Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
Page 1 of 1
பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
புதுடெல்லி:
பெண் அமைச்சர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கமல்நாத் பேசியது துரதிஷ்டவசமானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இது ராகுலின் கருத்து. நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?’ என கமல்நாத் கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், பாஜ வேட்பாளரும் மாநில அமைச்சருமான இமர்தி தேவியை கொச்சைப்படுத்தினார். ‘‘காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் சாதாரணமானவர். அவரை எதிர்த்து ‘அயிட்டம்’ போட்டியிடுகிறார்’’ என கமல்நாத் பேசியது கடும் சர்ச்சையானது.
இதற்கு மபி முதல்வர் சிவராஜ் சவுகான் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு கமல்நாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து பிரசாரத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக விளக்கமான அறிக்கை தர மாநில தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கமல்நாத்தை கட்சியின் அனைத்து பதவியிலிருந்து நீக்க வேண்டுமென முதல்வர் சிவராஜ் சவுகான், இமர்தி தேவி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கேரளாவில் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று கமல்நாத் விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில், ‘‘கமல்நாத் எனது கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் பயன்படுத்திய வார்த்தை தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கவில்லை. அதை நான் ஒருபோதும் வரவேற்க மாட்டேன். இது துரதிஷ்டவசமானது’’ என வருத்தம் தெரிவித்தார். இது குறித்து கமல்நாத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘இது ராகுலின் கருத்து. எனது பேச்சை பற்றி ஏற்கனவே நான் விளக்கமளித்து விட்டேன்.
நான் யாரையும் அவமானப்படுத்தவில்லை. அப்புறம் ஏன் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் அவமதித்ததாக யாரேனும் கருதினால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தை பாஜ தவறாக பயன்படுத்துகிறது. தோற்று விடுவோம் என்பதை அறிந்த அவர்கள், உண்மையான பிரச்னைகளை மறைக்க மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள். சவுகான் தலைமையிலான 15 ஆண்டுகால பாஜ ஆட்சியில் பாலியல் பலாத்காரங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மபி முதலிடத்தில் உள்ளது. இதைப் பற்றி எல்லாம் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்?’’ என்றார். கமல்நாத்தின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Last edited by ayyasamy ram on Wed Oct 21, 2020 7:40 am; edited 1 time in total
Re: பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
* பாஜ அமைச்சர் அடுத்த சர்ச்சை
கமல்நாத் சர்ச்சை ஓயாத நிலையில், பாஜ அமைச்சர் பிசாஹூலால் சிங் அனுப்பூர் தொகுதி பிரசாரத்தில் அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளார். அவர் பேசுகையில், ‘‘காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாத் சிங் தனது வேட்புமனுவில் ஏன் தன் முதல் மனைவி பெயரை குறிப்பிடாமல், கள்ளக்காதலி பெயரை குறிப்பிட்டுள்ளார். முதல் மனைவியை மறைத்து கள்ளக்காதலியை முன்னிலைப்படுத்துகிறார்’’ என்றார்.
இதற்கு காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘எனக்கு திருமணமாகி 15 ஆண்டாகிறது. 14 வயதில் மகள் உள்ளார். பிசாஹூலால் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன். அவரது பேச்சு பாஜவின் வேட்பாளரின் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது’’ என்றார்.
தினகரன்
Similar topics
» சல்மான் கான் பேச்சு : 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க தேசிய பெண்கள் ஆணையம் கெடு
» மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
» எச்.ஐ.வி,எய்ட்ஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் கருத்தால் சர்ச்சை
» ‘குஜராத் தேர்தல், மகாபாரத போரை போன்றது’ ராகுல் காந்தி பேச்சு
» மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
» எச்.ஐ.வி,எய்ட்ஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் கருத்தால் சர்ச்சை
» ‘குஜராத் தேர்தல், மகாபாரத போரை போன்றது’ ராகுல் காந்தி பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|