ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு

3 posters

Go down

தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Empty தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு

Post by அன்பு தளபதி Tue Jan 12, 2010 9:29 pm

பூனை- தேவதேவன்
முதல் அம்சம்அதன் மெத்தென்ற ஸ்பரிசம்குழைவு அடிவயிற்றின்பீதியூட்டும்
உயிர் கதகதப்பு
இருவிழிகள் நட்சத்திரங்கள்பார்க்கும் பார்வையில்சிதறிஓடும் இருள் எலிகள்
‘நான்! நான்!”என புலிபோலநட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்உருளும் கோட்டமுள்ள சக்கரமெனபுழுப்போலஅதன் வயிறசைதல் காணலாம்
கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாதசாமர்த்திய நடை இருந்தும்‘மியாவ்’என்ற சுயப்பிரலாப குரலால்தன் இரையை தானே ஓட்டிவிடும்முட்டாள் ஜென்மம்
நூல்கண்டோடும்திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்விளையாடும் புத்திதான் எனினும்பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு
எலியை குதறுகையில்பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்நக்கி நக்கி பாலருந்துகையில்தெரியவரும் இளகிய நாக்கையும்ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்
ஞாபகப்படுத்திப்பாருங்கள்உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவேசினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?
நன்றி: தேவ தேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு: தமிழினி வெளியீடு[/b
]

[b]கூழாங்கற்கள்


இந்தக் கூழாங்கற்கள் கண்டுவியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்உன்முகம் எனஎவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்
” ஐயோ இதைப் போய் ” எனஏளனம் செய்து ஏமாற்றத்துள்என்னைச் சரித்துவிட்டாய்
சொல்லொணாதஅந்த மலைவாசஸ்தலத்தின்அழகையும் ஆனந்தத்தையும்சொல்லாதோஇக்கூழாங்கற்கள் உனக்கும் ?என எண்ணினேன்
இவற்றின் அழகுமலைகளிலிருந்து குதித்துபாறைகளூடே ஓடும் அருவிகளால்இயற்றப்பட்டது
இவற்றின் யெளவனம்மலைப்பிரதேசத்தின்அத்தனைச் செல்வங்களாலும்பராமரிக்கப்பட்டது
இவற்றின் மெளனம்கானகத்தின் பாடலைஉற்றுக் கேட்பது
மலைப்பிரதேசம்தன் ஜீவன் முழுசும் கொண்டுதன் ரசனை அத்தனையும் கொண்டு படைத்தஒரு உன்னத சிருஷ்டி
நிறத்தில் தன் மாமிசத்தையும்பார்வைக்கு மென்மையையும்ஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டிதவம் மேற் கொண்ட நோக்கமென்ன ? என்றால்தவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்


மேகம் தவழும் வான்விழியே

மேகம் தவழும் வான்விழியேஉன் தனிப்பெரும் வியக்தியைதுக்கம் தீண்டியதெங்கனம் ?
எதற்காக இந்தப் பார்வைவேறு எதற்காக இந்தச் சலனம் ?
அன்பான ஒரு வார்த்தைக்காகவா ?ஆறுதலான ஒரு ஸ்பரிசத்திற்காகவா ?மனம்குளிரும் ஒரு பாராட்டுக்காகவா ?
கவனிஉனக்கு கீழேஅவைஒரு நதியென ஓடிக்கொண்டிருக்கின்றன .


சூரியமறைவு பிரதேசம்

உனக்கு சந்தோஷம் தருவது எதுவோஅதுவே உனக்கு சூரியன்உதாரணமாக ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்ஒரு பப்பாளிப்பழம்ஒரு ந்ண்பனின் முகம்ஒரு டம்ளர் தண்ணீர்இன்னும்காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்என சொல்லிக் கொண்டே போகலாம்
ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்ஒரு பப்பாளிப்பழம்அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையென்றால்ஒரு நண்பனின் முகம்உன் முகத்துக்கு ஒளியேற்றவில்லை என்றால்ஒரு டம்ளர்தண்ணீர்உன் தாகம் தணிக்கவில்லை என்றால்ஒரு கண்ணாடி முன்நீ புன்னகை கொள்ளா இயலவில்லை என்றால்காகிதத்தில் பொதிந்த கவிதைகளாய்உனக்கு உன் வாழ்க்கைகாணப்படாவிட்டால்உணர்ந்துகொள்‘நீ இருக்குமிடம் சூரிய மறைவு பிரதேசம் ‘

மலை

மலை உருகி பெருக்கெடுத்த நதிமடியுமோ நிரந்தரமாய் ?
அவ்வளவு பெரிய கனலைவெளிப்படுத்த வல்லதோஒரு சிறு சொல் ?

ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்
கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே
ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்

பறவைகள் காய்த்த மரம்

ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா ?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்
ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய் காய்த்து
இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது
ஒரு நண்பனைப் போல
சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ
மெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்


பனை

விடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ
எதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் ?
அனைத்தையும் ஊருருவிய பின்னே
ஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்
அதை சிரமேற்கொண்டு கனிந்தனையோ ?
ஒற்றைகாலில் நின்றபடி
உன் தவத்தின் வைரத்தை
என் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் ?
அன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்
வீற்றிருந்தது அது
பின்பு
இரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து
வெளியேறியது அது
கோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்
எதிர்ப்பேதும் காட்டாது விழுந்து
நீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்
நின்றிருந்தது அது .
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Empty Re: தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு

Post by சொரூபன் Tue Jan 12, 2010 9:43 pm

தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு 677196 தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு 677196
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Empty Re: தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு

Post by அன்பு தளபதி Tue Jan 12, 2010 9:44 pm

சொரூபன் wrote:தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு 677196 தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு 677196

thankyou மீண்டும் சந்திப்போம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Empty Re: தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு

Post by அப்புகுட்டி Wed Jan 13, 2010 12:46 am

மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Empty Re: தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum