ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

4 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Thu Jul 15, 2021 11:06 pm

First topic message reminder :

உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று;

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உலகைக் கடந்துவிட்டது, தற்போது பொதுமுடக்கங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால், அது மிகப்பெரிய தவறு என்கிறது இந்தச் செய்தி.

இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் கருதினாலும், விரைவில் நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுதான் உண்மைபோலும். ஆம், பொதுமுடக்கம் மற்றும் இயல்பு நிலை திரும்பியதாக மக்களின் மனநிலை ஆகியவை காரணமாக உலகம் முழுவதும், கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது.

9 வாரங்களாக கரோனா பெருந்தொற்று காரணமாக பலியாவோர் எண்ணிக்கை சரிந்து வந்த நிலையில், அந்த நிலை கடந்த வாரம் மாறியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த வாரம் மட்டும் 55,000 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும்.புதிதாக கரோனா பாதிப்பும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாக, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் நாடுகளில்தான் இந்த அதிகரிப்பு பதிவாகியிருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி, கரோனா பரவலின் சரிவுநிலை திரும்புவதற்குக் காரணிகளாக, தடுப்பூசி செலுத்துவதில் மெத்தனம், முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு, அதிகம் பரவும் திறன் கொண்ட டெல்டா வகை உருமாறிய கரோனா, போன்றவை இருக்கின்றன. டெல்டா வகை உருமாறிய கரோனா தற்போது 111 நாடுகளில் பரவி வருவதாகவும் வரும் மாதங்களில் இது உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.உலகம் முழுவதும் கரோன பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அர்ஜென்டினாவில் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியிருக்கிறது. ரஷியாவில் இந்த வாரம், பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் டெல்டா வகை கரோனா வைரஸ் இளைஞர்களை பாதிப்பதும் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் பிரிட்டனில் ஒரு நாள் புதிய கரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. மியான்மரியில் உள்ள மயானங்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் இயங்கி வருகின்றன.கடந்த மாதம் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த இந்தோனேசியாவில் புதன்கிழமை 54,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தா அருகே இடுகாடுகளில் குழிகளைத் தோண்டும் பணியில் ஊழியர்கள் தேவை அதிகரித்ததால், பொதுமக்களும் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு மக்கள் இப்பணியைச் செய்யாவிட்டால், உடல்களைப் புதைக்க பல நாள்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

அமெரிக்காவிலோ, கடந்த இரண்டு வாரங்களில் கரோனா பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிவிரும் டோக்கியோவில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து, மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால், அங்கு அவசரநிலையே அறிவிக்கப்பட்டுவிட்டது.கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சிட்னியில் பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சியோலில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் அதிகரித்திருக்கும் கரோனா பரவல் பற்றிய இந்தப் பட்டியல் மேலும் நீண்டுகொண்டேதான் இருக்கிறது. உலகம் முழுவதும் அச்சமூட்டும் வகையில் எண்ணிக்கை அமைந்திருந்தாலும், இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பட்டதைப் போன்ற அபாய எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை என்றும் கூறுகிறார்கள்.கடந்த ஏப்ரல் மாத ஒரு நாள் பாதிப்போடு ஒப்பிடுகையில் பாதியளவாக, உலகம் முழுவதும் ஒரு நாள் பாதிப்பு 4,50,000 ஆகவே உள்ளது. பல நாடுகளும், கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாலும், இது கரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Sat Aug 07, 2021 9:28 pm

குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி; மத்திய அரசு உறுதி

புதுடில்லி: குழந்தைகளுக்கு #தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதார, #குடும்பநலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது இந்தியா முழுவதும் இதுவரை 50கோடிக்கும் மேலான $கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்வதற்கு, மத்திய அரசு தொடர் முயற்சிகளை எடுத்துவருகிறது. ஒரு நாளைக்கு 2.5 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. ஆனால். இன்று ஒரு நாளைக்கு 40லட்சமாக அதிகரித்துள்ளது. உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதால், இன்னும் சிறந்த முறையில் தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் என நினைக்கிறேன். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் தடுப்பூசி போடப்படும் என கூறினார்.

பின்னர் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "#இந்தியா முழுவதும் 50 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது பெருமையாகவுள்ளது. அதற்காக ஊடகத்துறையினரான உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள்தான் தடுப்பூசி மிகவும் அவசியம் என்ற செய்தியை மக்களிடம் சேர்த்துள்ளிர்கள் என தெரிவித்துள்ளார்.



கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Sat Aug 07, 2021 9:31 pm

தடுப்பூசி போட்டால் தான் பக்தர்களுக்கு அனுமதி

#சிம்லா: தடுப்பூசி போட்ட சான்றை காட்டினால் தான் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இமாசல் பிரதேச அரசு அதிரடி முடிவை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 3 வது அலை எந்த அளவுக்கு வரும் , எந்த அளவுக்கு பாதிப்பை தரும் என்ற அச்சம் நிலவிக்கொண்டிருக்கிறது. மேலும் #கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் துரிதமாக செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இமாசல பிரதேசத்தில் வரும் ஆக.,9 முதல் #சர்வன் #அஷ்டமி நவராத்ரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இத்திருவிழாவில் வெளி மாநிலங்களில் இருந்தும் #பக்தர்கள் திரளாக பங்கேற்பர். கோவிட் நேரத்தில் பக்தர்கள் கூடுவது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கோணத்தில் பல கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன்படி மாநிலத்திற்குள் நுழையும் நபர்கள் கோவிட் நெகடிவ் சான்றை காண்பிக்க வேண்டும். மேலும் உள்ளூர் மக்களும், வெளி மாநில மக்களும் 2 டோஸ் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும். கோயிலுக்குள் நுழைவதற்கு கோவிட் நெகடிவ் சான்றை காட்டினால் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by ayyasamy ram Sun Aug 08, 2021 12:01 pm

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி
-
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், புனேவை சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா என 4 கரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் 3 கட்ட பரிசோத னைகளை நடத்தினால் மட்டுமேவெளிநாட்டு கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க இந்த கொள்கையில் மத்திய அரசு அண்மையில் மாற்றம் செய்தது. இதன்படி அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை அங்கீகரித்த கரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது.

இந்த நடைமுறையின்படி அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. இது ஒரு தவணை தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியை செலுத்திய பிறகு 28 நாட்கள் கழித்து உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும். 85 சதவீதம் வரை பலன் அளிக்கக்கூடியது.

இவற்றை உறுதி செய்த மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மேலும் விரிவடைந்துள்ளது. புதிதாக ஜான்சன்அண்ட் ஜான்சனின் ஒரு தவணைதடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட் டிருக்கிறது. நாட்டில் தற்போது 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் கரோனாவுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘‘எங்களது தடுப்பூசிக்கு இந்திய அரசு சனிக்கிழமை அனுமதி வழங்கியது. இந்தியாவின் பயாலாஜிக்கல் இ நிறுவனத்தோடு இணைந்து தடுப்பூசிகளை விநியோகம் செய்வோம். எங்களது தடுப்பூசிகளை 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 3 மாதங்கள் வரை சேமித்து வைத்திருக்க முடியும். எனவே நீண்ட தொலைவு இடங்களுக்கு தடுப்பூசிகளை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்’’ என்று தெரிவித்துள்ளார். - பிடிஐ
-
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84602
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Mon Aug 09, 2021 11:55 pm

கோவிட்டுக்கு ஊசியில்லா தடுப்பு மருந்து: ஜைடஸ் கெடிலாவுக்கு விரைவில் அனுமதி


இந்தியாவில் #கோவிட் தொற்றுக்கு எதிராக இதுவரை 5 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, #கோவாக்சின், #கோவிஷீல்ட், #ஸ்புட்னிக், #மாடர்னா, #ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் ஆகிய #தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

ஆமதாபாத்தின் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் 6வது தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும். மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2வது தடுப்பு மருந்து என்ற பெருமையும், முதல் டிஎன்ஏ வகை #தடுப்பூசி என்ற பெருமையும் #கெடிலா நிறுவனத்துக்குக் கிடைக்கும்.

#ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் #ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. இது ஊசியில்லா தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக, தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் #அதிர்வலைகள், வாயுக்களின் #அழுத்தம், மின்முனை மூலம் இம்மருந்து செலுத்தப்படும். இந்தத் தடுப்பு மருந்து, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் கீழ்வரும். 3ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடித்து கடந்த மாதம் டிஜிசிஐ அமைப்பிடம் ஜைடஸ் கெடிலா நிறுவனம் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி கோரியுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் பேசுகையில், 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை அக்டோபர், நவம்பர் மாதத்தில் எதிர்பார்க்கலாம். இந்த நிறுவனங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தியைத் தொடங்கும்போது தடுப்பூசி பற்றாக்குறை குறையும். ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கும் அவசர காலப் பயன்பாட்டுக்கு விரைவில் வல்லுநர்கள் குழு அனுமதியளிக்கும்' எனறார்.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Tue Aug 10, 2021 12:01 am

2 டோஸ் தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி

மும்பை: மும்பையில் உள்ள மின்சார ரயிலில் 2 டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக மஹாராஷ்டிர #முதல்வர் #உத்தவ்_தாக்கரே தெரிவித்துள்ளார்.

#கோவிட் 2வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மின்சார ரயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. அத்தியாவசிய, #சுகாதார மற்றும் அரசு #ஊழியர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் அலுவலகம், வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என #காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சமூகவலைதளம் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மும்பையில் இதுவரை 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே, முதல் கட்டமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 2வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிந்தவர்கள் வருகிற ஆக.,15ம் தேதி முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம். தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பெற செல்போன் செயலி உள்ளது.

பொதுமக்கள் #தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட், மாத சீசன் பாஸ் பெறலாம். ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் நேரடியாகவும் டிக்கெட், மற்றும் பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இந்த சீசன் பாஸ்களின் உண்மை தன்மையை கண்டறிய கியூஆர் கோடு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Tue Aug 10, 2021 12:14 am

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக மாவட்ட அளவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சேலம் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் #கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு நிலவரம் பொறுத்து கட்டுப்பாடுகள் அறிவிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் #கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் #சேலம் மாவட்டத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சேலம் மாவட்டம் முழுவதும் நாளை முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். சேலத்தில் செயல்படும் இரண்டு வார சந்தைகளுக்கு அனுமதி மறுப்பு. வணிக வளாகங்கள், #நகைக்கடைகள், சூப்பர் மார்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் வணிக நிலையங்கள் ஞாயிற்று கிழமைகளில் செயல்படவும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Tue Aug 10, 2021 12:52 am

கொரோனாவை வெல்ல சூரிய ஒளியும் உதவும்!

#கொரோனா பெருந்தொற்றானது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகளவு உயர்த்துவதற்கு எதை உட்கொள்ள வேண்டும் என அனைவரையுமே சிந்திக்கச் செய்துள்ளது. இயற்கை உணவு ஆதாரங்கள், #வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை நோக்கி நாம் அனைவருமே திரும்பியிருக்கிறோம். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு #வைட்டமின் C, வைட்டமின் D, #துத்தநாகம் மற்றும் பல வைட்டமின்களை உள்ளடக்கிய #மாத்திரைகள் மிகவும் பொதுவான சிகிச்சைகளாக இருக்கின்றன. இந்நோயை எதிர்த்துப் போரிட முன்தடுப்பு நடவடிக்கைகளாகவும் இவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த தடுப்பு நடவடிக்கையில் #சூரிய ஒளிக்கும் ஒரு பங்கு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம்… சூரிய ஒளியின் வைட்டமின் என்றும் அழைக்கப்படும் வைட்டமின் D கொரோனாவை எதிர்க்க நமக்கு உதவி செய்யும் திறன் கொண்டது. கொழுப்பில் கரையக்கூடிய #ஸ்டீராய்டு ஹார்மோனானான வைட்டமின் டி ஒரு முக்கிய நுண்ஊட்டச்சத்து ஆகும்.

சூரியஒளி நம் உடலில் வைட்டமின் டியினை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக வைட்டமின் டியினைப் பெற உங்கள் கைகள், முதுகு மற்றும் அடிவயிற்றை #சூரியஒளி படுமாறு செய்யவும். உங்கள் உடல் தயாரிக்கக்கூடிய அதிக வைட்டமின் டியினைப் பெற உங்கள் முதுகை சூரியஒளி படுமாறு செய்யவும். வெளிநாட்டவர்கள் சூரிய குளியல் போடும் ரகசியம் இதுதான்.

வைட்டமின் டி தேவைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோ சனையுடன் அதனை சப்ளிமென்டாக எடுத்துக்கொள்வது கோவிட்-19-ன் தீவிர சிக்கல்களையும், உயிரிழப்பையும் குறைக்கக்கூடும். சூரிய ஒளியிலிருந்து அதிகளவு வைட்டமின் D-ஐ பெறுவதற்கு சிறந்த நேரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரைக்கும் இடைப்பட்ட நேரமே சரியானது. வைட்டமின் D அதிகமாக இருக்கிற உணவுகளில் முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சியின் மார்புப்பகுதி, சால்மன், மத்தி ஹெர்ரிங் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற எண்ணெய் சத்துமிக்க மீன் வகைகள், #காளான்கள், செவ்விறைச்சி, ஈரல் ஆகியவை உள்ளடங்கும்.

கோவிட்-19 சிகிச்சை வசதிகள் போதுமான அளவு இல்லாத பற்றாக்குறை நிலைமையில், இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னெச்சரிக்கை மற்றும் முற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதை தவிர வேறு சிறந்த வழி நமக்கு இல்லை. எனவே, தொற்று வராமல் தடுப்பதற்கு அல்லது ஏற்பட்ட தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு போதிய அளவு வைட்டமின் D அளவை நமது உடலில் பராமரிக்க வேண்டியது முக்கியமாகும்.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Wed Aug 11, 2021 6:13 pm

தடுப்பூசி போடாமல் கூட்டமான இடத்திற்கு செல்ல வேண்டாம்: சுகாதார செயலர்

சென்னை: தடுப்பூசி போடாமல், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நிருபர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் இரண்டாவது அலை குறைந்தாலும் சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், தினசரி கோவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 2 ஆயிரத்தை நெருங்குகிறது. இது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் 38 சதவீதம் பேர் மட்டுமே சரியாக மாஸ்க் அணிகிறார்கள். கூட்டமான இடத்திற்கு செல்பவர்கள் பலர் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. தடுப்பூசி போடாமல், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். அப்படி செல்வதால், கோவிட் பாதிப்பு அதிகரிக்கம்.

கூட்டம் கூடுவதால் கோவிட் தொற்று அதிகரிக்கிறது. சென்னையில் 300 பேர் கூடிய இடத்தில் 24 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு உள்ளது. ஒருவர் மரணமடைந்தார். அவருக்குநீரழிவு நோய் இருந்தது. தடுப்பூசியும் போட்டு கொள்ளவில்லை. அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சமூக இடைவெளி இல்லை. கோவிட் குறித்த விழிப்புணர்வுவும், மனமாற்றமும் மக்களுக்கு தேவை. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கோவிட் இல்லை என்ற இலக்கை எட்ட முடியும். தடுப்பூசி போடுகள் என்று வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் தடுப்பூசி போடுவதில்லை. கோவிட்டை பொது மக்கள் அலட்சியமாக நினைக்க வேண்டாம். அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டை போல் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம். இதனால், தேவையற்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Wed Aug 11, 2021 6:14 pm

கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 40 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சக உயரதிகாரி ஒருவர் ஆங்கில செய்தி சேனலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தினசரி கோவிட் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக சுமார் 40 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிறது. அதில் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்பு, அதாவது 20 ஆயிரத்துக்கும் மேல் கேரளாவில் பதிவாவது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

மத்திய அரசின், 'இன்சாகாக்' எனப்படும் மரபணு வரிசைமுறை கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூட்டம் கூட அனுமதி அளித்த காரணத்தால் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது என்றார். மேலும், தேசிய அளவில் 67.7% மக்களிடம் நோயெதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், கேரளாவில் அது 42.7% ஆக உள்ளது என்றார்.

இந்நிலையில் கேரள மாநில சுகாதார அதிகாரி ஒருவர் பகிர்ந்துக்கொண்ட தகவலில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 40 ஆயிரம் பேரிடம் கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பத்தனம்திட்டாவில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரும் 14,974 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 2 வது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ள 5,042 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அரிதான மறுதொற்றும் சில கேரள மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. தடுப்பூசி அல்லது ஏற்கனவே பாதித்த நோய் தொற்றால் உண்டாகியிருக்கும் எதிர்ப்பு சக்தியை மீறி வைரஸ் பாதிப்பது கவலைக்குரிய விஷயம் என தெரிவித்துள்ளார்.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Wed Aug 11, 2021 6:15 pm

தடுப்பூசியை கலந்து செலுத்தி ஆய்வு; சி.எம்.சி.,க்கு மத்திய அரசு அனுமதி

புதுடில்லி: இரண்டு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது குறித்த ஆய்விற்கு வேலூர் சி.எம்.சி.,க்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக நம் நாட்டில் 'கோவாக்சின், கோவிஷீல்டு,' என இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியும் போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு 'டோஸ்' தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து போடுவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை கலந்து அளிப்பது தொடர்பான ஆய்வுகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகவும், அப்படி போடுவது பாதுகாப்பானது மட்டும் அல்லாமல், சிறந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிப்பதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் ஏற்படும் பயன்கள், விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிடி அயோக்கின் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வேலூர் சி.எம்.சி.,யில் 300 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை கலந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 4 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum