ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள்

2 posters

Go down

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள் Empty ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள்

Post by T.N.Balasubramanian Wed May 12, 2021 9:06 pm

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டி வீரர்களுக்கான தர வரிசையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள் 670101

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் பட்டியலில் இந்திய வீரராக அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார். 850 புள்ளிகளுடன் அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். 908 புள்ளிகளுடன் பாட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 11-வது இடத்துக்குச் சரிந்துள்ளார். பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர்களில் விராட் கோலி 5-வது இடத்திலும், ரிஷப் பந்த் 6-வது இடத்திலும், ரோஹித் சர்மா 8-வது இடத்திலும் உள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள் 1620819670756

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி, ஹசன் அலி, நுமான் அலி ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இதையடுத்து, 6 இடங்கள் நகர்ந்து 14-வது இடத்துக்கு ஹசன் அலி முன்னேறியுள்ளார். ஷாகீன் அப்ரிடி 9 இடங்கள் முன்னேறி 22-வது இடத்துக்குச் சென்றார். நுமான் அலி 54-வது இடத்திலிருந்து 46-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார். இந்த மூவருக்கும் இது சிறப்பான தரவரிசையாகும்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்த மூவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒரு டெஸ்ட்டில் 3 பந்துவீச்சாளர்கள் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது 28 ஆண்டுகளுக்குப் பின் இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன் கடைசியாக 1993ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பால் ரீபெல், ஷேன் வார்ன், டிம் மே ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அபித் அலி 215 ரன்கள் சேர்த்ததையடுத்து தரவரிசையில் 38-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அசார் அலி 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நன்றி தமிழ் ஹிந்து



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள் Empty Re: ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 13, 2021 12:39 am

சில ஆண்டுகள் அஸ்வின் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டார் இல்லையெனில் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை முறியடித்திருப்பார்.. எனக்கு மிகவும் பிடித்த வீரர்.. இப்பொழுது ஆல்ரண்டர்கள் வரிசையிலும் வலுவாக உள்ளார்..

இன்னும் பல வெற்றி முகுடங்களை சூட வாழ்த்துக்கள்..🙏🏽💐🙏🏽


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள் Empty Re: ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள்

Post by T.N.Balasubramanian Thu May 13, 2021 5:24 pm

இப்போது நல்ல பார்மில் இருக்கிறார்.
2/3 வருடங்களுக்கு முன் டெஸ்ட் விளையாட்டுகளில் அஸ்வின் அகில இந்திய அளவில் புறக்கணிக்கப்பட்டார் . தலைமை தோனி /சாஸ்திரி
நடுவில் யார்க்க்ஷைர் டீமிற்கும் விளையாட சென்றார் என எண்ணுகிறேன்.
CSK யிலும் தவிர்க்கப்பட்டார் .தலைமை கொடுக்கப்படவேண்டுமென இருக்குமோ.?
பஞ்சாப் ஐபிஎல் தலைமையில் அதிகம் சோபிக்கவில்லை.
சிலருக்கு சில காலங்கள் மங்கலாக இருக்கின்றன.
சில காலங்கள் மங்கலமாக இருக்கின்றன.
வாழ்த்துவோம்.
அஸ்வின் எங்கள் தெருக்காரர். 6 வீடு தள்ளி இருக்கிறார்.
அவரை நன்கு அறிவேன்





(அவருக்கு என்னை தெரியாது)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள் Empty Re: ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 14, 2021 1:17 am

சிறிய வயதில் தெருக்களில் அவர் விளையாடும் பொழுது அவரை மிரட்டியிருப்பீர்கள் என நினைக்கிறேன் அய்யா.. 😛 நிச்சயம் உங்களை அறிவார் .. இப்பொழுது இல்லையெனினும் சிறுவயதிலாவது உங்களை பார்த்திருப்பார் அறிந்திருப்பார்..😎


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள் Empty Re: ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள்

Post by T.N.Balasubramanian Fri May 14, 2021 11:18 am

பார்த்திருக்கலாம் .
அவர்தாம் இவர் என அறியாமலும் இருந்திருக்கலாம்.
கிரிக்கெட் உலகத்திற்கு அவர் சேவை செவ்வனே வளர்க.
அவர் வாழ்க .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள் Empty Re: ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum