ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Today at 12:27 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:25 pm

» மோதிர விரல் பெரிசா வீங்கி இருக்கே!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» துறவு - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» பிரிண்டிங் பிசினஸ்
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» அச்சு இல்லாத சக்கரம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» கிராமத்து அகத்திப்பூ பொரியல்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» கில் - இந்திப் படம
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» பீமா -கன்னடப் படம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» ஆஃப்டர் சன் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» அடியோஸ் அமிகோ- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» டைவர்ஸ் பெர்ஃப்யூம்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» டிஜிட்டல் பரிவர்த்தனை-விழிப்புணர்வு தேவை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதே
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» பாதுகாப்புக்கு ஆயுதம் தேவைதான்!
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» நீதிக்கதை -செய்யுஃ செயல்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» நிதிக்கதை -உலக நடப்பு
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» மஞ்சளும் குங்குமமும்
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» அம்மா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» மனைவி சொல்லே மந்திரம்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» கருத்துப்படம் 10/10/2024
by mohamed nizamudeen Thu Oct 10, 2024 9:59 pm

» கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:34 pm

» மஞ்சரி பாப்பாவின் பலூன்!
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Oct 10, 2024 1:13 pm

» கள்ளிப்பால்...
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:13 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Oct 10, 2024 9:11 am

» தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
by ayyasamy ram Thu Oct 10, 2024 7:13 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Thu Oct 10, 2024 12:36 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 09, 2024 8:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Oct 09, 2024 7:09 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:07 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:06 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:05 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:04 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Wed Oct 09, 2024 4:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )

Page 1 of 2 1, 2  Next

Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Empty கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )

Post by Dr.S.Soundarapandian Sun Jul 11, 2021 8:46 pm


கன்னடப் பழமொழிகள் ! (51 – 60 )

51. எல்லா வீட்டுத் தோசையிலும் ஓட்டை இருக்கும் !!
(‘ எல்லாரெ மனெ தோசேனு தூதே ! ‘ )

52. எருது மலைக்கு இழுத்தால் , எருமை தண்ணீருக்கு இழுக்கிறது !
( ‘ எத்து ஏரிகேளீத்து, கோண நீரிகேளீத்து ! ’ )

53. எல்லோரும் பாடுபடுவது வயிற்றுக்காகவும், கிழியாத துணிக்காகவும்தான் !
(‘ எல்லாரு மாடுவுது ஹொட்டேகாகி கேணு பட்டேகாகி ! ’ )

54. எல்லா விளக்கும் விளக்கல்ல ! சத்திய வாக்கே விளக்கு!
(‘ எல்லா பெளகு பெளகல்ல , சத்யத நுடியே பெளகு ! )

55. எந்த வழியில் பண்ணிப் பார்த்தாலும் , ஒருத்தருக்கு வேலை பார்ப்பது கஷ்டம் !
(‘ எந்தூ ஒப்பர சேவே மாடாதே பலு கஷ்டா ! ‘ )

56. தண்டனை, பத்து மடங்கு பலன் தரும் !
(‘ தண்டம் தஸ குணம் பவேத் ! ’ )

57. தான தானங்களைவிட நிதானம் சிறந்தது !
(’ தான தானகிந்த நிதானா தொட்டது !‘ )

58. திக்குகள் பல சென்றாலும் துக்கம் நீங்காது !
( ‘ திக்கு திக்கிகே ஹோதரு துக்கா தப்பது !’)

59. பணமே பெரியப்பா !
(‘ துட்டே தொட்டப்பா ! ’)

60. கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டார் !
(‘ தேவரு வரா கொட்டரு , பூஜாரி வரா கொடா ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Empty கன்னடப் பழமொழிகள் ! (61 – 70 )

Post by Dr.S.Soundarapandian Fri Jul 16, 2021 11:55 am

கன்னடப் பழமொழிகள் ! (61 – 70 )

61. தூரத்து மலை மிருதுவானது !!
(‘ தூரத பெட்டா நுண்ணகே ! ‘ )

62. எல்லோரும் சிவனை மறந்தால், கைலாசம் அழிந்துவிடும் ! எல்லோரும் சிவனை நினைந்தால், உலகம் அழிந்துவிடும் !
( ‘ எல்லரு சிவனெ மறதரே கைலாசவே ஹாலக்கு ! எல்லரு சிவனெ நெனதரே இல்லியே ஹாலக்கு  ! ’ )

63. உடம்பு அழியும் ; புகழ் அழியாது !  
(‘ அளிவிதே காயா, உளிவுதே கீர்தி ! ’ )

64. மருமகனல்ல , என் மகளின் கணவன் ! (எப்படிச் சொன்னாலும் பொருள் ஒன்றுதான் என்ற கருத்தினது)    
(‘ அளியா அல்லா , மகளெ கண்டா !  )

65. கிளியாக நடந்துகொண்டாலும் , ஒரு தொந்தரவு ஏற்பட்டால்,நாகமாய் மாறுவாய் !
(‘ ஆடிதரே அரகினி , காடிதரே நாகர காட்ட ! ‘ )

66. அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே !
(‘ அளூ கண்ட்ஸன்னு நகூ ஹெண்ஸன்னு நம்ப பாரது ! ’ )

67. கால தாமதத்தால் அமுதமும் விஷமாகும்  !
(’ ஆலஸ்யாத் அம்ருதம் விஷம் !‘ )

68. அணையப்போகும் விளக்கு , பிரகாசமாய் எரியும்  !
( ‘ ஆலுவ தீபக்கே காந்தி ஹெச்சு  !’)

69.  தந்தையின் சொல், யானை பலம் !  
(‘ அப்பன மாத்து ஆனைய பலா ! ’)

70. அண்ணன் தம்பியைப் பிரிக்காதீர்   !  
(‘ அண்ணா தம்மன பேரே மாட பேடா  ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Empty Re: கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )

Post by Dr.S.Soundarapandian Sat Jul 24, 2021 1:28 pm

நன்றி சிவா அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Empty கன்னடப் பழமொழிகள் ! (71 – 80 )

Post by Dr.S.Soundarapandian Sat Jul 24, 2021 1:48 pm

கன்னடப் பழமொழிகள் ! (71 – 80 )

71. ஆரோக்கியமே செல்வம் !
(‘ ஆரோக்கியவே பாக்யா ! ‘ )

72. ஐயோ பாவம் என்றால் , ஆயுசு பாதியாகும் !
(பிறருக்கு இரக்கப்படப் போய்த் துன்பம் அடைதலைக் குறித்தது)
( ‘ அய்யோ பாப ’ அந்த்ரே அர்த ஆயிஸ்ஸு ! ’ )

73. ஆடுபவர் ஆடிவிடலாம்; பார்ப்பவர்க்கே நாணம்!
(‘ ஆடுவவ ஆடிதே நோடுவவகே சிக்கு ! ’ )

74. தவளையைப் பார்த்துப் பயப்பட்டவன் மேலே அத் தவளையே பாய்ந்தது போல !
(‘ அஞ்சினவனெ மேலே கப்பு ஹாரிதங்கே ! )

75. கெட்ட கனவு கண்டால் , எழுந்திருந்து உட்கார் !
(‘ அல்லதெ கனசு கண்டரே எத்து குந்த்ரு ! ‘ )

76. ஆமாம் போடவேண்டிய வீட்டில் ‘ஆமாம் ஐயா!’ இல்லை போடவேண்டிய வீட்டில் ‘இல்லை ஐயா’ !
(‘ ஹௌதுஸ்ஸன மனெயல்லி , ஹௌதுஸ்ஸார், அல்லஸ்ஸன மனெயல்லி அல்லஸ்ஸார் ! ’ )

77. பல் இருக்கும் போது கடலை இல்லை ! கடலை இருக்கும்போது பல் இல்லை !
(’ ஹல்லித்தாஹா கட்லே இல்லா ; கட்லே இத்தாஹா ஹல்லில்லா !‘ )

78. ‘அதோ பிசாசு’ என்றால் , ‘இதோ வந்தேன் ஜன்னல் வழியே ’ என்றது போலே !
( ‘ ஹோத்யா பிசாச்சி அந்த்ரே வந்தே ஹவாக்சிலி அந்த்தந்தே !’)

79. அழிந்து போன ஊரில் தங்கிவிட்டவனே தலைவன் !
(‘ ஹாலூரிகே உளிதவனே கௌடா ! ’)

80. ஜெயித்தவன் தோத்தான்; தோத்தவன் செத்தான் !
(நீதிமன்றத்தில் பெற்ற ‘வெற்றி’ குறிக்கப்படுகிறது ! )
(‘ கெத்தோனு ஸோத்தா, ஸோத்தோனு ஸத்தா ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)


***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Empty கன்னடப் பழமொழிகள் ! (81 – 90 )

Post by Dr.S.Soundarapandian Sat Jul 24, 2021 7:33 pm

கன்னடப் பழமொழிகள் ! (81 – 90 )

81. ஆண் பிள்ளை சோம்பிக் கெட்டான் ! பெண் பிள்ளை சிரித்துக் கெட்டாள் !
(‘ கண்டு குளித்துக் கெட்டா , ஹென்னு கிசிது கெட்டா ! ‘ )

82. கணவன் இருக்கும் போது புத்தி இல்லை! புத்தி வந்தபோது கணவன் இல்லை !
( ‘ கண்டா இத்தாஹா புத்தி இல்லா, புத்தி பந்தாஹா கண்டா இல்லா ! )

83. சந்தனத்தைச் சாம்பலாக்கி உடலில் பூசியது போல !
(‘ கந்தத கொரடு சுட்டு பூதிய தந்து பூசித ஹாகே ! ’ )

84. பிள்ளை பிறந்த பிறகு , முழுசா ஒரு வாழைப் பழத்தைத் தின்னும் பாக்கியம் தாய்க்கு இல்லை !
(‘ மக்களு ஹுட்டித மேலே , தாயிகே இடீ பாளெ ஹன்னு தின்னுவ பாக்ய வில்லா ! )

85. பூவுக்கும் வண்டுக்கும் இடையே சரசம் நடப்பது போல ! )
(தும்பிகூ ஹுவ்வுகூ ஸரஸ வித்தந்தே ! )

86. பட்டால்தான் புத்தி வரும் !
(‘ கெட்டனகெ புத்தி பரது ! ’ )

87. குலத்தின் சிறப்பை நா காட்டும் !
(’ குலக்கெ நாளிகெ ப்ரமானா !‘ )

88. பொன் எதையும் சாதிக்கும் !
( ‘ காஞ்சனம் கார்ய சித்திஹ் !’)

89. சிவபூசை வேடக்காரனின் பூவும் இலையும் தெண்டம் !
(‘ கள்ளன சிவபூஜிகெ ஹூபத்ரி தண்டா ! ’)

90. மக்களை அறியாத அரசனும் வியாதியை அறியாத வைத்தியனும் ஒன்றே !
(‘ யோக்யதெ அறியத தொரெ ரோக அறியத வைத்ய ஒந்தே ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com & Ujwal Nargund YouTube)




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Empty கன்னடப் பழமொழிகள் ! (91 – 100 )

Post by Dr.S.Soundarapandian Sat Jul 24, 2021 7:44 pm

கன்னடப் பழமொழிகள் ! (91 – 100 )

91. பட்டினி இருந்து விடலாம் , பிறர் தரும் உபத்திரவம் தாங்க முடியாது !
(‘ உபவாஸ இரபஹுது , உபத்ர தாளலாகது ! ‘ )

92. யுத்த நேரத்தில் கத்தி பழகியது போல !
( ‘ யுத்த காலதேளி கத்தி கல்தந்தே ! )

93. மூன்று வருடத்துப் புத்தி நூறு வருடம் வரை !
(‘ மூரு வருஷத புத்தி நூறு வருஷாவரெ ! ’ )

94. யோகி தேடியது யோகிக்கே , போகி தேடியது போகிக்கே !
(‘ யோகி தந்தத்து யோகிகெ , போகி தந்தத்து போகிகெ ! )

95. துன்பம் வரும்போது மட்டும் வெங்கடரமணன் ! )
( சங்கட பந்தாக வெங்கடரமணா ! )

96. காத்திருப்பவனே நன்கு வாழ்வான் !
(‘ காயிதவெ பாளியானு ! ’ )

97. வேண்டாத மனைவியின் தயிரிலும் கல் !
(’ ஒள்ளத கண்டனிகெ மொசரல்லி கல்லு ! ‘ )

98. எந்த வருத்தமுமே இல்லாத கணவனின் மனைவி,, கல்யாணமான கைம்பெண் !
( ‘ யாவ சிந்தேனு மாட தூன கெண்டத்தி , கண்டித்தா முண்டெ !’)

99. அறிவுப் பூர்வச் சொற்களைச் சிறார்களிடமிருந்தும் கேட்டுக்கொள்க !
(‘ யுக்திய வார்த்தெ சிக்களிந்தாதரு கேளிகோ ! ’)

100. மன மகிழ்ச்சியே பாதிச் சக்தியைத் தரும் !
(‘ சந்தோஷம் ஸங்கம் பலம் ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் Ujwal Nargund YouTube)


***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Empty கன்னடப் பழமொழிகள் ! (101 – 110 )

Post by Dr.S.Soundarapandian Sun Jul 25, 2021 11:36 am


[b]கன்னடப் பழமொழிகள் ! (101 – 110 )[b]

101. உடுத்துவது ஒப்பனை செய்வதே சிறுமியின் கவலை !
(‘ உட்டரே , கொட்டரே ,புட்டக்கே சிந்தா ! ‘ )

102. அதிகப் பேச்சு வீட்டைக் கெடுக்கும்; அதிக விதை வயலைக் கெடுக்கும் !
( ‘ மாத்து ஹெச்சி மனெ கெட்டித்து; பித்து ஹெச்சி ஹொளெ கெட்டித்து ! )

103. பஞ்சாங்கம் தொலைந்துவிட்டால், நட்சத்திரங்களும் போய்விடுமா? !
(‘ பஞ்சாங்க ஹோதரே நக்ஷத்திரவூ ஹோதீதே ? ’ )

104. அன்னமிட்ட வீட்டில் கன்னமிடாதே !
(‘ அன்னா ஹாக்கித மனெகெ கன்னா ஹாக்க பேடா ! )

105. ஆச்சாரியரின் மந்திரத்தை விட , அவர் வாய் தூற்றும் எச்சில் அதிகம் ! )
( ஆச்சார்யரிகெ மந்த்ர கிந்த உகுளே ஜாஸ்தி ! )

106. காசிருந்தால் கைலாசம் !
(‘ காசித்தரே கைலாசா ! ’ )

107. தண்ணிக்குள்ளே ஹோமம் வளர்த்தது போலே !
(’ நீரினல்லி ஹோமா மாடிதந்த்தே ! ‘ )

108. அப்பா வைத்தார் ஆலமரத்தை; நான் கொன்றது அதிலிருந்த பறவைகளை !
( ‘ அப்பா ஹாக்கித ஆலத மரக்கே நேனு ஹக்கி கொன்டந்த்தே !’)

109. தவறு செய்தவரின் பாவம், புறம் பேசுவோர் வாய் நிறைய !
(‘ மாடிதவர பாபா ஆடிதவர பாயல்லி ! ’)

110. எருமை மாட்டுக்கு முன்னே கின்னரம் வாசித்தது போலே !
(‘ கோனன முந்தே கின்னரி பாரிசினந்த்தே ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் Ujwal Nargund YouTube & byegi.com )

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Empty கன்னடப் பழமொழிகள் ! (111 – 120 )

Post by Dr.S.Soundarapandian Mon Jul 26, 2021 11:11 am

கன்னடப் பழமொழிகள் ! (111 – 120 )

111. குருடர்களின் இராச்சியத்தில் ஒற்றைக் கண்ணுக்காரனே ராஜா !
(‘ குருடர ராஜ்யதல்லி ஒக்கண்ணனே ராஜா ! ‘ )

112. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணு !
( ‘ சாவிரா சுள்ளு ஹேளி ஒந்து மதுவே மாடு ! )

113. யாருடையதோ துட்டு , போவது எல்லம்மன் யாத்திரை !
(‘ யாரதோ துட்டு , எல்லம்மன ஜாத்ரெ ! ’ )

114. நிறை குடம் ததும்பாது !
(‘ தும்பின கொட துளுகுவு தில்லா ! )

115. குரைக்கிற நாய் கடிக்காது ! )
( பொகளுவ நாயி கச்சுவுதில்லா ! )

116. உப்பிட்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே !
(‘ உப்பு திந்த மனெகெ த்ரோஹம் பகெய பேடா! ’ )

117. இரண்டு கை தட்டினால்தான் ஓசை !
(’ எரடு கை சேரிதே சப்பாளி ! ‘ )

118. கத்தியை விட எழுது கோல் பலமிக்கது !
( ‘ கத்திகிந்த லேகனி மேலு !’)

119. சொல்வது போலவே செய் !
(‘ நுடிதந்த்தே மாடு ! ’)

120. தாயைப் போல பிள்ளை , நூலைப் போல சேலை !
(‘ தாயி னந்த்தே மகளு , நூலி னந்தே தாரெ ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் byegi.com & Amazing World of AROO YouTube )

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Empty கன்னடப் பழமொழிகள் ! (121 – 130 )

Post by Dr.S.Soundarapandian Tue Jul 27, 2021 11:17 am

[b]கன்னடப் பழமொழிகள் ! (121 – 130 )[b]
121. இரும்பு சூடாக இருக்கும்போதே தட்ட வேண்டும் !
(‘ கப்பின பிசி இத்தாகலே தட்ட பேக்கு ! ‘ )

122. பெண்ணால் கெட்டவன் இராவணன் , மண்ணால் கெட்டவர் கௌரவர் !
( ‘ ஹெண்ணிந்தா ராவணா கெட்ட, மண்ணிந்தா கௌரவா கெட்டா ! )

123. மங்கள ஆரத்தியால் உஷ்ணம் உண்டாகும் ; தீர்த்தத்தால் குளிர்ச்சி உண்டாகும் !
(‘ மங்களாரத்தி தகொண்ட்ரே உஷ்ணா , தீர்த்த தகொண்ட்ரே ஸீதெ ! ’ )

124. தாய் புகட்டிய புத்தி , சாகும் வரை !
(‘ தாயி கசிலிசித புத்தி , சாயுவ தனகா ! ’ )

125. சிரிப்பவர் சொர்க்கத்துக்கு ! அழுபவர் நரகத்துக்கு ! )
( ’ நகுவவரு ஸ்வர்க்கக்கே , அழுவவரு நரகக்கே ! )

126. இன்றைய தோல்வி , நாளைய வெற்றி !
(‘ இந்தின சோலு , நாளெய கெலுவு ! ’ )

127. படிப்பு கால் பங்கு , புத்தி முக்கால் பங்கு !
(’ ஓது ஒக்காலு . புத்தி முக்காலு ! ‘ )

128. கட்டிலுக்குக் கால் எத்தனை என்றால் , மூன்றும் மற்றொன்றும் என்றானாம் !
( ‘ மல்லி மல்லி மஞ்சக்கே எஷ்டு காலு அந்தரே , மூரு மத்தொந்து அந்திலந்தே !’)

129. பாலில் எலுமிச்சை பிழிந்துவிட்டது போலே !
(‘ ஹாலி னல்லி ஹுல்லி ஹின்திதந்தே ! ’)

130. பாம்பும் சாகவேண்டும் , கம்பும் முறியக்கூடாது !
(‘ ஹாவு சாயபேக்கு , கோலு முரிபாரது ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் Amazing World of AROO YouTube ; RamyaLakshman Balagokula YouTube & byegi.com)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Empty கன்னடப் பழமொழிகள் ! (131 – 140 )

Post by Dr.S.Soundarapandian Wed Jul 28, 2021 11:34 am

கன்னடப் பழமொழிகள் ! (131 – 140 )

131. கழுதைக்கு என்ன தெரியும் கஸ்தூரி வாசனை ?
(‘ கத்தாய்கேனு கொத்து கஸ்தூரி வாசனெ ? ‘ )

132. ஏழையின் வீடு சாப்பிட நன்று ! பணக்காரரின் வீடு பார்க்க நன்று !
( ‘ படவரெ மனெ ஹொட்டெ சென்னா , தொட்டவர மனெ நோட சென்னா ! )

133. உள்ளங்கைப் புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு ?
(‘ அங்கை ஹுண்ணிகெ கண்ணடி யாக்கே ? ’ )

134. உண்மையானதையே கண்டாலும், ஆதாரத்தைக் கொண்டுபார் !
(‘ சத்யவாகி கண்ரூ , ப்ரமானிசி நோடு ! ’ )

135. நெருப்பில்லாமல் புகையாது ! )
( ’ பெங்க்கி இல்லதே, ஹொகே யேலல்லா ! )

136. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது !
(‘ மூர்த்தி சிக்கதாதரு , கீர்த்தி தொட்டது ! ’ )

137. கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே !
(’ கள்ளன்னா நம்பிதரு குள்ளன்னா நம்ப பாரது ! ‘ )

138. கொடுத்தது தனக்கு ! மூடி வைத்தது மற்றோர்க்கு !
( ‘ கொட்டிது தனகே ! பச்சிட்டிது பராரிகே !’)

139. பசி ருசி அறியாது ! தூக்கம் படுக்கை அறியாது !
(‘ ஹசிவிகே ருச்சி பேடா ! நெதிரிகே மஞ்சே பேடா ! ’)

140. நாய் குரைத்தால் தேவலோகம் பாழாகுமா ?
(‘ நாயி பொகலித்தரே தேவலோகா ஹாலாகுத்தே ? ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் byegi.com)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Empty Re: கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum