புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
21 Posts - 70%
heezulia
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
1 Post - 3%
viyasan
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
213 Posts - 42%
heezulia
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
21 Posts - 4%
prajai
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_m10Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Family  Tree  - குடும்ப மரம் ! .......by Krishnaamma !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 8:36 pm

Family  Tree  - குடும்ப மரம் !

கம்ப்யூட்டர் இல் ஒளிர்ந்த அந்த Family  Tree  - குடும்ப மரத்தைப் பார்த்து அதிர்ந்து போய் உட்கார்ந்து இருந்தார்கள் வாணியும் செல்வனும் ............இன்னதென்று சொல்ல இயலாத ஓர் உணர்வு அவர்கள் இருவரையும் ஆட்கொண்டு இருந்தது.....ஒருவரை ஒருவர் பார்க்கவும் இயலாதவர்களாக, கம்ப்யூட்டரின்  திரையையே வெறித்தார்கள்............அவர்களின் நினைவுகள் பின்னோக்கி ஓடின...............

சுமார் ஒரு வருடம் முன்பு வாணி அமெரிக்காவில் கால் வைத்தாள்................ரொம்பவும் சந்தோஷமாக உணர்ந்தாலும் தாய் தந்தை இல்லாமல் இவ்வளவு தூரம்  தனியே வந்தது கொஞ்சம் பயம் போல உணர்ந்தாள். ஜெயண்ட் வீல் லில் சுற்றும்போது, வயிற்றில்  பட்டம்பூச்சிகள்  பறக்குமே அது போல சந்தோஷமாயும் அதே சமையத்தில் பயமாயும் இருந்தது அவளுக்கு.

முதல் நாள் ஆபிசுக்குள்  நுழையும் வரை அப்படி இருந்தது அவளுக்கு. அங்கு சென்றதும் தான் தெரிந்தது, அங்கு இந்தியர்கள் அதிகம்; அதுவும் நிறைய தமிழ் முகங்கள் தென்பட்டன. தமிழும் காதில் விழுந்தது...........'அப்பாடா' என்று இருந்தது அவளுக்கு.

அங்கு, ஒரு தமிழனாக அறிமுகமானவன் தான் செல்வம். இவளுக்கு அவனைபார்த்ததுமே ஏதோ ரொம்ப நாள் பழகியவன் போல தென்பட்டான். பிறகு தான் பினோருநாளில்  தெரிந்தது அவனுக்கும் அப்படித்தான் இருந்தது என்று. எனவே ரொம்ப சீக்கிரம் இருவரும் நட்பானார்கள் .

ஒன்றாக சாப்பிட்டார்கள், ஒன்றாக வெளியே சுற்றினார்கள்.  மூன்றே  மாதங்கள் தான், ஒருவரை விட்டு ஒருவர் வாழ முடியாது என்கிற நிலை வந்து  விட்டது.  ஆபீஸ் லும் ஜாடையாக கலாட்டா  செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. எனவே, அதுவரை  தனித்தனியாவே  வாழ்ந்த அவர்கள் ஒரே வீடு பார்த்து Living  Together  ஆக வாழத்தலைப் பட்டார்கள்.

இதில் அவர்களுக்கு எந்த குற்ற உணர்வுமே இல்லை என்றாலும், தங்களின் வீடுகளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். இப்படியாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள் அந்த அந்நிய தேசத்தில். பிள்ளைகளை  நம்பி தொலை  தூரம் அனுப்பிய பெற்றோர் அங்கு இந்தியாவில் இது எதுவும் தெரியாமல் இருந்தார்கள்.

ஒரு சுபயோக சுப தினத்தில் வாணிக்கும் செல்வத்துக்கும் இனி கல்யாணம் செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம் உதித்தது. எனவே இருவரும் தங்கள் தங்கள் பெற்றோரிடம் தங்கள் காதலை சொல்லிவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனாலும் 'சேர்ந்து வாழ்வது' பற்றி மூச்சு கூட விடக்கூடாது என்று முடிவெடுத்தார்கள் . அப்படி இவர்கள் சேர்ந்து வாழ்வதை ஏற்றுக் கொள்ளும்  அளவுக்கு, அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு தங்களின் பெற்றோருக்கு மன முதிர்ச்சி (!) இல்லை என்று இருவருமே முடிவுசெய்து இருந்தார்கள்.

அவர்கள் அதாவது வாணியைப் பெற்றவர்கள், அந்தக்கால மனிதர்கள். குலம் கோத்திரம் பார்த்து கல்யாணம் செய்யவேண்டும்  என்று நினைப்பவர்கள். வாணி கடல் தாண்டி தனியாய் வருவதற்கே அறிவுரை ரொம்ப சொன்னவர்கள் . ஒரு பெண் தனியாய் வாழமுடியும் அதுவும் அயல் தேசத்தில் என்று அவர்களால் நினைத்துக்கூட  பார்க்க முடியாதவர்களாய் இருந்தார்கள். இவள் தான் ரொம்ப தைரியம் சொல்லி, ஏகப்பட்ட சத்தியங்கள் செய்து விட்டு விமானம் ஏறினாள்.

ஆனாலும் இங்கு வந்ததும் மாறிப்போனாள்.  அதில் அவளுக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் லவேசமும்  இல்லை. கேட்டால், 'ரோமில் ரோமானியனாய் இரு' என்று சொல்வாள் . செல்வனின் வீட்டிலும் இதே கதை தான். அவனைக் கேட்டால், 'பெற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலை அது தான் அவர்கள் இப்படி பேசுகிறார்கள், நாங்கள் என்ன தப்பு செய்து விட்டோம், எப்படியும் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறோம் அதில் கொஞ்சம் முன்னே பின்னே நாங்கள் இருந்தால் இவர்களுக்கு என்ன ?' என்று சொல்வான்.

என்றாலும் இப்போது இருவரும் பெற்றவர்களிடம் சொல்வது என்று முடிவெடுத்தார்கள். எனவே இருவரும் வேறு வேறு அறைகளுக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு கூகுள் டாக் மூலம்  பெற்றவர்களை  அழைத்தார்கள். ஒருவருக்கு ஒருவர் பேசுவது பெற்றவர்கள் காதில் விழக்கூடாதே, என்று  தான் இந்த ஏற்ப்பாடு.

இரண்டு பெற்றவர்களுக்குமே கொஞ்சம் அதிர்ச்சிதான். பலவாறாக கேள்விகள் கேட்டார்கள். இவர்களும் எல்லாவற்றுக்கும் சமாதானம் சொன்னார்கள். சரி, போட்டோ அனுப்புங்கள் பார்க்கலாம் என்று அவர்கள் சொன்னதும் இருவரும் உடனே அனுப்பினார்கள்.

வாணி வீட்டில் செல்வாவின் போடோவைப்  பார்த்ததும் அவர்களுக்கு அந்த கண்கள் ரொம்ப பரிச்சயமாய்    தோன்றின, வாணி சொன்னது நிஜம் தான், இவனை வேத்து மனிதனாய் பார்க்க முடியலை அவர்களுக்கு. ஒன்றுக்குள் ஒன்று போல இருந்தான். பெற்றவர்களுக்கு ரொம்ப திருப்பதி. ஒருநாள் செல்வாவையும் பேச வரச்சொல் என்று சொன்னார்கள் .

தொடரும்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 11:00 pm

அதே போல செல்வாவின் வீட்டிலும், மகன் சொன்ன அதிர்ச்சி செய்தியை உள்வாங்கிக்கொண்டு, தோளுக்கு உசந்த பொல்லை, கண்காணாமல் இருப்பவன், ஏதோ கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டேன் என்று சொல்லாமல் நம்மிடம் சொல்லும் அளவு மதிப்பு வைத்திருக்கானே என்று நினைத்தார்கள் . அவனிடம் போட்டோ கேட்டார்கள். இவளின் போட்டோவை பார்த்து, பார்த்து பழகிய பெண்போலவே இருக்கிறாள் என்று சொல்லி பச்சை கொடி காட்டிவிட்டார்கள்.

மேலும் அமெரிக்காவில் வாழும் பெண்ணுக்கோ பிள்ளைக்கோ அங்கேயே வேலை பார்க்கும் பிள்ளையையோ பெண்ணையோ பார்ப்பது ரொம்ப கஷ்டமான வேலை என்று அவர்களைப் பெற்றவர்களுக்கும் தெரியும். அப்படியே பார்த்தாலும் அவர்கள் ஆளுக்கொரு பக்கமாய் இருந்து கொண்டு வீக் எண்டு குடித்தனம் செய்வார்கள் என்றும் தெரியும். எனவே, இதுவும் இவர்களின் காதலை அவர்கள் ஒப்புக்கொள்ள ஒரு காரணமாக அமைந்தது .

பிறகு ஒருநாள் இருவருமாக இரண்டு பெற்றோகளையும் அடுத்தடுத்து நெட் இல் பார்த்து பேசினார்கள். பரஸ்பரம் பிடித்துப்போனது. பெற்றவர்கள் நால்வரும் சேர்ந்து பேசி, இப்போதைக்கு செல்வா மோதிரம் வாங்கி வாணிக்கு அணிவித்து விடட்டும் , அப்புறம் மறுமாதம் இந்தியா வரும்போது நிச்சய தார்த்தம் மற்றும் திருமணம் நடத்திவிடலாம் என்று முடிவு செய்தார்கள். இதை இவர்களுக்கும் சொன்னார்கள். இவங்க ரெண்டுபேரையும் கை இல் பிடிக்க முடியலை .

ரொம்ப சந்தோஷமாய் இருவரும் கடைக்கு போய் மோதிரம் வாங்கினார்கள். நண்பர்களுக்குத் தெரிவித்து ஒரு சின்ன பார்ட்டி ஏற்ப்பாடு செய்தார்கள். சின்ன நிச்சயதார்த்த function போல ஆனது அது. நண்பர்கள் இவர்களை மனமார வாழ்த்தினார்கள். function ஐ வீடியோ எடுத்து இந்தியா அனுப்பினார்கள். எல்லாம் நல்லா நடந்து கொண்டிருந்த போது தான் அது நடந்தது.

ஒருநாள் வாணி சும்மா இல்லாமல் செல்வாவை தன்னுடைய family tree இல் இணைத்தாள். கொஞ்ச நேரத்தில் அவளுக்கு ஒரு மெயில் வந்தது, ஆவலுடன் செல்வாவை தன் கணவன் என்று இணைத்ததைக் காட்டும் என்று ஓபன் செய்தவளுக்கு மிகபெரிய அதிர்ச்சி காத்திருந்தது அங்கு.

அந்த மெயில் என்னவோ family treeலிருந்து தான் வந்திருந்தது , ஆனால் 'உங்களுக்கு ஒரு சகோதரன் இணைந்துள்ளான்' என்று வந்திருந்தது . இவளுக்கு ஆச்சரியம் யார்டா அது என்று பார்க்கும் முன் செல்வாவைக் கூப்பிட்டாள்..................

"செல்வா, இங்கே பாரேன் எனக்கு புதியதாய் ஒரு பிரதர் வந்திருக்கானாம், family tree சொல்லுது" என்றால். அவனும் சிரித்தவாறே, உங்க அப்பா ஊரில் தானே இருக்கார் என்று கேட்டுக்கொண்டே வந்தான்....இவளும் " டேய்"...........என்று சிரித்த வாறே கையை ஓங்கினாள்.

இருவரும் திரையை பார்த்தார்கள் ....................பார்த்தால் அதில் 'செல்வா' வின் பேர் ஒளிர்ந்தது...................

தொடரும்.......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 11:30 pm

இருவரும் அதிர்ச்சி இன் உச்சத்துக்கு போனார்கள்.......எப்படி என்று பார்த்தார்கள்........பார்த்தால்...................

இவளின் தாத்தாவும் அவனின் தாத்தாவும் ஒன்று............இவளுடைய தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பிறந்தவர் இவளுடைய அப்பா ............இவளுடைய தாத்தாவுக்கும் வேறு ஒருத்திக்கும் பிறந்த மகன் தான் செல்வாவின் அப்பா என்று காட்டுகிறது அது. அப்படியானால், இவர்களின் தகப்பன்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என்றால் இவர்கள் இருவரும்.................... அண்ணன் தங்கை தானே?.................... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அதாவது தாத்தாவுக்கு ஊருக்குத் தெரியாமல் வேறு ஒரு குடும்பம் இருந்திருக்கிறது,  என்று 2 தலை முறைக்குப்பிறகு இவர்களுக்கு இப்போது தெரிந்துவிட்டது............... பயம் பயம் பயம்

இப்போது என்ன செய்வது?...............எல்லோருக்கும் சொல்லி அனுமதியும் வாங்கி, ஆபீஸ் அறிய  நிச்சயமும் செய்தாச்சு, இப்போ என்னவென்று சொல்லி கல்யாணத்தை நிறுத்துவது?...........இத்தனை நாள் தாங்கள் பழகிய பழக்கம்?..................தங்களைக்கண்டால் தங்களுக்கே அருவருப்பாக இருப்பது போல உணர்ந்தார்கள்..........

இதனால் தான் தங்களுக்கு ஒருவரை ஒருவர் பார்த்ததும் ரொம்ப தெரிந்தது போல இருந்ததோ என்று இப்போது தோன்றியது இவர்களுக்கு................ஏழு ஜென்மமாய் காதலித்தவர்களுக்கு மட்டும் அல்ல
கூடப்பிறந்தவர்களுக்கும் எப்போதோ பார்த்தது போல உணரும் தன்மை இருக்கும் என்றும் புரிந்தது..............

இப்போ கதை இன் முதல் வரியை படியுங்கள்...............

மேலே என்ன செய்வது என்று தோன்றாமல் விக்கித்துப்போய்  எத்தனை  நேரம்  இருந்தார்களோ  தெரியாது.............முதலில் சலனம் வரப்பெற்றவள் வாணி தான்.......மெல்ல நிமிர்ந்து "செல்வா" என்றாள், அவள் குரல் அவளுக்கே கேட்கலை.............செல்வா நிமிர்ந்து பார்த்தான்.............அவனும் அவள் பார்வை இன் பொருளை உணர்ந்து கொண்டான்................

ஊருக்காக கட்டிவைத்த பொருட்களைப் பார்த்தார்கள்; ஆசை ஆசையாய் எல்லோருக்கும் வாங்கின பரிசுப் பொருட்கள் அவற்றில் இருந்தது............... அவற்றுக்கெல்லாம் அர்த்தமே இல்லாலதது  போல தோன்றியது இப்போது. தங்களின் தாய் தந்தையர், குலம் கோத்திரம் அறிந்து பெண் கொடுப்பதன் அர்த்தம் இந்த நேரத்தில் புரிந்தது. ........................

மறுநாள், காலை இரவரும் ஆபீஸ் வராதது கண்டு நண்பர்கள் இவர்களைத் தேடி போனும் எடுக்கப்படாமல் இருக்கவே வீட்டுக்கு வந்துபார்த்தால்.............இருவரையும் பிணமாகத்தான் கண்டார்கள்.................அவர்களுக்குத் தற்கொலையைத் தவிர வேறு வழி தெரியவில்லை. தங்களுக்குத் தெரிந்த இந்த உண்மை தங்கள் குடும்பத்துக்கும் தெரிந்து அவர்களும் நரகத்தில் வீழ வேண்டாம் என்று நினைத்து இந்த முடிவெடுத்தார்கள் இருவரும்.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

PostAarthi Krishna Mon Oct 12, 2015 9:12 am

"தாய் தந்தையர், குலம் கோத்திரம் அறிந்து பெண் கொடுப்பதன் அர்த்தம் இந்த நேரத்தில் புரிந்தது."

மிக சரி அம்மா. கதை மிகவும் அருமையாக இருக்கிறது. ☺☺
Aarthi Krishna
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aarthi Krishna

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 9:28 am

Aarthi Krishna wrote:"தாய் தந்தையர், குலம் கோத்திரம் அறிந்து பெண் கொடுப்பதன் அர்த்தம் இந்த நேரத்தில் புரிந்தது."

மிக சரி அம்மா. கதை மிகவும் அருமையாக இருக்கிறது. ☺️☺️
மேற்கோள் செய்த பதிவு: 1168359

தேங்க்ஸ் ஆர்த்தி புன்னகை ............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sundarr.sa
sundarr.sa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 27/01/2015

Postsundarr.sa Mon Oct 12, 2015 10:01 pm

கொஞ்சம் யோசிக்க வைக்கும் கதை! சூப்பர் !!

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Oct 12, 2015 10:40 pm

அம்மா கதை நன்றாக இருக்கிறது. முடிவில் தான் கொஞ்சம் வருத்தம். அனைத்திற்கும் மரணம் தான் முடிவு என்றால்? யோசிக்கலாமா?

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2015 6:41 am

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா கதை நன்றாக இருக்கிறது. முடிவில் தான் கொஞ்சம் வருத்தம். அனைத்திற்கும் மரணம் தான் முடிவு என்றால்? யோசிக்கலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1168514
-
அதிர்ச்சி அதிர்ச்சி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Oct 13, 2015 7:00 am

நல்ல கதை க்ரிஷ்ணாம்மா. பயங்கர அதிர்ச்சி யாக உள்ளது. இப்படியும் இருந்தால் என்ன செய்வது. நல்ல கற்பனை உங்களுக்கு. யோசிக்க வைக்கிறது . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த
வி போ பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 13, 2015 12:10 pm

sundarr.sa wrote:கொஞ்சம் யோசிக்க வைக்கும் கதை! சூப்பர் !!

தேங்க்ஸ் க்ருஷ்ணாப்பா புன்னகை ............ நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக