புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_lcapகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_voting_barகொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 11:06 pm

First topic message reminder :

உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று;

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உலகைக் கடந்துவிட்டது, தற்போது பொதுமுடக்கங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால், அது மிகப்பெரிய தவறு என்கிறது இந்தச் செய்தி.

இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் கருதினாலும், விரைவில் நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுதான் உண்மைபோலும். ஆம், பொதுமுடக்கம் மற்றும் இயல்பு நிலை திரும்பியதாக மக்களின் மனநிலை ஆகியவை காரணமாக உலகம் முழுவதும், கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது.

9 வாரங்களாக கரோனா பெருந்தொற்று காரணமாக பலியாவோர் எண்ணிக்கை சரிந்து வந்த நிலையில், அந்த நிலை கடந்த வாரம் மாறியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த வாரம் மட்டும் 55,000 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும்.புதிதாக கரோனா பாதிப்பும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாக, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் நாடுகளில்தான் இந்த அதிகரிப்பு பதிவாகியிருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி, கரோனா பரவலின் சரிவுநிலை திரும்புவதற்குக் காரணிகளாக, தடுப்பூசி செலுத்துவதில் மெத்தனம், முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு, அதிகம் பரவும் திறன் கொண்ட டெல்டா வகை உருமாறிய கரோனா, போன்றவை இருக்கின்றன. டெல்டா வகை உருமாறிய கரோனா தற்போது 111 நாடுகளில் பரவி வருவதாகவும் வரும் மாதங்களில் இது உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.உலகம் முழுவதும் கரோன பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அர்ஜென்டினாவில் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியிருக்கிறது. ரஷியாவில் இந்த வாரம், பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் டெல்டா வகை கரோனா வைரஸ் இளைஞர்களை பாதிப்பதும் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் பிரிட்டனில் ஒரு நாள் புதிய கரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. மியான்மரியில் உள்ள மயானங்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் இயங்கி வருகின்றன.கடந்த மாதம் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த இந்தோனேசியாவில் புதன்கிழமை 54,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தா அருகே இடுகாடுகளில் குழிகளைத் தோண்டும் பணியில் ஊழியர்கள் தேவை அதிகரித்ததால், பொதுமக்களும் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு மக்கள் இப்பணியைச் செய்யாவிட்டால், உடல்களைப் புதைக்க பல நாள்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

அமெரிக்காவிலோ, கடந்த இரண்டு வாரங்களில் கரோனா பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிவிரும் டோக்கியோவில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து, மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால், அங்கு அவசரநிலையே அறிவிக்கப்பட்டுவிட்டது.கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சிட்னியில் பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சியோலில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் அதிகரித்திருக்கும் கரோனா பரவல் பற்றிய இந்தப் பட்டியல் மேலும் நீண்டுகொண்டேதான் இருக்கிறது. உலகம் முழுவதும் அச்சமூட்டும் வகையில் எண்ணிக்கை அமைந்திருந்தாலும், இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பட்டதைப் போன்ற அபாய எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை என்றும் கூறுகிறார்கள்.கடந்த ஏப்ரல் மாத ஒரு நாள் பாதிப்போடு ஒப்பிடுகையில் பாதியளவாக, உலகம் முழுவதும் ஒரு நாள் பாதிப்பு 4,50,000 ஆகவே உள்ளது. பல நாடுகளும், கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாலும், இது கரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.



கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 7:42 pm

கொரோனாவுக்கு உலக அளவில் 6,761,967 பேர் பலி



ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.61 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,761,967 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 675,144,399 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 647,515,517 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,065 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 01, 2023 8:51 pm

இன்னும் இதன் கோர தாண்டவம் முடிந்தபாடில்லை...சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 10, 2023 1:58 am

கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மிக மோசமானவை: பிரிட்டன் மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா



இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகளை ஏற்படுத்துவதில் எம்ஆா்என்ஏ தடுப்பூசிகளைவிட, #கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மிக மோசமானவை என்று பிரிட்டனின் புகழ்பெற்ற இதயநோய் மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளாா்.

இந்தியாவை பூா்விகமாக கொண்டவா் பிரிட்டன் மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா. கரோனாவுக்கு எதிரான எம்ஆா்என்ஏ தடுப்பூசிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் வலியுறுத்துவோரில் முன்னணியில் உள்ளாா். இந்தியா வந்துள்ள அவா், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி:

அமெரிக்காவின் ஃபைஸா், மாடா்னா போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் எம்ஆா்என்ஏ கரோனா தடுப்பூசிகள் உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகளுக்கு வழியமைக்கின்றன. எனவே, அந்தத் தடுப்பூசிகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் குரல்கள் எழுந்துள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் வரை, எம்ஆா்என்ஏ மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப்பட்டு, அதன் முடிவுகள் ஆய்விதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது. அந்த முடிவில், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகள், மாரடைப்பு, பக்கவாதம், இளவயதினருக்கும் முதியவா்களுக்கும் ரத்தம் உறைவது, சில உயிரிழப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் ஃபைஸா் நிறுவனத்தின் எம்ஆா்என்ஏ தடுப்பூசியைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசி மிக மோசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டை மறுஆய்வு செய்ய வேண்டும்: பிரிட்டனில் கோவிஷீல்ட் #தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து 97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னா், கிட்டத்தட்ட 10 சதவீதம் பேருக்கு, அதாவது 8 லட்சம் பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அந்தப் பக்கவிளைவுகள் லேசாகவோ, மிதமாகவோ இல்லை. அவற்றைவிட அதிகமாக இருந்தது. இதுபோல முன்னெப்போதும் நடந்ததில்லை.

கடுமையான பக்கவிளைவுகள் காரணமாக பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. அப்படி இருக்கும்போது, இந்தியாவில் அந்தத் தடுப்பூசி செலுத்தப்படுவது ஏன்? அந்தத் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மையை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும்.

லாபம் ஈட்டுவதே நோக்கம்: முக்கிய பிரச்னை என்னவெனில், அரசியல்வாதிகள், ஒழுங்காற்று அமைப்புகள், ஊடகங்களைக் கட்டுப்படுத்த வணிக நிறுவனங்கள், பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. இது கரோனா தீநுண்மி குறித்த தவறான தகவல்களை மருத்துவா்கள், பொதுமக்கள் மத்தியில் உருவாக்கியது.

தங்கள் பங்குதாரா்களுக்கு லாபம் ஈட்டித் தரவே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எந்தத் தேவையும் அந்நிறுவனங்களுக்கு இல்லை.

கோவேக்ஸினையும்...: கோவேக்ஸின் தடுப்பூசியின் தரவுகளை ஆராய்ந்ததில், அந்தத் தடுப்பூசியால் குறிப்பிடும்படி பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது போலவே தென்படுகிறது. ஆனால், பிற தடுப்பூசிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும் நிலையில், கோவேக்ஸினும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

தடுப்பூசி அவசியமில்லை: 90 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியா்கள் கரோனா தீநுண்மி பாதிப்பை எதிா்கொண்டனா். அவா்களுக்கு உடலில் இயற்கையாக நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இயற்கையாக உருவாகும் நோய் எதிா்ப்பு சக்தி மிகவும் ஆற்றல்வாய்ந்தது. அது கடுமையான உடல்நல பாதிப்புகளில் இருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாக்கிறது. எனவே, கரோனா தீநுண்மி குறித்து இந்திய மக்களும் அரசும் கவலையடைய வேண்டாம்.

இனி இந்தியாவில் யாருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதேபோல பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. அதன்மூலம் பக்கவிளைவுகள் அதிகரிக்கலாம். மேன்மேலும் தடுப்பூசி தவணைகளை செலுத்திக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகளால் அவதிப்பட அதிக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 2:58 pm

சீன ஆய்வகத்தில் இருந்தே கொரோனா கசிந்திருக்கலாம்: எஃப்.பி.ஐ.


சீன அரசுக்கு சொந்தமான ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று தோன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக நம்புவதாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிரிஸ்டோபர் வ்ரே தெரிவித்துள்ளார்.

“கொரோனா தொற்றுநோயின் தோற்றம் பெரும்பாலும் ஆய்வகத்தில் நிகழ்ந்தது போன்றே இருக்கிறது என எஃப்.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது,” என்று ஃபாக்ஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகையே பாதிப்பிற்குள்ளாகிய கொரோனா தொற்று எப்படி தோன்றிருக்கும் என்பது பற்றி எஃப்.பி.ஐ. தீர்க்கமான கருத்தை வெளிப்படையாக கூறுவது இதுவே முதன்முறை ஆகும்.

வூகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்ற குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது. இந்த குற்றச்சாட்டு அவதூறானது என்றும் அந்நாடு கூறியுள்ளது.

கொரோனாவின் தொடக்கம் தொடர்பான விவகாரத்தில் சீனா மிக நேர்மையாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் கூறியிருந்த சில தினங்களிலேயே இத்தகைய கருத்தை கிரிஸ்டோபர் வ்ரே தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று ஒளிபரப்பான அந்த பேட்டியில், “கொரோனா தொற்றுநோயின் மூலம் தொடர்பாக அடையாளம் காணும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் மழுங்கடிப்பதற்கும் சீனா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இது அனைவருக்கும் துரதிருஷ்டவசமானது” என்று கிரிஸ்டோபர் வ்ரே குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் முன்னணியில் இருக்கும் வைரஸ் ஆய்வகமான வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் (Wuhan Institute of Virology) இருந்து 40 நிமிட பயணத்தில் இந்த சந்தை அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வையும் இந்த ஆய்வகம் நடத்தியிருந்தது.

சீன ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கக் கூடும் என்று எஃப்.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டாலும், அமெரிக்காவின் பிற அரசு முகமை நிறுவனங்கள் இதில் இருந்து மாறுபடுகின்றன.

ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்க எரிசக்தி துறை "குறைந்த நம்பிக்கையுடன்" மதிப்பிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன. வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்று இந்நிறுவனம் முன்பு கூறியிருந்தது.

இதேபோல், கடந்த திங்கட்கிழமையன்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பேசுகையில், “என்ன நடந்துள்ளது என்பது தொடர்பாக அமெரிக்காவிடம் இன்னும் தெளிவான ஒருமித்த கருத்து இல்லை” என்று கூறியிருந்தார்.

“நாம் இன்னும் அந்த அளவுக்கு செல்லவில்லை. அமெரிக்க மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் கூற எங்களிடம் எதாவது இருந்தால், நிச்சயமாக அதனை செய்வோம்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

2021 அக்டோபரில் அமெரிக்காவின் உயர்மட்ட உளவு அதிகாரியால் வெளியிடப்பட்ட அறிக்கையில், நான்கு அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது அது தொடர்பான வைரஸால் கொரோனா உருவானது என்று "குறைந்த நம்பிக்கையுடன்" மதிப்பிட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலங்களில், ஆய்வகத்தில் இருந்துதான் இந்த தொற்று பரவியது என்பது சதி கோட்பாடு என்று கூறி மறுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் பலரும் மறுத்தனர்.

ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா தொற்று கசிந்திருக்கும் என்ற கருத்து மிகவும் சாத்தியம் இல்லாதது என்று உலக சுகாதார அமைப்பின் விசாரணையிலும் கூறப்பட்டது. எனினும் இந்த விசாரணை தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து, புதிய விசாரணைக்கு உத்தரவிட்ட அமைப்பின் இயக்குநர் ஜெனரல், “அனைத்து ஊகங்களும் வெளிப்படையாக உள்ளன. கூடுதலான ஆய்வு தேவை” என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

2019ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் இதுவரை 75 கோடியே 72 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 68 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் உயிர் இழந்துள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பின் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 22, 2023 4:09 am

நீண்ட கால கொரோனா பாதிப்பால் நரம்பியல் பாதிப்பு- முகங்களை அடையாளம் காண முடியாது:


ஆய்வில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அன்னி என்ற 28 வயது பெண்ணுக்கு நரம்பியல் கோளாறு கண்டறியப்பட்டது.

தொற்றால் பாதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கூட அடையாளம் காண முடியவில்லை.
கொரோனா தொற்று ஏற்பட்டு சில வாரங்களில் பெரும்பாலானோர் குணமடைந்து விடுகின்றனர். ஆனால் சிலருக்கு 4 முதல் 12 வாரங்கள் வரை அல்லது அதற்கு பிறகும் கூட நோயின் அறிகுறிகள் நீடிக்கும். இவற்றை 'நீண்ட (லாங்) கோவிட்' என அழைக்கின்றனர்.

இதுபோன்ற நீண்ட கோவிட் பாதிப்புகள் சிலருக்கு முகம் குருட்டு தன்மை (புரோசோ பக்னோசியா) என்ற நரம்பியல் கோளாறை ஏற்படுத்தலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் முகங்களை அடையாளம் காண இயலாமல் போகலாம். இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் ஒரு ஆய்வை நடத்தினர்.

இதில் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 54 பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அதில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நரம்பியல் கோளாறு பிரச்சினை இருப்பதாக கூறினர்.

ஆய்வில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அன்னி என்ற 28 வயது பெண்ணுக்கு நரம்பியல் கோளாறு கண்டறியப்பட்டது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு முகங்களை அடையாளம் காண்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் தொற்றால் பாதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கூட அடையாளம் காண முடியவில்லை என்று கூறினார்.

கார்டேக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் சில தனி நபர்கள் நீண்ட கோவிட் காரணமாக சிரமங்களை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 22, 2023 7:18 pm

கொரொனா பரவல் அதிகரிப்பு: பிரதமர் மோடி இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை


சீனாவிலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது. இது, பலகோடி மக்களைப் பாதித்த நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

கொரொனா உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நிலையில், முதல் அலை, இரண்டாம் அலை முடிந்து, கொரோனாவில், உருமாறிய வடிவமான ஒமிக்ரான், பிஏ 5 , எபோலா ஆகிய தொற்றுகள் உலக நாடுகளை அச்சுறுத்தியது.

தற்போது, இந்தியாவில் கொரொனா மற்றும் இன்புளூயன்சா ஹென்3என்2 தொற்று தீவிரமாகப் பரவி வருவதாக சுகாதரத்துறை எச்சரித்தது.

இந்த நிலையில், ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்றுவரை கொரோனா பாதிப்பு 699 என்று இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1134 என அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து தற்போது 1.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவலும் அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பற்றி இன்று மாலை 4:30 மணீக்கு பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 22, 2023 7:20 pm

உயரும் கொரோனா பாதிப்பு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு 9 மடங்கு உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது இந்த வைரஸ் 68 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று மட்டுமின்றி புதிய வைரஸ் காய்ச்சலும் ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பெங்களூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 3:44 am

`முடிவுக்கு வந்தது கோவிட் அவசர நிலை’ - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு


உலக சுகாதார நிறுவனம் (WHO), கோவிட்-19 இனி உலகளாவிய சுகாதார அவசர நிலையை பிரதிநிதித்துவப்படுத்தாது என்று அறிவித்துள்ளது. இனியும் மக்கள் இது குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும், ஆனாலும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து பல உயிர்களை பறித்தது. இதனால் உலகம் முழுவதும் சுமார் 69 லட்சம் பேர் உயிரிழந்தனர் மேலும் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர். இதனால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பித்து போனது. கொரோனாவின் பல அலைகளையும் நாம் பார்த்தோம். இந்நிலையில் இப்போது, கொரோனாவால் மிகப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை கோவிட் தொடர்பான அவசரக் குழு கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அப்படி மே மாதத்துக்கான கூட்டம் நேற்று WHO-வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தலைமையில் கூடியது.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கொரோனா பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகவும் நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இதனால் கோவிட் அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாக கருதக்கூடாது. கடந்த வாரம் வரை கோவிட் தொற்றால் உலகளவில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒரு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

தற்போதும் லட்சக்கணக்கான மக்கள் கோவிட்டால் பாதிக்கப்பட்டு போராடிக்கொண்டிருகிறார்கள். உடல் மற்றும் பொருளாதார ரீதியில் தொற்றுக்குப் பிறகான பாதிப்பிலும் மக்கள் இன்னும் சிரமத்தை சந்தித்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம், இனியும் மக்கள் இது குறித்து கவலைப்பட தேவையில்லை என்பதை தெரிவிப்பதற்காக மட்டுமே. ஆனாலும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.

தேவைப்பட்டால் மீண்டும் கொரோனா அவசரக்குழு கூட்டத்தை கூட்ட தயங்க மாட்டோம். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பொருந்தொற்றை மிகுந்த கவனத்துடத்துடன் கண்காணித்து வந்தது இந்த அவசரநிலை குழு. அந்த குழுவின் ஆலோசனைப்படியே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ஆனால் எந்த ஒரு நாடும் கோவிட் தொடர்பாக தாங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள தேவையில்லை” என கூறியுள்ளார்.

Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக