ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா?

Go down

ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா? Empty ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா?

Post by ayyasamy ram Thu Feb 04, 2021 12:58 pm

ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா? 108109
-
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
இந்த நிலையில், சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரியானா, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரியானா, "இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?" என்று #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்படி சர்வதேச பாப் பாடகி ரியானா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒற்றை வாக்கிய ட்வீட்தான் இந்தியாவை உலுக்கிகொண்டிருக்கிறது. அவரது ட்வீட் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. அவரைத் தொடர்ந்து சூழலியல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க், மியா கலிஃபா, கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். முதலில் பதிவிட்ட ரியானா யார் என்பது குறித்து பார்ப்போம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா? Empty Re: ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா?

Post by ayyasamy ram Thu Feb 04, 2021 1:00 pm

ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா? 1612421693840
-
ரியானா யார்?

2003-ஆம் ஆண்டில் இசைத் தயாரிப்பாளர் இவான் ரோஜர்ஸ் மற்றும் கார்ல் ஸ்ட்ரூக்கன் ஆகியவர்கள் மூலம் பாடகியாக அறிமுகமானார் ரியானா. அவர் 15 வயதில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். 'மியூசிக் ஆஃப் தி சன்' என்ற அவரது முதல் ஆல்பம் கடந்த 2005-ஆம் ஆண்டு டெஃப் ஜாம் கரங்களால் வெளியிடப்பட்டது. இருப்பினும் அது பெரிய அளவில் பேசப்படவில்லை.

பின்னர் 2007-ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட 'குட் கேர்ள் கான் பேட்' (Good Girl Gone Bad) ஆல்பம்தான் அவருக்கு உரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது. அன்றுதான் ரியானா வெளியுலகிற்கு அறிமுகமாக தொடங்கினார். அம்ரல்லா ("Umbrella") என்ற பாடலுக்காக ரியானா தனது முதல் கிராமி விருதைப் பெற்றார்
-
அடுத்த ஆண்டுகளில், ரேட்டட்ஆர் (Rated R 2009), லவுட் (Loud 2010), டாக் தட் டாக் (Talk That Talk 2011) மற்றும் அனாபோலோஜெடிக் (Unapologetic - 2012) போன்ற வெற்றிகரமான ஆல்பங்களை வெளியிட்டு மக்கள் மனதில் தனக்கான இடத்தை பதிவு பிடித்தார் ரியானா.
-
32 வயதான ரியானா தனது பாடல்கள் மூலம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். ஒன்பது கிராமி விருதுகள், 13 அமெரிக்க இசை விருதுகள், 12 பில்போர்டு இசை விருதுகள் மற்றும் ஆறு கின்னஸ் உலக சாதனைகள் உட்பட பல விருதுகளை வென்று உலக அளவில் தனக்கான ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார். லண்டனின் O2 அரங்கில் 10 இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் பெண் தனி இசைக்கலைஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பாப் நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து பில்போர்டு ஹாட் 100 தரவரிசையில் 14 நம்பர் 1 ஹிட்ஸ்களை கொடுத்துள்ளார். இந்த தரவரிசையில் 31 டாப் 10 ஹிட்ஸ்களை கொடுத்து தனி முத்திரை பதித்துள்ளார்.


Last edited by ayyasamy ram on Thu Feb 04, 2021 1:02 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா? Empty Re: ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா?

Post by ayyasamy ram Thu Feb 04, 2021 1:01 pm

600 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.44,07,71,10,000) நிகர மதிப்புடன், 2020 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸின் சுயமாக சம்பாதித்த பணக்கார பெண்கள் (Self-Made Women ) பட்டியலில் இடம்பெற்றுள்ளார் ரியானா.

இசையைத் தவிர, ரியானா நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர். 2012 ஆம் ஆண்டு வெளியான பேட்டில்ஷிப் (Battleship) என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வலேரியன் (Valerian) மற்றும் சிட்டி ஆஃப் எ தௌசண்ட் பிளனெட்ஸ் (the City of a Thousand Planets - 2017) மற்றும் ஓஷன்ஸ் 8 (Ocean's 8 - 2018) உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இது தவிர, தனது லாப நோக்கற்ற அமைப்பான கிளாரா லியோனல் பவுண்டேஷன் (சி.எல்.எஃப்) மூலம் அவர் மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் ரியானாவுக்கு 81 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ஃபாலோயர்கள், 101 மில்லியன் ட்விட்டர் ஃபாலோயர்கள் மற்றும் 90.3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இருக்கின்றனர்.

இசை, நடிப்பு, மனிதநேய பணிகளைக் கடந்து அவர் ஒரு தொழில்முனைவோராக Fenty Beauty எனப்படும் மேக்அப் பிராண்டின் இணை நிறுவனரும் ரியானாதான்.

விவசாயிகள் போராட்டம் மட்டுமல்ல, சமீபத்திய மியான்மர் நிலவரம் வரை சர்வதேச அளவிலான பிரச்னைகளை கவனிப்பதும், அதுகுறித்த தனது பார்வையைப் பதிவு செய்வதும் ரியானாவின் வழக்கம் என்பது கவனிக்கத்தக்கது.

- மலையரசு
நன்றி- புதிய தலைமுறை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா? Empty Re: ஒற்றை வாக்கியம்... இந்தியாவில் அதிர்வலை... யார் இந்த ரியானா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum