ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
heezulia
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

2 posters

Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by ayyasamy ram Sat Jan 16, 2021 7:53 am

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
அறிந்த விளக்கம்:
மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம்
சொல்வது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது
போல.

(பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட பழமொழியைத் தான்
உபயோகிக்க வேண்டியிருக்கிறது )

பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும் போது
வேண்டுமானால் நடுங்கிப் போவோம்.
படையோடு இருந்தால் பாம்புக்கு நாம் நடுங்க மாட்டோம்.
பாம்பை நடுங்கவைப்போம் . முடிந்தால் மோட்சம் கொடுத்து
விடுவோம்..
.
சரியான விளக்கம்:
புராண கால போர்களில் வாள்,அம்பு, வேல் இந்த ஆயுதங்கள்
எல்லாம் பயன் படுத்தப்பட்டதற்கு பிறகு போரின் கடைசி
கட்டமாக அல்லது உச்சகட்டமாக பெரிய அழிவைத் தரும்
ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள்.

அதில் ஒன்று நாகாஸ்திரம் என்பது. நாகத்தைப் போல்
வடிவமைகப்பட்டிருக்கும் இது ஏவப்பட்ட இடத்திலிருந்து தன்
இலக்கை அடையும் போது பெரும் சேதத்தை விளைவித்து
நிறைய பேரை அழித்து விடும்.

மகாபாரதத்தில் அர்சுணனே இதை கண்டு பயப்பட்டான்
என்றால் இதை பற்றி மேலும் சொல்ல என்ன இருக்கிறது...?

இதை மிக முக்கியமானவர்கள் மட்டுமே பயன் படுத்துவார்கள்
என்பதால் இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர்
பதறியடித்து பின் வாங்குவார்கள் .என்பதனால் பாம்பைக்
கண்டால் படையும் நடுங்கும் என சொல்லிவைத்தார்கள் .
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by ayyasamy ram Sat Jan 16, 2021 7:54 am

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.
-


கழுதையின் தோல் கெட்டால் என்று அர்த்தம்.
அதாவது கழுதையில் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது
புண் போன்று ஏதும் வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை
விட பாதி சிதிலமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை
அதன்மேல் தேய்த்துக் கொள்ளும்.

காரணம் நல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது.
எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சிதிலமடைந்த
சுவர்களையே நாடும் .

இங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம்.
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது
சந்திப்பது அரட்டையடிப்பது என்று இருப்பவர்களை வீட்டார்கள்
இவ்விதம் குறிப்பிடுவது வழக்கமாகப் போய்விட்டது.

(பின்னால் வாழ்க்கை என்னும் பொதியை சுமக்க
போகிறவர்கள்தானே என்று இளைஞர்/இளைஞிகளை கழுதையாக்கி
பெரியோர்கள் உவமானப் படுத்துக்கிறார்களோ என்னவோ)

--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by ayyasamy ram Sat Jan 16, 2021 7:57 am

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

அறிந்த விளக்கம்:
வாய்ச் சொல்லில் வீரனடி,
அறுக்கத் தெரியாதவன் கக்கத்தில் ஏழெட்டுக் கருக்கருவாள்
போன்ற பதங்களுக்கு என்ன பொருளோ
அதே பொருள் தருவதுபோல் தான் இந்தப் பழமொழியும்
தோற்றமளிக்கிறது .

அதாவது பேச்சு பெருசா இருக்கும்,செயல்ல ஒண்ணும்
இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான்
இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப் பட்டு
வருகிறது .

ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான
உடலைப் பற்றிய அறிவியல் விளக்கம் கிடைக்கிறது.
-
அறியாத விளக்கம்:
-
ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள்
என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது ..

எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம்
நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த
ஓட்டைவழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள்
நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக்
கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா
என்று சொல்லி வைத்தார்கள்
-
---------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by ayyasamy ram Sat Jan 16, 2021 7:59 am

புல் தடுக்கிப் பயில்வான் போல...

புல் தடுக்கி எங்கேயாவது யாரேனும் விழுந்திருப்பதாய்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?

புல் தடுக்கி என்பதை நம்பவே முடியாது .. வேண்டுமானால்
சில வகை காட்டுப் புல்கள் அடர்ந்து புதராய் இருக்கும்
இடத்தில் புல் இடறி என வேண்டுமானால் பொருள் கொள்ளலாம்..

சில பழமொழிகள் உபயோகிக்கப் பட்டதற்கு பின்னால்
சில சம்பவங்கள் சொல்லப்படுகின்றன ..
அப்படி ஒரு சம்பவத்தால் வந்ததுதான் இந்த பழமொழி.
இது பழமொழி என்பதை விட உவமை/உவமானப்
பதங்களாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.

அறியாத விளக்கம் :

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன்
அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான்.

ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர்,
உடனே அதை வேரோடு பிடுங்கி, எரித்து சாம்பலாக்கி –
கரைத்துக் குடித்தாராம்….

எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை
அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர்
சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.

(டாஸ் மார்க்கில் தடுக்கி விழுவது வேறு ரகம்..
அது புல் இல்லை ஃபுல் )
----
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by ayyasamy ram Sat Jan 16, 2021 8:01 am

எழுதியவன் ஏட்டை கெடுத்தான். படிச்சவன் பாட்டை கெடுத்தான்.

அறிந்த விளக்கம்:

ஏடு என்பது மிகவும் தூய்மையாக இருக்கும்.
அதில் எழுதியவுடன் எழுத்துகள் பதிந்து ஏடு கெட்டுப்
போகும். அதுதான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தது.
இது வஞ்சப் புகழ்ச்சி.

படித்தவன் பாட்டைக் கெடுத்தான். தமிழிசையில்
ஏழு ஸ்வரங்கள். குரல், விழி , துத்தம் என்று ஏழுக்கும்
ஏழு பெயர்கள்.

சரிகமபதநி என்று வரிசையாக ஸ்வரங்கள் ஏறும்.
ஆனால் பாடற்கலையைப் படித்தவன் சுரங்களை
மாற்றிப் போட்டு ஏற்றங்களையும் இறக்கங்களை
முன்னுக்குப் பின் மாற்றி புது மெட்டுகளைக் கண்டு
பிடிப்பார்கள் அல்லவா.
அதுதான் படித்தவன் பாட்டைக் கெடுத்த கதை.

ஆனால் அது அப்படியல்ல,
படித்தவன் பாட்டை கொடுத்தான்...
எழுதியவன் ஏட்டை கொடுத்தான்....
காலத்தால் விடு பட்டு போன துணைக்காலினால்
பழமொழியே மாறிப் போயிற்று..!!
--
ப.பி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:46 pm

அருமையான விளக்கங்கள், ராம். பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! 103459460 பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! 1571444738


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Empty Re: பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum