ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/07/2022
by mohamed nizamudeen Today at 7:15 am

» மாநிலங்களவை எம்பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா!
by ayyasamy ram Today at 5:44 am

» தமிழ் புக்
by kadhaikalam Today at 5:43 am

» நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது
by Dr.S.Soundarapandian Yesterday at 9:32 pm

» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’
by Dr.S.Soundarapandian Yesterday at 9:26 pm

» 'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை!
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» பார்த்திபன் படத்திற்கு 3 சர்வதேச விருது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:59 pm

» அது ஒரு அழகிய கலாம் காலம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» மது மாமிசம் சாப்பிடுபவர் தானே காளி: குதர்க்கம் பேசிய பெண் எம்.பி., மீது வழக்கு
by T.N.Balasubramanian Yesterday at 4:42 pm

» தந்தையும் மகளும் போர் விமானத்தில் பறந்தனர்
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» அடி மலர்ந்து நுனி மலராத பூ – விடுகதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:21 pm

» பழைய நூல் தேடல்-2
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:16 pm

» பழைய நூல் தேடல்
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:06 pm

» உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ?
by RAJA MUTTHIRULANDI Yesterday at 3:47 pm

» டி பிளாக் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» மஞ்சு வாரியரை பாராட்டிய மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» மகாபாரதம் கதையை படமாக்கும் ராஜ்மவுலி
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» நித்திரையின் தூதுவன் இவன் – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» வாயால் வருவதே வம்பு – வெண்பா
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» பத்தும் பேச வைக்கும் பணம - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:46 am

» நிலவே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:44 am

» விபத்தில்லாமல் கடக்கணும்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» கடைசி நம்பிக்கை….(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:42 am

» நேசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:41 am

» மருட்டும் புத்தம்புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதல் அழிவதில்லை – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:33 am

» பாப்பா…..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:46 am

» 5,318 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து! – ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!
by ayyasamy ram Yesterday at 9:43 am

» சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின்!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:31 am

» ரூ.489 கோடி செலவில் வர்ணம் பூசப்படுகிறது, ஈபிள் கோபுரம் துருப்பிடித்ததா?
by ayyasamy ram Yesterday at 5:28 am

» சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று
by ayyasamy ram Yesterday at 5:23 am

» மஹா., பாடப் புத்தகத்தில்புதுக்கோட்டை மாணவி
by ayyasamy ram Yesterday at 5:06 am

» உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:59 am

» புத்தம் வீடு நாவல் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 am

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Tue Jul 05, 2022 11:23 pm

» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 8:00 pm

» வானதி ஸ்ரீனிவாசன் --கமல் ஹாசன் --விக்ரம்.
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:54 pm

» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:51 pm

» ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி;
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 6:20 pm

» மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 4:52 pm

» 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 3:14 pm

» ஹவ் ஓல்ட் ஆர் யூ - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:53 pm

» உயரே - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:51 pm

» மிலி - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:50 pm

» டேக் ஆஃப் - பெண்களுக்கான திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:48 pm

» 5 சுந்தரிகள் -பெண்களுக்கான படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:46 pm

» கொரோனா வைரஸ் தொற்று,அதிகளவில் பரவி வருகிறது
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 9:20 am

» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 7:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி

2 posters

 இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி Empty இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி

Post by ayyasamy ram Mon Mar 15, 2021 5:52 pm

 இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி M.D.Parthasarathy
-
(21-09-1910- 1963-)
------------------------------------
அபார திறமை இருந்தும், குடத்தில் இட்ட விளக்காக இருந்து,
மறைந்துவிடுகிறார்கள் பல மேதைகள். அவர்களில் ஒருவர்தான்
திரு.எம்.டி.பார்த்தசாரதி.

ஜெமினி பிக்சர்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளராகப்
பணியாற்றியவர் இவர். ஜெமினியின் தயாரிப்புகளான
மதன காமராஜன், பக்த நாரதா, ஞான சௌந்தரி, மங்கம்மா சபதம்,
தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி, பாதுகா பட்டாபிஷேகம்,
சக்ரதாரி, அபூர்வ சகோதரர்கள் போன்ற பல படங்களுக்கு
இசையமைத்தவர் இவர்தான்.

‘நந்தனார்’ படத்தில் நந்தனாராகவே வாழ்ந்திருந்தார்
எம்.எம்.தண்டபாணி தேசிகர்; ‘ஔவையார்’ படத்தில்
ஔவையாராகவே மாறிவிட்டார் கே.பி.சுந்தராம்பாள்.

இருவரையும் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த இந்த
இரண்டு படங்களுக்கும் இசை அமைத்திருந்தவர்
பார்த்தசாரதிதான். இந்தப் படங்களின் இசை அந்தக் காலத்தில்
பலராலும் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது

. ‘சந்திரலேகா’வில் கர்னாடக முறையிலான இசையை
பார்த்தசாரதியும், மேற்கத்திய பாணியிலான இசையை
எஸ்.ராஜேஸ்வரராவும் அமைத்திருந்தனர்.

அந்தப் படத்தில் ‘நாட்டியக் குதிரை’ பாட்டு செம ஹிட்!
பார்த்தசாரதி இசைமைத்த அந்தப் பாட்டில் குதிரை பாடுவது
போல் குரலை மாற்றிக் கட்டைக் குரலில் பாடியுள்ளவர்
அவரேதான்.
---
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76322
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி Empty Re: இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி

Post by ayyasamy ram Mon Mar 15, 2021 6:13 pm

இவரது இசையாற்றலுக்கு ஓர் உதாரணம்... சக்ரதாரி படத்தில் கோராகும்பராக நடிப்பார் பழம்பெரும் நடிகர் நாகையா. பானை வனையும் தொழில் செய்பவர் பக்த கோராகும்பர். நாராயண பக்தியில் திளைத்து, பாண்டுரங்கனை நினைத்துப் பரவசத்தில் பாடியபடியே மண்ணை மிதித்துக் குழைத்துக்கொண்டு இருப்பார் நாகையா. அப்போது அவரது குழந்தை தவழ்ந்து, அவரது காலின் கீழ் வரும். பக்தியில் மெய்ம்மறந்திருந்த கோராகும்பர், குழந்தை வந்தது தெரியாமல், அதையும் சேர்த்து மிதித்துக் குழைத்து மண்ணோடு மண்ணாக்கிவிடுவார். குழந்தையின் தாய் பதறி ஓடி வந்து, இந்தக் காட்சியைக் கண்டு, மயக்கமுற்று விழுவதாக ஸீன்.

குழந்தையின் தாயாக நடித்தவர் புஷ்பவல்லி. குறிப்பிட்ட அந்தக் காட்சியில், அவர் நிஜமாகவே மயங்கி விழுந்துவிட்டார். அதை முதலில் நடிப்பு என்று நினைத்த படப்பிடிப்புக் குழுவினர், நீண்ட நேரம் அவர் எழுந்திருக்காததால், பின்னர் அவரை அவசரமாகத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சையளித்து, மயக்கம் தெளிவித்தனர்.

எழுந்ததும் புஷ்பவல்லி சொன்னார்... “இந்தக் காட்சியின்போது ஒலித்த உருக்கமான இசையும் பாடலும் என்னை என்னவோ செய்தது. காட்சியின் தீவிரமும் அபூர்வமான இசையும் சேர்ந்துகொண்டதில், உண்மையாகவே எனக்கு மயக்கம் வந்துவிட்டது!”

தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் புலமை மிக்கவர் பார்த்தசாரதி. இவர் இசையமைப்பில் வெளியான கடைசி படம் ‘நம் குழந்தை’. இதில் பணியாற்றிய இசைக்குழுவினருக்குப் படத் தயாரிப்பாளரால் சம்பளம் கொடுக்க முடியாமல் போக, பார்த்தசாரதி தமது சொந்தப் பணத்திலிருந்து எடுத்து அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தந்தார்.

1958-ல் திரைத் துறையை விட்டு விலகி, பெங்களூர் ஆல் இண்டியா ரேடியோவில் மெல்லிசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகச் சேர்ந்து பணியாற்றினார் பார்த்தசாரதி. அங்கே பற்பல குறிப்பிடத்தக்க இசை நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்து, 1963-ல் அமரர் ஆனார்.
-
-ரவிபிரகாஷ் (உங்கள் ரசிகன்)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76322
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி Empty Re: இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி

Post by T.N.Balasubramanian Mon Mar 15, 2021 6:23 pm

கேள்வி படாத தகவல். நன்றி.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32631
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12089

Back to top Go down

 இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி Empty Re: இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை