by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
டோக்கியோ ஒலிம்பிக் 2020
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன?
120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில்
இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப்
பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது
எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கமே சர்ச்சைக்குரியது. இந்தியா, 1900 பாரிஸ் ஒலிம்பிஸில்,
நார்மன் பிச்சர்ட் என்கிற ஆங்கிலே ய வீரரை அனுப்பியது. அவரும் அத்லெடிக்கில் இரண்டு
வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், நார்மன் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்டதாக
ஒரு சர்ச்சை பின்னால் கிளம்பியது. 1908க்குப் பிறகுதான் விளையாட்டு வீரர்கள், ஒரு நாட்டின்
சார்பாக ஒலிம்பிக்ஸூக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு முன்புவரை, வீரர்கள் தங்கள் விருப்பத்துடன்
கலந்துகொண்டதால், நார்மனின் சாதனைக்கு இங்கிலாந்தும் உரிமை கோருகிறது. ஆனால்,
ஒலிம்பிக் ஆவணங்களில், நார்மன் இந்தியராகவே குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்பிறகு 1920
பெல்ஜியம் ஒலிம்பிக்ஸில்தான், ஒரு குழுவை அனுப்பியது இந்தியா. 5 இந்திய வீரர்கள்
கலந்துகொண்ட அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை.
1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில், இந்திய ஹாக்கி அணி தம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
அதற்குப் பிறகு, அடுத்த ஆறு ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி தங்கத்தை மட்டுமே வென்றது.
அதற்குப் பிறகு, இரண்டு ஒலிம்பி க்ஸ்களில் தங்கம் வென்று, எட்டு முறை முதலிடம் பிடித்தது.
கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு
28 வருடங்கள் கழித்து, முதல்முறையாக தனி நபராக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்தார்
அபினவ் பிந்திரா.
1980க்கு முன்னால், ஹாக்கி அணி பெற்றுக்கொடுத்த பதக்கங்களைத் தவிர இந்தியாவுக்கு 1952
ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் கே.டி. ஜாதவ் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
ஒலிம்பிக்ஸில், முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். 1980க்குப் பிறகு
அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. இந்திய ஹாக்கி
அணியின் தரமும் இந்தக் காலகட்டத்தில் குறைந்து, மற்ற அணிகளோடு போட்டி போடமுடியாத நிலை
ஏற்பட்டது.
1996, 2000 ஒலிம்பிக்களில் லியாண்டர் பெயஸ், கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப்
பதக்கங்களையும் 2004ல் ரதோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்கள். 2008 பீஜிங்
ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றது. ஒரு தங்கமும் இரண்டு
வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. இந்திய அணி வேறு எந்த ஒலிம்பிக்ஸிலும் 3
பதக்கங்களைப் பெற்றது கிடையாது என்பதால் நாடே அதைக் கொண்டாடியது. அதிலும் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில்
தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.
குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் (வெண்கலம்) பெற்றுத் தந்தார்
விஜேந்தர் சிங்.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மேலும் அமர்க்களமாக அமைந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் விஜய் குமாருக்கு வெள்ளி கிடைத்தது.
ஒலிம்பிக்ஸில் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை
என்கிற பெருமையைப் பெற்றார் சானியா நெவால். இதனால் இந்தியாவில் ஒரு பாட்மிண்டன் அலையை உண்டாக்கினார். அதேபோல குத்துச்சண்டையிலும் வெண்கலம் வென்று
சாதனை படைத்தார் மேரி கோம். துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்கும் மல்யுத்தத்தில் யோகேஸ்வர்
தத்தும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2 வெள்ளி
4 வெண்கலப் பதக்கங்கள் என மொ த்தமாக 6 பதக்கங்கள் கிடைத்தன. அதற்கு முன்பு இந்தியா
இத்தனை பதக்கங்களைப் பெற்றதில்லை.
ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2-ஆக சுருங்கியது.
மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெள்ளிப்
பதக்கம் வென்று இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
டோக்கியோவில் இந்தியாவுக்கு எப்படியும் 10 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வி. சிந்து (பாட்மிண்டன்), செளரப் செளத்ரி, மானு பாக்கர், திவ்யான்ஸ் பன்வார், இளவேனில்,
யாஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா, (துப்பாக்கிச் சுடுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்),
மீராபாய் சானு (எடை தூக்குதல்), ரவி தாஹியா, பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித்
பங்கால் (குத்துச்சண்டை) போன்ற வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்கிற நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளார்கள். இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலிக்கட்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வட்டு எறிதல் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை 1-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இவ்வளவு தூரம் முன்னேறி சாதனை படைக்கும் என யார் எண்ணியிருக்க முடியும்? ஒரு கட்டத்தில் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்த இந்திய அணி இன்று அரையிறுதியில் விளையாடவுள்ளது. இது உண்மைதானா என இந்திய ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளார்கள்.
முதல் சுற்றில், உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்தது இந்தியா. 2-வது ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை அணியான ஜொ்மனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 1-4 எனத் தோற்றது. அயர்லாந்தை இந்திய அணி 1-0 என வீழ்த்தியது. தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்த வந்தனா கட்டாரியா, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா்.
இந்த வெற்றியின் மூலம், 5 ஆட்டங்களில் 6 புள்ளிகளைப் பெற்று ‘ஏ’ குரூப்பில் 4-ஆவது இடத்தில் இருந்தது இந்தியா. 5-ஆவது இடத்திலிருந்த அயா்லாந்து தனது கடைசி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கான காலிறுதி வாய்ப்பு பறிபோகும் நிலையிலிருந்தது. எனினும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அயா்லாந்து 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்தியா 4-ஆவது இடத்தில் நிலைத்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மிகவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 22-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக இந்தியாவின் குர்ஹித் கெளர் கோல் அடித்து அசத்தினார். இந்திய அணியின் தடுப்பாட்டம் இன்று மிகவும் சிறப்பாக இருந்தது. கோல் கீப்பர் சவிதா பல ஷாட்களைத் தடுத்து ஆஸ்திரேலிய அணியை ஒரு கோல் அடிக்கவும் விடாமல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதனால் மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தியது.
2016-ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தமுறை முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி காலிறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை நேற்று வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது, கடந்த 49 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். அடுத்த நாளே இந்திய மகளிர் அணியும் நம்பமுடியாத வெற்றியை அடைந்து சாதனை படைத்துள்ளது.
இந்திய ஹாக்கிக்குப் பொன்னான தருணம் இது. இரு அணிகளும் இன்னும் இரு வெற்றிகளைப் பெற்று தங்கம் பெற வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் விருப்பம். கனவு பலிக்குமா?
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் அரையிறுதி ஆட்டங்கள்
ஆகஸ்ட் 3: இந்திய ஆடவர் ஹாக்கி அணி vs பெல்ஜியம் - காலை 7 மணி (இந்திய நேரம்)
ஆகஸ்ட் 4: இந்திய மகளிர் ஹாக்கி அணி vs ஆர்ஜெண்டினா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நன்றி ஐயா..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆமாம் தலைப்பில் இதுவரை ஆக அதிகமான பதக்கங்கள்.
ஆக .......அதிகமான வார்த்தை சேர்ப்போ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» டோக்கியோ ஒலிம்பிக்- இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் தகுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தமிழக வீராங்கனை பவானிதேவி அசத்தல்..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்