ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

4 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Thu Jul 15, 2021 11:06 pm

First topic message reminder :

உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று;

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உலகைக் கடந்துவிட்டது, தற்போது பொதுமுடக்கங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால், அது மிகப்பெரிய தவறு என்கிறது இந்தச் செய்தி.

இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் கருதினாலும், விரைவில் நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுதான் உண்மைபோலும். ஆம், பொதுமுடக்கம் மற்றும் இயல்பு நிலை திரும்பியதாக மக்களின் மனநிலை ஆகியவை காரணமாக உலகம் முழுவதும், கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது.

9 வாரங்களாக கரோனா பெருந்தொற்று காரணமாக பலியாவோர் எண்ணிக்கை சரிந்து வந்த நிலையில், அந்த நிலை கடந்த வாரம் மாறியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த வாரம் மட்டும் 55,000 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும்.புதிதாக கரோனா பாதிப்பும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாக, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் நாடுகளில்தான் இந்த அதிகரிப்பு பதிவாகியிருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி, கரோனா பரவலின் சரிவுநிலை திரும்புவதற்குக் காரணிகளாக, தடுப்பூசி செலுத்துவதில் மெத்தனம், முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு, அதிகம் பரவும் திறன் கொண்ட டெல்டா வகை உருமாறிய கரோனா, போன்றவை இருக்கின்றன. டெல்டா வகை உருமாறிய கரோனா தற்போது 111 நாடுகளில் பரவி வருவதாகவும் வரும் மாதங்களில் இது உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.உலகம் முழுவதும் கரோன பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அர்ஜென்டினாவில் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியிருக்கிறது. ரஷியாவில் இந்த வாரம், பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் டெல்டா வகை கரோனா வைரஸ் இளைஞர்களை பாதிப்பதும் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் பிரிட்டனில் ஒரு நாள் புதிய கரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. மியான்மரியில் உள்ள மயானங்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் இயங்கி வருகின்றன.கடந்த மாதம் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த இந்தோனேசியாவில் புதன்கிழமை 54,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தா அருகே இடுகாடுகளில் குழிகளைத் தோண்டும் பணியில் ஊழியர்கள் தேவை அதிகரித்ததால், பொதுமக்களும் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு மக்கள் இப்பணியைச் செய்யாவிட்டால், உடல்களைப் புதைக்க பல நாள்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

அமெரிக்காவிலோ, கடந்த இரண்டு வாரங்களில் கரோனா பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிவிரும் டோக்கியோவில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து, மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால், அங்கு அவசரநிலையே அறிவிக்கப்பட்டுவிட்டது.கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சிட்னியில் பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சியோலில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் அதிகரித்திருக்கும் கரோனா பரவல் பற்றிய இந்தப் பட்டியல் மேலும் நீண்டுகொண்டேதான் இருக்கிறது. உலகம் முழுவதும் அச்சமூட்டும் வகையில் எண்ணிக்கை அமைந்திருந்தாலும், இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பட்டதைப் போன்ற அபாய எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை என்றும் கூறுகிறார்கள்.கடந்த ஏப்ரல் மாத ஒரு நாள் பாதிப்போடு ஒப்பிடுகையில் பாதியளவாக, உலகம் முழுவதும் ஒரு நாள் பாதிப்பு 4,50,000 ஆகவே உள்ளது. பல நாடுகளும், கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாலும், இது கரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Thu Jul 22, 2021 12:05 pm

இந்தியாவின் கோவிட் மரண எண்ணிக்கை அதிகாரத்துவ தரப்பால் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், பத்து மடங்கு அதிகமென, அமெரிக்க ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் தற்போதைய கோவிட் மரண எண்ணிக்கை 4 லட்சத்து 15,000-ஆக பதிவாகியுள்ளது.


இவ்வேளையில், அந்த பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து இவ்வாண்டு ஜூன் வரை மேற்கொண்ட ஆய்வில், அந்நாட்டில் கோவிட் வைரசுக்கு 34 லட்சம் பேரிலிருந்து 47 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாமென அந்த ஆராய்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது.


அந்த எண்ணிக்கையின் படி, சுதந்திரத்திற்குப் பின்னர், அந்நாட்டில் நிகழ்ழந்திருக்கும் மோசமான மனித பேரழிவாக அந்த பெருந்தொற்று கருதப்படுமென, ஹார்வர்ட் ( Harvard ) பல்கலைக்கழக நிபுணர்களையும் உட்படுத்திய அந்த ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.



கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Sat Jul 24, 2021 12:21 am

கரோனாவின் தோற்றுவாய் குறித்துத் மீண்டும் ஆய்வு: சீனா கடும் எதிா்ப்பு

கரோனா வைரஸ் எவ்வாறு உருவானது என்பது குறித்து மீண்டும் ஆய்வு செய்யும் உலக சுகாதார அமைப்பின் திட்டத்துக்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியா ளா்களிடம் அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சா் ஸெங் யிக்ஸின் பெய்ஜிங்கில் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா வைரஸ்ஸின் தோற்றுவாய் குறி த்து உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆய்வக நெறிமுறைகளை மீறி சீனா தங்களது ஆய்வுக்காக கரோனாவை வேண்டுமேன்றே மக்களிடையே பரப்பியதா என்று விசாரணை நடத்தப்போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஏற்கெனவே அந்த அமைப்பு சீனாவில் இதுதொடா்பாக நடத்திய ஆய்வின்போது, அதன் நிபுணா்கள் விரும்பும் இடங்களுக்குச் சென்று, விரும்பிய நபா்களிடம் விசாரணை நடத்த சீனா அனுமதி அளித்துள்ளது. சீனாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து மேற்கொண்ட அந்த ஆய்வு காலத்தால் அழிக்க முடியாது.

இந்த விவகாரத்தில் சீன நிபுணா்களின் அறிவுரைகளை உலக சுகாதார அமைப்பு பரிசீலனை செய்ய வேண்டும். அரசில் நெருக்கடிகளுக்கு இடம் தராமல், இந்த விவகாரத்தை அந்த அமைப்பு அறிவியல்ரீதியில் அணுக வேண்டும். அதுமட்டுமன்றி, கரோ னா வைரஸ் எவ்வாறு உருவானது என்பது தொடா்பான ஆய்வை உலகின் பிற பகுதிகளிலும் உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று முதல்முதலில் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்னரே வூஹான் வைரஸ்யியல் ஆய்வகத்தில் பணியாற்றிய 3 பேருக்கு முதல்முதலில் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் அவா்களிடமிருந்துதான் அந்த நோய் வெளியுலகத்துக்குப் பரவியதாகவும் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும்.

வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றியவா்கள், மாணவா்கள் உள்பட யாருக்குமே கரோனா தொற்று ஏற்படவில்லை என்றாா் ஸெங் யிக்ஸின்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் கரோனா தொற்று மனிதா்களிடையே பரவத் தொடங்கியது. அந்த நகரிலுள்ள கடல் உணவு மொ த்தவிலை சந்தைக்குச் சென்று வந்தவா்களிடம்தான் தொடக்கத்தில் அந்த நோய் அதிகமாகக் கண்டறியப்பட்டது.

அந்த நோயை உருவாக்கிய கரோனா வைரஸ், வௌவாலின் உடலில் இருந்து எறும்புத் தீனியின் உடலுக்குள் சென்று, அங்கு மனிதா்களின் நுரையீரல் அணுக்களில் தொற்றி பல்கிப் பெருகும் வகையில் தன்னை தகவமைத்துக்கொண்டிருக்கலாம் என்று பெரும்பாலான நிபுணா்கள் கருதுகின்றனா்.

எனினும், வூஹான் நகரிலுள்ள வைரஸ்யியல் ஆய்வகத்தில் கரோனா வைரஸ் ஆய்வுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டு, பின்னா் அது தவறுதலாக ஆய்வகத்திலிருந்து வெளியேறி மனிதா்களிடையே பரவியிருக்கலாம் என்றும் சிலா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அப்போதைய அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், கரோனாவை ‘வூஹான் வைரஸ்’ என்றே அழைத்தாா்.

அவருக்குப் பிறகு அதிபா் பொறுப்பை ஏற்ற ஜோ பைடனும், கரோனா வின் தோற்றுவாய் குறித்து தெரிந்துகொள்வதற்கான முயற்சிகளை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று தங்களது புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வுக்காக கேட்கப்படும் பல்வேறு தகவல்கள் சீனா்களின் தனி நபா் விவரப் பாதுகாப்பை மீறும்; தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறி சீன அரசு அவற்றைத் தர மறுத்து வருகிறது.

இந்தச் சூழலில், நீண்ட காலமாக கரோனா விவகாரத்தை சீனா கையாளும் முறையைப் பாராட்டி வந்த உலக சுகாராத அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ், இந்த விவகாரத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இதற்கிடையே, வூஹான் உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்களது நிபுணா்களை அனுப்பி கரோனாவின் தோற்றுவாய் குறித்து ஆய்வு செய்திருந்த உலக சுகாதார அமைப்பு, அந்தத் தீநூண்மி வௌவாலின் உடலிலிருந்தே மனிதா்களுக்குப் பரவியிருக்கும் என்றாலும், பிற வாய்ப்புகளையும் ஒரேடியாக மறுப்பதற்கில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இதுதொடா்பாக மீண்டும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியது. அதனைக் கண்டித்தே, சீன சுகாதார ஆணைய துணை அமைச்சா் ஸெங் யிக்ஸின் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Sat Jul 24, 2021 12:22 am

75%-ஐக் கடந்தது டெல்டா கரோனா

உலகம் முழுவதும் கரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிப்பட்டு பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட தீநுண்மிகளில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவை டெல்டா வகையைச் சோ்ந்தவையாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷியா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக கரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிப்பட்டு, டெல்டா வகை என்று உறுதி செய்யப்பட்ட கரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 75 சதவீதத்தைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது.

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வந்தாலும், சில நாடுகளில் தினசரி தொற்றுஎண்ணிக்கை அதிகரித்து வருவதாக தனது அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Sat Jul 24, 2021 6:59 pm

கேரளாவில் வேகமெடுக்கும் கோவிட் பாதிப்பு: கட்டுப்பாடுகள் அறிவிப்பு

திருவனந்தபுரம்: இந்தியாவில் கோவிட் பாதிப்பு நேற்று முன்தினம் 35 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் நேற்று 39 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் தொற்று பாதிப்பு கடந்த 50 நாட்களில் இல்லாத அளவு உயர்ந்ததே தினசரி பாதிப்பு திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் 12,818 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,518 ஆக உயர்ந்தது.

குறிப்பாக நேற்று, 1,28,489 மாதிரிகள் மட்டும் பரிசோதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு சதவீதம் 13.6 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் கோவிட் பாதிப்பு சதவீதம் 17ஆக உள்ளது. இதேபோல திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளே தொற்று பரவலுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதையடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி மத்திய - மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கவும், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Sat Jul 24, 2021 7:00 pm

மாடர்னா தடுப்பூசியை 12 - 17 வயதினருக்கு செலுத்தலாம்: ஐரோப்பிய நிறுவனம் பரிந்துரை

லண்டன்: கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது. பைசர் நிறுவன தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கும் செலுத்தப்படுகிறது. பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு செலுத்துவதற்கான பரிசோதனையில் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 12 - 17 வயதினர் 3,700க்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் ஆன்டிபாடிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறாரிடமும் இந்த தடுப்பூசி ஆன்டிபாடிகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது.

இதையடுத்து, 'மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறாருக்கு செலுத்தலாம்' என, அமெரிக்க மருந்துகள் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து இந்த தடுப்பூசிக்கு ஐரோப்பிய நிறுவனம் ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

#மாடர்னா #தடுப்பூசி #கோவிட்19 #கொரோனா


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Mon Jul 26, 2021 6:03 pm

இந்தோனேசியாவை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 1266 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் பட்டியலில் இந்தோனேசியா 14-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் நேற்று ஒரே நாளில் 38,679 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31.66 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,266 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 83 ஆயிரத்தைத் தாண்டியது.

கொரோனாவில் இருந்து 25 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், 5.73 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Mon Jul 26, 2021 6:04 pm

கொரோனா குறித்து சர்ச்சை பதிவு மக்களிடம் டோஸ் வாங்கிய சுகாதாரத் துறை அமைச்சர்

லண்டன்: இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், தினசரி புதிதாக தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை 30,000-க்கும் மேல் உள்ளது. தற்போது, அந்நாட்டில் கட்டுப்பாடுகள் முழுமையாக திரும்ப பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் சாஜித் ஜாவித் (51) கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி குணமடைந்தார். இது குறித்து அவர் டிவிட்டரில், ‘கொரோனாவில் இருந்து நான் முழுமையாக குணமடைந்து விட்டேன். வைரசுக்கு பயந்து மக்கள் இனிமேல் பயந்து ஓடக் கூடாது. மாறாக, அதனுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள்,’ என பதிவிட்டு இருந்தார்.

‘மக்கள் இனிமேல் பயந்து ஓடக் கூடாது,’ என என்ற வார்த்தைக்கு பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, அவர் தனது டிவிட்டரில் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி, தனது பதிவையும் உடனடியாக நீக்கினார்.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Mon Jul 26, 2021 6:05 pm

உலக நாடுகளை திணறடிக்கும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு: 41.74 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41.74 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 41,74,555 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 19,47,93,206 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,67,44,824 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 84,380 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.47 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,47,96,457பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,67,46,538 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 லட்சத்து 74 ஆயிரத்து 644 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,38,75,275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 84,442 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Thu Jul 29, 2021 2:16 am

கொரோனாவிலிருந்து காக்கும் மூச்சு பயிற்சி

நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி; கொரோனாவிலிருந்து காக்கும் மூச்சு பயிற்சி

கொரோனா (Corona) இரண்டாவது அலை பரவி விட்ட நிலையில், அதிலிருந்து நம்மை பாதுகாக்க நமது சித்தர்கள் சொல்லி தந்த அற்புத யுக்தியை கடைபிடித்தாலே போதும். அதற்கான சக்தி நமக்கு உள்ளேயே இருக்கிறது. அது கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி.

உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் கிருமியால் பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் உள்ள அனைவரும் இந்த கண்ணுக்கு தெரியாத கிருமியால், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறலாம்.

இது போன்ற நிலையில் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள சித்தர்கள் கடைபிடிக்கும் யுத்தியை கடை பிடித்தால் போதும். அது தான் மூச்சு பயிற்சி. நம் முன்னோர்கள் சொல்லித் தந்த யுத்தி. சரியான மூச்சுப்பயிற்சி நம் உயிரை காப்பாற்றுவதற்கும், கோவிட்-19 (Covid-19) என்னும் பெரும் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கும் மிகச் சிறந்த ஆற்றல் மிக்க கேடயமாக விளங்குகிறது.

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஏராளமான விஷயங்கள் தான் கொரோனாவை கட்டுப்படுத்த இன்றும் உதவி வருகிறது. ஒரு பக்கம் மூலிகை மருத்துவம் அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்க, யோகா (Yoga) கொரோனாவில் இருந்து விடுபடவும், பரவலை தடுப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகி வருகிறது.

நாம் சாதாரணமான முறையில் சுவாசிக்கும் போது குறைந்த அளவிலான ஆக்ஸிஜன் தான் நுரையீரலை அடைகிறது. முறையான பயிற்சி மேற்கொள்வதால் நுரையீரலுக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன்(Oxygen), அதாவது பிராணவாயு கிடைக்கும். இதனால் நுரையீரல் வலு அடைகிறது. கொரோனா என்பது, நமது நுரையீரலை தாக்கும் போது தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. நமது நுரையீரல் வலுவாக இருந்தால் கொரோனாவை எளிதாக வென்று விடலாம்.

இடது மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும். யோகாவில், நமது இடது மூக்குத் துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து, பின்னர் அதனை வெளிவிடுவது இடகலை என்று கூறப்படுகிறது. வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை என்று கூறப்படுகிறது.

மூச்சு பயிற்சி செய்யும் போது, வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். தினமும் ஒரே நேரத்தில் மூச்சு பயிற்சி செய்வது சிறந்த பலனைத் தரும்

இந்த மூச்சு பயிற்சியினால், நுரையீரல் வலுவடையும் என்பதோடு, கூடுதல் பலனாக, நமது மூளையும் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனால், நமது ஞாபக சக்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். COVID-19 தொற்று நோயை எளிதாக விரட்டலாம்.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by சிவா Thu Jul 29, 2021 2:22 am

கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning

கொரோனா தொற்று (Corona Virus) ஏற்படும் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை தேவை என்ற நிலை இல்லை என்பது சிறிது ஆறுதலான விஷயம். பலருக்கு வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுகின்றனர். அத்தகையவர்கள் தங்கள் உடலின் ஆக்ஸிஜன் அளவை குறையாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இதனால், அவசர நிலை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

கொரோனா இரண்டாவது அலையில், தொற்று ஏற்படும் நோயாளிகளுக்கு ‘மூச்சுத் திணறல்’ என்பது ஒரு பொதுவான அறிகுறியாக உள்ளது. உருமாறிய கொரோனா வைரஸை பொறுத்தவரை அவை மூச்சுக் குழாயின் துவக்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பது தான் இதற்கு காரணம் என்கின்றனர் மருத்த்துவர்கள். இதனால் பலருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது என்கின்றனர்.

இவர்கள் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது ஆக்சிஜன் குறைவது உள்ளிட்ட அறிகுறிகள் தொன்பட்டாலோ, இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ, அதற்கான எளிய தீர்வு உங்களிடமே உள்ளது. ஆமாம், நீங்கள் குப்புற படுத்துக் கொள்வது போன்ற ஒரு நிலையில், கால்கள் வயிற்றுக்கு கீழ் தலையணை வைத்து குப்புற படுத்தால் அதற்கான தீர்வு கிடைக்கும்.

ரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க புரோன் பொசிஷனிங்கை (Prone Positioning) பயன்படுத்துவதை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். புரோன் பொசிஷன் என்பது குறிப்பிட்ட நேரம் குப்புறபடுப்பது, பின்னர் வலதுபுறம் படுப்பது, பின்னர், சிறிது நேரத்திற்கு உட்கார்ந்து கொண்ட பிறகு, இடது புறமாக படுப்பது. பின்னர் இறுதியாக மீண்டும் குப்புறபடுப்பது. முகத்தை கவிழ்த்துக் கொண்டு, மார்பை உயர்த்தி, விரைவான சுவாசத்தை பயிற்சி செய்வதும் இதில் அடங்கும். இது ‘புரோன் வென்டிலேட்டர் முறை’ எனவும் அழைக்கப்படுகிறது.

புரோன் நிலையில் (Prone Positioning) ஒருவர் படுக்கும் போது நுரையீரல் விரிவாக்குவதற்கு இதயம் இடமளிக்கிறது, காற்றோட்டம் அதிகரித்து ரத்த ஓட்டமும் அதிகமாகிறது. பொதுவாகவே கடும் சுவாச கோளாறு உள்ள நோயாளிகளுக்கும், வென்டிலேட்டரிலும் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தொடர்ந்து ஆக்ஸிஜன் அளவு குறைந்தால், மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.


கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 2 Empty Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum