ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி

2 posters

Go down

பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி Empty பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி

Post by ayyasamy ram Fri 19 Mar 2021 - 12:30

பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி Ind-vs-eng
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இதையடுத்து
கடைசி டி20 போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 அகமதாபாத்
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ்
வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கடந்த 3 போட்டிகளிலும் முதலில் டாஸ் வென்ற அணியே போட்டியை வென்றது.
டி20 தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றி
பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

இந்த போட்டியிலும் இந்திய அணியின் ஓபனிங் மற்றும் டாப் ஆர்டர்
பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி பெவிலியன் திரும்பினர். ரோஹித் சர்மா (12),
கே.எல்.ராகுல் (14), கேப்டன் கோலி (1) ரன்னிலும் அவுட்டாகினர். ஆனால் சூர்யகுமார்
யாதவ் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி 31 பந்துகளில் 57 ரன்கள்
அடித்து அசத்தினார்.

இறுதி ஓவர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் தன் பங்கிற்கு அதிரடி காட்ட இந்திய
அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து
தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி Empty Re: பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி

Post by ayyasamy ram Fri 19 Mar 2021 - 12:31



இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய
இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் சறுக்கலாக அமைந்தது. பட்லர் 9 மற்றும்
டேவிட் மலன் 14 ரன்னில் அவுட்டாகினர். ஜோசன் ராய் அதிரடியாக விளையாடி
40 ரன்னில் அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேரிஸ்டோவ் இந்திய சுழற்பந்தை
துவம்சம் செய்து சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினர்.
வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 52 ரன்களை அள்ளிக் கெடுத்தார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் இங்கிலாந்திற்கு டஃப் கொடுக்க
ஸ்டோக்ஸ், கேப்டன் மார்கன் சர்துல் தாகூர் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
பரபரப்பாக சென்ற போட்டியில் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 23 ரன்கள் அடித்தால்
வெற்றி என்று இருந்தது. முதல் பந்தில் ஒரு ரன், அடுத்த பந்தில் பந்தில் பவுண்டரி, 3-வது
பந்தில் சிக்ஸர் என ஆர்ச்சர் விளாச போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சற்று பதற்றமடைந்த தாகூர் தொடர்ந்து இரண்டு வொய்டு வீசி
தேவையில்லாமல் 2 ரன்கள் கொடுத்தார். அடுத்து 4-வது பந்தில் ஒரு ரன் கொடுத்தார்.
இதையடுத்து 2 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ஜோர்டன் விக்கெட்டை
தாகூர் வீழ்த்தி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

ஒரு பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டதால் இந்தியாவின் வெற்றி உறுதியான நிலையில்
கடைசி பந்தில் ரன் ஏதும் கொடுக்காமல் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது. இதையடுத்து 2-2 என தொடர் சமநிலையில் உள்ளது.
கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி Empty Re: பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி

Post by T.N.Balasubramanian Fri 19 Mar 2021 - 17:15

கடைசி ஓவர் -6 பந்துகள் வீச எடுத்துக்கொண்ட நேரம் கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் என எண்ணுகிறேன்.வேறு யாருக்காவது குறிப்பாக எவ்வளவு நேரம் என கூறமுடியுமா?
சூர்யகுமார் யாதவ் அவுட் சந்தேகத்துக்குரிய முறையில்முறையில் இருந்தது. பந்தை குவித்து பிடிக்காமல் கவிழ்த்தி பிடித்து தரையில் பட்டதை அள்ளி எடுத்தார்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி Empty Re: பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பரபரப்பான கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது
» கடைசி ஓவர் வரை பயம் காட்டிய கொல்கத்தா: தில்லி த்ரில் வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
» மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா
» பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum