ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை ! - Page 3 Poll_c10பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை ! - Page 3 Poll_m10பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை ! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை ! - Page 3 Empty பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !

Post by krishnaamma Wed Nov 18, 2020 8:29 pm

First topic message reminder :

பெண்களுக்கான 30 வகை சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !

எள்ளுருண்டை

தேவை: கறுப்பு எள் - 100 கிராம், துருவிய வெல்லம் - 100 கிராம், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் வெறும் கடாயில் கறுப்பு எள்ளை வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆறவிடவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு சுற்று சுற்றி கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி, பின்னர் நல்லெண்ணெய்விட்டு நன்கு கலந்து சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 20 நாள்கள் வரை கெடாமல் வைத்துப் பயன்படுத்தலாம். விருப்பப்பட்டால் ஒரு கைப்பிடி வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

சிறப்பு: கறுப்பு எள் பெண்களுக்கு நன்மை அளிக்கும். இது கருப்பைக்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்தும். பற்களை உறுதிப்படுத்தும். மாதவிடாய் நேரத்தில் வரும் இடுப்பு வலியையும் சரிசெய்யும். இதில் இருக்கும் மெக்னீசியம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து ரத்த விருத்திக்கு உதவும்; ஒழுங்கற்ற மாதவிடாய்ப் பிரச்னையையும் சரிசெய்யும்.


Last edited by krishnaamma on Wed Nov 18, 2020 8:45 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை ! - Page 3 Empty Re: பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !

Post by krishnaamma Wed Nov 18, 2020 8:42 pm

ஹெர்பல் பொடி

தேவை: கறுப்பு உளுந்து - ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5 - 6, பெருங்காயம் - ஒரு துண்டு, கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு, சுத்தம் செய்து உலர்த்திய முருங்கைக்கீரை - 5 கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதலில் வெறும் கடாயில் கறுப்பு உளுந்தை நன்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு அதே கடாயில் வெந்தயம், பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, முருங்கைக்கீரை என ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து இவற்றை மிக்ஸி ஜாரில் அரைத்து இவற்றுடன் உப்பு கலந்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் கலந்து நெய் அல்லது நல்லெண்ணெய்விட்டு சூடாகச் சாப்பிடவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். பொரியல் செய்து இறக்கும்போது இதை ஒரு டீஸ்பூன் தூவி இறக்கலாம்.

சிறப்பு: கர்ப்பப்பையை வலுவடைய செய்யும். உடலை வலுப்படுத்தி எலும்புகளை உறுதிப்படுத்தி திடமாக வாழ வழிசெய்யும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை ! - Page 3 Empty Re: பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !

Post by krishnaamma Wed Nov 18, 2020 8:43 pm

பிரண்டைப் பச்சடி

தேவை: பிரண்டை (நார் எடுத்தது) - ஒரு கப், சின்ன வெங்காயம் - 15, பூண்டு - 10 பல், புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 6 – 8, கறுப்பு உளுந்து - ஒரு கைப்பிடி அளவு, துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுந்து, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங் காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை: முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய்விட்டு பிரண்டையை வதக்கி எடுத்துவைக்கவும். பிறகு அதே கடாயில் தோலுரித்த சின்ன வெங்காயம், பூண்டு, புளி, உளுந்து, காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல் என அனைத்தையும் வதக்கி, பிரண்டை, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்தெடுக்கவும். பிறகு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைக் கொண்டு தாளித்து சேர்க்கவும். மணமணக்கும் பிரண்டைப் பச்சடி தயார்.

சிறப்பு: இதற்கு வஜ்ரவள்ளி எனும் பெயரும் உண்டு. அபரிமிதமான சுண்ணாம்புச்சத்து அடங்கியிருப்பதால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. ஜீரணத்துக்கு உதவும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். பசியைத் தூண்டும். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும். பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்லது. ரத்த விருத்திக்கும் உதவுகிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை ! - Page 3 Empty Re: பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !

Post by krishnaamma Wed Nov 18, 2020 8:43 pm

நிடக்காய லேகியம்

தேவை: ஓமம் - 50 கிராம், சுக்கு - 50 கிராம், கிராம்பு - 50 கிராம், சூலத்தவரை - 50 கிராம், கண்டந்திப்பிலி - 50 கிராம், அரிசி திப்பிலி - 50 கிராம், ஏல அரிசி - 25 கிராம், சித்தரத்தை - 50 கிராம், ஜாதிக்காய் - 50 கிராம், மாசிக்காய் - 25 கிராம், வெள்ளை மிளகு - 50 கிராம், கருஞ்சீரகம் - 50 கிராம், கொத்தமல்லி விதை (தனியா) - 50 கிராம், பெருங்காயம் - 25 கிராம், சீரகம் - 50 கிராம், கடுக்காய் - 50 கிராம், எள் - 50 கிராம், விரலி மஞ்சள் - 50 கிராம், தேன் - 100 மில்லி, நல்லெண்ணெய் - 100 மில்லி, கருப்பட்டி - 700 கிராம், தண்ணீர் - 4 டம்ளர் (800 மில்லி).
செய்முறை: கொடுக்கப்பட்ட பொருள்களை (கருப்பட்டி, எண்ணெய், தேன் தவிர) வெறும் சட்டியில் வறுத்துப் பொடித்து சலித்து வைக்கவும். அல்லது நாட்டு மருந்து கடையில் பொடியாகக் கிடைக்கும். வாங்கிப் பயன்படுத்தலாம். பிறகு கருப்பட்டியில் 4 டம்ளர் தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டி கொதிக்கவிட்டு கம்பிப் பதம் வந்ததும் சலித்தவைத்த பொடியைத் தூவி நன்கு கிளறவும்.

நன்றி....🍃Sri Yoga & Naturopathy🍃


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை ! - Page 3 Empty Re: பெண்களுக்கான சிறப்பு உணவு... பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum