புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
81 Posts - 61%
heezulia
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_m10தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 13, 2010 10:42 am

உலக
தமிழர்கள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் மத வேறுபாடுகள்
மறைந்து, சாதி வேறுபாடுகள் ஒழிந்து அனைவரும் மகிழ்ச்சியாய் வாழ இந்த
தையில் வழி பிறக்கட்டும்.


தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Pongal+-+function


தை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை.

தை
மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம்
கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகாவும் இந்த நாள்
ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. இடையில் சித்திரைக்கு மாறிப் போனது. இப்போது
மீண்டும் தை முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாக தமிழக அரசு
அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு தை முதல் நாள் தமிழ்ப்
புத்தாண்டு தினமாகவும் கொண்டாடப்படுகிறது.


தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Pongal+-+Ulavar

தமிழர் திருநாள்...

தைப்
பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர்
பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல.
பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்.

தமிழர்கள்
இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின்
தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை,
மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக
நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

மலேசியா,இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.


தோற்றம்...

பொங்கல்
பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000
ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்த பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது. 2000
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும்
உள்ளது.
சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர்
இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள்
தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது
வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது
என்கிறார்கள்.


தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Pongal+-+Kolam
3 நாள் விழா...

பொங்கல்
பண்டிகை மொத்தம் 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி
பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3வது நாள் மாட்டுப் பொங்கல்.
நமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப்
பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல் வாய்ப்பாக இந்த
திருநாள் கொண்டாடப்படுகிறது.

போகி...

பொங்கல்
திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று, அதிகாலையில், அனைவரும்
எழுந்து குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின்
முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள். அல்லவை அழிந்து நல்லவை வரட்டும்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை
கொண்டாடப்படுகிறது.

வீட்டுப் பொங்கல்...

2வது
நாளான பொங்கல், விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப்
பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து, மஞ்சள்
உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு,
வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள்.


தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Pongal+-+of+happiness

வீட்டுக்கு
வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி
நடைபெறும். அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும்போது குலவையிட்டும், பொங்கலோ
பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை
இறக்க வேண்டும்.

நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம்.

மாட்டுப் பொங்கல்...

3வது
நாள் விழா மாட்டுப் பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கள்
விமரிசையாக கொண்டாடப்படும். வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள்,
பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூச்சி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை
அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு வழிபாடு
செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும்.

ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது
.


தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Mattu+Pongal

இன்றைய
தினத்தின்போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது
மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள்.

இந்த
இடத்தில்தான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கிறது. மாட்டுப் பொங்கலின்போது
கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

காணும் பொங்கல்....

இப்படியாக
பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதுதவிர நான்காவது நாள்
காணும் பொங்கலாக வட மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது உற்றார்,
உறவினர், நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக்
கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுதுபோக்குமிடங்களுக்கும் இந்த நாளில் போவது வழக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனி காணும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

கரும்பு-ஜல்லிக்கட்டு-பொங்கல்..

பொங்கல்
பண்டிகையின் மூன்று முக்கிய அம்சங்கள், கரும்பு, ஜல்லிக்கட்டு, இனிப்புப்
பொங்கல்தான். இவை இல்லாமல் பொங்கல் நிறைவடையாது. கரும்புகளுக்கு பொங்கல்
பண்டிகையின்போதுதான் செம கிராக்கி. இன்று முழுவதும் கரும்பு
சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.


தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Pongal+-+Jallikattu

அதேபோல
பொங்கல் பண்டிகையின்போது கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு
நிகழ்ச்சிகளும் விசேஷமானவை. அலங்காநல்லூர், பாலமேடு, காஞ்சரம்பேட்டை
ஆகியவை ஜல்லிக்கட்டுக்கு பெயர் போனவை. இதில் அலங்காநல்லூர் உலகப் புகழ்
பெற்ற ஜல்லிக்கட்டு களமாகும்.

தமிழர்களின் திருநாளாக, உழவர்
திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை, தமிழக அரசு தமிழ்ப்
புத்தாண்டு தினமாகவும் அறிவித்துள்ளதால், தமிழர்கள் அனைவரும் இந்த இனிய
நாளை, இரட்டிப்பு சந்தோஷத்துடன், தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம்.


தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Pongalo+Pongal

அதேசமயம்,
பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவதிகள் ஒழிந்து, வரும்
ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப்
பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்......
நன்றிகள்...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக