ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை கேள்வி... 126 கழிப்பறைகள்; நாசா செல்லும் பள்ளி மாணவியால் பயனடையும் புதுக்கோட்டை கிராமம்

Go down

ஒற்றை கேள்வி... 126 கழிப்பறைகள்; நாசா செல்லும் பள்ளி மாணவியால் பயனடையும் புதுக்கோட்டை கிராமம் Empty ஒற்றை கேள்வி... 126 கழிப்பறைகள்; நாசா செல்லும் பள்ளி மாணவியால் பயனடையும் புதுக்கோட்டை கிராமம்

Post by ayyasamy ram Sun Jan 10, 2021 6:06 pm

ஒற்றை கேள்வி... 126 கழிப்பறைகள்; நாசா செல்லும் பள்ளி மாணவியால் பயனடையும் புதுக்கோட்டை கிராமம் 620573
-
ஒற்றை கேள்வி... 126 கழிப்பறைகள்; நாசா செல்லும் பள்ளி மாணவியால் பயனடையும் புதுக்கோட்டை கிராமம் 16101770022484
-
ஜெயலட்சுமியின் வீடு
-------------------------------------
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுக்கே
செல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில், கழிப்பறை மிக
அவசியம் என்பதைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஏழை
மாணவி ஒருவர் உணர்த்தியுள்ளார்.

சிதிலமடைந்த வீடு, இரண்டாவது திருமணம் செய்து
கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தந்தை, மனநிலை
பிறழ்ந்த தாய், தன்னுடைய நிழலில் வளரும் இளைய
சகோதரன் என்ற குடும்பப் பின்னணியில் ஒரு பள்ளி
மாணவியின் முன்னேற்றம் என்னவாக இருக்கும்?

இதற்கான நிகழ்கால உதாரணம் புதுக்கோட்டை அருகே
ஆதனங்கோட்டையைச் சேர்ந்த 16 வயது மாணவி ஜெயலட்சுமி.

வறுமையான, ஆதரவற்ற குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில்
தமிழ் வழியில் படித்து, சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்லக் கடந்த
ஆண்டு தேர்வானவர் ஜெயலட்சுமி.

இவரின் சாதனைகள் குறித்து நம்மில் சிலர் அறிந்திருக்கலாம்.
ஆனால், அவரின் கடின உழைப்பும் தைரியமும் மனிதநேயமும்
பலர் அறியாதவை.

வீட்டில் சமையல் உட்பட அனைத்து வேலைகளையும் செய்து
கொண்டு, சிறப்பாகப் படிப்பதுடன் மாலை நேரத்தில் கூலி
வேலைக்குச் சென்று ஒற்றை ஆளாய்த் தன் குடும்பத்தையும்
காப்பாற்றி வருகிறார் ஜெயலட்சுமி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒற்றை கேள்வி... 126 கழிப்பறைகள்; நாசா செல்லும் பள்ளி மாணவியால் பயனடையும் புதுக்கோட்டை கிராமம் Empty Re: ஒற்றை கேள்வி... 126 கழிப்பறைகள்; நாசா செல்லும் பள்ளி மாணவியால் பயனடையும் புதுக்கோட்டை கிராமம்

Post by ayyasamy ram Sun Jan 10, 2021 6:07 pm

ஒற்றை கேள்வி... 126 கழிப்பறைகள்; நாசா செல்லும் பள்ளி மாணவியால் பயனடையும் புதுக்கோட்டை கிராமம் 16101770392484
-
கிராமலாயா நிர்வாகிகளுடன் ஜெயலட்சுமி
-----------------
தினந்தோறும் ஓய்வே இல்லாமல் வீட்டு வேலை, படிப்பு,
கூலி வேலை என்பது சிரமத்தை அளிக்கவில்லையா என்று
கேட்டதற்கு, அது ஒன்றும் பிரச்சினை இல்லைங்க.
பாத்துக்கலாம் என்று புன்னகைக்கும் ஜெயலட்சுமி,
தொடர்ந்து பேசுகிறார்.

''ஸ்கூல் முடிச்சிட்டு தினமும் சாயந்தரம் முந்திரிப் பருப்பு
உறிக்கப் போவேன். நாம செய்யற வேலைக்கு ஏத்த மாதிரி
சம்பளம் கிடைக்கும். அதை வச்சு செலவுகளைச்
சமாளிச்சுக்குவோம். ஊரடங்கு காலத்துலயும் வேலைக்குப்
போய்க்கிட்டுதான் இருக்கேன்.

சின்ன வயசுல இருந்து நல்லாப் படிப்பேன். இப்போ ராணியார்
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளில 12-வது படிக்கறேன்.
அடிப்படையில் நான் கேரம் ப்ளேயர். ஒருநாள் விளையாடிட்டு
இருந்தப்போ மழைத்தண்ணில ஒரு பேப்பர் கெடந்துச்சு.

அதை எடுத்துப் பாத்தப்போ ராக்கெட் படம் போட்ருந்துச்சு.
எக்ஸாம் எழுதி நாசா போன மாணவி ஒருத்தர் பத்தின செய்தி
அது.


ஜெயலட்சுமி
சரி, நாமும் ஏன் முயற்சி பண்ணிப் பாக்கக் கூடாதுன்னு நினைச்சு
ஸ்கூல்ல கேட்டேன். அவங்க வழிகாட்டல்படி ஸ்பேஸ் பத்தி
நிறையப் படிச்சு தேர்வு எழுதினேன். கம்ப்யூட்டர் சென்டர் போய்
பணம் கட்டி தேர்வு எழுத வசதியில்ல.

சித்தப்பா போனை வாங்கி அதுலயே எழுதினேன்.
ஆங்கில வழில தனியார் நிறுவனம் நடத்தின தேர்வுல 4 ஆயிரம்
பேர்ல ஒருத்தியா தேர்வானேன்.

போன வருஷம் இது நடந்துச்சு. நாசா போய்ட்டு வர ரூ.1.69 லட்சம்
தேவைப்பட்டுச்சு. விஷயம் கேள்விப்பட்டு நிறையப் பேரு உதவி
செஞ்சாங்க. போதுமான பணம் கிடைச்சதுக்கப்புறம் கிராமாலயா
தொண்டு நிறுவனத்துல இருந்து என்னைக் கூப்பிட்டுப் பேசினாங்க.

உனக்கு எதாவது செய்யணுமேம்மா அப்படின்னு சொன்னாங்க.
தேவையான உதவி கிடைச்சுருச்சுங்கன்னு சொன்னேன்.
வேற எதாவது செய்ய ஆசைப்படறோம்.. வீடு கட்டித் தரவா, டாய்லெட்
வேணுமான்னு கேட்டாங்க'' என்கிறார் ஜெயலட்சுமி.

அதற்கு ஜெயலட்சுமி சொன்ன பதில் யாருமே எதிர்பார்க்காத
ஒன்று. தனக்கு மட்டும் கழிப்பறை கட்டித் தருவதற்குப் பதில்,
ஊருக்கே கட்டித் தர முடியுமா என்று தயக்கத்துடன் கேட்க,
அதிசயித்த தொண்டு நிறுவனம், உடனே சம்மதித்தது.

கிராமாலயா நிறுவனர் தாமோதரன் மேற்பார்வையில்
ஆதனங்கோட்டையில் ஜெயலட்சுமி குடியிருக்கும் திருவள்ளுவர் நகர்
மற்றும் அதனைச் சுற்றியுள்ள 126 வீடுகளில் தலா ரூ.20 ஆயிரம்
செலவில் 126 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கு ஆன செலவு சுமார் ரூ.26 லட்சம். தனிக்கழிப்பறை,
குளியலறையுடன் சேர்ந்த கழிப்பறை எனத் தேவைக்கேற்ற
வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜெயலட்சுமி மேலும் கூறும்போது,
''முன்னாடிலாம் நான் டாய்லெட் போகணும்னா 2 கி.மீ. தூரம்
நடக்கணும். போற வழில டாஸ்மாக், மெயின் ரோடு எல்லாம்
இருக்கும். ஒரு பொண்ணா இதனால நிறையக் கஷ்டப்பட்டிருக்கேன்.

நம்மளை மாதிரிதானே அடுத்தவங்களும் கஷ்டப்படுவாங்க
அப்படின்னு நெனைச்சுக் கேட்டேன். கிராமாலயாவும் அதைப்
புரிஞ்சுக்கிட்டு 126 வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்தாங்க.

கரோனா பிரச்சினையால நாசா போறது தள்ளிப் போயிருக்கு.
இந்த வருஷம் கூட்டிட்டுப் போறதா சொல்லி இருக்காங்க.
அம்மாவுக்கு இப்போ சிகிச்சை கொடுத்துட்டு இருக்கோம்.
சீக்கிரம் நல்லபடியாக ஆகிடுவாங்கன்னு நம்பறேன். சட்டம் படிச்சு
முடிச்சுட்டு ஐஏஎஸ் ஆகணும்னு ஆசை.

எதிர்காலத்தில் அதை நடத்திக் காட்டுவேன்'' என்று
தன்னம்பிக்கையுடன் பேசினார் ஜெயலட்சுமி.
---------------
-க.சே.ரமணி பிரபா தேவி
நன்றி-இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum