ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Today at 4:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:24 pm

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Today at 8:58 am

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by ayyasamy ram Today at 8:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Today at 8:55 am

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Today at 8:54 am

» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Today at 8:53 am

» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Today at 8:51 am

» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Today at 8:42 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Today at 8:38 am

» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Today at 8:35 am

» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Yesterday at 4:11 pm

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by T.N.Balasubramanian Yesterday at 1:59 pm

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Yesterday at 1:56 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by T.N.Balasubramanian Yesterday at 1:52 pm

» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Yesterday at 1:16 pm

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Yesterday at 1:03 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Yesterday at 12:57 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Yesterday at 7:16 am

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Yesterday at 5:21 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Yesterday at 5:17 am

» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm

» ரசித்த பாடல்
by சக்தி18 Sat Jan 16, 2021 6:31 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm

» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:52 pm

» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Sat Jan 16, 2021 2:50 pm

» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:46 pm

» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Sat Jan 16, 2021 2:18 pm

» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Sat Jan 16, 2021 1:43 pm

» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Sat Jan 16, 2021 10:48 am

» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:56 am

» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:33 am

» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:26 pm

» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:16 pm

» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:06 pm

» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:52 pm

» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:08 pm

» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:05 pm

Admins Online

’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்

Go down

’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன் Empty ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்

Post by ayyasamy ram on Wed Dec 02, 2020 4:24 pm


1998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன்
இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’
திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது.

இன்றுடன் அந்தத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள்
நிறைவடைந்த நிலையில், டைரக்டர் விக்ரமனிடம்
பேசினோம்.

`நான் உதவி இயக்குநராக இருந்தபோது யோசித்த கதைதான்உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’.
ஏனோ அந்தக் கதையைத் திரைப்படமாக்கத்
தோணவில்லை. என்னுடைய படங்களில் எல்லாம்
சென்டிமென்ட் வசனம், காட்சிகள் தூக்கலாக இருக்கும்.

இந்தக் கதையின் நாயகன் ஒரு திருடன். சினிமாவில்
எம்.ஜி.ஆர் திருடனாக நடித்த பாசம்',ஒளிவிளக்கு’
திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை;
அது பெண்களுக்குப் பிடிக்காது என்று கருதி, அந்தத்
திருடன் கதையைத் திரைப்படமாக்காமல் தள்ளிப்
போட்டுக் கொண்டே வந்தேன்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம்
கார்த்திக்கின் கால்ஷீட் கைவசம் இருந்தது. என்னை
இயக்குவதற்கு அழைத்தனர். முதலில் க்ளைமாக்ஸ்
காட்சிதான் உதித்தது. அதன்மேல் நம்பிக்கை வந்தபிறகே
கதையை உருவாக்கினேன்.

என் உதவி இயக்குநர்களிடம் இந்தக் கதையைச்
சொன்னேன். `என்ன சார் இது திருடன்னு சொல்றீங்க,
அப்புறம் திருந்துறான்னு சொல்றீங்க ரொம்பப் பழசான
கதையா இருக்கே சார்’ என்று எல்லோரும் கோரஸாகச்
சலித்துக்கொண்டனர்.

ஒருவருக்கும் இந்தக் கதை பிடிக்கவில்லை.
நீங்க சொல்றபடி திருடன் கதை பழசுதான். ஆனால்,
இந்தக் கதைநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று’ என்கிற திருக்குறளை
அடிப்படையாகக் கொண்டது என்று நான் சொன்னேன்

கஷ்டப்படும் ஒருவரை இன்னொருவர் கைதூக்கிவிடுவார்.
ஆனால், அவர்கள் உயர்ந்த பிறகு கைதூக்கியவரை
கழற்றிவிடுவார்கள். இதுமாதிரி சம்பவம் எல்லாருடைய
வாழ்க்கையிலும் நடந்து இருக்கும்.

நான் சொன்ன கதையைக் கேட்டு யாருமே ஒப்புக்
கொள்ளவில்லை. எல்லோருமே மறுத்துப் பேசினார்கள்.
ரவிக்குமாரிடம் இருந்த ரமேஷ்கண்ணாவிடம் கதையைச்
சொன்னவுடன் `சார் க்ளைமாக்ஸ் எக்ஸ்டார்டினரி’ என்று
பாராட்டினார்.

கார்த்திக் சாரை ஒப்பந்தம் செய்துவிட்டு உன்னிடத்தில்
என்னைக் கொடுத்தேன்' படத்தின் படப்பிடிப்பைத்
தொடங்கிவிட்டோம்.

வாகிணி ஸ்டுடியோவில் நான்காவது நாள் ஷூட்டிங்
ரோஜா வானம்பாடி..’ என்கிற பாடலைப்
பாடும்போது கங்கை அமரன் `நல்லா பாடுறியேம்மா
நீயே பாடு…’ என்று சொல்வார்.

அந்தக் காட்சியைப் படமாக்கிக்கொண்டு இருந்தேன்.
அப்போது மேக்கப் ரூமிலிருந்து கார்த்திக் சார் திடீரென
என்னை அழைத்தார். `சார் இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு
என்னமோ மாதிரி இருக்கு.

ஏன்னா நான் ஏற்கெனவே நடிச்ச `நந்தவனத்தேரு’ படத்தோட
கதையும் இதுவும் ஒரேமாதிரி இருக்குது. இது சரிப்பட்டு
வருமா. எனக்கு நடிக்கலாமா… வேணாமான்னு ஃபீலிங்கா
இருக்கு’ என்று சொன்னார்.


Last edited by ayyasamy ram on Wed Dec 02, 2020 4:29 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64802
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன் Empty Re: ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்

Post by ayyasamy ram on Wed Dec 02, 2020 4:25 pm

எனக்கு ஒரு மாதிரி டென்ஷன் ஆயிடுச்சு
. `சார் முதல்ல கதை சொன்னபோதே இதைச் சொல்லி
இருக்கணும், இப்போ நாலாவது நாளா ஷூட்டிங் நடந்துகிட்டு
இருக்கு. இப்போ சொன்னீங்கன்னா என்ன அர்த்தம்.

உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்களும் தயாரிப்பாளரும்
வேற படம் பண்ணிக்கோங்க. ஆனா என் கதைமேல் எனக்கு
நம்பிக்கை இருக்கு’ என்று சொன்னவுடன் திடீரென
என் கைகளைப் பற்றிக்கொண்ட கார்த்திக்,
`உங்களுக்கு நம்பிக்கை இருந்தா ஓ.கே. நாம இந்தப்
படத்துல சேர்ந்து வேலை பார்ப்போம் சார்’ என்று
நெகிழ்ந்தார்.

அப்போது கார்த்திக் சார் நீங்க இப்போ சொன்னதை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ சில்வர் ஜூப்ளி
விழாவுல நிச்சயமா சொல்வேன்’ என்று சொன்னவுடன்
கலகலவெனச் சிரித்தார் கார்த்திக்.

இந்தப் படத்துல கெஸ்ட் ரோலில் அஜித்தை நடிக்க வைக்க
ஆசைப்பட்டேன். முதலில் தயக்கமாக இருந்தது. அவரிடம்
போனேன் கதையைக்கூட கேட்கவில்லை,
`சார் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு. நீங்க என்னை
வில்லனா காமிச்சாக்கூட கண்டிப்பா நடிக்கிறேன்’ என்று
சொன்னார்.

ஏற்கெனவே நான் `புதிய மன்னர்கள்’ படத்தை டைரக்‌ஷன்
செய்தபோது, அஜித்தை நடிக்கவைக்க நினைத்தேன்.
ஆனால், அப்போது ஆக்ஸிடென்ட்டில் சிக்கி சிகிச்சை
எடுத்துக்கொண்டிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படப்பிடிப்பு மொத்தம்
42 நாள்களிலேயே முடிந்துவிட்டது.
அஜித் 12 நாள்கள் நடித்தார். அவரை எப்போதும்ஜென்டில்மேன்’
என்றே அழைப்பேன்.

அமெரிக்கா போவதாக அஜித் சொன்னதால் அவரது ஷூட்டிங்
தினசரி நைட்டில் நடந்தது. அஜித்துக்காக கார்த்திக் இரவு
முழுக்க கண்விழித்து நடித்தார். முதன்முதலில்
`ஏதோ ஒரு பாட்டு…’ காட்சியைப் படமாக்கினோம்.

இந்தப் பாடலை தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி
என்று அனைத்து மொழிகளிலும் வெளியிட்டனர்.
இந்தியில் அனுமதி பெறாமலே வெளிவந்தது.

எஸ்.ஏ.ராஜ்குமார் நினைத்திருந்தால் இந்திப் பாடலின் மேல்
வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கியிருக்க முடியும்.
வானத்தைப்போல' படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு,
சார் நான் வெளியூர் போகும்போதெல்லாம் ஒரு கேசட்
முழுக்க உங்களோட `ஏதோ ஒரு பாட்டு’ பாடலைத்தான்
ரெக்கார்டு பண்ணி கேட்டுக்கிட்டே போவேன்.

அதனால் அதுபோல வானத்தைப்போல' படத்திலும் ஒரு பாட்டு
வேணும்' என்று என்னிடம் கேட்டுக்கொண்டார் விஜயகாந்த்.
அதன் பிறகு அதில் இடம்பெற்றமைனாவே மைனாவே’ பாடல்
விஜயகாந்த்தின் ஃபேவரைட்.

எல்லோரும் விஜயகாந்த் சாரை ஆக்‌ஷன் ஹீரோவாகப்
பார்க்கிறீர்கள். அவர் மெலோடி பாடல்களின் பரம ரசிகன்
என்பது பலபேருக்குத் தெரியாது.

ஒரு வகையில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'
படத்தின் க்ளைமாக்ஸில் ரோஜா பேசும் டயலாக்கும்
வானத்தைப்போல’ படத்தின் கடைசிக் காட்சியில் பிரபுதேவா
பேசும் வசனமும் ஒரேமாதிரி இருக்கும்” என்று பழைய
நினைவுகளைப் பகர்ந்தார் இயக்குநர் விக்ரமன்.

எம்.குணா
நன்றி-விகடன் -14-8-2018
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64802
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum