புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
170 Posts - 80%
heezulia
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
1 Post - 0%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
335 Posts - 79%
heezulia
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%
prajai
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_m10எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2020 5:58 pm

எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... 530098
-
எஸ். வி. வேணுகோபாலன்

நண்பர் ஒருவர் சில மாதங்களுக்குமுன்
'இந்தப் பாடலை இரவு நேரத்தில் கேளுங்களேன்' என்று
அனுப்பிவைத்தார், நீண்ட காலத்துக்குமுன் கேட்டிருந்த
அருமையான பாடல் அது.

ஆஹா.. நிசப்தமான அந்த நேரத்தில் கேட்கத்
தொடங்கியவுடன் உள்ளம் ஒரு விவரிக்க இயலாத
அனுபவத்தில் ஆழ்ந்து கிறங்கத் தொடங்கிவிட்டது:

‘அம்மம்மா... கேளடி தோழி’ (படம்: கறுப்புப்பணம்).
ஒரு சூழலின் இதத்தைத் தமது குரலால் ஒருவர்,
பாடலைக் கேட்பவருக்கும் கடத்திவிட முடியுமா என்ன!

அதுதான் லூர்து மேரி ராஜேஸ்வரி! அப்படிச் சொன்னால்
சட்டென்று தெரியாது, ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி என்றால்
அடுத்த கணம், தனித்துவமான ஓர் இசைக்குரல் ரசிக
உள்ளங்களில் ஒலிக்கத் தொடங்கிவிடும்.

மேடையில் அவ்வளவு எளிதில் 'போலப் பாடுதல்' செய்ய
முடியாத வித்தியாசமான வளமும் வசீகரமும் நிறைந்த
குரல் அவருடையது.

தனியாகவும், இணை குரலாக ஆண் பாடகரோடும்,
பெண் பாடகரோடும் எல்.ஆர்.ஈஸ்வரி இசைத்த
திரைப்பாடல்கள் இரவுக்கானவை, பகலுக்கானவை,
காலை புலர்தலுக்கானவை, மாலை கவிதலுக்கானவை,
எந்தப் பொழுதுக்குமானவை என்று வேதியியல்
வினைகளை நிகழ்த்திக்கொண்டே இருந்த காலம்,
அறுபதுகளும் எழுபதுகளும்!

தோழிபோல் வந்தார்

குழுப் பாடல்களை இசைத்துக்கொண்டிருந்த தமது
அன்னையோடு பாடல்பதிவுகளுக்குச் சென்று
கொண்டிருந்தவர், திரை இசைத் திலகம்
கே.வி.மகாதேவனால் அடையாளம் காணப்பட்டு,
பாடல்கள் வளர்த்த பயணத்தில்,
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் ‘பாச மல’ரின்
'வாராய் என் தோழி வாராயோ' எனும் அசத்தலான
பாடலுக்குப் பின் அதிகம் பேசப்பட்டார்.

‘கறுப்புப் பணம்’ படத்தில் இடம்பெற்ற 'ஆடவரெல்லாம்
ஆட வரலாம்' பாடல் அவரது குரலின் வேறொரு வலுவைக்
காட்டியது. பின்னாளில் கேபரே வகை நடனத்துக்கான
பாடல்கள் என்றாலே ஈஸ்வரிதான் என்றாயிற்று.

‘பளிங்கினால் ஒரு மாளிகை’ (வல்லவன் ஒருவன்),
‘அதிசய உலகம்’ (கௌரவம்) என்று போகும் வரிசையில்
அவருடைய குரல்களில் இழையும் பரவசமும்,
கொண்டாட்டமும் புதிதான இழைகளில்
நெய்யப்பட்டிருக்கும்.

'குடி மகனே' (வசந்த மாளிகை) பாடலில்
‘கடலென்ன ஆழமோ..கருவிழி ஆழமோ..’ என்ற ஏற்ற
இறக்கங்களும் சேர, கொஞ்சுதலும் கெஞ்சுதலும்
சொற்களில் போதையூட்டும் வண்ணம் குழைத்தலுமாக
உயிர்த்தெழும் குரல் அது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2020 6:01 pm

வேறோர் உலகில்

தொடக்கத்திலோ, இடையிலோ, நிறைவிலோ ஹம்மிங்
கலந்த அவரது பாடல்கள் வேறு உலகத்தில் கொண்டு
சேர்க்கவல்லவை. பற்றைத் துறக்கத் துடிக்கும்
ஆடவனை இவ்வுலக வாழ்க்கைக்கு ஈர்க்கும்
'இது மாலை நேரத்து மயக்கம்' (தரிசனம்) பாடலில் மோக
மயக்கத்தின் பாவங்களைக் கொட்டி நிரப்பி இருப்பார்
ஈஸ்வரி.

பணம் படைத்தவன் படத்தில் ‘மாணிக்கத் தொட்டில்
இங்கிருக்க' பாடலில் ஒரு விதம் என்றால்,
‘பவளக்கொடியிலே முத்துக்கள்' பாடலில் வேறொரு
விதமாக உருக்கி வார்த்திருப்பார் ஹம்மிங்கை.

‘என் உள்ளம் உந்தன் ஆராதனை' (ராமன் தேடிய சீதை),
‘நாம் ஒருவரை ஒருவர்' (குமரிக்கோட்டம்) பாடல்களை
எல்லாம் எழுத்தில் வடித்துவிட முடியுமா என்ன?

யேசுதாஸ் குரலின் பதத்திற்கேற்பவும் பாட முடியும்
அவருக்கு! ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ (மன்மத லீலை),
‘பட்டத்து ராணி பார்க்கும்' (சிவந்த மண்) என்று அதிரடி
பாடலைக் கொடுக்கவும் முடிந்தது.

‘காதோடு தான் நான் பாடுவேன்' (வெள்ளி விழா) என்ற
அற்புதமான மென்குரலை வழங்கிய அவரால்,
‘அடி என்னடி உலகம்' (அவள் ஒரு தொடர்கதை) என்று
உரத்துக் கேட்கவும் சாத்தியமாயிற்று.

இணையற்ற இணை

பி. பி. ஸ்ரீனிவாஸ் குரலுக்கேற்ப எத்தனை எத்தனை
பாடல்கள் ( ‘ராஜ ராஜ ஸ்ரீ’, ‘கண்ணிரண்டும் மின்ன
மின்ன’, ‘சந்திப்போமா இனி சந்திப்போமா..’).
சந்திரபாபுவோடு இணைந்து 'பொறந்தாலும்
ஆம்பளையா' (போலீஸ்காரன் மகள்) பாடலின்
சேட்டைகள், எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மயக்கக்
குரலோடு சேர்ந்த பாடல்கள்தான் ( ‘மறந்தே போச்சு’,
‘அநங்கன் அங்கஜன்’, ‘ஆரம்பம் இன்றே ஆகட்டும்’,
‘கல்யாணம் கச்சேரி’ ) எத்தனை! பி. சுசீலாவோடு
இணைந்து இசைத்த அக்காலப் பாடல்கள்

( ‘கட்டோடு குழலாட’ - பெரிய இடத்துப் பெண்,
‘அடி போடி’ - தாமரை நெஞ்சம்,
‘தூது செல்ல’ - பச்சை விளக்கு,
‘உனது மலர்க்கொடியிலே’ - பாத காணிக்கை,
‘மலருக்குத் தென்றல்’ - எங்க வீட்டுப் பிள்ளை,
‘கடவுள் தந்த’ - இருமலர்கள்).

இவை தோழியரது வெவ்வேறு மனநிலையின்
பிரதிபலிப்புகளைக் கச்சிதமாக வார்த்த பாடல்களில்
சில. டி. எம். சவுந்திரராஜன் - எல். ஆர். ஈஸ்வரி இணை
குரல்கள், பல்வேறு ரசங்களைப் பருகத் தந்தவை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2020 6:05 pm

‘கேட்டுக்கோடி உறுமி மேளம்' (பட்டிக்காடா பட்டணமா),
'சிலர் குடிப்பது போலே' (சங்கே முழங்கு),
‘மின்மினியைக் கண்மணியாய்' (கண்ணன் என் காதலன்),
‘உன் விழியும் என் வாளும்; (குடியிருந்த கோயில்),
‘அவளுக்கென்ன' (சர்வர் சுந்தரம்) என்ற பாடல்
வரிசைக்கும் முடிவில்லை.

ஆண், பெண் என இணைக் குரல்களின் தனித்தன்மை
எப்படியிருப்பினும், அவற்றுக்கு ஏற்ப இயைந்து பாடுவதில்
எல்.ஆர்.ஈஸ்வரி ஓர் இணையற்ற இணை.

கதாபாத்திரங்களின் குரல்

பரிதவிப்பின் வேதனையை, தாபத்தைச் சித்தரிக்கும்
பாடல்களுக்கு ( ‘எல்லோரும் பார்க்க' - அவளுக்கென்று
ஒரு மனம் ) உயிரும் உணர்ச்சியும் ஊட்டிய குரல்
ஈஸ்வரியுடையது.

ஆர்ப்பாட்டமான களியாட்டத்தை ( ‘இனிமை நிறைந்த’,
‘வாடியம்மா வாடி’, ‘கண்ணில் தெரிகின்ற வானம்’,
‘ர்ர்ர்ர்ர்ருக்கு மணியே..’, ) அவரால் இலகுவாக
வெளிப்படுத்த முடிந்தது. மனோரமாவுக்காக அவர் பாடிய
'பாண்டியன் நானிருக்க...' (தில்லானா மோகனாம்பாள்)
என்ற அற்புதப் பாடல் அந்தக் கதாபாத்திரத்தோடே
ஐக்கியமாகிப் போன ஒன்று.

‘குபு குபு குபு குபு நான் எஞ்சின்’
(மோட்டார் சுந்தரம் பிள்ளை) என ஏ.எல்.ராகவனோடு
இணைந்து அவர் ஓட்டிய ரயிலின் வேகம் இளமையின்
வேகம்.

ஜெயச்சந்திரனோடு இசைத்த 'மந்தார மலரே'
(நான் அவனில்லை) காதலின் தாகம். ஒரு சாதாரணப்
பூக்காரியின் அசல் குரலாகவே ஒலிக்கும், உருட்டி
எடுக்கும் ‘முப்பது பைசா மூணு முழம்'!

பல்வேறு இசையமைப்பாளர்களுடைய இசையின்
பொழிவில் எல். ஆர். ஈஸ்வரியின் குரல் தனித்தும்,
இணைந்தும் கொடிகட்டிப் பறந்த அந்த ஆண்டுகள்,
ரசிக உள்ளத்தின் விழாக் காலங்கள்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று வெவ்வேறு
மொழியிலும் இன்றும் கொண்டாடப்படுவது அவரின்
குரல்.
-
எல். ஆர். ஈஸ்வரி 80: பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே... IMG_1668

‘எல்லாருக்குமான’ ஈஸ்வரி

ஒரு கட்டத்தில் இறையுணர்வுத் தனிப்பாடல்களில்
வேகமாக ஒலிக்கத் தொடங்கிய அவரது குரலில்
பதிவான கற்பூர நாயகியேவும், மாரியம்மாவும்,
செல்லாத்தாவும் இப்போதும் எண்ணற்ற சாதாரண
மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த பாடல்களாகத்
திகழ்கின்றன.

கடவுள் நம்பிக்கை அற்றோரையும் ஈர்க்கும் இவ்வகைப்
பாடல்கள், மத வெறிக்கு அப்பாற்பட்டது இந்த மண்,
இந்த மக்கள் என்ற இயல்பைத் திரும்பத் திரும்ப
நினைவூட்டிக் கொண்டிருப்பவை.

அதற்காகத் தான் ‘எல்லார் ஈஸ்வரி’ என்று பொதுவான
பெயரிட்டார்கள் என்று ஒருமுறை அவரே சொன்னதாகப்
படித்த நினைவு.

முறைப்படியான சங்கீதப் பயிற்சி இல்லாமலே மகத்தான
இசையைச் சலிக்காத குரலில் சளைக்காமல் வழங்கி
இருக்கும் ஈஸ்வரி எல்லாக் காலங்களுக்குமானவர்.

இனிய வாழ்த்துக்கள் அவரது எண்பது வயதுக்கு!
அடுத்து நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகே
இளையான்குடியைச் சேர்ந்த அந்தோணி தேவராஜ்,
ரெஜினாமேரி நிர்மலா தம்பதியின் மூத்த மகளாக
சென்னையில் பிறந்தார் ஈஸ்வரி.

இவருடைய தாயார் எம்.ஆர்.நிர்மலா ஜெமினி
ஸ்டுடியோவில் குழுப்பாடகியாக கலை வாழ்க்கையைத்
தொடங்கியவர். எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள்
உயர்நிலைப் பள்ளியில் படித்தவர் ஈஸ்வரி.

இளம் வயதிலேயே தந்தையை இழந்த எல்.ஆர்.ஈஸ்வரி
தனது குரலால் குடும்பத்தைத் தூக்கி நிறுத்தினார்.
அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.

படங்கள் உதவி: ஞானம்
நன்றி- இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2020 6:10 pm

“அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணாலே வந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்திய இரவுகளில் வானொலிக்கூடத்தில் தனிமையில், அந்த ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே அடிக்கடி ஒலிபரப்பிய இந்தப் பாடலை நினைத்துக் கொண்டேன் இன்று. காலையில் வானொலி நிகழ்ச்சி படைக்கும் போதும் இந்தப் பாடலையே L.R.ஈஸ்வரிக்கான பிறந்த நாள் பாடலாக ஒலிபரப்பி நேயர்களின் தெரிவுகளுக்கும் வழி விட்டேன்.
லூர்து மேரி ராஜேஸ்வரி என்ற L.R.ஈஸ்வரியின் பிறந்த நாள் இன்று.

ஒரு பக்கம் P.சுசீலாத்தனமான முந்தானையை இழுத்து மூடியது போல அடக்கம் தொனிக்கும் குரல், இன்னொரு பக்கம் உஷா உதூப் போல துள்ளிசையில் தெறிக்கும் குரல் இப்படியாகப்பட்ட இரு வேறு பரிணாமங்களில் எல்.ஆர்.ஈஸ்வரியைத் தாண்டி இன்னொருவரின் உச்சத்தைக் காண முடியவில்லை. அவ்வளவு தூரம் பன்முகம் கொண்ட பாடகி இவர். அது மட்டுமா?

ஆடி மாசம் அம்மனுக்குக் கூழ் ஊத்துற நினைப்போடு குழாய் கட்டி அம்மன் பாடல்கள் முந்திக் கொள்ளும். சந்திக்குச் சந்தி “கற்பூர நாயகியே கனகவல்லி” எல்.ஆர்.ஈஸ்வரிகள் பாடிக் கொண்டிருப்பார்கள்.

பக்திப் பாடல் மரபில் சீர்காழி கோவிந்தராஜனைத் தொடர்ந்து எல்.ஆர்.ஈஸ்வரியையும் சேர்த்து விட்டுத் தான் மற்றவர்கள் வரிசையில் வரக் கூடிய அளவுக்கு பக்தி இலக்கியத்திலும் புகழோச்சியவர்.

கே.பாலசந்தரின் இரண்டு படங்கள்.
ஒன்று வி.குமார் இசையமைத்த “வெள்ளி விழா”, இன்னொன்று எம்.எஸ்.விஸ்வநாதன் இசை கொடுத்த “மன்மத லீலை”.

“காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் உறவாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்”

என்று கணவனின் நெஞ்சத் தொட்டிலில் முகம் சாய்த்து ஆரும், ஊரும் கேளா வண்ணம் “வெள்ளி விழா”வில் பாடும் இந்தக் குரல் தான்
ஹல்லோ....
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜையறை பார்க்கும் ஆசை வரக்கூடும்”

என்று தொலைபேசி வழியே சல்லாபம் கொட்டக் கிசிகிசுப்பார். இந்த மாதிரிக் காட்சியின் திறன் அறிந்து தன் குரலின் தொனியை மாற்றி, பாடலைக் கேட்கும் போதே நம் மனக் கண்ணில் அந்தச் சூழலைக் கொண்டு வருவது தான் எப்பேர்ப்பட்ட வல்லமை.
அது எல்.ஆர்.ஈஸ்வரியிடம் இருக்கிறது.

“இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்குக் கவலை எதுக்கு
Love Birds.......”

அப்படியே ஒரு ஆர்ப்பாட்டமான மன நிலைக்குத் தூக்கிக் கொண்டு போய் வைத்து விடுவார். ஆரம்ப இசை கூட இல்லாமல் நேரே அந்தத் துள்ளல் உணர்வைச் சுமக்க வேண்டிய தார்ப்பரியத்தை உணர்ந்து அப்படியே வெகு இலகுவாகக் கடத்தி விடுவார் நமக்கும்.

கூடப் பாடிய ஆனானப்பட்ட எஸ்.பி.பியே ஆளை விடுங்கய்யா எல்.ஆர்.ஈஸ்வரி போல இவ்வளவு தூரம் பாட யாரால் முடியும் என்று சரணாகதி அடைந்து விடுவார். அந்த ஆங்கில உச்சரிப்பில் பக்கா இங்கிலீஷ்காரி இந்த எல்.ஆர்.ஈஸ்வரி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2020 6:11 pm

“தேடினேன் வந்தது நாடினேன் தந்தது” ஊட்டி வரை உறவு படத்துக்காக பி.சுசீலா பாடியது எல்.ஆர்.ஈஸ்வரிக்குத் தான் போய் சேர வேண்டியது ஆனால் அந்தச் சூழலில் அவர் இல்லாததால் சுசீலாவுக்குப் போனதாக ஒரு செய்தி. அந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரிகான நளினத்தை உணரலாம். ஊட்டி வரை உறவு படத்தில் பி.சுசீலாத்தனமான பாட்டு “ராஜ ராஜஶ்ரீ” பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது புதுமை.

“எலந்தப் பழம்....எலந்தப் பழம்” இந்தப் பாட்டு அந்த நாளில் கேட்டால் சரஸ்வதிப் பெரியம்மா நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். தான் பள்ளிச் சிறுமியாக இருந்த காலத்தில் வந்தது என்று கொள்ளைப் பிரியத்தோடு கேட்பார்.
கே.வி.மகாதேவன் இசையில் பின்னாளில் சர்வசாதாரணமாக அங்கீகரிக்கப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் ஒரு ஆபாசக் கிளப்பி என்று பொங்கித் தீர்த்ததாக ஊர்ப் பெருசுகள் சொல்வார்கள். எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது இந்தப் பாட்டு. “வாராய் என் தோழி வாராயோ” கூட ஆரம்ப கால அடையாளம் இவருக்கு.

“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” இல்லாத் பாட்டுப் போட்டி மேடைகளைக் காட்ட முடியுமா? சிவந்த மண் படம் வெளிவந்து இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாட்டு நினைவில் நிறைந்திருக்க அந்தச் சாட்டையடி வாங்கிக் கொண்டே உதறும் குரலும், நளினமான பாவங்களும் கொடுத்த எல்.ஆர். ஈஸ்வரி தானே முக்கிய பங்காளி?

இதே மாதிரி “ஆடவரலாம் ஆடவரெல்லாம்”, “முத்துக் குளிக்க வாரீகளா” என்று துள்ளிசை ஒரு பக்கம்,

“ பேசாத கண்ணும்
பேசுமா......
பெண் வேண்டுமா
பார்வை போதுமா”

என்னவொரு நக்கல் தொனியைக் கொடுப்பார் ஈஸ்வரி, பாவம் T.M.செளந்தரராஜன் தன் பாட்டுக்கு வெகு கர்ம சிரத்தையாக “பார்வை ஒன்றே போதுமே” பாடிக் கொண்டிருக்கையில்.

இல்லற சுகத்தை இனிமை தரும் பாட்டாய் இன்னொன்று “இது மாலை நேரத்து மயக்கம்”.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வழியாக ஏராளம் நன் முத்துகள் வித விதமாக எல்.ஆர்.ஈஸ்வரிக்குக் கிடைத்தது.
அதே நேரம் “அம்மனோ சாமியோ” என்று
“நான்” படத்தில் பக்கா துள்ளிசை ஒன்றைக் கொடுத்துத் தனியாக இசையமைக்கச் சென்ற
T.K.ராமமூர்த்தி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு இன்று வரை ஒரு முகவரிப் பாடலாகவும் ஆக்கி விட்டார்.

“அடி என்ன உலகம் இதில் எத்தனை கலகம்”
ஒரு படத்தின் சாரத்தை அசரீரியாகக் கொண்டு வரும் நுட்பம் அவள் ஒரு தொடர்கதை படத்தின் வழியே ஈஸ்வரியின் குரலாய், அது போலவே மூன்று முடிச்சில் “அவள் ஒரு கதாநாயகி”. அது போல எழுபதுகளில் ஒரு அரிய முத்து “நிலவே நீ சாட்சி” படத்தில் மெல்லிசை மன்னரோடு இவர் களியாட்டம் போட்ட “நீ நினைத்தால் ஏதேதோ நடக்கும்”

அந்தக் காலத்து மார்டன் தியேட்டர்ஸ், விஜயலலிதா எல்லாம் நினைப்புக்கு வந்தால் எல்.ஆர்.ஈஸ்வரியும் கூட வருவார். உதாரணத்துக்கு “வல்லவன் ஒருவன்” படத்தில்
“பளிங்கினால் ஒரு மாளிகை” பாட்டில் எப்பேர்ப்பட்ட கவர்ச்சிகரமான வில்லத்தனம் காட்டுகிறது இந்த ஈஸ்வரிக் குரல்.

இன்னோர் பக்கம்
“அன்னை போல என்னைக் காத்த
அன்பு தெய்வமே.....”
என்று தானும் உருகி நம்மையும் உருக்கி விடுகிறாரே?

அறுபது ஆண்டுகளைக் கடந்து பாடிக் கொண்டிருப்பவரை ஒரு கட்டுரையின் கொள்ளளவில் அடக்க முடியாதெனினும் ஆசை தீர நினைவில் நின்றவைகள அவரின் அகவை எண்பதில் நினைத்துப் பார்த்து இசையால் வாழ்த்துகிறேன்.

இதுதான் சுகமோ இன்னும் வருமோ
இளமை தருமோ மயக்கம் வருமோ...
அம்மம்மா கேளடி தோழி....

இலங்கை வானொலியின் எண்பதுகளின் இரவின் மடிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது போன்றொரு அசரீரி காதில் கேட்கிறது.

எல்.ஆர்.ஈஸ்வரி நம் எல்லார் ஈஸ்வரி.

கானா பிரபா
07.12.2019
தமிழ்முரசு- ஆஸ்திரேலியா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக