Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
2 posters
Page 1 of 1
வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
-
ஶ்ரீதட்சிணாமூர்த்தி சின் முத்திரையுடன் காட்சி தருகிறார்.
அந்த முத்திரை உணர்த்தும் தத்துவம் என்ன?
– எம்.ஹாலாஸ்ய சுந்தரம், திருச்சி
----------
சித் எனில் ஞானம். சின் முத்திரையுடன் காட்சியளிக்கும்
ஶ்ரீதட்சிணாமூர்த்தி, நமக்கு ஞானத்தை அளிப்பவர்.
குருவுக்கெல்லாம் குரு. `மௌன வ்யாக்யா’ என்பதற்கேற்ப,
தன்னுடைய மௌனத்தின் வாயிலாகவே சனகாதி
முனிவர்களுக்கு உயர்ந்த தத்துவத்தை விளக்கியவர்.
`வருத்தா: சிஷ்யா: குருர் யுவ’ என்றபடி அவர் இளமையாக
இருப்பினும் சிஷ்யர்கள் வயதானவர்களாக இருப்பினும்
அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் போக்கி ஆத்மா
ஸாக்ஷாத்காரத்தை அடைய அருளியவர்.
ஆணவம், கர்மம், மாயை என்ற மும்மலங்களை விட்டுவிடின்
ஜீவாத்மா, பரமாத்மாவை அடைய முடியும் என்னும் அறிவை
நமக்கு சின்முத்திரையின் வாயிலாக உணர்த்துகிறார்.
---------------------------
இறைவனை வழிபட பொதுவாக ஒரு திதி அல்லது
ஒரு நட்சத்திரத்தையே குறிப்பிட்டுச் சொல்வார்கள்.
ஆனால், முருகப்பெருமானுக்கு மட்டும் சஷ்டி, கிருத்திகை,
விசாகம் என்று மூன்று தினங்களைச் சிறப்பாகச் சொல்வது
ஏன்?
– எஸ். சங்கர் சுப்பு, பெங்களூரு
--------------
முருகு எனில் அழகு. எல்லாம் வல்ல பரம்பொருளான
பரமசிவனாரின் ஐந்து முகங்களையும் பராசக்தியின்
ஒரு முகத்தையும் தன்னிடையே கொண்டு ஆறுமுகக் கடவுளாக
அருள்கிறார்.
இதன் மூலம் பஞ்ச பூதங்களான சரீரம் மற்றும் அதை
இயக்கக்கூடிய உயிர் என்ற தத்துவ நிலையில், நாம்
மட்டுமல்லாது உலகம் முழுமையும் இயங்குவதற்குக் காரணமாக
திகழ்கிறார்.
அவருடைய ஆறு முகத்தின் அருளை பெறுதலின் பொருட்டு
சஷ்டி திதி சிறப்பாகக் கருதப்படுகிறது.
ஆறு கோணங்கள் உடைய முருகனின் யந்திரம் மிகுந்த
ஆற்றல் வாய்ந்தது.சஷ்டி எனில் ஆறு என்று பொருள்.
Last edited by ayyasamy ram on Wed Mar 24, 2021 6:52 pm; edited 1 time in total
Re: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
-
முருகன்
அவர் தேவர்களைக் காக்கவும் அசுரர்களை அழிக்கவும் வைகாசி
மாதம் விசாக நட்சத்திரத்தில் உதித்தார். அதனால் விசாக
நட்சத்திரம் அன்று வேலவனை வழிபடுவது மிகவும் சிறப்பு.
முருகப்பெருமான் சிவபெருமானின் தேஜோ ரூபமான சக்தியினின்று
அம்பிகையின் மூலம் வெளிப்பட்டு, கங்கையினால் பாதுகாக்கப் பட்டு,
கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரால் பராமரிக்கப்பட்டு வளர்ந்தார்.
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால்
‘க்ருத்திகா சூனவே நம:’ என்று சிறப்பாக போற்றப்படுகிறார்.
எனவே, மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் வடிவேலனை
வழிபடுவது சிறப்பு.
சிவாகமங்களில் குறிப்பாக ‘குமார தந்த்ரம்’ என்னும் உபாகமத்தில்
முருகப்பெருமானின் வழிபாடுகள் சிறப்பான முறையில்
குறிப்பிடப் பட்டுள்ளன. திருவிழாக்களில் தீர்த்த நாளாக சஷ்டி, விசாகம்,
கிருத்திகை, பௌர்ணமி, மாத நட்சத்திரம் ஆகியவற்றை முக்கியமாகக்
கொண்டு நிச்சயிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து மேற்கண்ட திதி மற்றும் நட்சத்திரங்களின் உயர்வினை
நாம் அறியலாம்.
-
-----------------------------------------
இறைவனின் திருநாமத்தைத் திரும்பத் திரும்ப கூறுவதால்
நம் மனம் அமைதி அடைந்துவிடுமா?
– எம்.வெங்கடேசன், சென்னை – 15
நாமம் எனில் பெயர். `இவ்வளவு ரூபாய் மதிப்புள்ளது’ என்று
அரசால் கொடுக்கப் பட்ட நாணயத்தைக் கொண்டு, அதன் மதிப்புக்குச்
சமமான பொருளை எப்படி வாங்கமுடியுமோ, அதுபோல இறைவனின்
திருநாமத்தைத் திரும்பத் திரும்ப கூறுவதால், இறையின் ஆற்றல் நம்மில்
நிறையும்.
அதன் மூலம் வெளி உலகின் தொல்லைகளினால் பாதிக்கப்படாமல்
மனம் அமைதி அடையும்.
-
-----------------------
Re: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
-
இறைவன்
-
நம் புராணங்களையும் பல மகான்களின் சரித்திரங்களையும்
உற்றுநோக்கினால், ஒரு விஷயம் நன்கு புலப்படும். புராணப்
புருஷர்களும் மகான்களும் முன்வினைப் பயனால் தங்களின்
வாழ்வில் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தாலும்,
அவர்கள் இடைவிடாது இறைவனைத் தொழுதிருக்கிறார்கள்.
அதன் பயனால் இந்த சம்சாரக் கடலைத் தாண்டி உன்னத
நிலையை அடைந்தனர் என்பதை உணரலாம்.
யோகம் என்பது மனத்தை அலைய விடாது ஒரு நிலைப்படுத்தும்
ஆற்றலே. அதில் பல வழிமுறைகளைக் கூறியிருக்கிறார்கள்.
அவற்றுள் ‘ஈச்வர பீரணீதானாத் வா’ என்று இறைவனிடம்
பக்தி கொள்வதால், அவர் நமக்கு அளவற்ற ஆற்றலை அளித்து,
நிறைவில் ஆனந்த நிலையான மோட்சம் அடைய அருள்வார்
என்ற வழிகாட்டுதல் உண்டு.
எனவே, இடைவிடாது இறைவனின் பெயரை தூய எண்ணத்துடன்
ஒருவர் ஜபிப்பதால் மனம் ஒருநிலையில் குவிந்து ஆனந்தம்
அடைவதை நாம் உணரலாம்.-
Re: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலத்தை
`பிரம்ம முகூர்த்த’ காலம் என்று சிறப்பித்துச் சொல்வது
ஏன்?
– எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம்
-----------------
நமது சனாதன தர்மம், ஓர் உயிர் பிறந்து இறக்கும் வரை செய்ய
வேண்டிய காரியங்களைக் காலத்தின் அடிப்படையில்
பட்டியலிட்டு அளித்திருக்கிறது. அதேபோல், ஒரு நாளில் நாம்
எந்த நேரத்தில் எந்த காரியங் களைச் செய்ய வேண்டும்
என்பதையும் தெளிவாகக் கூறியிருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக படையெடுப்பு களின் காரணமாகவும்,
சுதந்திரத்துக்குப் பின்னரும் சமய தத்துவத்தை நமக்குப்
போதிக்கக்கூடிய அமைப்புகள் சரிவர இயங்க வாய்ப்புகள்
இல்லாததாலும், நம்மிடையே பலரும் பெரியவர்களை விலகி
தனிக் குடும்பங்களாகப் பிரிந்தமையாலும், நம்மால்
முழுமையான முறையில் நமது சமயத்தில் கூறியவற்றைக்
கடைப்பிடிக்க முடியவில்லை.
எனினும், தற்காலத்தில் நிறைய மக்களுக்கு விழிப்பு உணர்வு
ஏற்பட்டிருப்பதாலும், விஞ்ஞான வளர்ச்சியினாலும் நல்ல
விஷயங் களைத் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு மனிதனும் காலை சூரிய உதயத்துக்கு முன்
விடியற்காலையில் சுமார் 4:30 மணி அளவில் எழுந்து,
இறைவனை நினைத்து அன்று செய்ய வேண்டிய காரியங்கள்
எவை என்று சிந்தித்து, பிறகு நீராடி இறைவனை வழிபட
வேண்டும்.
இந்தப் பிரம்ம முகூர்த்தத்தில் எவரொருவர் தன் நாளை
தொடங்குகிறாரோ, அவருக்கு அனைத்து நன்மைகளும்
கிடைக்கும். இந்த நேரத்தில் மனத்தில் ஒருவித ஸ்திரத்தன்மை
ஏற்பட்டு நமது எண்ணங்கள் உயர்வான நிலையில் இருக்கும்.
நம் முன்னோர்கள் உடல் ஆரோக் கியத்துடனும் மனத்தில்
சஞ்சலம் இல்லாமலும் வாழ்ந்தனர் என்றால், அதற்குக்
காரணம் அவர்கள் இந்த வைகறைப் பொழுதைச் சரியானப்படி
பயன்படுத்திக்கொண்டதே ஆகும்.
நாமும் வைகைறையைப் போற்றுவோம்.
————————————–=
சென்னை `காளிகாம்பாள் கோயில்’ சிவஶ்ரீசண்முக சிவாசார்யர்
நன்றி- சக்தி விகடன் (21-04-2020)
Re: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
நல்ல பதிவு
இருப்பினும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பகவான் படம்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சின் முத்திரையுடன் காட்சி தருகிறார்.
அந்த முத்திரை உணர்த்தும் தத்துவம் என்ன?
இதன் கீழ் வந்திருக்கலாம்.
@ayyasamy ram
இருப்பினும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பகவான் படம்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சின் முத்திரையுடன் காட்சி தருகிறார்.
அந்த முத்திரை உணர்த்தும் தத்துவம் என்ன?
இதன் கீழ் வந்திருக்கலாம்.
@ayyasamy ram
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1343292T.N.Balasubramanian wrote:நல்ல பதிவு
இருப்பினும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பகவான் படம்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சின் முத்திரையுடன் காட்சி தருகிறார்.
அந்த முத்திரை உணர்த்தும் தத்துவம் என்ன?
இதன் கீழ் வந்திருக்கலாம்.
@ayyasamy ram
-
தட்சிணாமூர்த்தி தலைப்பின் கீழ்
படம் பதிவேற்றப்பட்டது...
-
படம்:
நன்றி-விகடன்
Similar topics
» வைகறைப் பொழுதில் விழித்தேன் –சுசீலா பாடிய பக்தி பாடல்
» பிரியும் பொழுதின் சத்தியம்
» மாலை பொழுதின் மயக்கத்திலே - விமர்சனம்
» புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு: பகல் பொழுதின் நேரம் குறைவு
» புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு: பகல் பொழுதின் நேரம் குறைவு
» பிரியும் பொழுதின் சத்தியம்
» மாலை பொழுதின் மயக்கத்திலே - விமர்சனம்
» புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு: பகல் பொழுதின் நேரம் குறைவு
» புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு: பகல் பொழுதின் நேரம் குறைவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum