புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
85 Posts - 79%
heezulia
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
250 Posts - 77%
heezulia
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
8 Posts - 2%
prajai
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சாலை - சிறுகதை Poll_c10சாலை - சிறுகதை Poll_m10சாலை - சிறுகதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலை - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 03, 2021 3:29 pm


சாலை - சிறுகதை Vikatan%2F2021-07%2F13648eec-cd4e-44a5-b0c3-9169f45f4750%2Fgirl_4359175_1920.jpg?rect=0%2C51%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=0
எதற்கெடுத்தாலும் அவசரப்படும் கதாநாயகி நம் பவித்ரா.
மாமியார் ஏதாவது சொல்லப் போக இவள் ஏடாகூடமாக
புரிந்து கொண்டிருப்பாள். உடனே தாட் பூட் என்று கத்திவிட்டு
இங்கே வந்திருப்பாள்...

சாரு ஓரக்கண்ணால் பவித்ராவை பார்த்தாள். படபடப்பும்
அவசரமுமாக வந்து இவளை கிளப்பிக்கொண்டு போகிறாளே.
என்னவாக இருக்கும்?

'பவி ' மெதுவாக அவள் தோளைத் தொட்டாள் சாரு.

'சாரு , ப்ளீஸ், எல்லாம் சொல்றேன். முதலில் ஏதாவது ஒரு
ஹோட்டலுக்கு போய் விடுவோம்.'

சாலையில் கண்களை பதித்த படியே அவள் சொல்ல சாரு
மௌனமானாள்.
**
பவித்ரா அவளுடைய நெருங்கிய தோழி.

சமீபத்தில் தான் திருமணமாயிற்று.. ஒரே பையன். அம்மா மட்டும்
தான். பிறந்த வீட்டிலும் அவளுக்கு எந்த குறையுமில்லை.

கை நிறைய சம்பாதிக்கும் அன்பான கணவன். அடிக்கரும்பு மாதிரி
தித்தித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை. இதில்என்ன பிரச்சினை
இன்று இவளுக்கு வந்திருக்க கூடும்? உள்ளடங்கிய சினம் அவள்
முகத்தில் நன்றாக தெரிந்தது ‌‌.

ஹோட்டலை அடைந்ததும் சர்வரை அழைத்து இருவருக்கும்
ஆர்டர் பண்ணி விட்டு நிமிர்ந்தாள் பவித்ரா.

'இப்போ சொல்றேன் கேளு. என் மாமியாரை உடனடியாக முதியோர்
இல்லத்தில் சேர்க்கணும் . அதுக்கு ஒரு வழி சொல்லு'

அவள் திகைத்தாள்

'ஏன் என்ன ஆச்சு உடம்பு சரி இல்லையா?

உன்னால் பார்க்க முடியவில்லையா'

'அதெல்லாம் ஒன்றுமில்லை கிழவிக்கு என்ன, நல்லாத்தான்
இருக்கு.'

'உஷ் ,பவி, என்ன இது ,மரியாதை இல்லாமல்' கண்டித்தாள் சாரு.

'உனக்கு பிடிக்கலை இல்லையா? என்ன செய்யறது? நீ வந்து
இருந்து பாரு தெரியும்.'

‌'நான் வரது இருக்கட்டும். நீ முதலில் சொல்லு என்ன பிரச்சினை?'

இதோ பார் . அவசரப்படாமல் மெதுவாகத்தான் எதுவும்
செய்ய முடியும். இரண்டு நாள் பொறு, பார்க்கலாம்..

அவசரப்படக்கூடாது. என்னதான் இருந்தாலும் அவருடைய
அம்மா பாரு.'

குழந்தைக்கு சொல்வது போல ஆதுரமாக சொன்ன சாரு
யோசித்த படி எழுந்தாள்.

எப்படியும் இவளை சரி செய்தாக வேண்டும்

என்ன செய்யலாம்?!

சிவா, T.N.Balasubramanian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 03, 2021 3:31 pm

சாலை - சிறுகதை Vikatan%2F2021-07%2Fa26404b4-0f19-474d-8bc0-451b57d80b57%2Ftraffic_3612474_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=0

பிரச்னையின் கனத்தை அவளிடம் கொட்டி விட்டதாலோ
என்னவோ பவித்ரா கலகல வென்று இருந்தாள்.

திரும்பும் போது ஒரே அரட்டை வம்புப் பேச்சு.

பேசிக் கொண்டே காரை ஓட்டிய அவள் திருப்பத்தில்
சட்டென்று நிறுத்தினாள்.

'ஏன் ,என்ன ஆச்சு?'

'ஒன்று மில்லை ,மெயின் ரோட்டில் வண்டி வழி விட வில்லை
பார்.'

பளிச்சென்று மின்னல் அடித்தது சாருவுக்கு

'உன் மாமியார் மாதிரி என்று சொல்'

'எதற்கெடுத்தாலும் அந்தம்மாவை ஏன் இழுக்கிறாய் அவர்
மாதிரியே ' அவள் சலித்துக்கொண்டாள்.

'இல்லை பவி . டிராபிக் ரூல்ஸ் மாதிரியே வாழ்க்கையிலும்
சில நியதிகள் இருக்கின்றன. நீ கேட்கிறாயில்லையா?'

'இரு ,திருப்பிக் கொள்கிறேன்'

மெயின் ரோட்டில் திரும்பியதும் வண்டி சீரான வேகமெடுத்தது

'ஊம் சொல்லு இப்போ' சுவாரசியமாக அவளை பார்த்து கேட்டாள்
பவித்ரா.

'முதலில் மெயின் ரோடு வண்டி உன்னை திருப்ப விடாமல்
இடைஞ்சல் செய்தது இல்லையா! இப்போது பார் அந்த வண்டியால்
உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.'

அவள் முன்னால் சென்று கொண்டிருந்த அந்த வண்டியை சுட்டிக்
காட்டினாள்.

'அது மாதிரி என்ன சொல்ல வருகிறாய்?'

'அது மாதிரி தான் உன் மாமியார் மெயின் ரோட்டில் வரும் வண்டி.

நீ இப்போதுதான் சேர்ந்து கொள்ள போகிறாய் அந்த சாலையில்
கொஞ்சம் வழி ஏற்படுத்தி கொண்டு போகலாமில்லையா'

'அதற்காகத்தான் இரண்டு மாதம்

வெயிட் பண்ணினேன்'

'வெயிட் பண்ணினே சரி. ஏதாவது அனுசரித்துப் போனாயா ?
முதலில் அவர்கள் இஷ்டம் போல் வளைந்துக் கொடுத்துப் பாரேன்.'

காரை ஒதுக்குப்புறமாக நிறுத்திவிட்டு அவளை கூர்மையாக
பார்த்தாள் பவித்ரா.

'நீ என்ன சொல்ல வர?'

'பவி, ப்ளீஸ் முதலில் நான் சொல்வதைப் புரிந்துக்கொள்.

இந்த ரோடு யாருக்கும் சொந்தமில்லை. ஆனால் உன் வண்டி
போகும்போது உனக்கு அது சொந்தமாகிவிடுகிறது. ஆனால் சில
நிமிடங்கள் மறுபடி வேறு திருப்பம் வேறு ரோடு'

ஏதோ சொல்ல வாயெடுத்தவளை அடக்கிவிட்டு அவள் மேலே
தொடர்ந்தாள்.

'நம் வாழ்க்கையையும் ஒரு ரோடு மாதிரி வைத்துக் கொண்டால்
அதில்தான் எத்தனை வாகனங்கள் அதுதான் எத்தனை பேர்
நம் வாழ்வில் தலையிட்டிருப்பார்கள் இல்லையா?'

'சிலருக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
பிடிக்கிறது பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது சொல்லவும்
கூடாது.'

'நீ என்னதான் சொல்ல வரே?'

அவளைப் பார்த்து திரும்பி நன்றாக உட்கார்ந்து கொண்டாள்
சாரு.

'ரோடு முழுவதுமாக நாம் ஆக்ரமிக்க முடியாது. ஆனால் ஒழுங்காக
போனால் அது நம்முடையதாகி விடுகிறது'

'இந்த கோணத்திலிருந்து பார்.

உன் கணவன் உனக்கு மட்டுமே சொந்தம் என்றிருக்க முடியாது'

'அவருடைய தாயார் அவரது நண்பர்கள் என்று ஆயிரம் வாகனங்கள்
அவர் சாலையிலும் இருக்கும் இல்லையா.? அப்படி நினைத்து பாரேன்.'

அதே மாதிரி உன் வாழ்க்கையிலும் மற்ற உறவுகள் இல்லையா.?’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 03, 2021 3:35 pm

சாலை - சிறுகதை Vikatan%2F2021-07%2Fa26404b4-0f19-474d-8bc0-451b57d80b57%2Ftraffic_3612474_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=0
-
யோசிக்கும் பாவனை அவள் முகத்தில் தெரிந்தது

'இன்னும் கேள் பவி . உனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு
இரு பக்க உறவுகளும் வேண்டாமா?'அவருடைய மனதை
முறித்து அவருடன் வாழ்வதை விட அவர் மனம் போல் விட்டுக்
கொடுத்து தான் வாழ்ந்துபாரேன்.'

'என் மகன் என்று அவர்கள் உரிமைக் கொண்டாடுகிறார்கள்
அது நிஜம் தானே'!

'நீ விட்டுக்கொடுத்து, ஆமாம் நீங்களே செய்யுங்கள்.எனக்கும்
சொல்லிக் கொடுங்கள் என்று சொல்லிப்பாரேன். உன்னை
மருமகளாக பார்க்காமல் மகளாக பார்க்கும் பக்குவம்
அவர்களுக்கும் வரும்.'

'அதெல்லாம் முன்பே அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் .'
மெதுவாக முணுமுணுத்தாள் அவள்.

'பின்னே யோசிக்காமல் நீ என்னவெல்லாம் சொல்லிவிட்டாய்?'

'நீ மட்டுமில்லை பவி. நிறைய பேர் இந்த தப்பை செய்கிறார்கள்.'

'நெரிசலான சாலையில் நிதானமாக போக வேண்டும்.
உணர்ச்சிகரமான தருணங்களில் பொறுமையாக யோசிக்க
வேண்டும். '

'சில இடங்களில் நேர் சாலையில் போகும் வாகனங்களுக்கு
முன்னுரிமை கொடுக்கிறோம். ஏன் ஆக்ஸிடென்ட் எதுவும் நடந்து
விடக்கூடாது என்று தானே. அது மாதிரி வாழ்க்கையிலும் நடந்து
கொள்ளலாம் இல்லையா?'

'இப்போ சொல்லு என்ன செய்யலாம்?'

'சாரு' , ஸ்டீயரிங்கிலிருந்து கையை எடுத்து அவள் கரங்களை
பற்றிக் கொண்டாள் பவித்ரா.

' தப்பு தான் சாரு . நான் அவசரப்பட்டு விட்டேன் ஆத்திரம் என்
கண்களை மறைத்து விட்டது .

'ஸாரி, நல்ல வேளை நான் உன்னிடம் வந்தேன்.'

'நான் கோபமாக சொன்னதையெல்லாம் மறந்து விடு ப்ளீஸ்'

மென்மையாக புன்னகைத்தாள் அவள்.

'ஓகே! இனிமே கிளம்புவோமா?'

'சாரு நீ எனக்கு ஃப்ரெண்ட் மட்டுமில்லை குருவும் கூடத்தான்.
நன்றி சாரு'.

அவள் முகத்தில் தெரிந்த சிரிப்பை பார்த்து
'என்ன சாரு' என்றாள்.

'இல்லை இப்போது உன் ரோட்டில் நான் எந்த வாகனம் என்று
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'

' போதும் சாரு'

முகம் முழுவதும் சிரிப்புடன் அவள் வண்டியை கிளப்ப அது
வெகுஜோராக விரைந்தது மெயின் சாலையில் தடங்கல்
எதுவுமில்லாததால்.

-காந்திமதி உலகநாதன்
நன்றி-விகடன்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 07, 2021 11:12 pm

மிக மிக அருமையான கதை...இன்றைய தினத்தில் நாட்டுக்குத் தேவையான கதையும் கூட.... பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 08, 2021 5:22 pm

அருமையான கதை அமைப்பு .
சமீப காலங்களில் படித்த கதைகளில் இருந்து ரசிக்க முடிந்த ஒரு மாறுபட்ட கதை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக