ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு

Go down

2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு Empty 2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு

Post by ayyasamy ram Tue Feb 09, 2021 6:02 am

2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு 1532938287-4502
-
2021ஆம் ஆண்டுக்கான பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருதுக்கு தேர்வு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலை டெல்லியில் இன்று நடந்த மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பிபிசி நியூஸ் அறிவித்துள்ளது.


புகழ்பெற்ற விளையாட்டு செய்தியாளர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் பிபிசி ஆசிரியர் குழுவினரால் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பங்கேற்பதற்காக, இதற்கான வாக்கெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது.

பிபிசி ஸ்போர்ட்ஸ் இணையதளத்திலும், பிபிசியின் இந்திய மொழி சேவைகளின் தளங்களுக்கும் சென்று பொதுமக்கள் வாக்களிக்கலாம்.



விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 5 போட்டியாளர்கள்:
டூட்டி சந்த்,
விளையாட்டு: தடகளம்
கோனேரு ஹம்பி, விளையாட்டு: செஸ்
மனு பாக்கர், விளையாட்டு: ஏர் கன் சுடுதல்
ராணி, விளையாட்டு: ஹாக்கி
வினேஷ் போகாட், விளையாட்டு: ஃப்ரீஸ்டைல்
மல்யுத்தம்

"இந்த நிலையற்ற காலங்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய, சிறந்த பெண் விளையாட்டு நட்சத்திரத்திற்கு வாக்களித்து, இந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பெண் விளையாட்டு வீராங்கனை விருது பெறுபவரைத் தேர்வு செய்வதில் உலகெங்கிலுமுள்ள மக்களின் பங்கேற்பை எதிர்நோக்கி உள்ளேன்," என்று பிபிசியின் இந்திய மொழிகள் சேவையின் தலைவர் ரூபா ஜா தெரிவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு Empty Re: 2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு

Post by ayyasamy ram Tue Feb 09, 2021 6:04 am

2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு 1611030989-7911
-
"இந்த கௌரவம் மிக்க விருதின் இரண்டாம் ஆண்டை கொண்டாட உள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 'ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான்' மற்றும் 'இந்தியன் சேஞ்மேக்கர் சீரீஸ்' ஆகியவற்றின் மூலம் திறமைமிக்க, மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீராங்கனைகளின் இணையதள இருப்பை மேம்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று பிபிசியின் ஆசியா-பசிபிக் பிராந்தியத்துக்கான தொழில் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் இந்து சேகர் சின்கா தெரிவித்தார்.

இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஐந்து இறுதிப் போட்டியாளர்களும் இதுகுறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


டூட்டி சந்த்: "இந்த விருதுக்கான போட்டியாளர்களின் இறுதிப் பட்டியலில் இந்த ஆண்டு மீண்டும் எனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இந்திய மக்களிடையே இப்போது விளையாட்டு குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை பார்ப்பது சிறப்பானதாக இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு என்று ஒரு பெயரை உருவாக்கி கொண்டு பொருளீட்டி, நாட்டையும் பெருமைப்பட வைக்கிறார்கள்."
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு Empty Re: 2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு

Post by ayyasamy ram Tue Feb 09, 2021 6:06 am

2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு 1585386789-2785
-
மனு பாக்கர் :
"இது என் சொந்த மக்களிடையே இருந்து வரும் பாராட்டு என்பதால் எனக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. என் செயல்திறனை பாராட்டுவது மற்றும் கடின உழைப்புக்கு அங்கீகாரம் தருவது எனக்கு மிகவும் மதிப்புமிக்கது. என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

கோனேரு ஹம்பி:
"இந்த விருதை பெறுவதை விடவும் இதற்கான பரிந்துரை பட்டியலில் என் பெயர் இடம் பெறுவது எனக்கு பெரிய வெற்றியாகும். விளையாட்டில் வெற்றி அல்லது தோல்வி குறித்து சிந்திப்பதை விடவும் போட்டியிடுவதே மிகவும் முக்கியமானது. அதுவும் இத்தகைய பெருந்தொற்று காலத்தில் இது மிகவும் அவசியமானது.

பிபிசியின் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் உலகெங்கிலுமுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களுடன் சேர்ந்து கொண்டாடவும் எங்களுக்கு வாய்ப்பை வழங்கும்."

ராணி:

"பிற தடகள வீரர்களைப் போலவே எங்களது அணியும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற கனவுகளுடன் உள்ளது. நாங்கள் இந்தியாவில் 130 கோடி மக்களை ஒலிம்பிக்ஸில் பிரதிநிதித்துவப்படுத்துவோம். பயிற்சி நேரங்களில் எங்களது நூறு சதவீத உழைப்பை தருகிறோம். எங்களால் மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்த முடிந்தது என்பதை இறுதியில் நாங்கள் பெருமையுடன் நினைக்கவேண்டும்.தங்களது சாதனைகளுக்காக பெண் தடகள வீரர்கள் அங்கீகரிக்கப்படுவது ஊக்குவிப்பதாக இருக்கிறது. தங்கள் உடல்நலம் மற்றும் மனநலத்திற்காக அனைத்து பெண்களும் குறைந்தது ஒரு விளையாட்டையேனும் தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."

வினேஷ் போகாட்:

"மல்யுத்தத்தைக் கீழானதாக பார்த்து 'பெண்களை என்ன செய்ய வைக்கிறீர்கள்' என்று எங்கள் ஊரில் உள்ளவர்கள் இதற்கு முன்பு கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இப்பொழுது பெண் குழந்தைகள் பிறந்தால் ஒரு பிரச்சனை இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களை மல்யுத்த வீராங்கனையாக மாற்றுவோம் என்று கூறுவதுடன் மட்டுமல்லாமல் அதை உண்மையாகவும் செய்கிறார்கள். எங்களது பதக்கங்கள் மூலம் இந்த மாற்றத்தை நாங்கள் கொண்டுவந்தோம். பெண் குழந்தைகளின் வாழ்வில் எங்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியுமானால், அது ஒரு பழக்கத்தை விட எந்த வகையிலும் எனக்குக் குறைந்ததல்ல."

வாக்களிப்பு குறித்த விவரங்கள்: பொதுமக்கள் பின்வரும் இணைய தளங்களில் இலவசமாக வாக்களிக்கலாம். பிபிசி நியூஸ், பிபிசி இந்தி, பிபிசி மராத்தி, பிபிசி குஜராத்தி, பிபிசி தமிழ், பிபிசி தெலுங்கு.


இந்திய நேரப்படி பிப்ரவரி 24ஆம் தேதி 23:30 மணிக்கும், கிரீன்விச் நேரப்படி 18:00 மணிக்கும் இந்த வாக்கெடுப்பு நிறைவடையும்.
பிபிசியின் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதின் வெற்றியாளர் மார்ச் 8ஆம் தேதி அன்று மெய்நிகர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படுவார். வாழ்நாள் சாதனையாளர் மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர் ஆகியோருக்கான விருதும் இதன்போது அறிவிக்கப்படும்.


பிபிசி ஸ்போட்ஸ் ஹேக்கத்தான் (பிப்ரவரி 18): பிபிசி 'ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான்' எனும் நிகழ்வையும் அறிவித்துள்ளது. இதில் ஆங்கிலம் மற்றும் ஆறு இந்திய மொழிகளில், 50 இந்திய விளையாட்டு வீராங்கனைகள் குறித்த 300 விக்கிப்பீடியா கட்டுரைகள் புதிதாக பதிப்பிக்கப்படும் அல்லது ஏற்கனவே இருப்பவை மேம்படுத்தப்படும்.

டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 13 கல்வி நிறுவனங்களில் இதழியல் மாணவர்கள் பிபிசி ஹேக்கத்தான் நிகழ்வில் பங்கேற்பார்கள் .

இந்த நிகழ்வில் என்ன நடக்கும் என்பதை தெரியப்படுத்தும் வகையில் பாரா -பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை மானசி ஜோஷியின் ஆங்கில விக்கிப்பீடியா பக்கம் மேம்படுத்தப்பட்டதுடன், இந்தியில் அவருக்கு என்று புதிதாக ஒரு விக்கிப்பீடியா பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்றைய செய்தியாளர் சந்திப்பில் காட்டப்பட்டது. பிப்ரவரி 18ஆம் தேதி அன்று ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான் நிகழ்வு பிபிசியின் இந்திய மொழிகள் சேவைகளின் சமூக ஊடகங்களில் நேரடியாகக் காட்டப்படும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு Empty Re: 2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு

Post by ayyasamy ram Tue Feb 09, 2021 6:06 am

2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு 1611993249-7713
-
தி இந்தியன் சேஞ்ச் மேக்கர்ஸ்: இந்தத் தொடர் வெவ்வேறு இந்திய மாநிலங்களில் இருந்து, தடைகளை மீறி தங்கள் சொந்த முயற்சியால் மாற்றத்தை ஏற்படுத்திய நம்பிக்கையளிக்கும் ஐந்து விளையாட்டு வீராங்கனைகளின் கதைகளை படம் பிடிக்கிறது. இவர்களில் இரண்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனைகளும் அடக்கம்.
-
நன்றி- தமிழ் வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு Empty Re: 2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லாரஸ் ஸ்போர்ட்டிங் மொமன்ட் விருதுக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் பெயர் பரிந்துரை!
» இந்திய வரலாற்றில் முதன்முறையாக - டாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு
» இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல்
» சதுரங்க தரவரிசை பட்டியல் வெளியீடு: இந்திய அளவில் புதுச்சேரி சிறுமி முதலிடம்
» அர்ஜுனா விருதுக்கு ரிது ராணி, வி.ஆர்.ரகுநாத் பெயர்கள் பரிந்துரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum