புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
29 Posts - 38%
ayyasamy ram
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
7 Posts - 9%
mohamed nizamudeen
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
1 Post - 1%
mruthun
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
104 Posts - 48%
ayyasamy ram
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
நாரையாக மாறிய தேவதத்தன் I_vote_lcapநாரையாக மாறிய தேவதத்தன் I_voting_barநாரையாக மாறிய தேவதத்தன் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரையாக மாறிய தேவதத்தன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 23, 2020 5:39 am

நாரையாக மாறிய தேவதத்தன் 201609061201071612_aanmigam-story_SECVPF
-
இறைவனை மனமார வேண்டினால் தவறுகள்
மன்னிக்கப்படும் என்பதை சாப – விமோசனக் கதை
விளக்குவதை காணலாம்.

நாரையாக மாறிய தேவதத்தன்

தேவலோகத்தைச் சேர்ந்த தேவதத்தன், வான்வழியாகச்
சென்று கொண்டிருந்தான். கீழே ஒரு மரத்தில் அழகிய
பழம் ஒன்று இருப்பது அவனின் கண்களில் பட்டது.

அந்தப் பழத்தை உடனேப் பறித்துச் சாப்பிட வேண்டும்
என்று எண்ணினான்.

வானிலிருந்து கீழே இறங்கியவன், மரத்தில் இருந்து
ஒரு பழத்தைப் பறித்தான். அந்தப் பழத்துடன் மீண்டும்
வான் வழியாகப் பயணிக்கத் தொடங்கினான். அப்படிச்
செல்லும்போதே பழத்தைக் கடித்துத் தின்னத்
தொடங்கினான். பழத்தின் சுவை அவனை மெய் மறக்கச்
செய்தது.

பழத்தை முழுமையாக சாப்பிட்டவன், அதன் கொட்டையை
கீழே வீசினான். அது கீழே ஒரு மரத்தடியில் தவம் செய்து
கொண்டிருந்த துர்வாச முனிவரின் மேலே விழுந்தது.

தியானத்தில் இருந்த துர்வாசர், தன் மீது ஏதோ ஒரு பொருள்
விழுந்ததை உணர்ந்து கண் விழித்தார்.

தன்னுடைய தியானத்திற்கு இடையூறாக வந்து விழுந்த
பழக்கொட்டையைப் பார்த்தார். அதை தன் மீது போட்டது
யார்? என்பதை அறிய முற்பட்டார். அப்போது வான்வழியாக
சென்ற தேவதத்தன், பழத்தைத் தின்று அதன் கொட்டையைக்
கீழே வீசியது காட்சிகளாக அவர் முன் விரிந்தன.

அதைக் கண்டதும் கோபமடைந்த முனிவர்,
‘வான்வழியே செல்லும் தேவதத்தனே! உடனே கீழே இறங்கி
வா’ என்று உரக்க குரல் எழுப்பினார். தேவதத்தனும் தனது
பெயரைச் சொல்லி அழைப்பது யார்?, தன்னை அவர்
எதற்காக அழைக்கிறார்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக
கீழே இறங்கி வந்தான்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 23, 2020 5:40 am

சாபம் :

அங்கே கோபத்துடன் நின்றிருந்த துர்வாச முனிவரைப் பார்த்து,
‘வான் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த என்னை,
சத்தமிட்டு அழைத்த நீங்கள் யார்? எதற்காக அழைத்தீர்கள்?’
என்று கேட்டான்.

பழத்தின் கொட்டையை வீசி தன்னுடைய தவத்தைக் கலைத்தது
மட்டுமில்லாமல், தவத்தில் பெயர் பெற்ற தன்னையே யாரென்று
கேட்ட அவனைப் பார்த்து துர்வாசருக்கு கோபம் அதிகமானது.

‘மூடனே! என்னுடைய தவத்தைக் கலைத்தது மட்டுமின்றி,
என்னையே யாரென்று கேட்டு அவமதிக்கிறாயா?’ என்றார்.

அவரின் கோபத்தைக் கண்டு பயந்த தேவதத்தன்,
‘முனிவரே! நீங்கள் யாரென்று உண்மையிலேயே எனக்குத்
தெரியாது. நான் உங்கள் தவத்தைக் கலைக்க வேண்டுமென்று
எதுவும் செய்யவில்லையே’ என்றான்.

‘நாரை போன்ற பறவைகள் தான், சாப்பிட்டது போக தன் வாயில்
மீதம் இருப்பதை உமிழ்ந்து விட்டுச் செல்லும். அவற்றைப் போல
நீயும் பழத்தைத் தின்றுவிட்டு, அந்தக் கொட்டையை வீசி எறிந்து,
என் தவத்தைக் கலைத்து விட்டாய். தேவலோகத்தைச்
சேர்ந்தவனாக இருந்தும் நாரையைப் போல் நடந்து கொண்ட நீ,
நாரையாகவே மாறி பெரும் துன்பத்தை அடைவாய்’ என்று
சாபம் கொடுத்தார் முனிவர்.

சாபத்தைக் கேட்டுக் கவலையடைந்த தேவதத்தன்,
‘முனிவரே! நான் தின்ற பழத்தின் கொட்டையை சாதாரணமாகத்
தான் கீழே போட்டேன். உங்கள் தவத்தைக் கலைக்க
வேண்டுமென்ற எந்த உள்நோக்கமும் எனக்குக் கிடையாது.
நான் தெரியாமல் செய்த இந்தத் தவறு தங்களுக்குத் துன்பத்தைத்
தந்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

தாங்கள் கொடுத்த சாபத்திலிருந்து என்னை விடுவிக்கத் தகுந்த
வழியைக் காட்டியருள வேண்டும்’ என்று வேண்டினான்.

அவன் வேண்டுதலில் மனமிரங்கிய துர்வாசர்,
‘தேவதத்தா! இந்த உலகில் உனக்குப் பிடித்த சிவலிங்கம் ஒன்றுக்கு,
கங்கையில் இருந்து நீர் எடுத்து வந்து, அந்த நீரால் சிவலிங்கத்தைச்
சுத்தம் செய்து வழிபட்டால், உனக்கு நான் கொடுத்த சாபம் உன்னை
விட்டு நீங்கும்’ என்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 23, 2020 5:40 am

சாப விமோசனத்திற்கு வழிகாட்டிய துர்வாச முனிவரை இருகரம்
கூப்பி வணங்கிய தேவதத்தன், சாபத்தின் காரணமாக மறுகணமே
நாரையாக உருமாறி வானில் பறந்தான்.

விமோசனம் :

சாபத்தால் பெற்ற நாரை, தனது வழிபாட்டுக்கு ஏற்றதாக, பக்தர்கள்
வந்து செல்லாமல் தனித்திருக்கும் சிவலிங்கத்தைத் தேடி பல
இடங்களுக்கும் சென்றது. அப்படி ஒருநாள் காட்டின் வழியாக அது
பறந்து சென்று கொண்டிருந்த போது, காட்டிற்குள் எந்தப் பராமரிப்பும்
இல்லாமல் புதர்கள் மண்டிக் கிடந்த இடத்தில் சிவலிங்கம்
புதைந்திருப்பதைக் கண்டது.

தனது சாப விமோசனத்துக்கு அந்தச் சிவலிங்கத்தையே சுத்தம்
செய்து வழிபட எண்ணியது நாரை. சிவலிங்கத்தைச் சுற்றியிருந்த
புதர்களையும், செடி, கொடிகளையும் அகற்றி சுத்தம் செய்தது.

பின்னர் முனிவர் சொன்னபடி கங்கை நீரை எடுத்து வர வடக்கு
நோக்கிப் பறந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தனது வாயில் கங்கை
நீரை எடுத்து வந்து, சிவலிங்கம் இருக்கும் இடத்தில் இருந்த ஒரு
பாறையின் பள்ளத்தில் நீரை சேகரித்தது. பல நாட்கள் அந்த நாரை,
கங்கையில் இருந்து நீர் எடுத்து வந்து சேகரித்தது.

இன்னும் கொஞ்சம் நீர் இருந்தால், சிவலிங்கத்தை சுத்தம் செய்யலாம்
என்று எண்ணிய நாரை, கடைசி முறையாக வடக்கு நோக்கிப் பறந்து
கங்கை நீரை வாயில் எடுத்து வந்தது. ஆனால் வழியில் கடும் புயல்
காற்று காரணமாக அதனால் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் பலத்த சூறாவளி காற்றில், நாரையின் சிறகுகள் முறிந்தன.

இதனால் மேற்கொண்டு பறக்க முடியாமல் நாரை தரையில் விழுந்தது.
அதன் வாயில் சேகரித்து வைத்திருந்த கங்கை நீரில் சில துளிகள்
அங்கு சிதறி விழுந்தன. பலத்த காயம் ஏற்பட்டிருந்த போதும்,
நடந்தே சிவலிங்கம் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர்
தான் சேகரித்த கங்கை நீரைக் கொண்டு சிவலிங்கத்தைச் சுத்தம்
செய்தது.

அருகில் இருந்த செடிகளில் இருந்த மலர்களைப் பறித்து வந்து
இறைவனை பூஜித்து சாப- விமோசனம் கிடைக்க மனமுருகி
வேண்டியது.

சிறகை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காத நாரையின்
பக்தியை கண்டு மகிழ்ந்தார் சிவபெருமான். நாரையின் முன்பாகத்
தோன்றி அதற்கு சாப விமோசனம் அளித்தார்.

நாரையாக இருந்த தேவதத்தன் பழைய உருவத்தைப் பெற்றான்.
இறைவனை இருகரம் கூப்பி வணங்கினான்.

பின்னர், ‘இறைவா! எனக்குச் சாப விமோசனம் அளித்து காட்சி
தந்த இந்த இடத்தில், தாங்கள் கோவில் கொள்ள வேண்டும். இங்கு
வந்து தங்களை வழிபடும் பக்தர் களுக்கு, அவர்கள் தெரியாமல்
செய்த தவறுகளை மன்னித்து, அவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்க
அருள வேண்டும்’ என்று வேண்டினான்.

இறைவனும் அவ்வாறே அருளினார். மகிழ்ச்சி அடைந்த
தேவதத்தன், சிவபெருமானை வணங்கி அங்கிருந்து தேவலோகம்
சென்றான்.

நாம் உயர்வாக இருக்கும் போது, தனக்குக் கீழாக இருப்பவர்களுக்கு
நம்மையும் அறியாமல் சில தவறுகளைச் செய்துவிட நேரலாம்.
அதற்கும் கூட தண்டனை உண்டு. இறைவனை மனமார வேண்டினால்
அந்த தவறுகள் மன்னிக்கப்படும் என்பதையே
இந்த சாப- விமோசனக் கதை நமக்கு விளக்கிக் கூறுகிறது.
---
நன்றி-மாலைமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக