ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!!

Go down

வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Empty வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!!

Post by சதாம் Thu Jan 14, 2010 10:26 am










இந்த மானுட சமுகத்தில் வறுமை பல அவலங்களையும்,கொடுமைகளையும் அரங்கேற்றி ஒரு கொடிய நோய் போல பல நாடுகளிலும் சமூகங்களிலும் இன்னும் நீங்காமல் உள்ளது.


விளை நிலங்களில் பச்சை கட்டி வளரும் நிலையில் உள்ள பயிர் பச்சைகளில் ஒட்டுண்ணிகளும்,பூச்சிகளும்,பல வித நோய்களும் தாக்கி சீரழிப்பதை போல் ,வறுமை பல அவலங்களை மனித வாழ்க்கையில் திணிக்கிறது.


இளமையில் வறுமை கொடியது நாளைய நம்பிக்கைகளை வெகு தொடக்கத்திலேயே அழிக்கும் அந்த இளமையில் வறுமை கொடுமையிலும் கொடுமையே !. அந்த வறுமை சின்னசிறு மனதுகளில் ஏக்கத்தை ஏற்படுத்தி ,தாழ்வு கொள்ள செய்கிறது மேலும் ...

அது கனவுகளை சிதைக்கிறது...!


அளப்பரிய திறமைகளை முளையிலேயே அழித்து போடுகிறது...!


உணவுக்கு போராட்டம்...!


உடைக்கும் தங்கும் இடத்திற்கும் போராட்டம்..!

கல்வி மறுக்க படுகிறது ..மேலே படிக்க பொருளாதாரம் இல்லை!.மனித திறமைகள் முனை மழுக்க செய்விக்க படுகிறது.


ஆனால் செல்வம் கற்று கொடுக்கின்ற பாடத்தை காட்டிலும் வறுமை அருமையான பாடத்தை மனிதர்களுக்கு கற்று கொடுக்கும் ஆசானாக ..மிக சிறந்த ஆசானாக விளங்குகிறது.


அப்படி வறுமையின் ஊடே போராடி..வாழ்க்கையில் மனித தன்னம்பிக்கையை தடம் பதித்து காட்டியோர் பலர். அவர்களை நினைவு கூர்வதின் மூலம் இன்றைய சமுகத்தில் தன்னொளி பரவும்.வறுமையை வென்று சாதித்து வரலாற்றின் பக்கங்களில் தங்களையும் தாய் திரு நாட்டையும் உயர்த்தி பிடித்த... பிடிக்க இருக்கின்ற அனைவர்க்கும் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம் !


கர்ம வீரர் என அழைக்கப்படும் தன்னலமற்ற உண்மையான மக்கள் தலைவர் காமராஜர்.இளைய வயதில் பள்ளிஇணைந்த முதல் வருடத்திலேயே தனது தந்தையை இழந்தார்...குடும்பம் வறுமையில் தத்தளித்தது ...இளைய காமராஜரின் நிலையை நினைத்து பாருங்கள் அருமையானவர்களே..தாயின் சொற்ப தங்க அணிகலன்கள் வட்டி கடையில் வைக்கப்பட்டு குடும்பம் நடத்த வேண்டிய அவல நிலைமை..!!


காலம் மாறியது கர்மவீரர் காமராஜர் தனது அயராத உழைப்பால் தமிழகத்தின் முதல்வர் ஆனார். ஏழைகளுக்கு கல்வியை இலவசம் ஆக்கினார்.இன்றளவும் மக்களுக்காக மக்களின் பொருட்டு வாழ்ந்த அற்புத தலைவர் காமராஜர்.

ஏனெனில் வறுமை அவருக்கு வாழ்க்கை இன்னதென்று விளங்க செய்தது .






வாழும் சரித்திரம் திரு. அப்துல் கலாம் அவர்கள் ராமேஸ்வரத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார் .தனது பள்ளி படிப்பு செலவிற்கு வீடு வீடாக அவர் பத்திரிக்கை போட வேண்டிய நிலைமை. கலாம் அவர்கள் தோய்ந்து போகவில்லை, கனவுகளை ,நம்பிக்கையை இழக்கவில்லை மாறாக உழைத்தார் ,தாய் திரு நாட்டின் கொவ்ரவம் காக்கும் உயரிய பதவிகளை அலங்கரித்தார்..வின்ஞாநியானார்..நாட்டின் ஜனாதிபதியாகி பல இளைய தலைமுறையினருக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறார்.

உண்மையில் செல்வம் கற்று கொடுக்கும் பாடத்தை காட்டிலும் வறுமை அற்புத பாடத்தை மனிதர்களுக்கு கற்று கொடுக்கிறது.அது தன்னம்பிக்கை,கடின உழைப்பு,மனித வாழ்கையின் மதிப்பு சகலத்தையும் கொடுத்து மனிதனை மாமனிதனாக உயர்த்தி காட்ட வல்லதாய் இருக்கிறது !






தெரு விளக்கு வெளிச்சத்தில் கல்வி பயின்று .மேல் நாட்டினறேல்லாம் வியந்து பாராட்டிய வியத்தகு அறிவு திறன் கொண்ட பேரறிஞர் அண்ணா ஒரு சாதரண ஏழை குடும்பத்தில் பிறந்தவரே.

தமிழ் நாட்டின் முதல்வராகி "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என கூறியதன் முழு அர்த்தத்தையும் வேறு யார் அறிவர் ?.வாழும் கடைசி காலம் வரை எளிமையோடு வாழ்ந்து வரலாற்றை தனதாக்கி கொண்டார்




எம்.ஜி.ஆர் நாம் எல்லாம் அறிந்த வசிகர தலைவர்..ஏழைகளின் பால் அதிக அன்பு கொண்டதால் மக்கள் திலகம் என அழைக்கபட்டார். தந்தையின் மறைவின் பிறகு அரிதாரம் பூசி நடிக்க வந்தார். தனது புத்தி கூர்மையால்,வசிகரத்தால் மக்களின் இதயங்களில் இடத்தை பிடித்து தமிழகத்தின் முதல்வராகி ..பசி தீர்க்கும் மத்திய உணவு திட்டத்தை அமல் படுத்தினார்.இறக்கும் வரை ஏழை பங்காளனாய் வாழ்ந்தார் எம்.ஜி.ஆர்.






பண்ணயபுரத்தில் ஞானதேசிகனாய் தோன்றிய இளையராஜா ஒரு கிராமத்து ஏழை குடும்பத்தில் பிறந்தார். வறுமை விரட்டியதில் இவரின் இசை செல்வம் இப்போது பட்டிதொட்டிகளில் எல்லாம் ஒலித்தபடி உள்ளது.சிம்பொனி அமைத்து..திருவாசகம் பாடி மனித மனதினை வருடி கொடுக்கும் இசை ஞானி வறுமையை கண்டு அஞ்சிடவில்லை!






அமெரிக்க ஜனாதிபதி அப்ரகாம் லிங்கனை அறியாதவர் யாருமில்லை.அடிமை தனத்தை ஒழிக்க அரும்பாடுபட்ட லிங்கன்.கல்வி அறிவட்ட்ற ஏழை விவசாய பெற்றோர்க்கு மகனாக தோன்றிய வரே !

அமெரிக்க தொழில் மேதை ராக் பெல்லர் வசதியட்ட்ற ஒரு ஏழை குடும்பத்தில் தோன்றியவர்தான் ,படிக்க வசதியற்று வளர்ந்த ராக் பெல்லர் உழைப்பை மூலதனமாக கொண்டு அமெரிக்க பெரும் பணக்காராக மாறினார்.





இந்தியாவை மற்ற உலக நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கின்ற வகையில்.ரிலையன்ஸ் தொழிற்சாலையை அமைத்தவர் அம்பானி அவர்கள்.சாதாரன மனிதராக முன்னுறு ரூபாய் சம்பளத்தில் யேமென் நாட்டில் உழைத்தவர்..இன்று இந்தியாவின் பொருளாதாரத்தை அளகிடகூடிய வகையில் உள்ளது ரிலையன்ஸ் குழுமத்தின் வணிகம்.

இப்படி நீண்ட பட்டியல் சரித்திரம் முழுக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.

வறுமை கனவுகளை சிதைக்கும் ஆனால் துவண்டு விடாதீர்கள்.மாறாக கடின உழைப்பினால் மீண்டும் பலருக்கு அந்த கனவுகளை நீங்கள் ஏற்படுத்த கூடும் !!

வறுமையால் பண்பட்டு மேலே வந்தவனே உண்மையில் வாழ்கையை உண்மையாக வாழ்ந்தவனாகி போகின்றான்! .அவனுக்கு வாழ்கையின் வலியும்,உழைப்பின் அர்த்தமும் தெரியும்!

வளரும் பருவத்தில் வறுமை கொடியது எனினும் அது பல சரித்திர புருழர்களை உருவாக்கி கொடுத்து சென்றுள்ளது.

உழைப்பு...!

ஒழுக்கம்..!

தன்னம்பிக்கை..!

சோதனையிலும் மனம் தளராத நிதானம் ..!

இவை எல்லாம் வறுமை எனும் நோய்க்கு மருந்தாகும்.
சதாம்
சதாம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum