Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூக்கள்... பூக்கல்!
Page 1 of 1
பூக்கள்... பூக்கல்!
-
வழிபாட்டில் பூக்களுக்கு என்றுமே முக்கியத்துவம்
தரப்பட்டு வந்துள்ளது. ஒரு காலத்தில், பூக்களை,
தெய்வத்துக்கும் மேலாக மதித்தனர்.
சிவனுக்கு சமர்ப்பிக்க இருந்த மாலையின் பூவை நுகர்ந்து
பார்த்ததற்காக, அரசியின் மூக்கையே வெட்டிய சிவ பக்தர்,
செருத்துணை நாயனார்.
திருப்பதியில், பெண்கள் யாரும் பூ வைப்பதில்லை.
அங்கு பூக்கும் மலர்கள் யாவும் மாதவனுக்கு உரியது.
இறைவனுக்கு சாத்தப்படும் இத்தகைய சிறப்பு மிக்க பூக்கள்
கட்டுபவர் காலில் கூட, பூ பட்டுவிடக் கூடாது என்பதற்காக,
திருநெல்வேலி மாவட்டம், ஊர்க்காடு கோட்டியப்பர் கோவிலில்,
'திருப் பூ பலகை' என்ற அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது.
மார்கழி மாதத்தில் பூக்கோலமிடுவது வழக்கம்.
அந்த மாதத்தில், இந்தக் கோவிலுக்குச் சென்று வருவது
உத்தமம்.
அகத்தியர், தென் திசை வந்த போது, தாமிரபரணிக்
கரையிலுள்ள தாத்ரிவனம் எனப்படும் ஊர்க்காட்டில்,
சிவ பூஜை செய்வதற்காக, ஆற்று மணலை எடுத்து, லிங்கம்
வடித்தார். ஆனால், அது சரியாக வரவே இல்லை.
மணல் உதிர்ந்தபடியே இருந்தது.
கோபமடைந்த அகத்தியர், 'சிவனே... உனக்கு கோட்டி -
பைத்தியம் பிடித்து விட்டதா... இப்படி அடம் செய்கிறாயே...'
என்றபடியே, மணல் உதிர்ந்த லிங்கத்தை மார்பில் சாய்த்தார்.
அப்போது, லிங்கம் நிலைபெற்றது.
தான் பயன்படுத்திய கோட்டி என்ற வார்த்தையையே
பயன்படுத்தி, 'கோட்டியப்பர்' என்று, சிவனுக்கு பெயர்
சூட்டினார்.
இன்னொரு கருத்தும் உண்டு. 'கோஷ்டி' என்றால்
ஒருங்கிணைதல். மணல் ஒருங்கிணைந்ததால், கோஷ்டியப்பர்
என்ற பெயர் உருவாகி, கோட்டியப்பராக மருவியிருக்கலாம்
என்றும் சொல்வர்.
இந்தக் கோவிலில் எல்லா பரிவார தெய்வங்களின் கையிலும்,
தாமரை மலர் இருக்கிறது. இங்குள்ள தெய்வங்களுக்கு, காலில்
மிதி படாமலும், சம்மணமிட்டும் பூ கட்டும்போது, காலுக்கு
கீழே மலர்கள் சென்று விடாமல் இருக்க, பூப்பலகை என்ற
அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
அந்தக் கல் பலகையில், புத்தம் புதிதாக பறித்த மலர்கள்
கொட்டப்படும். பலகையின் முன், காலைக் கீழே தொங்கவிடும்
வகையில் மற்றொரு கல் பலகை பதித்துள்ளனர்.
பூ கட்டுபவர்கள் அதில் அமர்ந்து பூ கட்டுவர். இப்போதும், திருவிழா
காலத்தில், இந்த பலகையில் அமர்ந்தே பூ கட்டுகின்றனர்.
பக்திக்கு தேவை, மரியாதை. அதைக் கற்றுத்தரும் கோவிலாக
இது உள்ளது.
இங்கு, சிவகாமி அம்பாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்
பாலிக்கின்றனர். திருநெல்வேலி- - பாபநாசம் சாலையில்,
அம்பாசமுத்திரம், 40 கி.மீ., இங்குள்ள கிருஷ்ணன் கோவில்
திருப்பத்தில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் ஊர்க்காடு கிராமம்
உள்ளது.
மார்கழியில் இங்கு சென்று வாருங்கள்.
தி. செல்லப்பா
வாரமலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum