ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு பெயர்ச்சி 2020:

3 posters

Go down

குரு பெயர்ச்சி 2020:  Empty குரு பெயர்ச்சி 2020:

Post by T.N.Balasubramanian Tue Nov 17, 2020 3:42 pm

குரு பெயர்ச்சி 2020: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் மின்னல் வேக பலன்கள் By Jeyalakshmi C | Updated: Monday, November 16, 2020, 10:43 [IST] சென்னை:

குரு பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. தனுசு ராசியில் இருந்த குரு பகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். குரு பெயர்ச்சியால் சிலருக்கு பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு திருமணயோகம் வரும் சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். எந்த ராசிக்கு குரு என்ன பலன்களை தருவார் என்று சுருக்கமாக பார்க்கலாம். குரு பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் 1ம் பாதத்திலிருந்து மகரத்தில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரு பெயர்ச்சி அடைந்துள்ளார். திருக்கணித பஞ்சாங்க முறைப்படி கார்த்திகை 5 ஆம் தேதி நவம்பர் 20ஆம் வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. குருவின் பார்வை மகரம் ராசியில் இருந்து ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் குரு பெயர்ச்சியால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று சுருக்கமாக பார்க்கலாம்.

நன்றி தட்ஸ்தமிழ்

தொடர்கிறது


Last edited by T.N.Balasubramanian on Tue Nov 17, 2020 3:43 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரு பெயர்ச்சி 2020:  Empty Re: குரு பெயர்ச்சி 2020:

Post by T.N.Balasubramanian Tue Nov 17, 2020 3:48 pm


மேஷம்
தொழில் குரு உங்களுடைய ராசிக்கு 9,12க்குடைய குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நீங்கும். உங்களுடைய தொழில் காரகன் சனி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம். குருவும் சனியும் இணைந்து வேலை தொழிலில் எண்ணற்ற மாற்றங்களை தாரப்போகிறார்கள்.

ரிஷபம்
பாக்ய குரு ரிஷபம் ராசிக்கு குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் குரு அமர்கிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. அரசு வேலை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

மிதுனம்
அஷ்டம குரு மிதுன ராசிக்கு குரு பகவான் 7 மற்றும்10ஆம் வீட்டிற்கு உடையவர் குரு பகவான் இப்போது உங்க ராசிக்கு அஷ்டமத்தில் அமர்கிறார். அஷ்டமச் சனி பாதிப்பை தரும் நிலையில் அஷ்டம குரு வந்து சனியின் பாதிப்பை சற்றே குறைப்பார். தொழில் வேலை விசயங்களில். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

கடகம்

களத்திர குரு குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குரு பார்வையால் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும் கண்டச்சனியால் ஏற்பட்ட கவலைகள் தீரு. குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் வரலாம் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லவும். அதிக பேச்சு ஆபத்தை ஏற்படுத்தும் மவுன விரதம் நல்லது.

தொடரும்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரு பெயர்ச்சி 2020:  Empty Re: குரு பெயர்ச்சி 2020:

Post by T.N.Balasubramanian Tue Nov 17, 2020 3:54 pm

சிம்மம்
ருண ரோக சத்ரு குரு குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். கடன் எதிரிகள் தொந்தரவு கட்டுக்குள் இருக்கும் என்றாலும் பல புதிய கடன்கள் வாங்குவீர்கள். கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது.

கன்னி

பூர்வ புண்ணிய குரு குரு 5ஆம் வீட்டில் அமர்வது யோகம். இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1. புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. திருமண யோகம் கை கூடி வரும். என்றாலும் குரு அதிசாரமாக செல்லும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நீங்கள் மனதில் வைத்திருக்கும் காரியங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும். சில பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.
துலாம்
சுக ஸ்தான குரு குரு 4ஆம் வீட்டில் அமரப் போகிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சுக ஸ்தானத்தில் உள்ள குரு சுகங்களை தடுப்பார் எச்சரிக்கையாக இருக்கவும். தங்கள் சுக விசயங்களை அனுபவிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். பலருக்கும் வீடு அல்லது வேலை ரீதியான இடங்களில் இட மாற்றம் நிகழும். இந்த குரு பெயர்ச்சி மனைவி அல்லது தாய்க்கு பிரச்சினைகளை கொடுக்கும். புது முயற்சிகளில் கவனம் தேவை. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு ஐந்தாம் வீட்டிற்கு அதிசாரத்தில் செல்லும் போது குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கும் காலத்தில் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்
தைரிய குரு குரு பகவான் 3ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளதால் கடந்த ஆண்டுகளில் சந்தித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களுடைய கடின முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இளைய சகோதர வகையில் மனஸ்தாபங்கள் நிகழும் கவனம் தேவை.

தொடர்கிறது


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரு பெயர்ச்சி 2020:  Empty Re: குரு பெயர்ச்சி 2020:

Post by T.N.Balasubramanian Tue Nov 17, 2020 4:00 pm

தனுசு
குடும்ப குரு குரு 2ஆம் வீட்டில் வரப் போகிறார். வம்பு, வழக்கு நீதிமன்ற பிரச்சினைகள் சாதகமாக வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாக்கில் கவனம் தேவை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் லாபம் கிடைக்கும் பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.

மகரம்
ஜென்ம குரு மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி கால கட்டம். குரு ஜென்ம ராசிக்கு வருகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்பது போல 30 வயதுக்கு உட்பவர்களுக்கு சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. குரு பெயர்ச்சியின் முக்கால் பகுதி வரை கடன் வேலை சார்ந்த விசயங்களில் பிரச்சினை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வந்து நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
கும்பம்
விரைய குரு கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் சில சோதனைகள் நடந்தாலும் நன்மைகளும் அதிகம் நடைபெறும். வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள்.

மீனம்
லாப குரு குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும்.தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் முற்பகுதியிலும் இறுதியிலும் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
*************************
தட்ஸ்தமிழ் குரு பெயர்ச்சி 2020:  1571444738





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரு பெயர்ச்சி 2020:  Empty Re: குரு பெயர்ச்சி 2020:

Post by krishnaamma Tue Nov 17, 2020 8:13 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குரு பெயர்ச்சி 2020:  Empty குரு பெயர்ச்சி 2020

Post by ayyasamy ram Wed Nov 18, 2020 5:48 pm

குரு பெயர்ச்சி 2020:  0091d210
குரு பெயர்ச்சி 2020:  Cb3a2110
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குரு பெயர்ச்சி 2020:  Empty Re: குரு பெயர்ச்சி 2020:

Post by krishnaamma Wed Nov 18, 2020 7:21 pm

குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே உள்ளது, அதனுடன் இந்த திரியையும் இணைத்து விடுகிறேன் அண்ணா ! புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குரு பெயர்ச்சி 2020:  Empty Re: குரு பெயர்ச்சி 2020:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum