ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்...

Go down

பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... Empty பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்...

Post by ayyasamy ram Thu Mar 04, 2021 7:52 am


பி.ஜி.எஸ்.மணியன்
-இந்து தமிழ் திசை (28 -02-2020)
--------------------------



பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... 541791
எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரை இசையில் 
சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது.

அறுபதுகளின் இறுதிவரை கனமான குரல் வளம் கொண்ட 
பாடகர்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வந்த திரையிசை, 
எழுபதுகளில் புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி 
போன்றவர்களின் வருகையால் மென்மையான குரல்வளம் 
நிறைந்த பாடகர்களின் வசம் வந்தது.

இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் 
பிரதிபலிக்க ஒரு எஸ்.பி.பி. கிடைத்தார். அமைதியான 
நதியோட்டமாக மனத்தை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்
பட்டார். இந்த இருவரின் ஆளுமை திரையிசையை வசப்படுத்திக்
கொண்ட நேரத்தில், மலையாளத் தேசத்திலிருந்து மற்றுமொரு 
மயக்கும் குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட வந்தவர்தான் 
பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன்.

1944-ம் வருடம் மார்ச் மாதம் மூன்றாம் தேதி எர்ணாகுளத்தில் 
உள்ள ரவிபுரம் பகுதியில் பத்ராலயம் என்ற சிற்றூரில் ரவிவர்மா 
கொச்சனியன் தம்புரான் - பளியத்து சுபத்ரா குஞ்சம்மாள்
 தம்பதிக்கு இவர் மூன்றாம் மகனாகப் பிறந்தார்.

குடும்பம் இரிஞ்ஞாலக்குடாவுக்குக் குடிபெயர்ந்ததால் மாணவப் 
பருவம் இரிஞ்ஞாலக்குடாவிலேயே கழிந்தது. 1958-இல் மாநில 
இளைஞர் திருவிழாவில் பதினான்கு வயது ஜெயச்சந்திரன் 
சிறந்த இளம் மிருதங்கக் கலைஞராகச் சிறப்பிக்கப் பட்டார். 

அதே மேடையில் சிறந்த இளம் கர்நாடக இசைக் கலைஞர் விருது 
பெற்றவர் பதினெட்டு வயது வாலிபரான கே.ஜே.ஜேசுதாஸ்.

முதல் பாடல்

பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடிய ஜெயச்சந்திரனுக்குக் 
கிடைத்த பாராட்டுகளும் பரிசுகளும் அவருடைய இசை ஆர்வத்தை 
அதிகரிக்கச் செய்தன. முதல் வாய்ப்பு இருபத்து மூன்றாம் வயதில் 
‘உத்யோகஸ்தா’ என்ற மலையாளப் படத்தில் எம்.எஸ்.பாபுராஜ் 
இசையில் ‘அநுராக கானம் போலே’ என்ற பாடல். இவருடைய 
திறமையை மேலும் புடம்போட்டுத் தங்கமாக ஒளிரவைத்த 
பெருமை இசையமைப்பாளர் தேவராஜனையே சேரும்.



அந்த ஏழு நாட்கள்

பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... 15828649112958

வசீகரக்குரலால் சேட்டன்களைக் கட்டிப்போட்ட ஜெயச்சந்திரனுக்கு 
மெல்லிசை மன்னர் இசை அமைத்த ‘பணி தீராத வீடு’ படத்தில் 
பாடிய ‘சுப்ரபாதம்’ பாடல், கேரள மாநில அரசின் சிறந்த பாடகருக்கான 
விருதைப் பெற்றுத் தந்தது. 

1973-இல் சத்யா மூவிஸின் ‘மணிப்பயல்’ படத்தில் ‘தங்கச்சிமிழ் போல் 
இதழே’ பாடலின் மூலம் ஜெயச்சந்திரனின் குரலைத் தமிழ் ரசிகர்களுக்கு
 அறிமுகப்படுத்தினார் எம்.எஸ். விஸ்வநாதன்.

“அந்த இணையற்ற கலைஞர் என் கிட்டே இருந்த திறமையை 
அழகா வெளியே கொண்டு வந்தார். சொல்லப்போனால் எனக்கு முதல் 
முதலாகக் கிடைச்ச அவார்டே ‘பணி தீராத வீடு’ படத்துலே அவர் இசையில் 
பாடிய ‘சுப்ரபாதம்’ பாட்டுக்குத்தான்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் 
ஜெயச்சந்திரன். 

1976-ல் வெளிவந்த பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஜெயச்சந்திரன் 
வாணி ஜெயராமுடன் பாடிய ‘ஆடி வெள்ளி தேடி வந்த’, ‘வசந்த கால நதிகளிலே’ 
ஆகிய பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றன.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... Empty Re: பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்...

Post by ayyasamy ram Thu Mar 04, 2021 7:56 am

பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... 15828649442958

-



மாஞ்சோலைக் கிளிதானோ..

புதுமை இயக்குநர் தரின் ‘அலைகள்’ படத்தில் ஜெயச்சந்திரன் 
மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய கவியரசரின்
 ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ பாடலில் ஜெயச்சந்திரனின் 
குரலில் தென்படும் வசீகரம் மனத்தை வருடி சாந்தப்படுத்தும்.

1975-ல் ‘பெண்படா’ என்ற மலையாளப்படம். ஏ.ஆர்.ரஹ்மானின் 
தந்தை ஆர்.கே. சேகர் இசையமைப்பாளர். இந்தப் படத்தில்
 ‘வெள்ளித் தேன்கிண்ணம் போல்’ என்ற பாடலை ஜெயச்சந்திரன் 
பாடினார். இளையராஜாவின் இசையில் முதல்முதலாக
 ‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தில் பாடிய ‘சித்திரச் செவ்வானம் 
சிரிக்கக் கண்டேன்’ பாடலும், ‘கிழக்கே போகும் ரயி’லின் 
‘மாஞ்சோலைக் கிளிதானோ’ பாடலும் பெரு வெற்றிபெற்று 
முன்னணிப் பாடகர் வரிசையில் ஜெயச்சந்திரனைச் சேர்த்தன.

‘ஒருதலை ராகம்’ படத்தில் ‘கடவுள் வாழும் கோவிலிலே,
’ ‘இரயில் பயணங்களில்’ படத்தில் ‘வசந்த காலங்கள்’ ஆகிய 
பாடல்கள் டி.ராஜேந்தரின் இசையில் ஜெயச்சந்திரன் தொடுத்த 
வெற்றிக்கோலங்கள். கே. பாக்யராஜின் சிறந்த திரைக்கதை 
அமைப்புக்கான படங்களில் முதலிடத்தில் இருக்கும்
 ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ பாடலை 
எஸ். ஜானகியுடன் இணைந்து வெகு அற்புதமாகப் பாடி அசத்தி 
இருப்பார் ஜெயச்சந்திரன்.

‘ராஜ’ கீதங்கள்

‘கடல் மீன்கள்’ படத்தில் ‘தாலாட்டுதே வானம்’ என்று 
எஸ். ஜானகியுடன் சேர்ந்து இசையலைகளை மனத்தில் பாயவைத்தார் 
ஜெயச்சந்திரன்.

பாடல்களுக்காவே பெரிய வெற்றிபெற்ற ‘வைதேகி காத்திருந்தாள்’ 
படத்தில் கதாநாயகன் பாடுவதாக அமைந்த மூன்று பாடல்களையுமே 
ஜெயச்சந்திரனைத்தான் பாடவைத்தார் இளையராஜா. 

‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’ , ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’, 
‘காத்திருந்து காத்திருந்து’ மூன்றுமே வெற்றிக்கனியை ஜெயச்சந்திரனின் 
மடியில் போட்ட முத்தான பாடல்கள்.


கிழக்கே போகும் ரயில்

‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் ‘பூவை எடுத்து’,
 ‘கொடியிலே மல்லியப்பூ’ (கடலோரக் கவிதைகள்) ஆகியவை 
ஜெயச்சந்திரனின் குரல் தனித்தன்மையோடு வெளிப்பட்ட பாடல்கள். 

ரஜினிகாந்த்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஆறிலிருந்து 
அறுபதுவரை’ படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’ பாடலில் சொந்த
பந்தங்களால் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதனின் மனநிலையைத் தனது 
குரலால் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன்.

இதே போல் ‘ரிஷி மூலம்’ படத்தில் குற்ற உணர்வு நீங்கி பாரம் அகன்ற 
மனிதனின் உணர்வை ‘நெஞ்சில் உள்ள காயம் ஒன்று’ பாடலில் 
வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். எம்.ஜி.ஆரின் கடைசிப் 
படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் மெல்லிசை 
மன்னரின் இசையில் வாணிஜெயராமுடன் பாடிய 
‘அமுதத் தமிழில் எழுதும் கவிதை’ என்ற துவிஜாவந்தி ராகப் பாடல் 
இனிய தேனமுது. என்றாலும் இளையாராஜாவின் இசையில் இவர் 
பாடிய அனைத்தும் ‘ராஜ’கீதங்கள் எனலாம்.

புதிய தலைமுறைக்கும்..

துல்லியமான உச்சரிப்பு, பொருளுணர்ந்து பாவநயத்தோடு குரலால் 
மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு பிரகாசித்தார் 
ஜெயச்சந்திரன். பி. சுசீலாவுடன் பாடிய ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ 
(‘நானே ராஜா நானே மந்திரி’) பாடலுக்கு மயங்காதவர் யாருமே இல்லை. 
மனோஜ் கியான் இசையில் ‘இணைந்த கைகள்’ படத்தில்
 ‘அந்திநேரத் தென்றல் காற்’றை எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து வரவழைத்தார்.

விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் 
சுஜாதாவுடன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடலில் ஜெய் சேட்டனின் 
குரல் வசீகரம் சொல்லாமலே புரியும்.

‘மன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் ‘சிவசங்கர சர்வ சரண்ய விபோ’ 
பாடலுக்காக 1975-ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் 
ஜெயச்சந்திரன். ஜேசுதாஸ் சம்பந்தப்பட்ட மறக்க முடியாத நிகழ்வும் இவர் 
வாழ்வில் உண்டு. தனது பதினான்காவது வயதில் முதல்முதலாக எந்த 
ஜேசுதாஸ் சிறந்த இசைக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேடையில் 
சிறந்த மிருதங்க இசைக் கலைஞராக ஜெயச்சந்திரன் கௌரவிக்கப்பட்டாரோ 
அதே ஜேசுதாஸின் பெயரால் ஆண்டுதோறும் இசைத்துறையில் சாதனை புரிந்த 
கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்வரலயா கைரளி யேசுதாஸ் விரு’தை 
முதல்முதலாக - இரண்டாயிரமாண்டில் - ஜேசுதாஸின் கையாலேயே பெற்றுக்
கொண்டார் ஜெயச்சந்திரன். சாதனைகள் தொடரட்டும் ஜெயேட்டா !
-
---------------------
படங்கள் உதவி: ஞானம்
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... Empty Re: பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்...

Post by ayyasamy ram Thu Mar 04, 2021 7:57 am

”தங்கச்சிமிழ் போல் இதழோ……… (மணிப்பயல்), 
“மந்தார மலரே மந்தார மலரே……..” (நான் அவனில்லை), 
“ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக்கட்டி……..” 
(திசை மாறிய பறவைகள்)
, ”பாலாபிஷேகம் செய்யவோ……..”(முத்தான முத்தல்லவோ), 
என்னோடு என்னன்னவோ ரகசியம்……… (தூண்டில் மீன்), 
“காலத்தை வெல்லும் இந்த காதல்……” (தாய் வீட்டு சீதனம்), 
“சின்னப்பூவே மெல்லப்பேசு உந்தன் காதல் சொல்லிப்பாடு…” 
(சின்னப்பூவே மெல்லப்பேசு), 

“சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்……..” (
காற்றினிலே வரும் கீதம்), 

”மாஞ்சோலைக்கிளிதானோ……….” (கிழக்கே போகும் ரயில்),

”வசந்தகால நதிகளிலே……….”(மூன்று முடிச்சு), 
“கண்ணனின் சன்னதியில்…………” (ஒரு கொடியில் இரு மலர்கள்), 
போன்ற பல பிரபலமான பாடல்களைப் பாடியவர் 

குறிப்பாக மலையாள வாடையே அறவேயின்றி சுத்தமான 
தமிழில் பாடி புகழ் பெற்றவர் பி.ஜெயச்சந்திரன்.

இவரது தாய் மொழி மலையாளம். மலையாளத்துடன் தமிழ், 
கன்னடம், தெலுங்கு ஆகிய பல மொழிகளில் தொடர்ந்து பாடிக்
கொண்டிருந்தாலும், கொஞ்சம் கூட பந்தாவே இல்லாதவர் 
பி.ஜெயச்சந்திரன். இவர் பி.சுசீலாவின் தீவிர ரசிகர். 

பி.சுசீலாவின் நினைக்கத் தெரிந்த மனமே……, 
சொன்னது நீதானா……. பாடல்கள் இவரது உயிர். அது போல் 
எம்.எஸ்.விஸ்வநாதனைப் போல் ஒரு சங்கீத வித்வான் இனி 
பிறக்கப்போவதில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுபவர்.


நன்றி- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... Empty Re: பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்...

Post by ayyasamy ram Thu Mar 04, 2021 7:58 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... Empty Re: பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum