ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்

Go down

காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்   Empty காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்

Post by ayyasamy ram Sun Dec 20, 2020 2:29 pm

19 Dec 2020
-
காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்   613471
-
தமிழ் சினிமாவுக்கு காதல் ஒரு தவிர்க்க முடியாத
உள்ளடக்கமாக இருந்துவருகிறது. 1990களின் இறுதி
வரை ஒவ்வொரு கதாநாயக நடிகரும் நட்சத்திர
அந்தஸ்தை அடைவதற்கு முதல் படியாகக் காதல்
படங்களில் நடித்து இளசுகளின் மனங்களில் இடம்
பிடித்தாக வேண்டும்.

1990-களின் பிற்பகுதியில் கவனம் ஈர்க்கத் தொடங்கி
விட்ட பிரசாந்த், விஜய், அஜித் மூவரும் தொடர்ந்து பல
காதல் படங்களில் நடித்துவந்தனர். அவர்களில்,
விஜய்யின் காதல் படங்களில் தரமான வெற்றிப்
படமாகவும் இன்று மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்ந்து
நிற்கும் அவருடைய திரைவாழ்வில் மிக முக்கியமான
படங்களில் ஒன்றாகவும் அமைந்த படங்களில்
ஒன்றான ‘காதலுக்கு மரியாதை’ வெளியாகி இன்றோடு
23 ஆண்டுகள் நிறைவடைகின்றன (1997 டிசம்பர் 19).

மலையாளம் மட்டுமல்லாமல் தரமான தமிழ்ப் படங்களை
இயக்கி தமிழிலும் மதிப்புக்குரிய இயக்குநரான பாசில்,
நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கிய
படம் ‘காதலுக்கு மரியாதை’,

1997 மார்ச்சில் மலையாளத்தில் அவர் இயக்கிய ’அனியத்திப்ராவு’
என்னும் படத்தின் தமிழ் மறு ஆக்கம் இது. தென்னிந்தியப்
படங்களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கிக் கொண்டிருந்த
பேபி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமான படம் ‘அனியத்திராவு’.

தமிழ் மறு ஆக்கத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாகக்
கால்பதித்தார். மலையாளத்தில் குஞ்சக்கோ போபன் நடித்த
நாயகன் வேடம் தமிழில் விஜய்க்குச் சென்றது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்   Empty Re: காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்

Post by ayyasamy ram Sun Dec 20, 2020 2:30 pm

காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்   1608388444343
-

இந்து மதத்தைச் சேர்ந்த நாயகனும் கிறிஸ்தவ மதத்தைச்
சேர்ந்த நாயகியும் காதலிக்கிறார்கள். மதம் கடந்த காதலைச்
சொன்ன பல படங்களைப் போலவே இதிலும் நாயகியின்
குடும்பத்திடமிருந்து காதலுக்கு எதிர்ப்பு வருகிறது.

ஆனால், எதிர்ப்புக்கான காரணம் மதம் அல்ல. நாயகியின்
அண்ணன்களுக்கு நாயகன் மீது சில எதிர்பாராத மோதல்களின்
விளைவாக வெறுப்பு ஏற்படுகிறது.

தங்கள் அழகான குடும்பத்தில் போற்றி வளர்க்கப்பட்ட
இளவரசியான தங்கையைத் தங்களுக்குப் பிடிக்காதவன்
காதலிப்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை.
இதனால் நாயகனைத் துன்புறுத்துகிறார்கள்.

ஒரு கட்டத்தில் நாயகனும் நாயகியும் குடும்பத்தை எதிர்த்து
திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். ஆனால்
மனம் மாறி, பெற்றோரின் சம்மதம் இல்லாமல் வாழ்வில்
இணையக் கூடாது என்று முடிவெடுத்து காதலைத் துறந்து
தமது குடும்பங்களுடன் இணைகிறார்கள்.

இறுதியில் சம்பிரதாயமாக இருவரின் குடும்பங்களும்
சந்தித்துக்கொள்ளும்போது இருவரின் அம்மாக்களின்
உணர்வுபூர்வமான முன்னெடுப்பால் நாயகன் – நாயகியின்
காதல் கைகூடுகிறது.

மதம் கடந்த காதல் என்றாலும் மனிதர்களுக்கிடையிலான
முன் தீர்மானம் சார்ந்த வெறுப்பே காதலுக்கு எதிரியாக
அமைவதும் அதைத் தாண்டி நல்ல மனிதர்களுக்கு இடையில்
ஏற்படும் வெளியே சொல்லிக்கொள்ளாத ஈர்ப்பு அந்தக்
காதலை வெற்றிபெறச் செய்வதுமாக முழுக்க முழுக்க
அன்பு, பாசம், நட்பு, வெறுப்பு என மனித உணர்வுகளை
மையப்படுத்தி தன்னுடைய முத்திரையைப் பதித்திருப்பார்
பாசில்.

படத்தின் நாயகனான விஜய் வசதியான குடும்பத்தைச்
சேர்ந்தவன் என்றாலும் மிகவும் நட்பார்ந்த மனப்பான்மை
கொண்ட மென்மையான இளைஞனாகவும், அதே நேரம்
துணிச்சல்காரராகவும், உண்மையான காதலனாகவும்
மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

குடும்பத்துக்கும் காதலனுக்கும் இடையிலான ஊசலாட்டத்தை
வெகு சிறப்பாகப் பிரதிபலித்து தமிழ் சினிமாவுக்கு ஒரு
திறமையான நடிகையின் நல்வரவைப் பதிவு செய்தார்
ஷாலினி.

நாயகியின் அண்ணன்களாக ராதாரவி, தலைவாசல் விஜய்,
ஷாஜி கான், அம்மாவாக கேபிஏசி லலிதா. நாயகனின்
பெற்றோராக சிவகுமார், ஸ்ரீவித்யா, நண்பர்களாக சார்லி,
தாமு, காதலர்களுக்கு அடைக்கலம் தரும் மீனவர் குடியிருப்பின்
பெரிய மனிதராக மணிவண்ணன் என அனைத்துத் துணை
நடிகர்களும் மறக்க முடியாத நடிப்பை வழங்கியிருந்தனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்   Empty Re: காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்

Post by ayyasamy ram Sun Dec 20, 2020 2:31 pm

காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்   1608388497343
-


இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும்
மிகப் பெரிய வெற்றிப் பாடல்களாக அமைந்தன.
ஹரிஹரன் குரலில் காதலின் ஏக்கத்தை வெளிப்படுத்திய
‘என்னைத் தாலாட்ட வருவாளா’, அன்பான அழகான
குடும்பத்தின் கதகதப்பை உணரச் செய்யும்

‘ஆனந்தக் குயிலின் பாட்டு’, மீனவர்களின் கொண்டாட்டப்
பாடலான ‘அய்யா வூடு’, கே.ஜே.யேசுதாஸின் தேமதுரக் குரலில்
அமைந்த ‘ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே’,
விஜய்யின் அபார நடனத் திறமையைப் பறைசாற்றிய ஆரம்பக்
காலப் பாடல்களில் ஒன்றான ‘ஓ பேபி பேபி’ என அனைத்துப்
பாடல்களும் இன்றும் தலைமுறைகளைக் கடந்து அனைவரையும்
வசீகரித்துக் கொண்டிருக்கின்றன. .

ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், காதலர்களின் உடல்
சார்ந்த நெருக்கத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் என எதுவும்
இல்லாமல் அனைத்து வயதினருக்கும் ஏற்ற குடும்பத்துடன்
பார்க்கக்கூடிய படமாக அமைந்தது ‘காதலுக்கு மரியாதை’.

அதே நேரம் கனமான கதையம்சம் பொருந்திய உணர்வு
பூர்வமான காட்சிகளைக் கொண்ட அரிதான காதல் படங்களில்
ஒன்றாகவும் இருந்தது.

அந்த வகையில் ‘காதலுக்கு மரியாதை’ ரசிகர்கள் மனங்களில்
என்றென்றும் நிலைத்திருக்கும்.
-
------------------------------------------------
-ச.கோபாலகிருஷ்ணன்
நன்றி- இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்   Empty Re: காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்

Post by ayyasamy ram Sun Dec 20, 2020 2:33 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்   Empty Re: காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்

Post by ayyasamy ram Sun Dec 20, 2020 2:36 pm

காதலுக்கு மரியாதை படத்தின் கிளைமாக்ஸ் காட்சி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்   Empty Re: காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!!
» அனைத்து பஸ்களிலும் இலவச பாஸ் செல்லும் ஏற்ற மறுத்தால் செல்போனில் புகார் அளிக்கலாம்
» விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. வெளியான மாஸ் அப்டேட்..!
» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
» மீண்டும் வெளியான வக்கீல் தோற்றம் திரைக்கு வரும் ஜோதிகா படம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum