Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெகாசஸ் - செய்திகள்
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பெகாசஸ் - செய்திகள்
First topic message reminder :
பிரான்ஸ் பிரதமரையும் விட்டு வைக்காத பெகாசஸ்! – விசாரணை தொடக்கம்!
உலகம் முழுவதும் அரசியல் தலைவர்களை உளவு பார்த்ததாக அதிர்ச்சியை ஏற்படுத்திய பெகாசஸ் விவகாரத்தில் பிரான்ஸ் விசாரணையை தொடக்கியுள்ளது.
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ தயாரிக்கும் பெகாசஸ் மென்பொருள் உலகம் முழுவதும் உளவு வேலைகளில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெயர் உட்பட 14 நாட்டு தலைவர்கள் பெயர் அடிபட்டுள்ளது. மேலும் பெகாசஸ் மூலமாக பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மெக்ரான் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்த விசாரணையை பிரான்ஸ் தொடங்கியுள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பெகாசஸ் - செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1348906சிவா wrote:மத்திய மந்திரியிடம் இருந்து பெகாசஸ் அறிக்கையை பிடுங்கி கிழித்து எறிந்த திரிணாமுல் காங். எம்.பி.
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், இரு மத்திய அமைச்சர்கள், நீதிபதி ஒருவர் என சுமார் 300 பேரின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. பாராளுமன்றத்தில்எதிர்க்கட்சியினர் இப்பிரச்சனையை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மென்பொருளை பயன்படுத்தி அரசு ஒட்டு கேட்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தபோதிலும் எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை.
மூன்றாவது நாளாக இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பெகாசஸ் தவிர ஊடக அலுவலகங்களில் நடைபெறும் வருமான வரி சோதனை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு வந்தும் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் பேசிய மந்திரி அஷ்வின் வைஷ்ணவ்
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வின் வைஷ்ணவ் தனது உரையை சுருக்கமாக முடிக்க நேரிட்டது. கடும் அமளிக்கிடையே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மந்திரி அஷ்வின் வைஷ்ணவ் பேசினார். அப்போது, அவரிடம் இருந்த பேப்பாக்ளை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென், பிடுங்கி கிழித்து எறிந்தார். அந்த பேப்பர்கள் துணை சபாநாயகர் அருகில் பறந்து போய் விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மந்திரி வைஷ்ணவ், தனது அறிக்கையை மேஜையில் வைத்துவிட்டு உரையை முடித்துக்கொண்டார்.
மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. அவைக்காவலர்கள் தலையிட்டதையடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது. தொடர்ந்து அமளி நீடித்ததால் நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்கட்சிகள் எதையாவது சாக்கு வைத்து அமர்க்களம் செய்யக் காத்திருகிறார்கள்.. அவர்களுக்கு இந்த பெகாசஸ் உளவு மென்பொருள் லட்டு போல கிடைத்திருக்கிறது இப்பொழுது...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெகாசஸ் - செய்திகள்
பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்: கூட்டுக்குழு விசாரணை தேவை: ப.சிதம்பரம் வலியுறுத்தல்
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரத்தை கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தில் எழுப்பும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
2019-ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளும் சட்டவிரோத உளவு மூலம்தான் நடந்துள்ளதா என எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருந்த பாஜகவுக்கு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு செயலி உதவி இருக்கலாம்.
இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையைவிட கூட்டுக்குழு விசாரணை சக்திவாய்ந்தது.
நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விதிகள் மிகவும் கண்டிப்பானவை. ஆதாரங்களை வெளிப்படையாக எடுக்க முடியாது. ஆனால், அதிகாரம் மிக்க கூட்டுக்குழு, பொதுவெளிக்கு ஆதாரங்களைக் கொண்டு வர முடியும், சாட்சிகளை விசாரிக்க முடியும், சம்மனும் அனுப்பலாம். ஆதலால் கூட்டுக்குழு விசாரணைதான் நிலைக்குழு விசாரணையைவிட அதிகாரமிக்கது.
நாடாளுமன்றத்தில் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மிகவும் சாதுர்யமாகப் பேசினார், மிகவும் புத்திசாலித்தனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசியுள்ளார். அதிகாரபூர்வற்ற உளவுபார்த்தலை அஸ்வினி மறுக்கிறார். அதேநேரம், உளவுபார்த்தலை அவர் மறுக்கவில்லை. அதிகாரபூர்வமான கண்காணிப்பு குறித்து அவர் மறுக்கவும் இல்லை.
நிச்சயமாக அதிகாரபூர்வற்ற என்ற வார்த்தைக்கும், அதிகாரபூர்வமானது என்ற வார்த்தைக்கும் வேறுபாடு அமைச்சருக்குத் தெரிந்திருக்கும்.
அனைவரும் கண்காணிக்கப்பட்டார்களா, பெகாசஸ் மூலம் உளவுபார்க்கப்பட்டார்களா. பெகாசஸ் பயன்படுத்தப்பட்டால், யார் அதைவாங்கியது. அரசுமூலம் வாங்கப்பட்டதா அல்லது ஏஜென்சிகள் வாங்கினவா. இதற்காகச் செலவிடப்பட்ட தொகை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்.
ஒரு சாதாரண குடிமகனின் மனதில் இந்தக் கேள்விகள்தான் இருக்கின்றன. இதற்கு அமைச்சர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும்.
பிரான்ஸ் அரசு பெகாசஸ் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, இஸ்ரேல் அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது. ஆனால், இந்திய அரசு ஏன் விசாரணைக்கு உத்தரவிடவி்ல்லை, இந்த விவகாரத்தில் எழும் கேள்விகளுக்கு பதிலை ஏன் தேடவில்லை.
பெகாசஸ் உளவு என்பது தேசிய பாதுகாப்பு தொடர்பானது. ஏனென்றால், நாங்கள் யாரையும் கண்காணிக்கவில்லை என்று அரசு கூறிவிட்டால், அப்போது யார் கண்காணித்தது என்றகேள்வி எழும்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது வார்த்தைகளை திறமையாகக் கையாண்டுள்ளார்.
பெகாசஸ் மூலம் சில செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதை அவர் மறுக்கவில்லை. எந்த உளவு மென்பொருள் மூலமும் செல்போன்கள் கண்காணிக்கப்படவில்லை என்றால், இந்த விவகாரத்துக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டியது இருக்கும்.
ஆதலால், பெகாசஸ் விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது, யாரேனும் கண்காணிக்கப்பட்டார்களா என்பது குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.
சில பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்காணிப்பு செய்தன என்று கூறினாலும் அந்த ஏஜென்சிக்கான அமைச்சர் பிரதமர் மோடிதான்.
ஒவ்வொரு அமைச்சருக்கும் தன்னுடைய துறையில் நடப்பது பற்றித் தெரியும். பிரதமர் மோடிக்கு அனைத்து துறைகளிலும் நடப்பது தெரியும். ஆதலால், பிரதமர் மோடி, தாமாக முன்வந்து, பெகாசஸ் விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பெகாசஸ் ஹிரோஷிமா குண்டு போன்றது: சஞ்சய் ராவத் காட்டம்
ஜப்பானில் நடந்த ஹிரோமிஷிமா குண்டு வெடிப்பை போன்றது பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம். ஹிரோஷிமா குண்டுவெடிப்பில் மக்கள் உயிரை இழந்தார்கள், இங்கு உயிராக நினைக்கும் சுதந்திரத்தை இழந்துள்ளார்கள் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தை கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தில் எழுப்பும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், ரோதோக் என்ற பக்கத்தில் அந்தகட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பெகாசஸ் செயலி மூலம் அரசியல் கட்சி்த் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் சமூக ஆர்வலர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாள்கள் என 1,500 பேர் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சர்வதேச ஊடகங்கள் செய்தியின்படி, ஒரு லைசன்ஸ் மூலம் 50 செல்போன்களை ஒட்டுக் கேட்க முடியும் ஆண்டுக்கு 80 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும்.
அப்படியென்றால் இந்தியாவில் 300 செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதென்றால், குறைந்தபட்சம் 4.80 கோடி டாலர்கள் 2019-ம் ஆண்டு செலவிடப்பட்டிருக்க வேண்டும். 2020ம் ஆண்டிலும், 2021ம் ஆண்டும் அதிகமாக செலவிடப்பட்டிருக்க வேண்டும். யாருடைய கணக்கிலிருந்து இந்தப் பணம் செலவிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடக்குமா.
நவீனகால தொழில்நுட்பம் நம்மை அடிமைக்காலத்துக்கு அழைத்துச் செல்கிறது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டுவிற்கும், பெகாசஸ் விவகாரத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. ஹிரோஷிமாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தார்கள், பெகாசஸ் விவகாரத்தில் உயிராக நினைக்கும் சுதந்திரம் கொல்லப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் உளவுபார்க்கப்பட்டுள்ளனர், நீதித்துறை, ஊடகத்தினர் கூட உளவில் இருந்து தப்பிக்கவில்லை. சில ஆண்டுகளுக்குமுன்பே தலைநகரில் சுதந்திரத்துக்கான சூழல் முடிந்துவிட்டது. இந்த பெகாசஸ் செயலிக்கு யார் பணம் செலுத்தியது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
300 செல்போன்கள் ஒட்டுக் கேட்க 6 லைசன்ஸ் தேவைப்படும். இதற்கான பணத்தை யார் செலவிட்டது. என்எஸ்ஓ நிறுவனம் தங்களின் செயலியை அரசாங்கத்துக்கு மட்டுமே விற்கும் எனத் தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இ்ந்தியாவில் எந்த ஆட்சியி்ல் இதுவாங்கப்பட்டது. 300 பேரைக் கண்காணிக்க ரூ.300 கோடி செலவிடுவதா. உளவு பார்ப்பதற்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட நம்முடைய நாட்டுக்கு நிதித்திறன் இருக்கிறதா
இவ்வாறு ராவத் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பான உலகை படைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்கிறோம்” --
என்எஸ்ஒ நிறுவனம்.
என்எஸ்ஒ நிறுவனம்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பெகாசஸ் - செய்திகள்
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா.
கோல்கட்டா: பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக முக்கிய நபர்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் முக்கிய நபர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பார்லியில் கடந்த ஒரு வாரமாக இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்தை அமைத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மம்தா கூறியதாவது: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்போர்கூட கண்காணிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் இந்த பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை அமைக்க பார்லி கூட்டத்தொடரில் மத்திய அரசு உத்தரவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை, மத்திய அரசு அமைதியாக உட்கார்ந்திருக்கிறது. எனவே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக மேற்குவங்கம் அமைத்துள்ளது. இது சின்ன முயற்சிதான், இதைப் பார்த்து மற்ற மாநிலங்கள் விழித்துக்கொள்ளட்டும்.
இந்த ஆணையம் விரைவாக விசாரணையைத் தொடங்க வேண்டும், மே.வங்கத்தில் ஏராளமானோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோக்கூர், கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யா ஆகியோர் தலைமையில் ஆணையம் செயல்படும். இந்த ஆணையம் சட்டவிரோத ஹேக்கிங், கண்காணித்தல், உளவு பார்த்தல், செல்போன் அழைப்புகளை பதிவு செய்தல் தொடர்பாக விசாரிக்கும். விசாரணைச் சட்டம் 1952ன் கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டது குறித்த விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
இஸ்ரேலின் '#பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் பலரது #மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துஉள்ளது. இது தொடர்பாக பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி பிரபல பத்திரிகையாளர்கள் என்.ராம் மற்றும் சசிகுமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரமணா முன்பு, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஒட்டுக்கேட்பு விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோரது மொபைல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இதனால், மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், பணிச்சுமையை பொறுத்து, அடுத்த வாரம் இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனக்கூறினார்.
இஸ்ரேலின் '#பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் பலரது #மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துஉள்ளது. இது தொடர்பாக பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி பிரபல பத்திரிகையாளர்கள் என்.ராம் மற்றும் சசிகுமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரமணா முன்பு, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஒட்டுக்கேட்பு விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோரது மொபைல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இதனால், மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், பணிச்சுமையை பொறுத்து, அடுத்த வாரம் இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனக்கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பெகாசஸ் - செய்திகள்
மக்களின் குரலை ஒடுக்கும் ஆயுதம் பெகாசஸ்: ராகுல்
புதுடில்லி: மக்களின் குரலை ஒடுக்கவே, பெகாசஸ் என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது: உங்களின் மொபைல்போன், உங்களின் குரலாக உள்ளது. எனது மொபைல் மட்டுமல்லாமல், அனைத்து இளைஞர்களின் மொபைல்போனிலும் பெகாசஸ் மென்பொருளை மோடி வைத்துவிட்டார். நீங்கள் உண்மை பேசினால், அதனை அறிந்து கொள்வதற்காக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மக்களின் குரலை ஒடுக்கும் ஆயுதமாக பெகாசஸ் உள்ளது.
இந்திய இளைஞர்கள் உண்மை பேச துவங்கிவிட்டனர். இதனால், அரசு நிலைகுழைந்துவிட்டது. மோடி, பிரதமராக இருக்கும் வரை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

பெகாசஸ் விவகாரம்: ‘இந்து’ என் ராம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
கடந்த சில நாட்களாக நாட்டையே உலுக்கி வரும் பெகாசஸ் விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாஸ் விவகாரம் காரணமாக அவை நடவடிக்கை நடக்க முடியாமல் ஸ்தம்பித்துபோய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெகாஸ் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என இந்து ராம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்று நடைபெறும் விசாரணையில் பெகாசஸ் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
பெகாசஸ் விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து ராம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவது அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பெகாசஸ் - செய்திகள்
"பெகாசஸ் விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து ராம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவது அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது" ---
மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!
மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பெகாசஸ் - செய்திகள்
பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை: மத்திய அரசு விளக்கம்
புதுடில்லி: #பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என மத்திய #பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருளானது இஸ்ரேலைச் சேர்ந்த #என்.எஸ்.ஓ., நிறுவனம் உருவாக்கியதாகும். இந்த மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாகவும், குற்றவாளிகளையும், பயங்கரவாதிகளையும் உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இதனை விற்பதாகவும் என்.எஸ்.ஓ., நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த உளவு மென்பொருளைக் கொண்டு #இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பலரை உளவு பார்த்ததாக செய்திகள் வெளியாகின.
இந்தியாவில் காங்., எம்.பி., ராகுல் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரின் #செல்போன்கள் பெகாசஸ் #மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பார்லி.,யின் இரு அவைகளும் 15 நாட்களாக முடங்கின. இந்நிலையில், பெகாசஸ் தொடர்பாக ராஜ்யசபாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், ‛பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை,' என எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.
புதுடில்லி: #பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என மத்திய #பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருளானது இஸ்ரேலைச் சேர்ந்த #என்.எஸ்.ஓ., நிறுவனம் உருவாக்கியதாகும். இந்த மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாகவும், குற்றவாளிகளையும், பயங்கரவாதிகளையும் உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இதனை விற்பதாகவும் என்.எஸ்.ஓ., நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த உளவு மென்பொருளைக் கொண்டு #இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பலரை உளவு பார்த்ததாக செய்திகள் வெளியாகின.
இந்தியாவில் காங்., எம்.பி., ராகுல் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரின் #செல்போன்கள் பெகாசஸ் #மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பார்லி.,யின் இரு அவைகளும் 15 நாட்களாக முடங்கின. இந்நிலையில், பெகாசஸ் தொடர்பாக ராஜ்யசபாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், ‛பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை,' என எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பெகாசஸ் என்றால் என்ன?
» "ஜீரோ கிளிக் அட்டாக்".. ஒரே நொடியில் போனை ஹேக் செய்யும் "பெகாசஸ்".. எப்படி செயல்படுகிறது? பின்னணி!
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» சில செய்திகள்
» செய்திகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum