ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

”தேடலின் சுகம் கூறும் நவீன கதைசொல்லி”

2 posters

Go down

”தேடலின் சுகம் கூறும் நவீன கதைசொல்லி” Empty ”தேடலின் சுகம் கூறும் நவீன கதைசொல்லி”

Post by bharathichandranssn Tue Jan 12, 2021 11:59 am

தேடலின் சுகம் கூறும் நவீன கதைசொல்லி”-
மாறா திரை விமர்சனம்.- பாரதிசந்திரன்.

கதை சொல்லலில் தமிழ்த்திரைப்பட உலகம், இன்று பெரும் மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
நவீனகோட்பாடுகளை அவைகள் வெளிப்படுத்தித் தம்மை உலகக் கதைகளுக்கு நடுநாயகமாகத் திகழ வைக்க முயற்சி செய்கின்றன.
தமிழ்த் திரைப்பட ரசிகர்கள், தமது ரசனையைத் தரப்படுத்தியதன் விளைவா? அல்லது இளைய இயக்குனர்களின் உலகளாவிய படைப்புகளை உற்று நோக்கலின் வெளிப்பாடா? தெரியவில்லை. மேம்பட்ட பாதையை நோக்கித் தமிழ்த் திரைப்படங்கள் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.

பிரைம் வீடியோவில் (PRIME VIDEO) வெளியான, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ”மாறா” திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று இருக்கிறது. அதன் திரைக்கதையானது, நனவோடை உத்தியில் (Consciousness strategy) பின்நவீனத்துவத்தை அழகுற சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலையாள மொழியில் 2015 இல் வெளிவந்த ஷார்லி திரைப்படத்தின் தழுவலாக இப்படம் வந்தாலும், திரைக்கதையில் இருந்து சில மாற்றங்களைப் பெற்றிருக்கிறது மார்ட்டின் ப்ரக்காட் இயக்கத்தில், மாறுபட்ட கோணத்தில் மலையாளத்தில் இப்படம் சக்கைப்போடு போட்டது. துல்கர் சல்மானின் நடிப்பு அதில் குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழில் அறிமுக இயக்குனர் திலீப்குமார் இயக்கி உள்ளார். மிகப்பெரும் அசாத்திய துணிச்சல் தான் இவருக்கு, முதல் படத்திலேயே அசாதாரணமான கதையை கையில் எடுத்து பெரும் வெற்றியும் பெற்றுள்ளார். நவீனத்தைத் தொட்டால் தமிழ்ப் படத்திற்கு என்றுள்ள ஃபார்முலா உடைந்து சுக்கு நூறாகும் எனத் தெரிந்தும் தனது முயற்சியை கைவிடாது எடுத்தற்குப் பெரும் பாராட்டுகளைத் தெரிவித்தே ஆகவேண்டும்.
சரி கதைக்குள் செல்வோம்,

நான்கு பேரின் காதல் தேடல் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்கிறது. சொல்லவொனா ஏக்கமும், பரிதவிப்பும், அடைந்து விட மாட்டோமா என்ற முயற்சியும், ஒவ்வொரு கணமும் அதனைத் தொட்டு, எழும் மனஎழுச்சியும், பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும், ஒளிப்பேழைக்குள் அடைக்கப் பெற்றிருக்கின்றன. இதுதான் மொத்தக்கதை.

இது தேடலின் சுகம். உலகில் எல்லா ஜீவராசிகளும் தேடலிலேயே வாழ்க்கையைக் கழிக்கின்றன. ஒவ்வொன்றிலும் மாறுபட்ட அளவுகோல்கள்.

சிறுவயதில் எதிர்வீட்டு மீனாட்சியைப் பார்த்து நேசித்து, தான் போட்ட நாடகத்தின் வழித் தன் காதலைச் சொல்லும் வெள்ளையன். அவன் காதலைப் புரிந்து கொண்ட மீனாட்சி. இருவரும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றனர் வெவ்வேறு பக்கம். ஆனாலும், காதல் ஓயவில்லை. வயதான காலம் வரை இருவரும் ஒருவரை ஒருவர் தேடித் தேடி அலைகின்றனர். இவர்களைச் சேர்த்து வைக்க தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றான் வெள்ளையன் எடுத்து வளர்த்த மாறா.

வெள்ளையன் நாடகத்தில் சொன்ன கதை, மீனாட்சி பார்வதிக்குத் தொடர்வண்டியில் சிறுவயதில் இக்கதையைக் கூற, அக்கதை வேலை நிமித்தமாய் வந்த ஊரில் சுவர் ஓவியமாய் மிளிர, ஓவியரைத் தேடி அலையும் பார்வதி. ஒரு முற்றுப்புள்ளியில் அனைவரும் ஒன்று சேர்கின்றனர்.
ஒரு கதை, இரு ஜோடிகளைக் கடைசியாய் ஒன்றிணைக்கிறது.
வெள்ளையன் கூறிய கதை தான் படத்தின் மையப் புள்ளி. இதைச் சுற்றியே படத்தின் நிகழ்வுகள் பின்னப்பட்டு இருக்கின்றன. கதைக்குள் கதைகள் எனப் பல கதைகள். ஒன்றல்ல… இரண்டல்ல… பல… கதைகளின் முடிச்சுகள் அவிழ அவிழ படம் தெளிந்த நீரோடையாய் உருவாகிறது.
பார்வதி (பாரூ) கதாநாயகனைப் பார்க்காமலேயே அவரின் நடத்தைகளை அறிந்து அறிந்து காதலிக்க ஆரம்பித்து, தொடர்ந்து அவனைத் தேடி அலைகிறாள்.

கனி (டாக்டர்) மனநோயிலிருந்து விடுபட்டு, கூறஇயலாத காதலோடு கதாநாயகன் வீட்டிலேயே இருந்துகொண்டு காதலைக் கூறச் சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருக்கிறாள்.
வெள்ளையன் ஊர் ஊராகச் சென்று கடிதம் கொடுக்கும் வேலையைச் செய்து தமது இளம் வயதுக் காதலி மீனாட்சியைத் தேடுகிறார்.

கன்னியாஸ்திரியாக மீனாட்சி ஊர் ஊராகச் சென்று மருத்துவ முகாம் அமைத்துத் தம் காதலனைத் தேடுகிறாள்.
மீனாட்சியைத் தேடி உலகம் சுற்றும் கதாநாயகன் மாறா, மீனாட்சியைத் தேடித் தேடி அலைகிறான்

பாலியல் தொழிலாளியான பெண்ணின் அன்புத் தேடல், தந்தையே தன் பெண் குழந்தையைப் பாலியல் தொழிலில் தள்ளிவிடும் பெண்ணின் (ராணி) பாசத் தேடல், திருடனின் தேடல், மீனவனின் தேடல், குடிகார நண்பனின், வீட்டில் ஆதரவற்றவர்களாக இணைந்தவர்களின் தேடல், நாயின் தேடல் என எல்லா தேடல்களும் மாறாவைச் சுற்றிச் சுற்றித் தேடுகின்றன.

இத்தேடல்கள் எல்லாம் படத்தில் வெளிப்படையாய் இல்லை. நாமே புரிந்து கொள்கின்றோம்.

தேடலின் சுகத்தை இதைவிட நுணுக்கமாகக் கூறிவிட முடியாத மையக் கதை. சில இடங்களில் உணர்வுகளை ஆழமான காட்சிகளால் நெருட விட்டிருக்கிறார் இயக்குனர்.

சிப்பாய் கதை, களவாடிய பொழுதுகள் ஓவியக் கதை, விலை மாது கதை, ராணி கதை, மீனவன் கதை, டாக்டர் கனி கதை, குடிகார நண்பன் கதை, கதாநாயகியின் கதை என கதைகளின் வழி ஒரு மாறா எனும் பெருங்கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
கலைநயமிக்க, அறிவியல் ஞானம் பொருந்திய கதாபாத்திரம் மாறா கதாபாத்திரம். உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் கதாபாத்திரம் அது. அனாதையாய், நாடோடியாய், மகனாய், காதலனாய், நண்பனாய் உச்சத்தை தொடும் கதாபாத்திரம் அது.
மாறா கதாபாத்திரத்தை விட வெள்ளையன் கதாபாத்திரம் இன்னும் ஒருபடி மேலே வைத்து காட்டப்பட்டிருக்கிறது அல்லது உணர்த்தப்பட்டு இருக்கிறது.

இப்படத்தில் வில்லன்கள் யாருமில்லை, வில்லன் இல்லாமல் படம். சண்டை காட்சிகள் இல்லாமல் படம். காதல் டூயட் பாடல் இல்லாமல் படம். மையக்கதை இல்லாமல் படம் என்று இருக்கிறது இப்படம்.

கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒருவகையில் மிகச்சிறந்த முன்மாதிரியான நல்லவர்களாக மட்டுமே படைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு விசித்திரமான கதை.
வெள்ளையன் தன் சொத்து முழுவதையும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் எல்லோரையும் அனுபவிக்க விடுகின்றார். எல்லோரையும் அதன் உரிமை காரர்களை போல் பாவிக்கின்றார். நேசம், பாசம், அன்பு, சம உரிமை, சுதந்திரம் என இதுபோன்ற வார்த்தைகள் வெள்ளையன் எனும் கதாபாத்திரத்தினுடையது. அதனால் இதை நேர்த்தியான படைப்பாக க் கூறலாம்

கதைச் சூழலிலும், கதைக்கு உள்ளும் பின் நவீனத்தைப் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். நனவோடை உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். அழகியலைப் பயன்படுத்தியுள்ளார்.
உதாரணத்திற்கு உணர்வை வெளிப்படுத்தி விட்டு அதை விவரமாய் விளக்காமல் அப்படியே விட்டுவிட்டு வேறு காட்சிக்குப் போய்விடுவது. பார்க்கும் ரசிகர்கள் அதன் நீட்சியைப் பெறுவதற்கு அவர்களே செல்லவேண்டும். எல்லாவற்றையும் படமே சொன்னால் எப்படி? பார்க்கும் படத்தை ரசிக்கும் ரசிகர் தான், கதையைப் பின்தொடர்வதற்கான பொறுப்பாளி. அவருக்கு அந்தப் பொறுப்பு இருக்கிறதா? இல்லையா? இது தான் இங்கு செய்து காட்டப்பட்டுள்ளது.

அதுபோல கதைக்கு அங்கங்கு தொடர்பில்லாத பல காட்சிகள் அதற்குள் இருக்கும் மெல்லிய ஒருங்கிணைப்பை ரசிகனே கண்டுதெளிந்து கதைக்குள் செல்லும் ஒரு அற்புத முறையாக இருக்கிறது இவ்வாறு கதை கூறலின் நளினத்தைப் பல்வேறு பக்கங்களில் விரித்து கூறலாம். வித்யாசமான கதை கூறல்முறை இது.

இசை கதையை இன்னும் மெருகூட்டுகிறது இப்படத்தில் பாடலாசிரியர் தாமரையின் வரிகள் நெஞ்சில் ஊடுருவுகின்றன ஜிப்ரான் இசையமைப்பாளர் அவரது தேர்ந்த பின்னணி இசையும் பாடலும் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதை நிரூபித்திருக்கிறார் படத்தின் பின்னணி இசை கதையோடு ஒன்றிச் செல்லுகிறது

தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு வெற்றிக்குக் காரணமாகும். அடடா… என்ன காட்சிகள்… கொச்சின் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த வீடுகளில் ஓவியம் அதைக் காட்சிக்குள் கொண்டு வந்த நயம் மிக அருமை, பசுமை, அழகு, யாரும் பார்க்காத கோணம் என தன் திறமையை ஒளிப்பதிவாளர் காட்டியுள்ளார். அழகியல் படமாக மாறி விட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

முன் பின்னதான கதையை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் படக்கலவை தான் மிக முக்கியம். அது இப்படத்தில் அற்புதமாய் அமைந்திருக்கிறது யுவன் ஸ்ரீனிவாசன் கைகள் சரியாக வெட்டி ஒட்டி இருக்கின்றன.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் ஒவ்வொரு காட்சியிலும் படம் முழுக்க வருகிறார் .நடித்துத் தள்ளியிருக்கிறார். கோபம், காதல், இரக்கம், பரிதவிப்பு, தடுமாற்றம், பூரிப்பு, ரசனை என எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கிறார் நல்ல நடிப்புக்கான பல பரிசுகளை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

கதாநாயகன் ஓவியர் என்பதால் கலைத்துவம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது .புகுந்து விளையாடியிருக்கிறார் கலை இயக்குனராக அவரின் பங்கு அலாதியானதாக இருக்கிறது. முழுக்கமுழுக்கக் கலைப்படைப்புகளால் நிறைத்திருக்கிறார்.

கதாநாயகன் மாதவன் தன் நடிப்பை மெருகூட்டி நடித்திருக்கிறார். நடிப்பில் மிக உன்னதமான முதிர்ச்சியும் வெளிப்பாடும் வெளிப்பட்டிருக்கிறது அற்புதமான தமிழ் நடிகர்களில் ஒருவர் என நிரூபித்திருக்கிறார்.
வெள்ளையன் ஆக வரும் மெளலி நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். இதைவிட கதாபாத்திரத்தை வேறு யாரும் நடித்துவிட முடியாது என்னும் அளவிற்கு நடித்திருக்கிறார்.
மொத்தத்தில் இயக்குனர் திலீப்குமார் நவீன கதை சொல்லலை மாறா படத்தின் மூலம் தமிழ் மக்களின் ரசனையை உயர்த்தித் தந்திருக்கிறார். அதன் மூலம் மாறாத வெற்றியைப் பெற்றிருக்கிறார். தமிழுக்கு மாறா எனும் படம் மூலம் நவீனக் கதையாடலை முன்வைத்திருக்கிறார்.

பாரதிசந்திரன்.
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

”தேடலின் சுகம் கூறும் நவீன கதைசொல்லி” Empty Re: ”தேடலின் சுகம் கூறும் நவீன கதைசொல்லி”

Post by ayyasamy ram Wed Jan 13, 2021 6:24 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

”தேடலின் சுகம் கூறும் நவீன கதைசொல்லி” Empty Re: ”தேடலின் சுகம் கூறும் நவீன கதைசொல்லி”

Post by Guest Wed Jan 13, 2021 12:58 pm

விமர்சனம் கொஞ்சம் ஓவராக தெரிகிறது. பலவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பழைய நடிகர்கள் நடிப்பில் எதுவும் சொல்ல முடியாது.ஆனால் அவர்களுக்கு சரியான சந்தர்ப்பம் கொடுத்தால் மட்டுமே அவரகளால் நடிக்க முடியும்.
ரிமேக் செய்யும் போது முந்தைய படத்திலும் பார்க்க அதிக கவனத்துடன் எடுத்திருக்க வேண்டும்.ஆங்கில/இந்திப் படங்களை ரீமேக் செய்யவில்லை.பக்கத்து மாநில படத்தை ரீமேக் செய்யும் போது இப்படியா?படம் மிகவும் மெதுவாக செல்கிறது.அதனால் தான் நெகட்டிவ் ரசிகர்களால் கொடுக்கப்பட்டது.
avatar
Guest
Guest


Back to top Go down

”தேடலின் சுகம் கூறும் நவீன கதைசொல்லி” Empty Re: ”தேடலின் சுகம் கூறும் நவீன கதைசொல்லி”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum