ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல்

2 posters

Go down

’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல் Empty ’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல்

Post by ayyasamy ram Mon Mar 01, 2021 1:44 pm

-வி.ராம்ஜி
இந்து தமிழ் திசை
---------------------


1979-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 7-ம் தேதி ‘அகல்விளக்கு’
வெளியானது. இந்தப் படத்தில் ஓர் சுவாரஸ்யம்.
அரசியல்வாதியாக நடித்திருந்தார் விஜயகாந்த்.


‘பணக்காரனைப் புறக்கணிக்க முடியுது. ஆனா பணத்தைத்தான்
புறக்கணிக்கமுடியல’ என்பன போன்ற வசனங்கள் ரசிகர்களின்
கவனத்தை ஈர்த்தன. ஆனாலும் ‘அகல்விளக்கு’ ஜொலிக்கவில்லை.
ஆனால் பாடல்கள் கொண்டாடப்பட்டன.


‘அகல்விளக்கு’ படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.


இந்தப் படத்தில் விஜயகாந்த் - ஷோபாவுக்கு ஒரு டூயட் பாடல் உண்டு.
‘அகல்விளக்கு’ பட டைட்டிலையும் படத்தையும் ரசிகர்கள்
மறந்திருக்கலாம். ஆனால், விஜயகாந்த் - ஷோபா நடித்த இந்த டூயட்
பாடலை இன்னும் மறக்கவே இல்லை. மறக்கவே முடியாத பாடலாக
அமைந்துவிட்டது.


கே.ஜே.யேசுதாஸின் காந்தக் குரலும் எஸ்.பி.ஷைலஜாவின் மயக்கும்
குரலும் சேர்ந்து இந்தப் பாடலை நம் மனதுக்கு நெருக்கமான
பாடலாகக் கொண்டு சேர்த்தது. அப்படி மனதுக்கு நெருக்கமாகி,
மனதிலேயே தங்குவதற்குக் காரணம்... இளையராஜாவின் இசை.


‘ஏதோ நினைவுகள்... கனவுகள்... மனதிலே மலருதே’ என்ற பாடல்.
பாடலின் துவக்கத்திலேயே ஜேசுதாஸின் குரலில்...
‘ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்’ என்ற ஹம்மிங்கும் அதையடுத்து
‘ஆஆஆஆஆஆஆஆ.... ஆஆஆஆஆஆஆஆஆஆஆ....
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ’ என்ற ஷைலஜாவின்
குரலில் ஹம்மிங்கும் வர.. அந்த ஹம்மிங்கிலே ஜிம்மிக்ஸ் செய்திருப்பார்
இளையராஜா.


பாடலின் இடையே தபேலா விளையாடும். கிடார் பேசிக்கொண்டிருக்கும்.
புல்லாங்குழலால் வித்தைக் காட்டிக்கொண்டிருப்பார்.


‘மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும் ம்ம்ம்ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும்நாள் வேண்டும்


என்று பாடிவிட்டு அப்படியே ஹைபிட்ச்சுக்கு மெல்ல மாறுவார்
ஷைலஜா.
’தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்
சேரும் நாள் வேண்டும்’ என்று குழைவும் வேண்டுதலுமாய்
பாடியிருப்பார்.


அதேபோல்,
‘நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம் ம்ம்ம்ம்ம்ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


என்று பாடிவிட்டு, ஜேசுதாஸின் குரல் மெல்ல ஹைபிட்ச்சுக்குச்
செல்லும்.


காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும் ஏக்கம் உள்ளாடும்
என்று நம் மனதைக் கொள்ளையடித்திருப்பார்.
பிறகு பாடலின் நிறைவில்...


‘ஏதோ நினைவுகள்’ என்பார் ஜேசுதாஸ். ‘கனவுகள்’ ஷைலஜா
பாடுவார். ஆளுக்கொரு வார்த்தை பாடவைத்து இன்றைக்கும்
நம் நினைவுகளில் பாடும்படி, பாடிக்கொண்டே இருக்கும்படி
செய்துவிட்டார் இளையராஜா.


‘ஏதோ நினைவுகள்... கனவுகள்’ பாடல் நம் செவிகளுக்குள்
நுழைந்தது 1979 டிசம்பர் 7-ம் தேதி. அதாவது ‘அகல்விளக்கு’
ரிலீசான நாள். இந்தப் பாடல் வந்து 42 வருடங்களாகிவிட்டன.


கொசுறு தகவல் :
ஷைலஜாவை, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் ‘சோலைக்குயிலே’
பாடல் மூலம் அறிமுகப்படுத்தினார் இளையராஜா.
இந்தப் படம் 79-ல் மே 5-ம் தேதி வெளியானது. இந்தப்படத்தையும்
ஆர்.செல்வராஜ் இயக்கியிருந்தார்.


விஜயகாந்துக்குக் கிடைத்த முதல் ஹிட் பாடலை இப்போது
ஒருமுறை கேட்டுப் பாருங்கள். முடிந்தால், பாடல் காட்சியைப்
பாருங்கள். பெல்பாட்டமும் பட்டைபட்டனுமாக, அடர்த்தி முடியும்
கிருதாவுமாக எண்பதுகளின் வித்தியாச விஜயகாந்தையும்
ரசிக்கலாம்.
----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல் Empty Re: ’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல்

Post by ayyasamy ram Mon Mar 01, 2021 1:44 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல் Empty Re: ’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல்

Post by krishnaamma Mon Mar 01, 2021 6:37 pm

நல்ல பாடல் அண்ணா.... ’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல் 3838410834 ’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல் 3838410834 ’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல் 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல் Empty Re: ’ஏதோ... நினைவுகள்... கனவுகள்’ பாடலுக்கு 42வயது; விஜயகாந்தின் முதல் ஹிட் பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum