ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

+4
உதயசுதா
சிவா
தண்டாயுதபாணி
பாலாஜி
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Empty தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Fri Jan 15, 2010 11:41 am

நம்மை நாமே திருத்திக்கொள்ள ஒரு "பளிச்" பட்டியல்.


1. ஆறு மாதம் சிறைத் தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிந்தும், வீட்டுக்கு வீடு திருட்டு வி.சி.டி. கலெக் ஷன்
வைத்திருப்பது. குரூப்பாய் படம் பார்த்து விட்டு " என்னடா படம் எடுக்குறாய்ங்க?" என்று சலித்துக்கொள்வது சகஜம்.


2.பட்டத்து ராணியைத் தேர்ந்தெடுத்த யானைகளை, கடை தெருவில் பிச்சை காசுக்குச் சலாம் போடவைத்து,குழந்தைகளுக்கு " தோ...... ஆனை" என வேடிக்கை காட்டுவது.

3.தமிழ் நாட்டில் எட்டுத் திசையிலும் ஒலிக்கும் குரல் " அவர்களே" தகர குரலிலி விடியும் வரை " தலைவரே" போட்டாலும், காதில் ரத்தம் வழிய வழிய அசராமல் கேட்டுக்கொண்டு இருப்பது.

4.எதற்கெடுத்தாலும் சாலை மறியல் ஆரம்பித்து, கலெக்டர் வந்து உறுதிமொழி கொடுத்தால்தான் வாபஸ் என்று அறிவிப்பது. வாபஸ் வாங்கிய பிறகு உறுதிமொழி என்ன ஆனது பற்றி எவனும் கவலைப்படால் இருப்பது.

5. செருப்பு, கர்ச்சீப், துண்டு, குழ்ந்தை(!), இருப்பதை எல்லாம் எடுத்து வீசி பஸ்ஸில் இடம் பிடிப்பது தமிழனின் கண்டுபிடிப்பு. படிகட்டில் ஏறவும் விடாமல் இறங்கவும் முடியாமல் இருபக்கமும் போராடுவது தமிழனின் ரத்தில் கலந்த யுத்த குணம்.

6.அடுத்தடுத்து மிஸ்டுகால் கொடுத்து அட்டாக் பண்ணுவது. பெயர் போடாமல் மொட்டை மெஸெஜ் அனுப்பி மண்டை காயவிடுவது. " மீனை வறுத்து வெச்சிட்டியா" என பஸ் கூட்டத்தில் கத்தி பி.பி-யை எகிறவைப்பது. அட்டு ரிங் டோன்களை அலறவிடுவது என தமிழன் பண்ணும் செல்போன் தொல்லைகளுக்கு அளவே இல்லை.

7. கல்யாணத்தில் 400 ரூபாய் பேட்டா செருப்பை அடித்திவிட்டு , இத்து போன ஸிலிப்பரை எங்கே விடுவது.செருப்பு திருடு போகாமல் இருக்க திசைக்கொன்றாகச் கழ்ற்றிபோடுவது சிலரின் செக்யூரிட்டி டெக்னிக். அதிலும் வேலையைக் காட்டுவான் நம்ம ஆள்.

8. ஆயுத பூஜைக்கு பூசணிக்காய் உடைத்து சாலையை பாழாக்குவதில் அவ்வளவு இஷ்டம். பைக்கில் செல்பவர்கள்(சிவா) இன்ஷிரன்ஸ் எடுத்து சொந்த ரிஸ்க்கில்தான் போக வேண்டும்.

9. உன் காதலுக்காக உசிரக் கொடுப்போம்டா" என்று சொல்லி, கடத்தல் , கோவில் கல்யாண்ம் என்று ஆதரவு தந்துவிட்டு , அடுத்த நாளே காணாமல் போவது.

10. அடுத்த ஸீன்ல பாரேன் --விஜயகாந்தை வில்லன் கத்தியால் குத்திருவாரு" என வரப்போகும் ஸீன்களை முன்கூட்டியே சொல்லி , பக்கத்து ஸீட்டுகாரர்களைக் கடுப்பேற்றுவதில் அலாதி குஷி.


Last edited by வை.பாலாஜி on Sat Jan 16, 2010 7:42 pm; edited 2 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by தண்டாயுதபாணி Fri Jan 15, 2010 11:42 am

பைக்கில் செல்பவர்கள்(சிவா) இன்ஷிரன்ஸ் எடுத்து சொந்த ரிஸ்க்கில்தான் போக வேண்டும்.

9.
உன் காதலுக்காக உசிரக் கொடுப்போம்டா" என்று சொல்லி, கடத்தல் , கோவில்
கல்யாண்ம் என்று ஆதரவு தந்துவிட்டு , அடுத்த நாளே காணாமல் போவது.
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. 705463 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. 705463 தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. 705463


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by சிவா Fri Jan 15, 2010 12:08 pm

ஏம்பா, பைக்குன்னு உங்க காதில் கேட்டதுமே அடுத்து சிவான்னுதான் நினைக்கத் தோனுமா!!!

என்ன கொடுமை சார் இது????? தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. 440806


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Fri Jan 15, 2010 12:09 pm

11. இலவசம்" என்று கேட்டாலே காதில் இன்பத் தேன் வந்து பாயும். கலர் டிவி ப்ரி என்றால் கவர்ன்மென்ட்டையே கையில் ஒப்படைப்பது.

12.கரண்ட் பில்லோ , டெலிபோன் பில்லோ முன்கூட்டியே கட்டும் பழக்கம் இல்லை, கடைசி நாள் பார்த்தால் கிலோமீட்டர் கணக்கில் முட்டி மோதும் க்யூ. பில் கட்டி முடித்து வெளியே வரும்போது... அடடா .. என்ன ஒரு வெற்றிப் புன்னகை.

13. தீபாவளியைக் கொண்டாவதில் பட்டையை கிளப்பும் தமிழன், பொங்கல் என்றால் கசக்கும்.

14. ஆரஞ்சு மிட்டாயுடன் ஆரம்பிக்கும் சுதந்திர தின விழா. டி.வி. யில் நச்சென்று நமீதா பேட்டி வரவேண்டும். ஜீன்ஸ் டி-ஷர்ட்டில் கொடி குத்தியிருக்கும் நமீதாவைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிப்பான்.

15. அர்ப்பணிப்பு குணம் அதிகம். FM எதிலாவது பாடல் கேட்டு டெடிகேட் பண்ணினால்தான் அவன் தமிழன், உங்களை ரொம்ப நாளா ட்ரை பண்றேன்"என்று வழிவதிலும் மன்னன்.

16.இரண்டு ரூபாய் டி யையும் அக்கவுண்ட் வைத்து குடித்துகொண்டு, உலக மேட்டர்களை அலசி ஆராய்வது.

17. பதினோரு மணிக்கே பார்களை முடி, பன்னிரண்டு மணி வரை அரசாங்கமே டாஸ்மார்க் நடத்தும் , அதற்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பான் தமிழ் " குடிமகன்."

18. ஊரில் அத்தனை நல்லதுக்கும் போஸ்டர் அடிப்பது. போஸ்டர்களில் " காட்பாதர்" ஆரோக்கியராஜ், "சீயான்" சீனி என தனக்குத் தானே பட்டம் வேறு.

19. சீரியல் நேரத்தில் பவர்கட் ஏற்பட்டால் தமிழ்ப் பெண்களுக்கு உலகமே இருண்டுவிடும். வீட்டுக்குள் முட்டிகொள்ளும் மாமியாரும், மருமகளும் , சீரியல் நடிகையின் கஷ்டத்தை பார்த்து மூக்கு சிந்துவது வழக்கம்.

20. நியூமராலஜி, ஜெம்மாலஜி, நேம்மாலஜி என அத்தனை அலர்ஜியிலும் புகுந்து புறப்படுவது. அதிர்ஷ்டக் கல் விற்பவன் ஏன் வேகாத வெயிலில் உட்கார்ந்திருக்கிறான் என் யோசிக்க நேரமில்லை.











http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by சிவா Fri Jan 15, 2010 12:13 pm

///ஆரஞ்சு மிட்டாயுடன் ஆரம்பிக்கும் சுதந்திர
தின விழா. டி.வி. யில் நச்சென்று நமீதா பேட்டி வரவேண்டும். ஜீன்ஸ்
டி-ஷர்ட்டில் கொடி குத்தியிருக்கும் நமீதாவைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர்
வடிப்பான்///

ஈகரை தமிழனை தானே சொல்றீங்க!!
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Icon_lol


தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Fri Jan 15, 2010 12:40 pm

21.லிப்ட் கேட்பதில் ஆரம்வித்து , ஜந்து , பத்துகெல்லாம் தலையை சொறிந்து நிற்பது தமிழக காவலர்களின் ஸ்டைல்.ஜெயலட்சுமி,முத்திரைத் தாள் மோசடி என காஸ்ட்லி விளையாட்டுகளும் உண்டு.

22. பால், காய்கறி, தண்ணீர் பிடிக்க என வீட்டுக்கு வெளியேயும் இப்போது நைட்டிதான் தமிழச்சிகளின் சீருடை. தோளில் துண்டு போட்டு கொண்டால் நைட்டி சுடிதார் ஆகி விடாது என்பதை அறியாத அப்பிராணிகள்.

23. பிரச்சனை என்றால் பொது இடங்களில் ரெளத்ரம் பழகுவது.
பஸ்களை எரிப்பது, கண்ணாடியை உடைப்பது என பொது சொத்தில் போகி கொண்டாடுவது. பிறகு , நாலைந்து நாட்கள் பயத்தில் தலைமறைவாகத் திரிவது.


24. அபிமான நடிகருக்கு கட் அவுட்க்கு கை காசு போட்டு பால் , பீர் அபிஷெகம் செய்து, தோரண்ம் போஸ்டார் ஒட்டி நாயகனை அரசியலுக்கு அழைப்பது.

25. " எங்கே அங்கிளுக்கு ரைம்ஸ் சொல்லு" என்று வருகிற விருந்தினர்களுக்கு தத்தம் குழந்தைகளை வேடிக்கை பொருளாக்குவது.
சமயம் பார்த்து " போதி குந்தமா!" என்று குழந்தை குண்டு வீச .. அத்தனை பேரும் அவமானத்தில் நெளிவது.


26.மருந்து கடைக்காரரையே மருத்துவராக மதிப்பது. அவர் தரும் மாத்திரைகளைக் கேள்வி கேட்காமல் விழுங்குவது.

27.நாலு காசு சேர்ந்ததும் முறுக்குச் சங்கிலி , முரட்டு மோதிரம் , வெள்ளையும் சொள்ளையுமாக லொக்கல் அரசியல்.. அப்படி , இப்படி மூக்கை நுழைத்து, டாடா சுமோவில் ரவுண்ட்ஸ் வந்து , தெரு நாய்களை பதறி ஒட வைப்பது.

28.முட்டு சந்து, மூத்திர சந்து , இருட்டு சந்து என எல்லா இடங்களிலும் காதல் வளர்ப்பது. காதலிக்க இடமே இல்லையா தமிழ்நாட்டில்.

29. " இது நாய்கள் மட்டுமே சிறுநீரி கழிக்கும் இடம்" என்று சுடு சொல்லில் எழுதியிருந்தாலும் " நாய் நன்றியுள்ள பிராணிதானேப்பா" என்று ஜிப்பை இறக்குவான்.

30. போலிச் சாமியாரிடம் குழந்தை வரம் கேட்டு நிற்பது . ஃபைனான்ஸ் , தேக்கு மரம் , ஊட்டி ரிஸார்ட் என விதம்விதமாக ஏமாந்தாலும் ..." இவன் ரொம்ம்ம்ப நல்லவன்டா"


Last edited by வை.பாலாஜி on Sat Jan 16, 2010 7:31 pm; edited 2 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Fri Jan 15, 2010 1:08 pm

31. " பேசிக்கலி நான் குட் மேன் . பட் டென்ஷன் வந்தா ரப் ஆகிருவேன் என கூச்சமே இல்லாமல் தமின்கிலிஷ் பேசுவது.

32. ப்பாரின் போனாலும் , யூரின் போனாலும் ட்ரீட் கேட்பான் தமிழன். குவாட்டார் அடித்து குப்புறப் படுத்தபடி மப்பில் வாழ்த்வது கெட்ட பழக்கம்.

33. " சார்! ஒன் மினிட் பென் ப்ளீஸ் " என அசடு வழியக் கேட்பது , கொடுத்த பேனாவைத் திரும்ப வாங்க தேவுடு காத்து நிற்பவனும் தமிழனே.

34. டம்பளரில் விரலை முக்கித் தண்ணீர் எடுத்து வரும் சர்வர், டீ கிளாஸ் , வியர்வைக் கையோடு பரிமாறப்படும் இட்லி. ஒட்டல் சுகாதாரம்,பதறடிக்கும் பயங்கரம்.

35. கீரி- பாம்பு சண்டையில் ஆரம்வித்து, சுனாமியே வந்தாலும் வட்டம் கட்டி வேடிக்கை பார்ப்பதில் எக்ஸ்ட்ரா இன்பம்.

36. பங்ச்சுவாலிட்டி" என்றால் இனமானத் தமிழனுக்கு எப்போதும் இம்சைதான்.ஏழு மணி அரசியல் கூட்டத்துக்கு எட்டு மணிக்குதான் கிளம்புவான் தொண்டன், அவனைவிட லேட்டாக வந்தால்தானே, அவர் தலைவர்.

37. யம்ம்மாடி ஆத்தாடி " போன்ற தத்துப்பித்து பாடல்களுக்கு குழந்தைகளை ஆடவைத்து அழகு பார்ப்பது.சினிமாவில் ஆபாசமாக இருக்கிறது" என போர் முரசு கொட்டும் தமிழன், அதே நடன்த்தை தங்கள் குழந்தை ஆடுவதை பெருமையாக பார்ப்பார்கள். கஷ்ட காலம்.

38. டைப்பீஸ், பிளாஸ்க் , வால்கிளாக் , நைட் லேம்ப் என தனக்கு வந்த பழைய பொருளையே அட்டையை மட்டும் மாற்றி கை மாற்றுவதில் தமிழனின் வழி தனி வழி.

39. மீட்டிங்கில் இருக்கும்போது செல்போன்ல " நான் யாருனு கண்டுபிடி" என புதிர் போடுவது, திடிர்னு வீட்டுக்கு வந்து சாவகாசமா பேசுறதுன்னு அன்பு தொல்லை அதிகம்.

40.நூறு , ஜநூறு கடன் வாங்கினால்தானே திருப்பிக் கேட்பார்கள் என்று என்று. அஞ்சு, பத்து என குறுந்தொகைகளாக வாங்கி குவிப்பது . புது டெக்னிக் ... அஹா..!


Last edited by வை.பாலாஜி on Sat Jan 16, 2010 7:39 pm; edited 2 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Fri Jan 15, 2010 1:32 pm

41.மேற்குறிப்பிட்ட மந்திரத்தை 10 நபர்களுக்கு நீ அனுப்பாவிட்டால் உன் தலை வெடித்து சிதறிவிடும்." போன்ற மூடநம்பிக்களை பரப்புவதில் அப்படியொரு பரவசம்.

42.நேத்த் ராத்திரி பூரா மஞ்சுளா வீட்டுக்கே வரலையாம்" என்று அதிகாலையிலேயே வம்பு பேசி கம்பு சுத்துவதில் இன்பம். ஏஞ்சலினா ஜோலி முதல் எதிர் வீட்டு ஆன்ட்டி வரை அவன் வம்புக்குச் சிக்காத பெண்களே இல்லை.

43. காரசாரமாய் பேரம் பேசுவது. எளிய வியாபாரிகளிம் பேரம் பெசி எட்டணா குறைத்தால்தான் திருப்தி வரும்.

44. ஓஸோனில் இருப்பதை விட பெரிய ஓட்டைகளோடு கொடிகளில் காயும் தமிழனின் உள்ளாடைகளைப்ப் பார்த்தாலே " உவ்வே தான்"

45. மெகா சீரியலில் ஒரு எபிஸோடில் " யெஸ் பாஸ் " சொன்னால் அவன்கூட எரியா வி.ஜ.பி தான்.

46. மாரியம்மனுக்கு கூழ் ஊத்துறோம். பழனிக்கு பாத யாத்திரை என ஆளாளுக்கு ஒரு " டொனேஷன் புக் தூக்கி வருவது.

47. கல்யாணத்துக்கு லவுட் ஸ்பீக்கரை அலறவிட்டு , தெருவையே சிவராத்திரி கொண்டாட வைப்பது.

48. 1975 காலண்டரின் அட்டை, கால் உடைந்துபோன கட்டை மேஜை. பித்தளை செம்பு , போன்றவற்றை வைத்துப் பாதுகாப்பது தமிழன் மரபு.

49.பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஆல்பம் நேத்து கேட்டேன்டா மாப்ளே ! ரிக்கி மார்டின் பிரிச்சு மேஞ்சுட்டான்டா! என்று அரைகுறை அறிவோடு அளப்பது.

----------------------------------------


50. என்னடா இவனுங்க , பொங்கலும் அதுவுமா , நம்மளயே பொங்க வைக்கிறாய்ங்களே !னு யோசிக்கிறீங்களா? தன்னைப் பத்தியே கிண்டல் அடிச்சாலும் , அதையும் ரசிச்சி சிரிக்குறதுதான் தமிழனுடைய தனிச சிறப்பு.




நன்றி -- ஆனந்த விகடன்.
(ஸ். கலீல்ராஜா, கி .கார்த்திகேயன்)


Last edited by வை.பாலாஜி on Sat Jan 16, 2010 7:35 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Fri Jan 15, 2010 2:22 pm

சிவா wrote:ஏம்பா, பைக்குன்னு உங்க காதில் கேட்டதுமே அடுத்து சிவான்னுதான் நினைக்கத் தோனுமா!!!

என்ன கொடுமை சார் இது????? தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. 440806


என்ன செய்றது " பைக்" னா உங்க ஞாபகம் தான் வருது. ஆனா கீழ விழுந்து கால உடைச்சிகிட்டத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by பாலாஜி Sat Jan 16, 2010 1:54 pm

சிவா wrote:///ஆரஞ்சு மிட்டாயுடன் ஆரம்பிக்கும் சுதந்திர
தின விழா. டி.வி. யில் நச்சென்று நமீதா பேட்டி வரவேண்டும். ஜீன்ஸ்
டி-ஷர்ட்டில் கொடி குத்தியிருக்கும் நமீதாவைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர்
வடிப்பான்///

ஈகரை தமிழனை தானே சொல்றீங்க!!
தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Icon_lol


இருக்கலாம். தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Icon_smile தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Icon_smile தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Icon_smile


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழர்களின் இன்னா 50-நகைசுவை. Empty Re: தமிழர்களின் இன்னா 50-நகைசுவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum