ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

2 posters

Go down

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்! Empty 12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Post by T.N.Balasubramanian Fri Jun 25, 2021 6:31 pm

வெள்ளி முதல் வியாழன் வரை (25.6.2021 - 1.7.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்
சந்திரன், புதன், குரு அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.
அசுவினி: வருமானம் அதிகரிக்கும். செய்யும் தொழில் சிறப்படையும். கோபமான பேச்சினை தவிர்க்கவும். வீட்டில் உற்சாகமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.
பரணி: தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உதவி தேடி வரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.
கார்த்திகை 1: பேச்சில் இனிமை பிறக்கும். அதிகாரத்தை கையில் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு திடீர் யோகம் உண்டாகும். குழந்தைகளால் குதுாகலமும், சந்தோஷமும் அதிகரிக்கும்.

ரிஷபம்
புதன், சூரியன் சாதக நிலையில் உள்ளனர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
கார்த்திகை 2,3,4: கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்னையை நீங்களே தீர்ப்பீர்கள். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும்.
ரோகிணி: பண வரவு சரளமாக இருப்பதால் கடன்கள் தீரும். நட்புகளுடன் இருந்து வந்த பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். தொழில் முன்பைவிடச் சற்று சிறப்படையும்
மிருகசீரிடம் 1,2: தடைபட்டிருந்த தொழில் சற்று விறுவிறுப்படையும். லாபம் ஓரளவுக்கு மட்டுமே அதிகரிக்கும். இளைஞர்களின் முயற்சி படிப்படியாக வெல்லும்.
சந்திராஷ்டமம்: 25.6.2021 காலை 6:00 - 26.6.2021 மதியம் 12:33 மணி
மிதுனம்
ராகு, கேது, குருவால் நற்பலன் உண்டு. துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
மிருகசீரிடம் 3,4: பிள்ளைகள் உங்களின் சொல்கேட்டு நடப்பார்கள். மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைப்பதால் படிப்பில் ஆர்வம் உண்டாகும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு, மரியாதை கூடும்.
திருவாதிரை: எந்த விஷயத்தையும் துணிவுடன் செய்வீர்கள். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் சிறு லாபம் காண்பீர்கள். சகோதரிகளின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சி தரும்.
புனர்பூசம் 1,2,3: கொடுக்கல், வாங்கலில் லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். செலவுகள் கூடும். இளைஞர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: 26.6.2021 மதியம் 12:34 - 28.6.2021 மாலை 5:24 மணி
கடகம்
புதன், ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
புனர்பூசம் 4: சகபணியாளரால் சில சங்கடங்கள் உண்டாகும். தாய்மாமன் வகை உறவுகளால் நன்மை காண்பீர்கள். பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகம் குறையாது. தொழில் எதிர்பார்த்ததை விட நிதானமாக நடக்கும்.
பூசம்: எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமாக இருப்பதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
ஆயில்யம்: பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். பொறுப்புகளை சரிவர நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். கற்பனையாக தேவையற்ற கவலைகள் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்: 28.6.2021 மாலை 5:25 - 30.6.2021 நள்ளிரவு 12:29 மணி

சிம்மம்
ராகு, புதன், சூரியன் அனுகூல பலனை தருவர். சூரியன் வழிபாடு வளம் தரும்.
மகம்: மனஉற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பிள்ளைகளின் தீர்மானத்துக்கு வழிகாட்டுவீர்கள். வியாபாரிகளின் கடன்கள் ஓரளவு குறையும்.
பூரம்: பயணத்தை தள்ளிப் போடுவீர்கள். பணியாளர்களின் மனதிற்குப் புதுத் தெம்பு கிடைக்கும். பெண்களுக்கு நல்ல செய்தி வரும். உடல் நலம் முன்பைவிட நன்கு மேம்படும்.
உத்திரம் 1: சுபநிகழ்ச்சிக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் ஏற்படும். சகபணியாளர்களின் உதவியால் நிலுவைப்பணிகளை முடிப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: 30.6.2021 நள்ளிரவு 12:30 மணி - 1.7.2021 நாள் முழுவதும்

தொடருகிறது


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்! Empty Re: 12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Post by T.N.Balasubramanian Fri Jun 25, 2021 6:44 pm

கன்னி
சந்திரன், புதன், கேது அதிர்ஷ்டமான பலன்களை தருவர். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.
உத்திரம் 2,3,4: பெரிய தீர்மானங்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க வேண்டாம். வாழ்வில் முன்னேற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
அஸ்தம்: மற்றவர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு சிறுசிறு மனவருத்தம் ஏற்பட்டாலும் வெளியில் காட்ட வேண்டாம். திடீரென்று சந்தோஷப்படக்கூடிய மாற்றம் ஏற்படும். மன நிறைவு பெறுவீர்கள்.
சித்திரை 1,2: அக்கம்பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் பரிவு காட்டி அவர்களின் அன்பை பெறுவீர்கள். பெண்களுக்கு நகைகள், ஆடைகளின் சேர்க்கை உண்டாகும்.
துலாம்
குரு, புதன், சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.
சித்திரை 3,4: பணியாளர்கள் பிறருக்கு தீங்கு நினைத்து எதுவும் செய்ய வேண்டாம். கஷ்டப்பட்டு முயன்றால் மட்டுமே வெற்றிபெற பெற முடியும். தேவையற்ற பயங்களைத் துாக்கிப்போடுங்கள்.
சுவாதி: அலுவலகப் பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் போட்டியாளர்களைக் கண்டு பயப்பட வேண்டாம். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
விசாகம் 1,2,3: விருந்தில் கலந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆடை, அலங்காரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்கு தேவையானதை வாங்குவீர்கள். முயற்சிகளுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும்.
விருச்சிகம்
குரு, சந்திரன், புதன் கூடுதல் நற்பலன்களை தருவர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.
விசாகம் 4: முன்னேற்றத்தில் சிறு தடைகள் ஏற்படும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் தாமதமாகும். நீண்ட கால பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள்.
அனுஷம்: பல புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். சாமர்த்தியமாகப் பயன்படுத்தி வெல்வது உங்கள் கையில் தான் உள்ளது. சொந்தத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள்.
கேட்டை: முன்னேற்றமான சூழ்நிலையை காண்பீர்கள். பல காலமாக எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்பட்டு மகிழ்விப்பர். இதுவரை ஏற்பட்ட தடைகளுக்கான காரணத்தை கண்டறிந்து களைவீர்கள்.

தனுசு
சந்திரன், ராகு, கேது நல்ல பலனைத் தருவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மூலம்: குடும்பத்தினரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பணியில் தடுமாற்றம் இல்லாமல் மனம் ஒருமித்து செயல்படுவீர்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயத்தில் தடைக்கு பின்பு பலன் கிட்டும்.
பூராடம்: வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு நற்செய்தி வரும். எதிலும் படிப்படியான நன்மைதான் எதிர்பார்க்க முடியும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் 1: மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைக்கும். எந்தச் செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள்.
மகரம்
சுக்கிரன், கேது, சந்திரன் தாராள நற்பலன்களை வழங்குவர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.
உத்திராடம் 2,3,4: அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள். சகோதரர்களுக்கு இடையே இருந்த பிரச்னைகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.
திருவோணம்: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். எதிர்பாலினத்தவருடன் பேசும் போது கவனம் தேவை. இளைஞர்களின் முயற்சி தாமதமானாலும் நல்லபடியாக முடியும். குடும்பத்தினரால் பாராட்டப்படுவீர்கள்.
அவிட்டம் 1,2: சகபணியாளர்களுக்கு கொடுத்த கைமாற்று வசூலாகும். மாணவர்களுக்கு பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செல்லும். உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும்.
கும்பம்
குரு, புதன், சூரியன், செவ்வாயால் நன்மை கிடைக்கும். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.
அவிட்டம் 3,4: தந்தை, தந்தைவழி உறவினர் மூலம் நன்மை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அலைச்சலுடன் ஆதாயம் தரும் வாரம். இளைஞர்கள் பொறுமை இழக்காமல் செயல்படுவது நல்லது.
சதயம்: சுபநிகழ்ச்சிகள் பற்றிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் ஐடியாவை ஏற்று நடப்பார்கள். சிக்கனமாக செயல்பட்டு பணப்பிரச்னையை தவிர்ப்பீர்கள்.
பூரட்டாதி 1,2,3: இளம் பெண்களின் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. சகோதர, சகோதரிகள் மூலம் நன்மைகளும் லாபங்களும் ஏற்படும். செல்வாக்கும், அதிகாரமும் உள்ள பொறுப்பான பதவி கிடைக்கும்.
மீனம்
சனி, புதனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.
பூரட்டாதி 4: கலைஞர்களுக்கு முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் படிப்பில் சற்று மந்தநிலை காண்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எண்ணிய எண்ணம் நிறைவேறும். நன்மைகள் நடக்கும்.
உத்திரட்டாதி: தாயின் ஆரோக்கியம் சீராகும். சகபணியாளரின் உதவியை பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இலக்கை அடைவதில் அழுத்தம் இருக்கும். எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுக்க வேண்டிவரும்.
ரேவதி: சகபணியாளர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வர். முயற்சிகளில் எளிதாக வெற்றி பெறுவீர்கள். இழந்திருந்த உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் பாராட்டு கிடைக்கும்.

நன்றி தினமலர்.
=======================


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்! Empty Re: 12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Post by ayyasamy ram Sun Jun 27, 2021 2:19 pm

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்! 103459460 சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்! Empty Re: 12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum