலும் இரத்தம் வரக்கூடாது என்றோ வலியே ஏற்படக் கூடாதென்றோ, நீங்கள் நினைத்துச் செயல்பட்டால் அவ்விதமே நடக்கும் என்பதற்கு போதிய அத்தாட்சிகள் இருக்கின்றன. மெய் மறந்து காணப்படும் அந்த ஒரு சில விநாடிகள் உங்கள் வசமானவரை எதுவும் செய்ய முடியும்.

ஆச்சரியப்படும்படியான வகையில் செயல்படும் அதி அற்புத விஞ்ஞான அடிப்படையோடு கூடிய இந்த மெஸ்மரிஸக் கலையின் உதவியால் தீராத நோய்களைத் தீர்த்து வைக்க முடியும்! பிறரை தங்களுக்கு வசப்படுத்திக் கொண்டு இஷ்டம்போல் ஆட்டுவிக்க முடியும்.

செல்வந்தர்களின் செல்வங்களை அபகரிக்கவும். இந்த கலையைச் சிலர் தவறாகப் பயன்படுத்திய நிகழ்ச்சிகளும் நடைபெற்று இருக்கின்றன.

ஆட்டிய வழியில்

மனிதர் ஒவ்வொருவரிடையேயும் உள்மனம் புறமனம் என இரண்டு மனங்கள் பொருந்தியிருக்கின்றன. உள்மனத் திற்குக் காவல் போன்று புறமனம் செயல்படுகிறது. எனவே புறமனம் அறியாது உள்மனம் தனித்து செயல்பட வழியில்லை ஆனாலோ உள்மனம் அதிகமான செயல்களை விளைவிக்கும் ஆற்றலுடையது. அந்த உள்மனத்தை இயக்குவித்தால் அற்புத செயல்களை நிகழ்த்தலாம். அது எப்படி சாத்தியமாகும்?

புறமனமோ மனிதர் உறக்கத்திற்கு உட்பட்டு கிடக்கும் போது கூட உறங்காமல் விழிப்புடன் வீரனைப் போல் காவல் காத்து நிற்கிறதே! ஆனால் ஹிப்நாடிய பயிற்சியால் அந்த புறமனத்தை அடக்கி ஒடுக்கி உள்மனத்தை இயக்குவிக்கலாம்.

ஹிப்நாடிச உறக்கத்தில் இருப்பவரின் வெளிமனம் இயல்பாக ஹிப்நாடிச சக்திக்குக் கட்டுப்பட்டு அடங்கிப் போகிறது. ஆனால் உள்மனமோ விழிப்புடன் இருகிகிறது. தடைவிலகிய நிலையில் வெளிப்படத் துடிக்கும் உள்மனதை வெளுப்படுத்தி பின் அதனை ஏற்ற வழியில் இயக்குவித்து அற்புத செயல்களை விளைவிக்கின்றனர் ஹிப்நாடிய வல்லுநர்கள்.

நீங்கள் ஆட்டுவித்த வழியில் எல்லாம் தூக்கத்திற்கு உட்பட்டவர் ஆடுவர், நீங்கள் ஏவிய ஏவல்களையெல்லாம் ஏற்ற வழியில் செய்து முடிப்பர். மயிலைக் காட்டி குயில் என்றால் 'ஆமாம்' என்பர், நீங்கள் கூறுவதுதான் அவருக்கு வேதம், எனவே இத்தகைய நிலையிலிருக்கும் அவரை தீய வழியில் ஈடுபடுத்தி தனது இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம், என ஹிப்நாடிசக்காரர்கள் நினைத்து செயல்படின் விளைவு தீதாகவே முடியும். எல்லோருக்கும் மனசாட்சி என்று ஒன்று உண்டல்லவா!

அது எத்தகைய நிலையிலும் விழிப்புடன் இருக்கும். எனவே ஹிப்நாடிசத்துக்கு உட்படுவர் நல்லவராக இருப்பின் தூக்க நிலையிலும் கூட ஹிப்நாடிசகாரர்கள் இடும் துன்மார்க்க கட்டளைக்கு உடன்படமாட்டார் என்பது திண்ணம், அத்தகையவரின் தூக்கம் திடுமென கலைந்துவிடும் என்பதனை இப்பயிற்சியில் இறங்குவோர் தமது மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்

தமிழகத்தில் பல்லாண்டுகளுக்கு முன்பே மெஸ்மரிஸக் கலையை நன்கு பயின்ற மறைமலை அடிகளார் 'நான் எனது மாணவனை அழைத்து இந்தக்கலையை பரிசோதிக்கும்போது முறையாக என் கண்களை சில வினாடிகள், ஒரு மனதோடு அசையாமல் பார்க்கும்படி கூறினேன். அப்படிச் செய்தபின் அவனுடைய கைவிரல்களில் ஒரு குண்டூசியைக் குத்தி, அதனால் அவனுக்கு வலி ஏற்படக் கூடாது என்றும், ரத்தம் சிந்தக் கூடாதென்றும் மனதில் எண்ணினேன். அந்த மாணவன் தெளிவு பெற்ற பின் நான் செய்தது ஏதேனும் தெரியுமா? என்று கேட்டேன்.

என் கண்களையே பார்த்துக் கொண்டு இருந்ததால் தனக்கு ஒன்றுமே உணர்வு ஏற்படவில்லை என்று கூறினான்' என்று தான் அறிந்த அனுபவத்தைக் கூறி இருக்கிறார். இது மறுக்க முடியாத அனுபவமாகும்.

சுயநலம் கூடாது

இந்த மெஸ்மரிஸ கலையை பெண்ணாசை பிடித்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்

நயவஞ்சகமாக பெண்களை வஞ்சிப்பதும், தங்கள் தவறான நோக்கத்திற்கு அவர்களை பயன்படுத்த நினைக்கும் போது அவசரத்தில் மனதை அலையவிட்டு அற்பத்தனமாக நடந்து அகப்பட்டுக் கொண்டு அவமதிப்புக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.

ஆகவே மெஸ்மரிஸத்தை நீங்கள் திறம்படக் கற்றுக் கொண்ட பின்பு, உங்கள் மனதை ஆசாபாசங்களுக்கு இடையே அலையவிட்டு அவசரமும் ஆத்திரமும் அடைந்து பேராசை கொண்டு தீய காரியங்களில் ஈடுபடுத்தி தீயவன் என்ற பெயர் எடுக்காமல் நல்ல உபயோகமான காரியங்களுக்காக மக்களின் நனமைக்காக மெஸ்மரிஸத்தை உபயோகப்படுத்தினால் நாட்டுக்கும், அத்துடன் உங்களுக்கும் நல்லது.`


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை