புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_m10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_m10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10 
72 Posts - 54%
heezulia
மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_m10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_m10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_m10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_m10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_m10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_m10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_m10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_m10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_m10மைசூர்பாகு !  - சிறு கதை ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைசூர்பாகு ! - சிறு கதை !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 01, 2021 9:24 pm

மைசூர்பாகு !

"சாப்பிட வரேளா"? , வெளி யூர் டூர் முடித்து வந்து, குட்டி தூக்கம் போட்டு, குளித்து, அறையில் ரிப்போட் எழுதிக் கொண்டு இருந்த என்னை மனைவி கூப்பிட்டாள்,

"மணி என்ன ஆச்சு"? , "அட ஒன்னு ஆயுடுத்தா? , இதோ வரேன், அத்தை எங்கே",என்றேன். (தந்தையின் அக்கா)

"அத்தையும் உங்களுக்குத்தான் டைனிங் டேபிள் கிட்ட காத்து ண்டு இருக்கா" என்றாள் ,.

சுருக் என்றது, "வயசானவா ஏன் காத்து இருக்கணும்" , பரபரப்பாகப் போனேன், அத்தை அங்கே உட்கார்ந்து இருந்தார்கள்.

கணவரை இழந்த பிராமணப் பெண் கோலம், மெலிந்த உடல் வாகு அல்ல.

பக்கத்து செயரில் உட்கார்ந்தேன், அவர் கண்கள் என்னை வாஞ்சை உடன் பார்த்தன,

"ரொம்ப அலச்சலோடா.... இனளச்சு, கறுத்துட்டையே," நான் எப்போது டூர் போய் வந்தாலும் அவர் பாசக் கண்களுக்கு இப்படித்தான் தெரியும்.

பொதுவாக பேசிக் கொண்டு சாப்பிட்டோம். . அவர் பார்த்துப் பார்த்துப் பறிமாறினார். ,

பிறகு இருவரும் ஹாலில் இருந்த பலகை ஊஞ்சலில் போய் உட்கார்ந்தோம். அப்போது மனைவி ஒரு தட்டில் சில மைசூர் பாக் களை வைத்து எங்களுக்கு நடுவில் வைத்தாள்.

நான் கவனிக்காதது போல் இருந்தேன்.

அத்தை ஒரு விள்ளல் வாயில் போட்டுக் கொண்டு, "ஆஹா, பேஷ்,பேஷ்.. ரொம்ப நன்னா வந்திருக்கு, மீனாட்சீ உனக்கு அமிர்த ஹஸ்தம் தான் டீ.. " என்று, சொல்லிய படியே என்னை ஓரக்கண்ணால் பார்த்தார், நான், கவனிக்காதது போல் இருந்தேன்

நேரடியாகவே கேட்டு விட்டார், " நான் தான் உனக்கு இது பிடிக்கும்னு சொன்னேன். அவளும் பாவம் நூறு தடவை பண்ணியாச்சு, நாங்கள் தான் தின்னு தீக்கறோம்,, நீ விரலால் கூட தொடறது இல்லை, அப்படி என்னடா வைராக்கியம்? , மறக்கலையா? எல்லாம் தான் ஆயாச்சே, இன்னும் என்ன வைராக்கியம் ? என்றாள்.

மறப்பதா? அது எப்படி....? ..

. என் மனம் பின் நோக்கிப் பயணம் போனது.

ஆறு வயதிலேயே என் அப்பா அம்மா காலம் சென்று விடவே. , என்னை எடுத்து வளர்த்தது என் அத்தை அத்திம்பேர் தான், அவாளுக்கும் குழந்தைகள் இல்லை. ரொம்பவும் செல்லம், அது என்னை கெடுத்து, குட்டிச்சுவர்,தறுதலை ச பிடிவாதக்காரன் ஆக்கி வைத்திருந்தது.

அத்திப் பேர் டவுணில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்தார். , "கோபால கிருஷ்ணன் பிரமணாள் காபி சாப்பாடு ஹோட்டல்," பெயர் அளவு கூட ஹோட்டல் பெரிசு இல்லை. கையை கடிக்காமல் நடந்து கொண்டு இருந்தது,

ஹோட்டலில் ஸ்பெஷல். ஐய்டம் மைசூர் பாகு தான். .அது . போடும் நாள் நெய் வாசம் தெரு மூக்கை துளைக்கும். சுமாரா பிசினஸ் ஆகும். மத்த அயிட்டம் சுமார் தான்.

அந்த நாளில் நான் கண்டிப்பா, அங்கே இருப்பேன், சின்ன முதலாளி தோரணையில், அது எனக்கு உயிர். பாதி அதை நானே தின்று தீர்ப்பேன், கிட்டத்தட்ட தினமும். ஒவ்வொரு முறையும்

அத்திம்பேர் , பாவம், சாது, அப்பிராணி, சமத்து போராது,

திடீர் என ஒரு கூட்டம் வந்தது, "பெயர் பலகை எடு" என்றது, பாத்திரம், furniture உடைத்தது, , தார் பூசியது, கண்ணாடி பீரோவில் இருந்த மைசூர்பாகு, காராபூந்தி, தின்றது, இறைத்தது, கல்லா சில்லறை அள்ளியது, சென்றது,, அத்திம்பேர், நடு நடுங்கி விட்டார்,

இதற்கு இடையில், புது போட்டா, போட்டிகள், . பக்கத்திலேயே பெரிய ஹோட்டல், இங்கு ஈ ஓட்டல், கடன், அத்தை நகைகள் மார்வாடி கடைக்கு, திட்டம் இட்ட தாக்குதல் கள், பிசினஸ் படுத்துவிட்டது. , வளர்த்துவானேன். ஹோட்டல் திவால். கைமாறியது,

அத்திம் பேர் மனம் உடைந்தார், ஒரு நாள் எங்கேயே சுற்றி விட்டு இரவு வந்தவர், படுத்தவர் . , மறு நாள் எழ வில்லை. நானும் அத்தையும் தனித்து விடப்பட்டோம். ,

ஆனாலும் அத்திம்பேர் ஒரு நல்ல காரியம் செய்து இருந்தார், நாங்கள் குடி இருந்த ஸ்டோர் பகுதி யை லீஸ் போல பண்ணி வைத்து இருந்தார். .

கூரைக்கு வழியாச்சு, , பூவா.? அன்ன விசாரம், அதுவே விசாரம். பெரும் பாடு.

அத்தை எப்படியோ, மிச்ச, சொச்ச நகை நட்டை , வித்து, கடன் உடன் வாங்கி சமாளித்து வந்தாள், என்னை ஸ்கூலிலும் சேர்த்து இருந்தாள், 9 ம் கிளாஸ் . ஏழ்மைதான்

நான் இருந்தது யதார்த்தம் தெரியாத உலகம், வேளைக்கு கொட்டிக் கொள்வது,, ஊர் சுற்றுவது.

இதற்க்கு இடையில், அந்த எங்கள் பழைய ஹோட்டலை தினமும் கடந்து போக வேண்டும், இப்பொது உடுப்பி காரா யாரோ சொந்தக்காரர். " ஹோட்டல் சப்னா" சுமாரான பிசினஸ். .

இப்பவும் மெயின் அயிட்டம் மைசூர் பாகுதான். அடிக்கடி போடுவா , நெய் வாசனை மூக்கைத் துளைக்கும் உள்ளே போய், சாப்பிட வேண்டும் என்ற ஆத்திரம் பீறி வரும். . வெளியே நின்று ஏக்கத்தோடு பார்ப்பேன்.

தொடரும்......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 01, 2021 9:25 pm

உடனே எங்கள் வீடு போய் அத்தை இடம் கத்து வேன். "எத்தனை மாசம் ஆச்சு அத்திம் பேர் போனதில இருந்து வாய்க்கு வறர்ச்சியா ஸ்வீட்டே இல்லை, எனக்கு வேணும். வாங்கி தா" , என குதிப்பது, , சாப்பிடாமல் இருப்பது, பாத்திரங்கள், புக்ஸ் எறிவது. , இப்படி பல.

அத்தை பொறுமையா, "நாளைக்கு வாங்கி தரேன், நாளைன்னிக்கு ," என சமாதானம்.... , இப்படியே சில நாட்கள். ஆனால் அது என் கைக்கு, வாய்க்கு வரவில்லை. , என் அழிச்சாட்டியம் எல்லை மீறீயது போலும்.

"அவர், உனக்கு மைசூர் பாக்கு தானே வேணும், நாளைக்கு சாயும் காலம் அது இருக்கும்" , என்றார்,

மறுநாள், காலை ஸ்கூல் கிளம்பும் போதே. அத்தை இடம் கண்டிப்பான குரலில் , "சாயும் காலம் அது வேணும், இல்லை இன்னா, நான்." ..
என ஒரு, மிரட்டு மிரட்டி விட்டுப் போனேன்.

மாலை வீடு வந்தததும், ஆத்திரத்துடள் அத்தையிடம்," "இருக்கா"? எனக் கத்தி னேன்,, அவர் இரு, உட்காரு என கை காட்டி விட்டு தடுப்பு உள்ளே போய், ஓரு பேப்பர் பொட்டலம் கொண்டு வந்து என் முன் வைத்தார், அதில் தங்கப்பாளங்கள் போல் இரண்டு முழு மைசூர் பாக்கு கள்.

பல மாதங்களுக்கு பிறகு, காணாதது கண்டது போல், ஆவலாதி போல் விழுங்கினேன். இப்படியே, தினமும். , இல்லாத நாட்களில் . என் ருத்திர தாண்டவம். ஒருநாள் இரண்டு நாள் இல்லை, கிட்டத்தட்ட ஒரு மாதம்,

அன்றைக்கு ஸ்கூல் மதியம் தீடீர் லீவ், யாரோ தலைவர் இறந்து விட்டால் போல,. வீடு வந்தேன், வரும் போதே மைசூர் பாகு ஞாபகம் தான், எங்கள் போர்ஷன் பூட்டி இருந்தது, பையுடன் வெளியே தின்று இருந்தேன்,

பக்கத்து ஆத்து ஐயங்கார் மாமி," அத்தை யா,? அவா " சப்னா ஹோட்டல் "போயிருக்கா" என்றார், எனக்கு மகிழ்சி, மைசூர் பாகு வாங்கத்தான், இருக்கும்.

ஹோட்டல் நோக்கி ஓடினேன். . . அங்கு அத்தை இருக்கும் சுவடு கூட இல்லை. அப்போது என்னைப் பார்த்த , அத்திம்பேர் காலத்தில் இருந்து வேலை பார்க்கும் சர்வர் மாமா, "அத்தையை தேடி வந்தையாடா அம்பி? , பின் பக்கம் போய் பாரு" என்றார்,

அங்கு போக ஒரு வழி உண்டு, போனேன், அது ஒரு அரை இருட்டு, ஜன்னல் இல்லா ரூம் .டின் ஷீட் கூரை, வெளிச் சூடை விட 20 மடங்கு அதிகச் சூடு,

அங்கே , ஒரு, திகு, திகு என எரியும் பெரிய அடுப்பு, அதை ஒட்டி ஒரு பிரம்மாண்ட கல் உரல், ஆள் உயரக் குழவி,

அதன் அருகே அமர்ந்து,, தன் வெள்ளை புடவை வியர்வையில் தெப்பமாக நனைந்து இருக்க, மடியில் உள்ள துண்டினால், முகத்திலும். கைகளிலும் வியர்வை சேராமல் துடைத்தபடி. ,

அம்பாரமான மாவை, ஒரு கையால் தள்ளிய படி, , அந்த ஆள் உயர குழவி யை மற்றொரு ஒரு கையால் சுழற்றி அரைத்தபடி, முகம் செக்கச் சிவக்க, வியற்க்க விறு விறுக்கப் , மூச்சு வாங்க "மாவு அரைக்க". அத்தை படும் பாட்டை, அலஸ்தையை..... , அந்த எதிர் பாராத காட்சியை, பார்த்த எனக்கு, அதிர்ச்சி,

துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது. வேகமாக அவர் முன் போய். நின்றேன், நிமிர்ந்து பார்த்த அத்தனைக்கும் ஷாக், சுதாரித்த்க் கொண்டு, " நீயா, சித்த இரு இதைய்ம் அரைச்சட்டு வரேன்" என இன்னும் ஒரு அம்பாரத்தை காண்பித்தார்.

"இப்பவே வரணும்" என ஒரு கத்து கத்து னேன். ஹோட்டலே ஸ்தம்பித்தது, கல்லாவில் இருந்து, உடுப்பிக்காரர் வந்தார். , புரிந்து கொண்டார், "நீங்க கிளம்புங்கோ," என்றார், அத்தை தயங்கினார்," ஓ புரிஞ்சுது", என, உள்ளே போன அவர், ஒரு சிறிய பாக்கெட் உடன் வந்து, அதை அத்தை கையில் கொடுத்த படி, " தினமும் மைசூர்பாகு அம்பிக் குத்தானா " , என்றார்,

ஏனொ, எனக்கு, உடல் மேல் திராவகம் வீசியது போல் இருந்தது இந்தப் பாடு பட்டா எனக்கு அத்தை மைசூர் பாகு கொண்டு வறா? சீ, நான் ஒரு மனுஷ ஜன்மமா?

வீட்டை நோக்கி ஓடினேன், பின்னாலே அத்தையும் ஓட்டமும் நடையுமா , உள்ளே, அத்தையை கட்டிக் கொண்டு அடக்க முடியாமல் அழுதேன், ஏதும் பேச த் தெரியவில்லை.. சமாதானப்படுத்த மைசூர் பாகு ஊட்டினார் அது , வேம்பாப் கசந்தது, தூ, துப்பினேன்,

அவருக்கு புரிந்தது, " கொஞ்ச நாள் தானே டா , அம்பீ, நீ நன்னா படிச்சு டாக்டர் ஆனப்புறம் அத்தையை ராணி மாதிரி பாத்துப்பை யே," என்றார். , இரவு முழுவதும் அழுதேன், உறுதி எடுத்தேன்,

பிற்காலத்தில் டாக்டர் ஆகா விட்டாலும், மருத்துவம் சம்பந்தப்பட்ட தொழிலில் சேர்ந்து, அத்தையை, ராணி போல் பார்த்துக் கொண்டேன்.

ஆனால் மைசூர்பாகு மேல் வந்த வெறுப்பு போக வே இல்லை. இவை எல்லாம் ஒரு நிமிடத்தில் மனதில் ஓடி மறைந்தன.

அவருக்கும் புரிந்து,," அது தான் ஆயாச்சே, , இவள் என்ன பாவம் பண்ணினாள் ? ,ஆயிரம் பேர் ஆயிரம் நன்னாயிருக்கு சொன்னாலும் , புருஷனோடு ஒரு சொல்லுக்குச் ஈடாகுமா. டா?" என்றார்,

அதுவும் நியாயம் தானே, என்று தோன்றியதை, என் முக இறுக்கம் தளர்ந்ததில் கண்ட அத்தை,

ஒரு சிறு விள்ளல், மைசூர் பாகை மனைவி கையில் கொடுத்து, என் வாயில் போடச் சொன்னார், மனைவி யும் அவர் கை யை யும் அவள் கை மேல் வைத்துக் கொண்டு இருவரும் கொடுப்பது போல் அதை என் வாயில் இட்டாள் , , இப்போது, அது எனக்கு தேனாய் இனித்தது.

ஒரு வாட்ஸப் பகிர்வு ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 03, 2021 8:49 pm

இனிப்பான பண்டத்தை பற்றிய கசப்பான நெருடல் நிகழ்ச்சி, இனிதாக முடிந்தது
மைசூர்பாக்கிற்கும் மைசூருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 1:39 pm

மைசூர்பாகு !  - சிறு கதை ! 103459460 மைசூர்பாகு !  - சிறு கதை ! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 09, 2021 9:40 pm

T.N.Balasubramanian wrote:இனிப்பான பண்டத்தை பற்றிய கசப்பான நெருடல் நிகழ்ச்சி, இனிதாக முடிந்தது
மைசூர்பாக்கிற்கும் மைசூருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1342035
@T.N.Balasubramanian
முதன் முதலில் இந்த இனிப்பை மைசூரில் தான் செய்தார்களாம் ஐயா, அந்த நன்றியைக் காட்டவே இந்தப் பெயர் வைத்தார்களாம்..... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 09, 2021 9:41 pm

ayyasamy ram wrote:மைசூர்பாகு !  - சிறு கதை ! 103459460 மைசூர்பாகு !  - சிறு கதை ! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1342069

நன்றி அண்ணா.... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 10, 2021 5:04 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இனிப்பான பண்டத்தை பற்றிய கசப்பான நெருடல் நிகழ்ச்சி, இனிதாக முடிந்தது
மைசூர்பாக்கிற்கும் மைசூருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1342035
@T.N.Balasubramanian
முதன் முதலில் இந்த இனிப்பை மைசூரில் தான் செய்தார்களாம் ஐயா, அந்த நன்றியைக் காட்டவே இந்தப் பெயர் வைத்தார்களாம்..... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1342364

ஆஹா ............இப்பிடியே விட்டா மைசூர் ரசமும் அங்குதான் முதன்முதலில் செய்தார்கள் என்று சொல்லுவீர்கள் போலிருக்கே.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 11, 2021 9:04 pm

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1342402

ஆஅம்மாம்....ஆமாம்.....மைசூர் ரசம், மைசூர் போண்டா ...இப்படி லிஸ்ட் நீளும் ஐயா... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 12, 2021 11:52 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இனிப்பான பண்டத்தை பற்றிய கசப்பான நெருடல் நிகழ்ச்சி, இனிதாக முடிந்தது
மைசூர்பாக்கிற்கும் மைசூருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1342035
@T.N.Balasubramanian
முதன் முதலில் இந்த இனிப்பை மைசூரில் தான் செய்தார்களாம் ஐயா, அந்த நன்றியைக் காட்டவே இந்தப் பெயர் வைத்தார்களாம்..... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1342364

ஆஹா ............இப்பிடியே விட்டா மைசூர் ரசமும் அங்குதான் முதன்முதலில் செய்தார்கள் என்று சொல்லுவீர்கள் போலிருக்கே.
மேற்கோள் செய்த பதிவு: 1342402

ஆஅம்மாம்....ஆமாம்.....மைசூர் ரசம், மைசூர் போண்டா ...இப்படி லிஸ்ட் நீளும் ஐயா... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1342496

மைசூரின் பெயர் மைசூரு என்று மாறிய பிறகும்
இந்த பாகும்,ரசமும்,போண்டாவும் பெயர் மாறாமல்
மைசூர் என்பதுடன் ஒட்டியிருப்பது சட்டவிரோதம் இல்லையா?
நீங்களாவது உங்கள் பதிவுகளில் மைசூரு ரசம் மைசூரு பாகு
மைசூரு போண்டா என்று போடவும்.

@krishnaamma

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 12, 2021 9:20 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இனிப்பான பண்டத்தை பற்றிய கசப்பான நெருடல் நிகழ்ச்சி, இனிதாக முடிந்தது
மைசூர்பாக்கிற்கும் மைசூருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1342035
@T.N.Balasubramanian
முதன் முதலில் இந்த இனிப்பை மைசூரில் தான் செய்தார்களாம் ஐயா, அந்த நன்றியைக் காட்டவே இந்தப் பெயர் வைத்தார்களாம்..... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1342364

ஆஹா ............இப்பிடியே விட்டா மைசூர் ரசமும் அங்குதான் முதன்முதலில் செய்தார்கள் என்று சொல்லுவீர்கள் போலிருக்கே.
மேற்கோள் செய்த பதிவு: 1342402

ஆஅம்மாம்....ஆமாம்.....மைசூர் ரசம், மைசூர் போண்டா ...இப்படி லிஸ்ட் நீளும் ஐயா... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1342496

மைசூரின் பெயர் மைசூரு என்று மாறிய பிறகும்
இந்த பாகும்,ரசமும்,போண்டாவும் பெயர் மாறாமல்
மைசூர் என்பதுடன் ஒட்டியிருப்பது சட்டவிரோதம் இல்லையா?
நீங்களாவது உங்கள் பதிவுகளில் மைசூரு ரசம் மைசூரு பாகு
மைசூரு போண்டா என்று போடவும்.

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1342517

ஹா...ஹா..ஹா.... கண்டிப்பாக ஐயா !...... புன்னகை.
.
.
.
இங்கு இதப்போல கலகலப்பக பேசி எத்தனை நாட்கள் ஆகின்றது? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக