ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அறிமுகம்
by musafir.world Today at 1:52 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» Novel
by Periya Yesterday at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Yesterday at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Yesterday at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Fri Sep 24, 2021 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Fri Sep 24, 2021 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Fri Sep 24, 2021 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Fri Sep 24, 2021 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


பெகாசஸ் - செய்திகள்

4 posters

பெகாசஸ் - செய்திகள் Empty பெகாசஸ் - செய்திகள்

Post by சிவா Thu Jul 22, 2021 8:46 pm


உலகம் முழுவதும் அரசியல் தலைவர்களை உளவு பார்த்ததாக அதிர்ச்சியை ஏற்படுத்திய பெகாசஸ் விவகாரத்தில் பிரான்ஸ் விசாரணையை தொடக்கியுள்ளது.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ தயாரிக்கும் பெகாசஸ் மென்பொருள் உலகம் முழுவதும் உளவு வேலைகளில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெயர் உட்பட 14 நாட்டு தலைவர்கள் பெயர் அடிபட்டுள்ளது. மேலும் பெகாசஸ் மூலமாக பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மெக்ரான் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்த விசாரணையை பிரான்ஸ் தொடங்கியுள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by சிவா Thu Jul 22, 2021 8:47 pmகடந்த சில நாட்களாக செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல அரசியல் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்பட 300-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்டதாகவும் இதற்காக கோடிக்கணக்காக மத்திய அரசு செலவு செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பெகாசஸ் செயலின் மூலம் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழு ஜூலை 28-ஆம் தேதி விசாரணை செய்ய உள்ளது. இந்த விசாரணைக்கு மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய அரசு அதிகாரிகளுடன் செய்யும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by சிவா Thu Jul 22, 2021 8:54 pmகர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த இரண்டு நாட்களாக பெகாசஸ் செயலி மூலம் முக்கிய தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டதால் நாடாளுமன்றமே ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் குமாரசாமி தலைமையிலான ஏற்பட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி அரசை கவிழ்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா ஆகியோர்களின் செயலர்கள் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு அதன் மூலம் அரசு கவிழ்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by சிவா Thu Jul 22, 2021 8:55 pm

மத்திய அரசு பெகாசஸ் மென்பொருள் மூலமாக பலரை ஒட்டு கேட்டதாக வெளியான சர்ச்சையை தொடர்ந்து நடிகை கங்கனா ரானவத் பதிவு வைரலாகியுள்ளது.

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் வழியாக மத்திய அரசு 300க்கும் அதிகமானோர் செல்போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாராளுமன்றம் தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகள் அமளியால் தொடர்ந்து இன்று வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத் “அந்த காலங்களில் அரசு நிர்வாகத்தை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மன்னர்கள் ரகசியமாக ஊருக்குள் சென்று கேட்பார்கள். மன்னர்களுக்கு அதற்கான உரிமை உள்ளது. நான் பெகாசஸ் பற்றி பேசவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by சிவா Thu Jul 22, 2021 8:57 pm

மத்திய மந்திரியிடம் இருந்து பெகாசஸ் அறிக்கையை பிடுங்கி கிழித்து எறிந்த திரிணாமுல் காங். எம்.பி.

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், இரு மத்திய அமைச்சர்கள், நீதிபதி ஒருவர் என சுமார் 300 பேரின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. பாராளுமன்றத்தில்எதிர்க்கட்சியினர் இப்பிரச்சனையை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மென்பொருளை பயன்படுத்தி அரசு ஒட்டு கேட்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தபோதிலும் எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை.

மூன்றாவது நாளாக இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பெகாசஸ் தவிர ஊடக அலுவலகங்களில் நடைபெறும் வருமான வரி சோதனை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு வந்தும் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் பேசிய மந்திரி அஷ்வின் வைஷ்ணவ்

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வின் வைஷ்ணவ் தனது உரையை சுருக்கமாக முடிக்க நேரிட்டது. கடும் அமளிக்கிடையே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மந்திரி அஷ்வின் வைஷ்ணவ் பேசினார். அப்போது, அவரிடம் இருந்த பேப்பாக்ளை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென், பிடுங்கி கிழித்து எறிந்தார். அந்த பேப்பர்கள் துணை சபாநாயகர் அருகில் பறந்து போய் விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மந்திரி வைஷ்ணவ், தனது அறிக்கையை மேஜையில் வைத்துவிட்டு உரையை முடித்துக்கொண்டார்.

மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. அவைக்காவலர்கள் தலையிட்டதையடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது. தொடர்ந்து அமளி நீடித்ததால் நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:16 pm

மத்திய மந்திரியிடம் இருந்து பெகாசஸ் அறிக்கையை பிடுங்கி கிழித்து எறிந்த திரிணாமுல் காங். எம்.பி.

இவர்கள் மக்கள் பிரதிநிதிகளா? அல்லது அவைதனில் சண்டை போடவந்த சண்டியர்களா?


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

சிவா likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by சிவா Sat Jul 24, 2021 12:14 am

பெகாசஸ் உளவு விவகாரம்: செல்போனை மாற்றிய பிரான்ஸ் அதிபர்

பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் அவர் தனது செல்போனை மாற்றியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இராக் அதிபர் பர்ஹம் சாலி, தென்னா ப்பிரிக்க அதிபர் சைரில் ராமோஃபோசா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பெளலி, மொராக்கோ பிரதமர் சாத் எட்டின் எல் அத்மானி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பலரும் உளவு பார்க்கப்பட்டதாக சர்வதேச பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது செல்போனை மாற்றியுள்ளதாக அந்நாட்டின் பாதுகா ப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிபர் பல்வேறு எண்களைப் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர்கள் இதனை உளவு விவகாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளனர்.

முன்னதாக பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்ட
மேக்ரான் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by Dr.S.Soundarapandian Sat Jul 24, 2021 2:50 pm

“பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்டதாகவும் இதற்காக கோடிக்கணக்காக மத்திய அரசு செலவு செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன” ! அதிர்ச்சி அதிர்ச்சி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6405
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3305

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by சிவா Sat Jul 24, 2021 6:47 pm

லட்சக்கணக்கானோர் இரவில் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்றால்.. பெகாஸஸ் நிறுவனம்

பல லட்சக்கணக்கானோர் இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு இம்மாதிரியான தொழில்நுட்பங்களே காரணம் என என்எஸ்ஒ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்எஸ்ஒ நிறுவனம் தயாரித்த பெகாஸஸ் மென்பொருள் மூலம் உலக தலைவர்கள் வேவு பார்க்கப்பட்டதாக தி வயர் இணையதளம் வெளியிட்ட செய்தி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில், பல லட்சக்கணக்கானோர் இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு இம்மாதிரியான தொழில்நுட்பங்களே காரணம் என பெகாஸஸ் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து என்எஸ்ஒ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "புலனாய்வு அமைப்புகளிடம் இம்மாதிரியான தொழில்நுட்பம் இருப்பதன் காரணமாகத்தான் மக்கள் வீதிகளில் பாதுகாப்பாக நடமாடுகிறார்கள்.

தொழில்நுட்பத்தை வாங்கியவர்கள் சேகரித்த தரவுகள் எங்களிடம் இல்லை. அதேபோல், பெகாஸஸ் தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தவதில்லை. பல அரசுகளுக்கு என்எஸ்ஒ போன்ற சைபர் புலனாய்வு நிறுவனங்கள் புலனாய்வு உபகரணங்களை வழங்கிவருகிறது.

ஏனெனில், புலனாய்வு அமைப்புகளுக்கு இதுகுறித்த புரிதல் இல்லை. சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க ஒழுங்காற்று ஆணையங்கள் இல்லை. பாதுகாப்பான உலகை படைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்கிறோம். மென்பொருள் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by T.N.Balasubramanian Sat Jul 24, 2021 8:53 pm

மக்களுக்கு தெளிவு பிறக்க (என்னையும் சேர்த்துதான்) இன்னும் சில காலம் பிடிக்குமென எண்ணுகிறேன்.ஒவ்வொரு ஊடகமும் அவர்களுக்கு எது நன்மை பயக்குமோ அதை சார்ந்தே செய்திகள் வெளியிடுகிறார்கள்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

சிவா likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by krishnaamma Sat Jul 24, 2021 10:27 pm

@சிவா wrote:மத்திய மந்திரியிடம் இருந்து பெகாசஸ் அறிக்கையை பிடுங்கி கிழித்து எறிந்த திரிணாமுல் காங். எம்.பி.

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், இரு மத்திய அமைச்சர்கள், நீதிபதி ஒருவர் என சுமார் 300 பேரின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. பாராளுமன்றத்தில்எதிர்க்கட்சியினர் இப்பிரச்சனையை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மென்பொருளை பயன்படுத்தி அரசு ஒட்டு கேட்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தபோதிலும் எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை.

மூன்றாவது நாளாக இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பெகாசஸ் தவிர ஊடக அலுவலகங்களில் நடைபெறும் வருமான வரி சோதனை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு வந்தும் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் பேசிய மந்திரி அஷ்வின் வைஷ்ணவ்

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வின் வைஷ்ணவ் தனது உரையை சுருக்கமாக முடிக்க நேரிட்டது. கடும் அமளிக்கிடையே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மந்திரி அஷ்வின் வைஷ்ணவ் பேசினார். அப்போது, அவரிடம் இருந்த பேப்பாக்ளை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென், பிடுங்கி கிழித்து எறிந்தார். அந்த பேப்பர்கள் துணை சபாநாயகர் அருகில் பறந்து போய் விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மந்திரி வைஷ்ணவ், தனது அறிக்கையை மேஜையில் வைத்துவிட்டு உரையை முடித்துக்கொண்டார்.

மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. அவைக்காவலர்கள் தலையிட்டதையடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது. தொடர்ந்து அமளி நீடித்ததால் நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1348906
எதிர்கட்சிகள் எதையாவது சாக்கு வைத்து அமர்க்களம் செய்யக் காத்திருகிறார்கள்.. அவர்களுக்கு இந்த பெகாசஸ் உளவு மென்பொருள் லட்டு போல கிடைத்திருக்கிறது இப்பொழுது...சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by சிவா Sun Jul 25, 2021 6:12 pm

பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்: கூட்டுக்குழு விசாரணை தேவை: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரத்தை கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தில் எழுப்பும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

2019-ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளும் சட்டவிரோத உளவு மூலம்தான் நடந்துள்ளதா என எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருந்த பாஜகவுக்கு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு செயலி உதவி இருக்கலாம்.

இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையைவிட கூட்டுக்குழு விசாரணை சக்திவாய்ந்தது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விதிகள் மிகவும் கண்டிப்பானவை. ஆதாரங்களை வெளிப்படையாக எடுக்க முடியாது. ஆனால், அதிகாரம் மிக்க கூட்டுக்குழு, பொதுவெளிக்கு ஆதாரங்களைக் கொண்டு வர முடியும், சாட்சிகளை விசாரிக்க முடியும், சம்மனும் அனுப்பலாம். ஆதலால் கூட்டுக்குழு விசாரணைதான் நிலைக்குழு விசாரணையைவிட அதிகாரமிக்கது.

நாடாளுமன்றத்தில் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மிகவும் சாதுர்யமாகப் பேசினார், மிகவும் புத்திசாலித்தனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசியுள்ளார். அதிகாரபூர்வற்ற உளவுபார்த்தலை அஸ்வினி மறுக்கிறார். அதேநேரம், உளவுபார்த்தலை அவர் மறுக்கவில்லை. அதிகாரபூர்வமான கண்காணிப்பு குறித்து அவர் மறுக்கவும் இல்லை.

நிச்சயமாக அதிகாரபூர்வற்ற என்ற வார்த்தைக்கும், அதிகாரபூர்வமானது என்ற வார்த்தைக்கும் வேறுபாடு அமைச்சருக்குத் தெரிந்திருக்கும்.

அனைவரும் கண்காணிக்கப்பட்டார்களா, பெகாசஸ் மூலம் உளவுபார்க்கப்பட்டார்களா. பெகாசஸ் பயன்படுத்தப்பட்டால், யார் அதைவாங்கியது. அரசுமூலம் வாங்கப்பட்டதா அல்லது ஏஜென்சிகள் வாங்கினவா. இதற்காகச் செலவிடப்பட்ட தொகை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்.

ஒரு சாதாரண குடிமகனின் மனதில் இந்தக் கேள்விகள்தான் இருக்கின்றன. இதற்கு அமைச்சர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும்.

பிரான்ஸ் அரசு பெகாசஸ் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, இஸ்ரேல் அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது. ஆனால், இந்திய அரசு ஏன் விசாரணைக்கு உத்தரவிடவி்ல்லை, இந்த விவகாரத்தில் எழும் கேள்விகளுக்கு பதிலை ஏன் தேடவில்லை.

பெகாசஸ் உளவு என்பது தேசிய பாதுகாப்பு தொடர்பானது. ஏனென்றால், நாங்கள் யாரையும் கண்காணிக்கவில்லை என்று அரசு கூறிவிட்டால், அப்போது யார் கண்காணித்தது என்றகேள்வி எழும்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது வார்த்தைகளை திறமையாகக் கையாண்டுள்ளார்.

பெகாசஸ் மூலம் சில செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதை அவர் மறுக்கவில்லை. எந்த உளவு மென்பொருள் மூலமும் செல்போன்கள் கண்காணிக்கப்படவில்லை என்றால், இந்த விவகாரத்துக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டியது இருக்கும்.

ஆதலால், பெகாசஸ் விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது, யாரேனும் கண்காணிக்கப்பட்டார்களா என்பது குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

சில பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்காணிப்பு செய்தன என்று கூறினாலும் அந்த ஏஜென்சிக்கான அமைச்சர் பிரதமர் மோடிதான்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் தன்னுடைய துறையில் நடப்பது பற்றித் தெரியும். பிரதமர் மோடிக்கு அனைத்து துறைகளிலும் நடப்பது தெரியும். ஆதலால், பிரதமர் மோடி, தாமாக முன்வந்து, பெகாசஸ் விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by சிவா Sun Jul 25, 2021 6:14 pm

பெகாசஸ் ஹிரோஷிமா குண்டு போன்றது: சஞ்சய் ராவத் காட்டம்

ஜப்பானில் நடந்த ஹிரோமிஷிமா குண்டு வெடிப்பை போன்றது பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம். ஹிரோஷிமா குண்டுவெடிப்பில் மக்கள் உயிரை இழந்தார்கள், இங்கு உயிராக நினைக்கும் சுதந்திரத்தை இழந்துள்ளார்கள் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தை கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தில் எழுப்பும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், ரோதோக் என்ற பக்கத்தில் அந்தகட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பெகாசஸ் செயலி மூலம் அரசியல் கட்சி்த் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் சமூக ஆர்வலர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாள்கள் என 1,500 பேர் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சர்வதேச ஊடகங்கள் செய்தியின்படி, ஒரு லைசன்ஸ் மூலம் 50 செல்போன்களை ஒட்டுக் கேட்க முடியும் ஆண்டுக்கு 80 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும்.

அப்படியென்றால் இந்தியாவில் 300 செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதென்றால், குறைந்தபட்சம் 4.80 கோடி டாலர்கள் 2019-ம் ஆண்டு செலவிடப்பட்டிருக்க வேண்டும். 2020ம் ஆண்டிலும், 2021ம் ஆண்டும் அதிகமாக செலவிடப்பட்டிருக்க வேண்டும். யாருடைய கணக்கிலிருந்து இந்தப் பணம் செலவிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடக்குமா.

நவீனகால தொழில்நுட்பம் நம்மை அடிமைக்காலத்துக்கு அழைத்துச் செல்கிறது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டுவிற்கும், பெகாசஸ் விவகாரத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. ஹிரோஷிமாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தார்கள், பெகாசஸ் விவகாரத்தில் உயிராக நினைக்கும் சுதந்திரம் கொல்லப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் உளவுபார்க்கப்பட்டுள்ளனர், நீதித்துறை, ஊடகத்தினர் கூட உளவில் இருந்து தப்பிக்கவில்லை. சில ஆண்டுகளுக்குமுன்பே தலைநகரில் சுதந்திரத்துக்கான சூழல் முடிந்துவிட்டது. இந்த பெகாசஸ் செயலிக்கு யார் பணம் செலுத்தியது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

300 செல்போன்கள் ஒட்டுக் கேட்க 6 லைசன்ஸ் தேவைப்படும். இதற்கான பணத்தை யார் செலவிட்டது. என்எஸ்ஓ நிறுவனம் தங்களின் செயலியை அரசாங்கத்துக்கு மட்டுமே விற்கும் எனத் தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இ்ந்தியாவில் எந்த ஆட்சியி்ல் இதுவாங்கப்பட்டது. 300 பேரைக் கண்காணிக்க ரூ.300 கோடி செலவிடுவதா. உளவு பார்ப்பதற்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட நம்முடைய நாட்டுக்கு நிதித்திறன் இருக்கிறதா

இவ்வாறு ராவத் தெரிவித்துள்ளார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by Dr.S.Soundarapandian Mon Jul 26, 2021 11:07 am

“பாதுகாப்பான உலகை படைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்கிறோம்” --
என்எஸ்ஒ நிறுவனம். சிரிப்பு சிரிப்பு
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6405
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3305

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by சிவா Mon Jul 26, 2021 6:12 pm

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா.

கோல்கட்டா: பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக முக்கிய நபர்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் முக்கிய நபர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பார்லியில் கடந்த ஒரு வாரமாக இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்தை அமைத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மம்தா கூறியதாவது: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்போர்கூட கண்காணிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் இந்த பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை அமைக்க பார்லி கூட்டத்தொடரில் மத்திய அரசு உத்தரவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை, மத்திய அரசு அமைதியாக உட்கார்ந்திருக்கிறது. எனவே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக மேற்குவங்கம் அமைத்துள்ளது. இது சின்ன முயற்சிதான், இதைப் பார்த்து மற்ற மாநிலங்கள் விழித்துக்கொள்ளட்டும்.

இந்த ஆணையம் விரைவாக விசாரணையைத் தொடங்க வேண்டும், மே.வங்கத்தில் ஏராளமானோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோக்கூர், கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யா ஆகியோர் தலைமையில் ஆணையம் செயல்படும். இந்த ஆணையம் சட்டவிரோத ஹேக்கிங், கண்காணித்தல், உளவு பார்த்தல், செல்போன் அழைப்புகளை பதிவு செய்தல் தொடர்பாக விசாரிக்கும். விசாரணைச் சட்டம் 1952ன் கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

பெகாசஸ் - செய்திகள் Empty Re: பெகாசஸ் - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை