ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை காலை சிட்னியில் கிரிக்கெட் போட்டி

2 posters

Go down

நாளை காலை சிட்னியில் கிரிக்கெட் போட்டி  Empty நாளை காலை சிட்னியில் கிரிக்கெட் போட்டி

Post by T.N.Balasubramanian Wed Jan 06, 2021 4:56 pm

சிட்னியில் நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தின் இளம் வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

காயம் அடைந்த உமேஷ் யாதவுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி அறிமுக வீரராக நாளை களமிறங்குகிறார்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸி.யும், மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் இந்திய அணியும் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. ஏற்கெனவே காயம் காரணமாக முகமது ஷமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் விலகிய நிலையில் அணிக்குள் ஷர்துல் தாக்கூர், நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதில் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி அறிமுகமாகிறார். ஷர்துல் தாக்கூர், நடராஜன் ஆகிய இருவரும் 11 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெறவில்லை.

கடந்த இரு டெஸ்ட் போட்டிகளாக ஃபார்ம் இல்லாமல் தவித்த மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரோஹித் சர்மா அணிக்குள் வந்துள்ளார். ரோஹித் சர்மா, ஷூப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்குவார்கள்.

இந்திய அணி விவரம்:
அஜின்கயே ரஹானே (கேப்டன்) ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷூப்மான் கில், சத்தேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் ஷைனி, ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், முகமது சிராஜ்.

நன்றி தமிழ் ஹிந்து


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளை காலை சிட்னியில் கிரிக்கெட் போட்டி  Empty Re: நாளை காலை சிட்னியில் கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram Wed Jan 06, 2021 7:33 pm

வார்னரின் வருகை!

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, பெளலிங்கில் எ
ந்தவிதக் குறைபாடும் இல்லை. பேட்டிங் மட்டுமே
அவர்களுக்குப் பெரிய தலைவலியாய் இருந்து வருகிறது.

முதல் போட்டியில், பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவில்
மறைமுகமாகக் காணப்பட்ட குறைபாடுகள், இரண்டாவது
போட்டியிலோ திரையைவிட்டு வெளிப்படையாய் வெளியே
வந்தன.

லாபுசேன் மற்றும் ஸ்மித் இருவரும் தங்களது இயல்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவற, ஓப்பனிங்கில் பர்ன்ஸும்
எடுபடாமல் போனார்.

ஹெட்டின் ஆட்டமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
வார்னரின் வருகை தற்போது அவர்களுக்கு அசுரபலம்
சேர்த்துள்ளது.

அதேபோல் தொடர்ந்து சொதப்பி வந்த டிராவிஸ் ஹெட்டுக்குப்
பதிலாக உள்ளூர் போட்டிகளில் ஸ்டார் பிளேயராகக்
கண்டறியப்பட்டுள்ள புவோஸ்கி இடம் பெற்றுள்ளார்.

ஸ்பின் டு வின்!

சிட்னி மைதானம் வேகப்பந்து, ஸ்பின் என இரண்டுக்குமே
சம அளவு வாய்ப்பு கொடுக்கும். ஸ்பின்னர்களே பெரும்பாலும்
மேட்ச் வின்னர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஷேன் வார்னே இங்கு அதிகபட்சமாக 64 விக்கெட்கள்
வீழ்த்தியிருக்கிறார். அதனால் இந்திய பேட்ஸ்மேன்களை
நாதன் லயான் அதிகம் அச்சுறுத்துவரா அல்லது ஆஸ்திரேலிய
பேட்ஸ்மேன்களை அஷ்வின் அச்சுறுத்துவாரா என்கிற போட்டி ப
லமானதாக இருக்கும்.

-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாளை காலை சிட்னியில் கிரிக்கெட் போட்டி  Empty Re: நாளை காலை சிட்னியில் கிரிக்கெட் போட்டி

Post by Guest Thu Jan 07, 2021 1:12 am

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடும் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் முதல்முறையாக ஆடவர் டெஸ்ட் போட்டியில் பெண் நடுவராக ஆஸ்திரேலியாவின் கிலாரே போலோசாக் களம் இறங்க உள்ளார். ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடுவர்களாக ஆண்களே இதுவரை இருந்துவந்தனர். இதற்கு மாறாக தற்போது முதல் முறையாக ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பெண் நடுவராக செயல்படவுள்ளார். இந்த போட்டியில் நான்காவது நடுவராக கிலாரே போலோசாக் நியமிக்கப்பட்டுள்ளார்.

32 வயதான அவர் கடந்த 2019இல் ஐசிசி நடத்திய டிவிஷன் 2 லீக் ஆண்கள் ஒருநாள் ஆட்டத்தில் கள நடுவராக செயல்பட்டுள்ளார். Paul Reiffel மற்றும் Paul Wilson சிட்னி டெஸ்ட் போட்டியில் கள நடுவர்களாக செயல்பட உள்ளனர். Bruce Oxenford இந்த போட்டியில் டிவி நடுவராக செயல்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய விதியின் படி நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த கிலாரே போலோசாக்கை தொடரை நடத்தும் அம்பயராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. புதிய பந்தை எடுத்து வருவது, ட்ரிங்க்ஸ் பிரேக்கில் கள நடுவர்களுக்கு ட்ரிங்க்ஸ் கொண்டு செல்வது, கள அம்பயர்களுக்கு போட்டியின்போது அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் டிவி அம்பயர் பொறுப்பை ஏற்றுக் கொள்வது தான் நான்காவது நடுவரின் பணி.
(புதியதலைமுறை)
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை காலை சிட்னியில் கிரிக்கெட் போட்டி  Empty Re: நாளை காலை சிட்னியில் கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram Thu Jan 07, 2021 7:44 am

சிட்னி டெஸ்ட்: இந்திய அணி பவுலிங்
சிட்னி:
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் (அடிலெய்டு) வீழ்ந்த இந்தியா, அடுத்து மெல்போர்னில் வென்றது. தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், இன்று சிட்னியில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதுலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், புகோவ்ஸ்கி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மத்தேயு வேட், கேமரூன் கிரீன், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் களமிறங்க உள்ளனர். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துவக்கத்தில் சொதப்பிய மயங்க் அகர்வாலுக்குப் பதில் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரகானே, ரிஷாப் பண்ட், ஹனுமா விஹாரி, ஜடேஜா, பும்ரா, சிராஜ், நவ்தீப் சைனி

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாளை காலை சிட்னியில் கிரிக்கெட் போட்டி  Empty Re: நாளை காலை சிட்னியில் கிரிக்கெட் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது
» 3 நாடுகள் கிரிக்கெட் இறுதிப் போட்டி: இலங்கை- ஜிம்பாப்வே நாளை மோதல்
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
» நாளை காலை 7 முதல் இரவு 9 கான யோசனைகள் சில....
» நாளை சூரிய கிரகணம் காலை, 10:22 - பகல், 1:32 மணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum