உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சினி துளிகள் ( தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Yesterday at 9:46 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:44 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/06/2022
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Yesterday at 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Yesterday at 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm
» படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்ஹாசன்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:14 pm
» உலகில் பெரிய தைரியசாலி!
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:11 pm
» சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:02 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 5:22 pm
» புள்ளத்தாச்சி மரம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:37 pm
» ஒரே படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:36 pm
» மாயோன் – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:35 pm
» மலையாளத்திலும் இனி மாஸ் படங்கள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:33 pm
» ஜோதிகா இடத்தில் த்ரிஷா
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:32 pm
» செந்தில் மகன் நடிக்க வருகிறார்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 1:48 pm
» ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 12:08 pm
» பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் அழகான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 11:53 am
» ஆன்மீக அருளுரை
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:26 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:25 am
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:15 am
» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:13 am
» 1/4 நிமிடத்தில் படித்த ஒரு "ஒரு நிமிட கதை."
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:12 am
» உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 9:59 am
» அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்?
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 9:01 am
» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
by ayyasamy ram Wed Jun 29, 2022 5:19 am
» கட்டம் தன் கடமையைச் செய்யும்!
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:44 pm
» வலை வீச்சு
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:36 pm
» மிளகாய் செடிக்கு மோர் ஊத்தறா…
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:35 pm
» புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:33 pm
» நிபந்தனைகள் விதிக்கும் நயன்தாரா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» போலாமா ஊர்கோலம் - விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:31 pm
» நடிகர்’ பூ’ ராம் மரணம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:30 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
devi ganesan.g |
| |||
Pradepa |
| |||
sncivil57 |
|
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
2 posters
Page 2 of 2 •
1, 2

நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
First topic message reminder :
நிதர்சனம்!
டிவியைத் திருப்பிக் கொண்டே வந்தவள் இந்த சானலில் அப்படியே வைத்தாள். அதில் எழுத்தாளர் ஒருவர் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தார். என்ன தான் சொல்கிறார் கொஞ்சம் கேட்போமே என்று அப்படியே வைத்தாள் லலிதா.
“பெரும்பாலும் ஆணோ பெண்ணோ திருமணத்தை படிப்போ அல்லது வேலை விஷயத்திற்காக தள்ளிப் போடுவதை பார்க்கலாம். உங்கள் வீட்டில் அப்படியாரேனும் சொன்னால் கொஞ்சம் கவனியுங்கள் பெற்றவர்களே, என்று சிரிப்புடன் சொன்னார்.
தொடர்ந்து, ஏனென்றால் அவர்கள், சரியான வயதில் தனக்கான துணையை சேர்த்துக்கொண்டு இரண்டையும் ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் ஒன்றுக்கொன்று இடைஞ்சல் வராமல் அனுபவிக்கலாம்; தனது வேலைக்கோ அல்லது படிப்புக்கோ இது சரிப்பட்டு வராது எனில் டாடா சொல்லி விடை பெறலாம்; அனாவசிய தடங்கல்கள் இல்லை; எங்கிற எண்ணத்தில் அவர்கள் இருக்கக் கூடும். அதிர்ச்சி அடையாதீர்கள். நான் சொல்லும் இந்த வாழும் முறை கண்டிப்பாக பரவிக்கொண்டு இருக்கிறது…மேலும் பரவவும் செய்யும்.
இந்த கலாச்சாரம் பரவக்காரணம், திருமணத்தில் பிரிய நினைக்கும்போது அதற்கு தடை கற்களாக நிற்கும் சமுதாயமும், சட்டமும், விவாகரத்து ஆனவர் என்ற பட்டமும் தான். Living in இல் இத்தடைகள் எதுவும் இல்லை. பிரிய நினைத்தால் அடுத்த நிமிடம் புது மாப்பிள்ளை, புது பெண் தான். பிடிக்காதவர் கூட வாழ யாரும் நிர்பந்திக்க முடியாது இதில். ஆனால் என்ன, ஆண் எப்பொழுதுமே ஆண் தான், ஆனால் பெண்ணுக்கு???? ஏற்கனவே எத்தனை எத்தனை பெயர்கள் உண்டு???? அவர்கள் இந்தப் பெண்களுக்கு என்ன பெயர் வைப்பார்களோ?
இதில் நன்மை என்று எதுவும் எனக்குத் தோன்றவில்லை, தீமை என்று பார்த்தால், எந்த நம்பிக்கையில் வாழ்க்கை நகர்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. அங்கே உண்மையான காதலோ விட்டுக்கொடுத்தலோ இல்லை. வெறும் கொடுத்தல் எடுத்தல் உறவு மட்டுமே. எந்த நேரத்திலும் தன் துணை தன்னிடம் இருந்து விடை பெறலாம் என்றால் பிறகு என்ன வாழ்க்கை. அங்கே கண்டிப்பாக மிகுந்த மன உளைச்சலுக்கு இடம் உள்ளது.
எது எப்படியோ, அவர் விருப்பத்திற்கு வாழ்வது அவர் உரிமை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் யாரிடமும் நிலையாக இல்லாமல் பல பேருடன் வாழ்ந்து விட்டு, கடைசியில எல்லா உண்மையும் மறைத்து ஒரு அப்பாவி ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து அவர் வாழ்கையில் விளையாடாமல் இருந்தால் சரி. என்றார்.
அவரின் பேச்சைக் கேட்டவர்கள் எல்லோருமே சிரித்தர்கள். அவர் தொடர்ந்தார்…
இந்த முறையால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டி வரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள்.
தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.
வெளி நாட்டில் இது போல் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக் கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும் பொருந்தும்.
மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு தெரியுமோ?... ஒரு ஒழுங்கு உண்டு. அவற்றை அவை மீறுவது இல்லை பாருங்கள். பக்கத்துத் தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும். அது போல் அது அவர்கள் நாட்டுக் கலாசாரம், இது நம் நாட்டு கலாசாரம்.
அவர் பேச்சை மேலும் கேட்க முடியவில்லை அவளால், அதற்குள் ஒரு போன் வந்து விட்டது. டிவி இன் சத்தத்தைக் குறைத்துவிட்டு பேசினாள். ஏதோ விளம்பர கால். சே ! என்று சொல்லிவிட்டு டிவி பேச்சைக் கேட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க சானலை மாற்றினாள். ஏதோ ஆர்வமாகக் கேட்கப் போய் இப்படியெல்லாம் நடக்குமா என்று பதட்டப்பட்டாள். அவளுக்கும் 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்களே, பின் பதட்டம் வராதா என்ன?
தொடரும்....

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65336
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
இதெல்லாம் இங்க சகஜமப்பா என்பது போல பேசாமல் இருந்தார்கள் எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை. ரோஷனிக்கு முதலில் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் பிறகு பழகிக் கொண்டு விட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் சமையல் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். அம்மா கேட்கும் போது அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று அவளால் கொஞ்சம் சொல்ல முடிந்தது. அம்மாவிற்கு கொஞ்சம் குறைதான் ஒருமுறைகூட அவளுடன் கூட இருக்கும் சாந்தாவிடம் பேச முடியவில்லை என்று. எப்போது கேட்டாலும் ஏதாவது சொல்லி பேசவிடாமல் செய்துவிடுவாள்.
அது அம்மாவிற்கு ஏதோ சரி இல்லை எங்கிற ஒரு மனபிரமையைக் கொடுத்தது; எங்கோ இடித்தது. இருந்தாலும் அதற்கு மேல் கேட்க முடியவில்லை. தன் கணவனிடமும் சொல்ல முடியவில்லை. அந்த டிவி ப்ரோக்ராம் அவ்வப்போது அவள் நினைவுக்கு வந்துபோனது. அதையும் வெளிப்படையாக பேச முடியவில்லை கண்டிப்பாக தன் பெண் அப்படி இருக்க மாட்டாள் என்று அவளுக்கு தோன்றியது என்றாலும் அவளுடைய தோற்றமும் இப்போது தனியாக குடித்தனம் என்பதும் அந்த சாந்தாவுடன் பேச முடியாமல் இருப்பதும் கஷ்டமாக இருந்தது.
சில சமயங்களில் வீடியோ காலில் பேசும்போது கூட இவள் தனி யாகத்தான் பேசினாளே தவிர அவளைக் கண்ணில் காட்டவே இல்லை அதுதான் அவளுக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாமல் தவித்தாள். என்றாவது ஒருநாள் திடுதிப்பென்று போய் அவள் வீட்டில் நிற்க வேண்டும் என்று மட்டும் மனதில் சங்கல்பம் செய்துகொண்டாள். அதற்கும் ஒரு நாள் வராமலா போகும் என்று எண்ணிக் கொண்டாள். இப்படியாகவே ஒரு வருடம் ஓடி விட்டது.
ரோஷனி ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவது என்று வைத்துக்கொண்டு இருந்தாள் அவள் இரண்டு முறை வந்து போனாள்.
கொஞ்சம் பூசின மாதிரி இருந்தாள். தன் சமையலைத்தானே சாப்பிடுவதால் என்று அவளே அம்மாவிடம் சொன்னாள். சாந்தாவைப் பற்றி பேசினால் மட்டும் நழுவி விடுவாள். அவள் ரொம்ப மூடி டைப் மா என்றாள் ஒருமுறை.
இங்கு வரும்போதெல்லாம் ஏதாவது சமையலுக்காக எடுத்துக்கொண்டு சென்றாள்; அம்மா செய்து தரும் பக்ஷணங்கள் மற்றும் இனிப்புகள், சாதத்தில் போட்டு சாப்பிடும் பொடி வகைகள், பலகாரங்கள் என எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றாள்.
இவள் இப்படி இருக்க சாந்தகுமார் 2 மாதங்களுக்கு ஒரு முறை எப்படியாவது ஒரு நாளாவது லீவு போட்டுவிட்டு அல்லது லாங் வீக் எண்டு என்று சொல்வார்களே, அது கிடைக்கும் போதெல்லாம் தனது கிராமத்திற்கு சென்று வருவான். அப்பா அம்மாவை பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிச் செல்வான்.
இவள் அதிலெல்லாம் தலையிடுவது கிடையாது இருவருமே அவரவர்கள் எல்லை தெரிந்து வைத்திருந்தனர். அனாவசியமாக மற்றவரின் குடும்பத்தைப் பற்றியோ அவர்கள் செய்கின்ற வேலையைப் பற்றியோ, எடுக்கும் முடிவுகளைப் பற்றியோ அடுத்தவர் தலை இடுவதே கிடையாது.
ஒரே கூரை இன் கீழ் சேர்ந்து வாழ்ந்தார்கள் அவ்வளவுதான். கணவன் மனைவி போல அந்த உரிமை மட்டும் உண்டு. மற்றபடி ஒருவருக்கு ஒருவர் என்ன ஏது என்று கேட்பதில்லை இது என்ன மாதிரியான சுதந்திரம் என்று தெரியவில்லை.
இந்த காலத்து பெண்கள் ஸ்பேஸ் ஸ்பேஸ் என்று சொல்கிறார்களே அது இதுதானா என்று எனக்கு புரியவில்லை என்ன இருக்கிறது இதில் ஒட்டுதல் இல்லாமல் ஒன்லி உடலின் தேவைக்காகவே சேர்ந்து இருப்பது போலல்லவா படுகிறது.
ஆனால் இது மிகவும் உத்தமம் என்று சொல்கிறார்கள் இது போல் உள்ளவர்கள். இது பரவும் என்று வேறு சொல்கிறார்கள் இதில் ஊடுருவிப் பார்த்தால் இருவருடைய சுயநலத்தை தவிர வேறு எதுவுமே இல்லை இதில் என்னுடைய எதிலும் நீ தலையிடாதே என் சம்பளம் நானே வைத்துக்கொள்வேன் நான் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வேன் என்னைக் கேள்வி கேட்க ஆளே இருக்க கூடாது என்று ஒரு ஆதிக்க மனப்பான்மை இருக்கிறதே தவிர ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒருவருடைய குறைகளை மற்றவர் அனுசரித்துப் போவது அல்லது அதைத் திருத்துவது; என்கிற அந்த மாதிரி எதுவும் இதில் கிடையாது.
வெளியில் ஒன்றாக சென்று வருபவர்கள் தாங்கள் கணவன் மனைவி என்று யாரிடமும் சொல்லிக் கொள்வதில்லை பார்ட்னர் என்று சொல்லிக்கொள்கிறார்கள் கவுரவமாக ஆனால் அதைக்கூட அனைவரிடம் வெளிப்படையாக பேசுவதும் பிடிப்பதில்லை. வீடு பார்க்கும்போது மட்டும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி பார்த்து விடுகிறார்கள் மற்றபடி பார்க்கும்போது நண்பர்களிடம் உறவினர்களிடம் ஏன் பெற்றோரிடமே இதை செல்ல தயங்குகிறார்கள்.
அப்படித்தான் இருந்தது இவர்களின் நிலமையும். எதிர்காலத்தைப் பற்றிய எண்ணமே இவர்களுக்கு இல்லையோ என்று எண்ணும்படி இருந்தது அவர்களின் நடவடிக்கை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது போல நடந்து கொண்டார்கள்.
ரோஷனியின் அம்மா நினைத்த அந்தத் திருநாள் வந்துவிட்டது. தானே திடுதிப்பென்று போய் மகள் முன்னே நிற்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் அல்லவா அதற்கான சமயம் வந்தது.

யாரோ தூரத்து சொந்தத்தில் கல்யாணம் அதைக் கருத்தில் கொண்டு அம்மா மட்டும் கிளம்பி வருவதாக இருந்தாள்.
அதனால் போன் செய்து மகளிடம் மகிழ்வுடன் சொன்னாள். தாய் வரும் செய்தியைக் கேட்டதும், முதலில் கொஞ்சம் தயங்கிய ரோஷினி ஒரு நொடியில் சுதாதரித்து கொண்டு வா வா வா ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி, என்று வருகிறாய் எனச் சொன்னால் நானே வந்து உன்னை ஏர்போர்டில் பிக்கப் செய்து கொள்கிறேன் என்றும் சொன்னாள்.
உடனேயே அடுத்த காரியங்களில் இறங்கினாள்.
முதலில் சாந்தகுமாரிடம் விஷயத்தை சொன்னாள். அம்மா வருகிறார்கள் ஒரு வாரம் எங்காவது போய் நண்பருடன் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டாள். பிறகு தன்னுடைய தோழி ஒருத்தியை கூப்பிட்டு ஒரே ஒரு நாள் அம்மா வரும்பொழுது சாந்தாவாக நடிக்கும் படி கேட்டுக்கொண்டாள்.
அவள் முதலில் மறுத்தாள். உங்க அம்மா என்னிடம் எதாவது கேட்டால் நான் என்ன சொல்ல? அதனால், பிறகு ஏதாவது பிரச்சனை வந்தால் என்று இழுத்தாள்…அதற்கு இவள், நீ அதிக நேரம் இங்கு இருக்க வேண்டாம்.. ஜஸ்ட் ஒரு விசிட் போதும், நான் என் அம்மாவை சமாளித்துக் கொள்வேன் என்று சொன்னாள். அவள் அதிக நேரம் இங்கு இருந்து எதாவது உளறி விட்டால்?... எல்லோருக்கும் பிரச்சனைதானே…அதனால் ஜுஸ்ட் ஒரே நாள் அவள் தன் தலையைக் காட்டிவிட்டு பின் போய்விடவேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். சாந்தாவின் அறையை இவள் அறையாகக் காட்டிவிட்டு பூட்டு போட்டுவிடலாம் என்றும் முடிவெடுத்தாள்.
எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு வர ஏர்போர்ட் கிளம்பி போனாள். அம்மாவும் வந்துவிட்டாள். அம்மா ஏர்போர்ட்டில் இருந்து வரும்போது அந்தப் பெண் வீட்டிலிருந்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள் இவள் தான் சாந்தா என்று அறிமுகம் செய்து வைத்தாள் ரோஷனி.
அம்மாவிற்கு அவளும் ஒரு ஹலோ சொல்லி விட்டு சாயந்திரம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு போய்விட்டாள் அவள். என்னடி இது என்றாள் அம்மா. நான் தான் சொன்னேனே அவள் ரொம்ப மூடி என்று; என சொல்லி அம்மாவை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். அது த்ரீ பெட்ரூம் பிளாட் .
வந்ததுமே அம்மா கண்களை சுற்றி பார்த்தாள். எல்லாமே ரொம்ப அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூம் மட்டும் பூட்டி இருந்தது கேட்டால் அது சாந்தாவினுடையது என்று சொல்லிவிட்டாள் ரோஷனி.
அம்மாக்கு வீடு பிடித்து இருந்தது எல்லாமே ரொம்ப சுத்தமாக வைத்திருந்தாள் இவள். அதில் ரொம்ப பெருமை அந்த அம்மாவுக்கு. மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூங்கி எழுந்தாள். நல்லா சமைக்க ஆரம்பித்துவிட்டாயடி நீ என்று மகளுக்கு சர்டிபிகேட்டும் கொடுத்தாள். அதற்கு இவள் எல்லாம் சாந்தாவின் டிரெயினிங்க் என்று சொன்னாள் .சாயந்திரம் சீக்கிரமே அந்த பெண் வந்துவிட்டாள். வந்ததும் வராததுமாக தன் அறைக்கு சென்றாள்.
ஒரு இரண்டு நிமிடங்களுக்குள் மீண்டும் சிறிய பெட்டியுடன் வெளியே வந்தாள். ரோஷனி, எனக்கு ஊரில் இருந்து போன் வந்தது எங்க அக்காவிற்கு நிச்சயதார்த்தம் அதனால் நான் உடனே கிளம்ப வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இவர்களிடம் ஒரு ஸ்வீட் பாக்ஸ்ஐ கொடுத்துவிட்டு. போய்வருகிறேன் ஆண்டி என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
காபி எதாவது சாப்பிட்டுவிட்டு போயேன்டி என்று இவள் சொன்னதும், இல்லடி கீழே வண்டி காத்துக் கொண்டிருக்கிறது, நான் சீக்கிரம் ஏர்போர்ட் போகணும். அங்கு பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு , போய்விட்டாள்.
அம்மா என்னடி இது என்றார். அம்மா… அம்மா, அவ எப்பவுமே இப்படித்தான் கொஞ்சம் மூடி டைப். ஆனால் ரொம்ப நல்ல மாதிரி என்று சொன்னாள் இவள்.
இவளுடனா இத்தனை நாள் காலம் தள்ளுகிறாய் என்றதும் இல்லை மா, அவளால் கொஞ்சமும் தொந்தரவு இருக்காது. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள் அவ்வளவுதான் என்றாள் இவள். என்ன பெண்களோ என்று அங்கலாய்த்தார் அந்த அம்மா. அவளும் அம்மாவும் இருவருமாக அந்த கல்யாணத்திற்கு போய் வந்தார்கள் பிறகு அம்மா ஒரு நாள் தங்கி ஊரை சுற்றிப் பார்த்தார். பிறகு மன நிம்மதியுடன் ஊர் திரும்பி விட்டார்.

ம்ம்ம் அம்மாவையும் ஏமாற்றி ஆகிவிட்டது. அடுத்து என்ன க்ரிஷ்னாம்மா. முருகர் அழகு க்ரிஷ்னாமா. நன்றி
lakshmi palani- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 21/10/2018
மதிப்பீடுகள் : 28
krishnaamma likes this post
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1335275lakshmi palani wrote:ம்ம்ம் அம்மாவையும் ஏமாற்றி ஆகிவிட்டது. அடுத்து என்ன க்ரிஷ்னாம்மா. முருகர் அழகு க்ரிஷ்னாமா. நன்றி
இதோ தொடருகிறேன் லக்ஷ்மி....

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65336
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
காலை ஃபிளைட்டில் ரோஷனியின் அம்மா கிளம்பிவிட்டர்கள் என்று தெரிந்தது தான் தாமதம் அரை நாள் லீவு போட்டு விட்டு உடனே வந்து விட்டான் சாந்தகுமார். என்னால் உன்னை பார்க்காமல் இருக்கவே முடியவில்லை என்று சொன்னான். கட்டியணைத்துக் கொண்டான் அவளை.
எனக்கும் அதே போல தான் இருந்தது என்று இவளும் சொன்னாள். திடீரென்று, சாந்தா நாம் உடனடியாகக் கல்யாணம் செய்து கொண்டு விடலாம் என்று சொன்னாள்.
தாராளமாக செய்து கொள்ளலாம் தான். ஆனால், உங்க அக்காவிற்கு கல்யாணம் ஆனதும் பண்ணிக் கொள்ளலாம் என்று சொன்னாயே இப்போது பரவாயில்லையா என்று கேட்டான். ஆமாம் என்று குறைந்து விட்டது அவள் குரல். ஆமாம் அதுவரை நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும் என்று சொன்னாள்.
எதுக்கு கவலை, நாம் இப்போழுதே கணவன் மனைவி போலத்தானே இருக்கிறோம் என்று சொன்னான். ம்ம்.. அது என்னவோ சரிதான் என்று அவன் அணைப்பில் இருந்தபடியே அவள் சிரித்தாள்.
உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று சொன்னான். என்ன என்று இவள் கேட்டாள். நான் இன்று பேப்பர் போட்டு விட்டேன் ஆபீசில் என்று சொன்னான். என்ன பேப்பர் போட்டு விட்டீர்களா, ஏன் என்று கேட்டாள். ஆமாம் என்று சொன்னான்.
அப்போ வேலை என்று கேட்டாள்…. இல்லை நான் ஏற்கனவே இரண்டு வருடங்களாக ஆஸ்திரேலியா போக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அது குதிர்ந்து விட்டது அதனால் பேப்பர் போட்டு விட்டேன் இன்னும் இரண்டு மாதத்தில் நான் ஆஸ்திரேலியா பறக்க வேண்டும் என்றான்.
அப்போது அவளுக்கு அவனுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்ததற்கு சந்தோஷப்படுவதா அல்லது அவனைப் பிரிய வேண்டி வருகிறதே அதற்கு வருத்தப்படுவதா என்று தெரியவில்லை என்றாலும் கடைசியில் ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
சூப்பர் என்று சொல்லிவிட்டு, அப்போது கண்டிப்பாக நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னாள். ஆமாம் கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும் ஆனால் அது நான் போய் அங்கு வேலையில் சேர்ந்து விடடுப் பிறகு உன்னை இங்கு வந்து கல்யாணம் செய்து கூட்டி போகிறேன் என்று சொன்னான். அதுவரை நம்மில் ஒருவராவது சம்பாதிக்க வேண்டாமா செல்லம் என்று கேட்டான்.
அவன் சொல்வது நியாயமாகப் பட்டது அவளுக்கு. மேலும், அங்கு செல்வதற்கு ஸ்டெப் பை ஸ்டெப்பாக இரண்டு வருட காலமாகும் ஒவ்வொரு பரீட்சையாக எழுதி பாஸ் பண்ண வேண்டும் என்றான்.
அப்போ நான் மட்டும் எப்படி உடனே வர முடியும் என்று கேட்டாள் இவள்..ம்ம்…அதற்காக தான் சொல்கிறேன் எனக்கு வேலை கிடைத்ததும் மனைவி என்ற உரிமையில் உன்னை அழைத்துக் கொண்டு போய்விட முடியும் என்று சொன்னான் அவன். அந்த சொல்லே இனித்தது அவளுக்கு. எத்தனை யோசித்து வேலை செய்கிறான் அவன் என்று நினைத்தாள் அவள்.
அவள் ஒப்புக்கொண்டது அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனவே, அன்று முதல் இருவருமாக ஆஸ்திரேலியா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவள் தனியாகவே ஆபீஸ் போய் வந்தாள்.
எல்லாமே சரியாக நடந்து வருவது போல இருந்தது அவளுக்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்துக்கொண்டாள்.
தொடரும்.....

ஒருவாராக அவன் ஆஸ்திரேலியா கிளம்பும் நாளும் வந்தது அவனும் பிரியா விடைபெற்று கிளம்பினான். அவனுடைய பிளான் படி அவன் முதலில் சென்னைக்கு போய் அப்பா அம்மாவை பார்த்து விட்டு ஒரு வாரம் அவர்களுடன் இருந்து விட்டுப் பிறகு, அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக மெல்போர்ன் போவதாக இருந்தது. அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
ஏர்போர்ட்டுக்கு வர வேண்டுமா என்று அவள் கேட்டதற்கு வேண்டாம், திரும்ப வரும்போழுது இரவு நீ தனியாக வரவேண்டி வரும், அது நல்லதில்லை. எனவே நீ வரவேண்டாம் என்று என்று சொல்லிவிட்டான்.
தன் மீது எத்தனை அக்கரை அவனுக்கு என்று நினைத்து நினைத்து உருகினாள் அவள். ஏர்போர்ட்டை அடைந்ததும் போன் செய்வதாகச் சொன்னான். இவள் அவன் போனுக்காக காத்து இருந்தாள் போன் வரவே இல்லை. ரொம்ப லேட்டாகவே, இவளே போன் செய்தாள்.
அப்போது அவன் சொன்னான் டிராபிக்கில் மாட்டிகொண்டு விட்டேன் அதனால் இப்போது தான் உள்ளே வந்தேன் என்று சொன்னான். இடம் பார்த்து உட்கார்ந்ததும் உன்னை அழைக்கலாம் என்று இருந்தேன் அதற்குள் நீயே கூப்பிட்டு விட்டாய் என்றான்.
போனை அணைக்க சொல்லி, ஏர்ஹோஸ்டஸ் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று சொன்னான். அது இவளுக்கும் கேட்டது சரி சரி வைத்துவிடுங்கள் என்று சொன்னாள். அவன் ஐ லவ் யூ சொன்னான். அவளும் ஐ லவ் யூ என்று சொன்னாள். நான் சென்னையை சென்றடைந்ததும் உனக்கு போன் செய்கிறேன் என்று சொன்னான். சரி என்று சந்தோஷமாக போனை வைத்தாள். அப்படியே தூங்கி போனாள். காலையில தான் விழித்தாள். ஆஹா, இரவு போனே வரவில்லையே என்று யோசித்தாள். மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தால் மெசேஜும் வரவில்லை.
கொஞ்சம் சந்தேகம் வந்தது அவளுக்கு. என்ன ஆச்சு என்று ஏதாவது பிளைட் கிராஷ் ஆகி விட்டதா என்று நினைத்து செய்திகள் பார்த்தாள். பார்த்தால், அதெல்லாம் ஒன்றும் இல்லை.அப்பாடா என்று இருந்தது அவளுக்கு. சரி என்று போன் செய்து பார்த்தாள். போன் சுவிச்சுடு ஆப் என்று வந்தது. வாட்ஸ்அப் இல் ஒரு மெசேஜ் கொடுத்து விட்டு, வேலையை பார்க்க ஆபீஸுக்கு கிளம்பினாள்.
ஆபிஸில் அவளுக்கு வேலையே ஓடவில்லை அவனுக்கு போன் செய்து பார்த்துக் கொண்டே இருந்தாள். முழு நாளும் தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டே இருந்தாள் .ஆனால் போன் சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது. அவனுக்கு இருந்தது ஒரே ஒரு போன் நம்பர்தான். அதனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை வாட்ஸ் அப்பிலும் மெசேஜ் கொடுத்தாகி விட்டது இனி அவனாகத் தொடர்பு கொண்டால் தான் உண்டு.

என்ன ஆயிற்றோ என்ற கவலை அவளுக்கு இருந்தது. ஒருவகைப் பயம் அவள் வயிற்றைப் பிசைந்தது. இந்த நிலை அவளுக்கு ஒரு நாள் இரண்டு நாள் இல்லை அடுத்த ஒரு மாதத்திற்கு இருந்தது .அன்று போனவன் போனவன் தான் எந்தவிதமான செய்தியும் அவனிடம் இருந்து வரவே இல்லை ஆபீஸில் விதவிதமாக பேச ஆரம்பித்தார்கள். அவள் போன பிறகு கிசுகிசுத்தார்கள்.
ஓரிருவர் நீ ஏமாந்து போய்விட்டே என்று சொன்னர்கள். அவன் ஏற்கனவே இது போல ஒருத்தியை ஏற்கனவே ஏமாற்றி இருக்கிறான் என்று கூட இவள் காது பட பேசினார்கள். ஒருவனோ, ஒருபடி மேலே போய், நான் வேணா வரவா, வீட்டு வாடகையை பகிரத்தான் என்று கேட்டே விட்டான். அவளுக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. ஆனால் இன்னமும் ஏன் அவன் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று யோசித்தாள். தன்னை ஏமாற்றி விட்டான் என்று கொஞ்சம் கூட அவள் யோசிக்கவே இல்லை ஏதோ பிரச்சனை என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாள். இப்படியே மேலும் ஒருமாதம் ஒடிவிட்டது.
ஒரு கட்டத்தில், இவளால் மேலும் அங்கு தாக்கு பிடிக்க முடியாது என்று ஆனது. இதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அந்த வீட்டு ஓனர் இவளை மெயிலில் தொடர்பு கொண்டு தாங்கள் வரப்போவதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் வீடு காலி செய்து தர முடியுமா என்றும் கேட்டிருந்தார்.
அவளுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. இன்னும் ஒரு மாதத்தில் என்ன, நான் ஒரே வாரத்தில் வீட்டைக் கொடுத்து விடுகிறேன் என்று பதில் போட்டுவிட்டு ஆபிசுக்கு போய் ஒரு மாதம் லீவு கேட்டாள். அக்காவிற்கு திடீரென கல்யாணம் நிச்சயமாகி உள்ளதாகவும், தான் போகவேண்டும் என்றும் கேட்டாள். அவர்களும் யோசித்தார்கள் நீ லீவு போட்டுவிட்டு மறுபடி ஜாயின் பண்ணும்போது டிரான்ஸபர் ஆகிவிட்டால் என்று கேட்டார்கள். அதனால் பரவாயில்லை, அதைத் தான் ஏற்பதாகவும் சொன்னாள். லீவுக்கு எழுதிக் கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள். அம்மாவிடம் சொல்வதற்காக போன் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டாள். அதற்குள் அதுவே அடித்தது. ஓடிப் போய் எடுத்தாள். அம்மா தான் பேசினாள்.
அம்மா மிகவும் சந்தோஷமாக, அக்காவைப் பார்த்த பையனும் அவன் அப்பா அம்மாவும் பிடித்திருப்பதாக சொல்லிவிட்டர்கள் டி. இந்த வாரமே நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஒரே வாரத்தில் நிச்சயதார்த்தம், அடுத்த இரண்டு மாதங்களில் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு கையும் ஒடவில்லை, காலும் ஒடவில்லை, நீ கொஞ்சம் உடனடியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னாள் அம்மா.
நானே உன்னைக் கூப்பிடவேண்டும் என்று வந்தேன் மா. பார்த்தால் நீயே கூப்பிடுகிறாய் என்றாள் இவள். பாரு இதத்தான் அன்பு என்கிறோம் என்றாள் அம்மா.
இவளுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஆனால் உடனே சந்தோஷமான குரலில், உடனே வருகிறேன் அம்மா ஆபீஸில் சொல்லி லீவ் போட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லி போனை வைத்தாள். கிளம்புவதற்கு ஏற்பாடு செய்தாள்.
கொஞ்சம் சந்தோஷமாகவே ஊருக்கு கிளம்பினாள். இந்த ஊரில் இருந்து இவர்களின் நக்கலான பார்வைக்கும் பேச்சுக்கும் ஆளாவதை விட அந்த ஊருக்கு போவது பரவாயில்லை என்று இப்போது அவளுக்கு தோன்றியது. அதனால் அவனுடைய மற்றும் தன்னுடைய துணிமணிகள் எல்லாவற்றையும் தன் தோழியின் பிஜியில் போட்டுவிட்டு தேவையானவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஊர் திரும்பினாள்.
மறக்கமல் எல்லோருக்கும் பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொண்டாள். வீடு இப்போதே கல்யாண கோலத்திற்கு மாறிவிட்டிருந்தது. இன்னும் இரண்டு நாளில் நிச்சயதார்த்தம். இவளைப் பார்த்ததுமே என்னடி இது எப்படி எளச்சு போயிருக்க… கண்ணெல்லாம் கருவளையம் கட்டி என்ன ஆச்சு என்று கேட்டாள் அம்மா.
ஒன்றும் இல்லை வேலை மிக அதிகம்;. இருவர் வேலையை பார்க்க நேர்ந்தது என்று சொன்னாள் . அப்படிப்பட்ட வேலையை எத்தனை நாள் தான் செய்து கொண்டிருப்பாய் என்று கேட்டாள் அம்மா. இல்லை, மா. என்னால் முடியது என்று சொல்லிவிட்டு, அதனால்தான் ஒரு மாதம் லீவு போட்டு விட்டு வந்திருக்கிறேன். என்று சொன்னாள். சரி ரொம்ப நல்லது. ஒருமாசம் என்ன கல்யாணம் வரை லீவு போட்டுவிடு என்று சொன்னாள் அம்மா. இவள் கொஞ்சம் மூடியாக இருந்ததை அவர்கள் அவ்வளவாக கவனிக்கவில்லை .
வேலை அத்தனை இருந்தது. நிச்சயதார்த்ததுக்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடந்து கொண்டிருந்தன. அக்காவிடம் இவள் விசாரித்துக் கொண்டிருந்தாள் மாப்பிள்ளையைப் பற்றி. போட்டோ பார்த்தாள். நன்றாக இருந்தான் மாப்பிள்ளை வரதன்.
மாப்பிள்ளை அங்கு பெங்களூரிலேயே ஏதோ ப்ரைவேட் கம்பெனியில் மேனேஜராக இருக்கிறாராம். ஒரே ஒரு தங்கை மட்டுமே. அவளும் ஐடி இல் வேலை பார்க்கிறாளாம். அண்ணி வந்த பிறகு தான் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால் முதலில் அண்ணனுக்கு செய்கிறார்கள்.
நிச்சயதார்த்த நாளும் வந்தது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் என்று எல்லோரும் வரத் துவங்கிவிட்டார்கள் வீடு கொஞ்சம் பெரிதாக இருந்ததால் வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருந்தார்கள் கல்யாணத்திற்கு சத்திரம் பார்த்தால் போதும் என்று முடிவெடுத்திருந்தார்கள்.
மாப்பிள்ளை வீட்டார் வந்த செய்தி தெரிந்ததும்,அப்பா, அம்மா இருவரும் வாசலுக்கு போய் அவர்களை வரவேற்றார்கள்.
முதலில் மாப்பிள்ளையின் அம்மா அப்பா இறங்கினார்கள் பிறகு மாப்பிள்ளை அதற்குப் பிறகு அவருடைய தங்கை. நால்வரும் இறங்கியதும், அவர்களை ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்தார்கள். மாப்பிள்ளையின் தங்கையை பார்த்துதும் அம்மாவிற்கு மிகவும் சந்தோஷம். ஏனென்றால், வந்தது சாந்தா. அடடே, நீதான் மாப்பிள்ளையின் தங்கையா சாந்தா?...ரொம்ப சந்தோஷம் என்றாள். ஆனால் உனக்கு ஒரு அக்கா இருப்பதாக சொன்னாய், ஆனால் மாப்பிளைக்கு ஒரு தங்கை என்று தானே புரோக்கர் சொன்னர் என்று இழுத்தாள் லலிதா.

அந்தப் பெண் ஏதும் சொல்லாமல் விழித்தாள்; மௌனம் சாதித்தாள். ஆனால் அதற்குள், பிள்ளையின் அம்மா கற்பகம், இல்லையே, இவள் பெயர் ராதிகா, எனக்கு ஒரே பெண் தான் என்றார் .
பேச்சு வளருவதற்குள் ரோஷனியின் அப்பா என்னவா இருந்தாலும் உள்ளே போய் பேசிக்கொள்ளலாம் வாருங்கள் முதலில் என்று சொல்லி உள்ளே அழைத்து உட்கார வைத்தார்.
உட்கார்ந்ததும், பையனுடைய அம்மா சொன்னார் எனக்கு ஒரே பையன் ஒரு பெண் தான் அவள் பெயர் ராதிகா நீங்கள் எங்கு பார்த்தீர்கள் இவளை. அதுவும் அவள் பெயர் சாந்தா என்று சொல்கிறீர்கள்? என்று கேட்டாள். அதற்கு லலிதாவும் சளைக்கமல், உங்கள் மகளையே கேளுங்கள் என்று சொன்னாள்.
என்னடி இது என்று கேட்ட கணவனிடம், இவளை நம் பெண்ணுடன் அவள் வீட்டில் நான் பார்த்தேங்க, தில்லியில். அப்பொழுது அக்காவிற்கு கல்யணம் என்று சொல்லிக் கிளம்பி எங்கோ போய்விட்டாள். இப்பொழுது பார்த்தால் அக்காவே இல்லை என்று சொல்கிறார்கள்.. இவங்க குடும்பத்தைப் பற்றி சரியாக விசாரித்தீர்களா என்று கிசு கிசுத்தாள்.
அவருக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு நடுவில், கற்பகம் தன் மகளை, என்னடி இது? என்று கேட்டாள். அவள் அதற்கு, இல்லமா ஒரு ஹெல்ப் என்று அவதான் கேட்டாள். அது இத்தனை தூரத்திற்கு வரும் என்று எனக்குத் தெரியவில்லைமா. என்றாள். என்னடி ஹெல்ப், என்ன செய்தாய் நீ என்று பதறினாள் அவள்.
மாப்பிள்ளை பையன் வரதன், அம்மா நீ கொஞ்சம் பதட்டப்படாதே. என்ன நடந்தது என்று கேட்கலாம், கொஞ்சம் பொறுமையாக இரு, இதில் ஏதோ குழப்பம் இருக்கு என்றான். என்னடா இது, என்ன நடக்கிறது இங்கு, நீ என்னவோ பொறுமையாக இருக்கும்படி சொல்கிறாய், என்று அவன் அப்பா தியாகராஜன் கேட்டார்.
இதற்குள் மாப்பிள்ளையை பார் என்று பார்ப்பதற்காக வந்த ரோஷினி இவளைப் பார்த்ததும் அதிர்ச்சி ஆகி நின்று விட்டாள்.
ரோஷனியைப் பார்த்த லலிதா, ரோஷனி, நீயே சொல்லு இவ சாந்தா தானே, எதற்கு பொய் சொன்னாள், அன்று எங்கே போனாள் என்று நீயே கேள். என் பெண் வாழப்போகும் வீட்டில் இப்படிப்பட்ட பெண் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை, சரியான விளக்கம் தராவிட்டால் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று லலிதா சொன்னாள்.
எல்லோரும் அவளின் பேச்சால் அதிர்ந்து போனார்கள். எதோ கேள்வி எழுப்ப முயன்ற கணவனை கை சைகையாலேயே அடக்கிவிட்டள் லலிதா. அது நம் பெண் போய் வாழ வேண்டிய வீடுங்க, அது சரியாக இருக்கவேண்டாமா, அதனால் தான் கேட்கிறேன் என்று சொன்னாள்.
இதையெல்லம் பார்த்துக் கொண்டிருந்த, ராதிகா, ஏய் ! என்னடி இது நீயே சொல்லு …. உனக்காக உதவப்போய் நான் எங்கு நிற்கிறேன் பார்…உங்கம்மாவிற்கு நீ சொல்கிறாயா?... இல்ல நான் சொல்லவா?.. என்று கோபமாகக் கேட்டாள்.
லலிதா உடனே, என்னம்மா உன்னைக் கேட்டால் நீ அவளை எதோ சொல்கிறாய்? என்றாள்… கொஞ்சம் பொறுங்கள், சொல்லுடி, உங்க குடும்பம் உள்ள அழகிற்கு உங்களுக்கு எங்க வீடு கசக்கிறதா? என்று மீண்டும் கோபமாக சொன்னாள் ராதிகா. என்னடி அவள் ஏதோ சொல்கிறாள்… நீயானால் வாயை மூடிக்கொண்டு இருக்கிறாய்…. இரண்டு பேரும் ஒழுங்கா பேசுங்க என்று சொல்லிக் கொண்டே மகளை உலுக்கிக் கேட்டாள் லலிதா.
அதற்கு ரோஷினி தயங்கி தயங்கி இல்லமா, அவ சாந்தா இல்லை ராதிகா தான் என்று சொன்னாள். அப்போ உன்னோட கூட இருந்தா சாந்தா என்று சொல்லி அவளை தானே நீ காமிச்ச? அப்ப உன்னோட கூட இருந்தது யார் என்று கேட்டாள் லலிதா….
ம்ம்.. அப்படிக் கேளுங்க ஆண்டி, இப்ப பதில் சொல்லுவா பாருங்கள்…அப்போ தெரியும் யார் வீட்டுக்கு யார் தகுதி உள்ளவர்கள் என்று காட்டமாக ராதிகா சொன்னாள்.
இதற்கு பதில் சொல்லாமல் பெரிதாக அழ ஆரம்பித்தாள் ரோஷனி. இல்லை இது ஏதோ தவறு இருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்கள் மற்ற அனைவரும்.
தொடரும்...

சொல்லுடி, என்ன விஷயம் என்று சொல்லு, என்று ரோஷினியைப் பிடித்து உலுக்கினாள் லலிதா. இதற்கு மேலும் மறைக்க முடியாது என்று , உண்மையைப் போட்டு உடைத்துவிட்டாள் ரோஷனி. தான் தங்கியிருந்தது இவளுடன் இல்லை, சாந்த குமார் என்கிற ஒரு ஆணுடன் என்று சொல்லிவிட்டாள்.
போதுமா, நான் முடியாது என்று எவ்வளவோ சொல்லியும், இவள் மிகவும் என்னை வற்புறுத்தி, அழைத்து வந்தாள். நான் ஒரு தப்புக்கு துணை போனதற்கு எங்கள் குடும்பத்திற்கே எத்தனை கெட்ட பெயர் கிடைக்கும் என்று நான் புரிந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுமா , சாரிப்பா, சாரி அண்ணா என்று சொன்னள் ராதிகா.
அதிர்ச்சியில் உறைந்து விட்டது அந்தக் குடும்பமே. ஐயையோ என்று அம்மா அழவே ஆரம்பித்து விட்டாள் என்னடி இது என்று. வந்தவர்கள் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தன் குடும்பத்தின் மேல் புழுதியை வாரி இறைத்த லலிதாவைப் பார்த்து, பிள்ளையின் அம்மா கற்பகம், இந்த மாதிரி வீட்டில் நான் பெண் எடுக்க மாட்டேன் என்று ஆரம்பித்துவிட்டார்.
உடனே மாப்பிள்ளை பையன் இல்லம்மா ஒரு பெண் தவறு செய்தால் அதற்காக அவளுடைய அக்காவை தண்டிக்கக் கூடாது .நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போனால் அந்தப் பெண்ணை யார் கட்டுவார்கள் என்று ஆரம்பித்தான்.
நீயும் உன் நீதியும் நியாயமும் வாய மூடு என்று அவனுக்கு வாய்ப்பூட்டு போட்டார் அந்தம்மா. அதற்குள் அவள் கணவர் இரு இரு பேசி முடிவேடுக்கலாம் என்று சொன்னார். எல்லோரும் கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு, லலிதாவையும் பத்மனாபனையும் நீங்கள் உங்கள் மகளை கேளுங்கள்; நான் இவர்களுடன் பேசுகிறேன், என்று சொல்லிவிட்டு தன் குடும்பத்தவர் பக்கம் திரும்பினார்.
தன்னுடைய மனைவி மற்றும் மகள் மகன் உறவினர்களுடன் பேச ஆரம்பித்தார். அவர்கள், அது தான், பெண் வீட்டார் ஒரு பக்கம் பிள்ளை வீட்டார் ஒரு பக்கம் என்று குசுகுசுவென்று எல்லோரும் பேசிகொண்டார்கள்.
ரோஷினி அம்மாவிற்கு மிகவும் கோபம். பாருங்கள், கண் காணாமல் இருக்கிறோம் என்று என்ன ஒரு நென்ஜழுத்தம் இவளுக்கு, என்னவெல்லாம் செய்து இருக்கிறாள் பாருங்கள் என்று ஒரு அடி அடித்து விட்டாள் தன் பெண்ணை.
அப்பாதான் கொஞ்சம் பொறு என்ன நடந்தது என்று கேட்போம் என்று சொன்னார். நல்லா கேட்டீங்க, நீங்கள் கொடுக்கும் செல்லம் தான் இது என்று அவள் மிகவும் கோபப்பட்டாள்.
ரோஷனி தலை நிமிரவே இல்லை.
அம்மா கத்திக்கொண்டு இருந்தாள், சொல்லு என்ன செய்தாய், எங்கிருந்து கற்றுக் கொண்டாய் எவ்வளவு கட்டு செட்டாக வளர்த்தேன், இன்று இப்படி மானம் போகிறது என்று பிலாக்கணம் வைத்தாள். சரி,நடந்தது நடந்துவிட்டது, இனி நடக்க வேண்டியதை பார்ப்போம் ; யார் அவன் என்ன ஏது என்று கேட்டார் அப்பா.
அவர் ரொம்ப நல்லவர்பா, என்னுடைய மேனேஜர் என்று சொல்லிவிட்டு அவர் பெயர் சாந்தகுமார் என்று சொன்னாள். இதற்குள் பிள்ளை விட்டார் ஒரு வழியாக பேசி முடித்து விட்டு, இவர்களுக்கக காத்திருந்தார்கள்.
அவர் வந்ததுமே பத்மனாபன் எழுந்து போனார். இன்றய
நிச்சயதார்த்தம் நின்றது நின்றது தான் சார். ஆனால் பெண்பாவம் பொல்லதது. எனவே, நாங்கள் உங்களின் பெரிய பெண்ணை பண்ணிக் கொள்கிறோம். அவர் தொடருவதற்குள் பத்மனாபன் தன் கைகளைக் கூப்பினார். இருங்க இருங்க, முழுவதும் சொல்லிவிடுகிறேன் என்று அவர் தொடர்ந்தார்.
ஆனால் உங்கள் பெண், ரோஷனி அவனைத்தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று சொன்னால் அதைப் பற்றி எங்களுக்கு வருத்தமும் இல்லை வேறு எதுவும் இல்லை. அது அவளின் விருப்பம் மற்றும் உங்கள் விருப்பம். ஆனால் உடனடியாக அந்த பையனிடம் பேசச் சொல்லுங்கள் போன் செய்து அவனையும் அவன் பெற்றோரையும் வரச் சொல்லுங்கள் அவருடன் பேசி கலந்து பேசி நாம் ஒரு முடிவுக்கு வரலாம் இரண்டு நிச்சயத்தையும் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம்; கல்யாணத்தையும் நீங்கள் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம் எங்களுக்கு அதிலும் ஆட்சேபம் ஒன்றுமில்லை.என்றார்.
லலிதா பேசின பேச்சுக்கும் அலட்டலுக்கும், மீறி இவர்கள் இத்தனை தூரம் இறங்கி வந்திருப்பது பத்மனாபனுக்கு மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. மீண்டும் ஒருமுறை கையேடுத்து கும்பிட்டார். அப்பொழுத்தான் இவர்களுக்கு ஒன்றுமே தராமல் இருக்கிறோமே என்று உறைத்தது அவருக்கு.…உடனே ஹரிணி, இவர்களைக் கொஞ்சம் கவனியம்மா என்று சொன்னார். பிறகு இவரிடம் திரும்பி, இதோ அவளிடம் விசாரித்து நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன் சம்பந்தி என்றார். பின் , நான் உங்களை அப்படிக்கூப்பிடலாம் தானே என்றார். அவரைப் பார்க்கவே மிகவும் பாரிதாபமக இருந்தது இவருக்கு. அதனால், அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு நானும் அதற்குத்தான் ஆசைப்படுகிறேன் என்றார்.
உடனே அவர், தன் மகள் ரோஷனியின் பக்கம் திரும்பி அவனுக்கு போன் செய். என்று சொன்னார். அவள் பேசாமல் இருந்தாள். இதோ பாரும்மா, நீ அவனுக்கு போன் செய்து என்னிடம் கொடுத்து விடு, நான் பார்த்து பேசுகிறேன். அவனையும் அவன் பெற்றோர்களயும் வரவழைத்து,இரண்டு நிச்சயத்தையும் ஒன்றாக நடத்திவிடலாம் என்று இவர்கள் சொல்கிறார்கள். எனக்கும் அது சரி என்றே படுகிறது. சரியோ தப்போ, நீ அவனுடன் வாழ்ந்துவிட்டாய்…இதைச் சொல்வதற்குள் அவரின் உடம்பே கூசியது. என்றாலும் சமளித்துக் கொண்டு பேசினார்.
என்ன போன் நம்பர் பேசுமா, சீக்கிரம், இப்படிப்பட்ட நிலைமையில், நிலமையின் விபரீதம் உணர்ந்து இவ்வளவு தூரம் வரை அவர்கள் இறங்கி வந்தது யார் செய்த புண்ணியமோ என்று சொன்னார் பத்மனாபன். அவள் மௌனமாக இருக்கவே, ம்ம்..பேசுடி என்று கர்ஜித்தார். எப்பொழுதும், பொறுமையாக இருப்பவர் கோபப்பட்டது பார்த்து ரோஷனி நடுங்கினாள். அதைப் பார்த்த அவர், இந்த நடுக்கம் முதலில், அதாவது இந்த மாதிரி பண்ணுவதற்கு முன் இருந்திருக்க வேண்டும். இப்போ நடுங்கி என்ன செய்வது?... முதலில் பேசு என்று இன்னும் கோபித்துக்கொண்டர்.
அம்மாவும் சொன்னாள், அவரைக் கோபப்படுத்தாதே ரோஷனி, பேசு என்றாள். இவள் உடனே, இல்லைமா, என்ன ஆச்சு என்றால் என்று மெல்ல தனக்கு நடந்ததை விவரிக்கத் துவங்கினாள்… அவள் சொல்லச் சொல்ல, லலிதா தலை இல் அடித்துக் கொண்டு அழுதாள். ஒரமாய் நின்று கொண்டே கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணா ஒடிப்போய் அறைக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள், பத்மனாபனுக்கோ அவள் சொன்னதை கேட்டு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது; ஹார்ட் அட்டாகே வந்து விட்டது.

சுற்றம் மொத்தமும் ஏதோ சினிமாவுக்கு வந்தது போல உணர்ந்தார்கள். அவள் சொன்னது இதுதான் வசந்தகுமார் ஊருக்கு போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது ஒரு தகவலும் இல்லை என்று போன் செய்து கொண்டே இருந்தவள் தன்னுடைய ஆபீஸில் ஒரு ஆளைப் பிடித்து சாந்தகுமாரினுடைய ஊர் விலாசத்தை கேட்டாள். சாதாரணமாக இப்படி மற்றவருக்கு ஒருவரின் சொந்த விவரங்களை தரக்கூடாது என்பது விதி. இவளின் நிலமை கருதியும், அவன் இப்பொழுது வேலை இல் இல்லை என்பதாலும் விவரங்களைத்தர ஒப்புக் கொண்டாள் அவள். என்றாலும் அவள் கேட்ட கேள்விகள்…. இது கூடத்தெரியாமலா அவனுடன் குடித்தனம் செய்தாய் என்று கேட்டாள். இப்பொழுது நீ கர்பமா?...விட்டு விட்டு ஓடிட்டானா? என்றாள். இவளுக்கு அவமானமாக இருந்தது என்றாலும், வேறு வழி இல்லாததால் அவளைத் தனக்கு உதவும் படி வேண்டிக் கேட்டுக் கொண்டாள். அவள், தான் தரும் விவரங்கள் தன்னிடமிருந்து பெறப்பட்டது என்று யாருக்கும் எப்பொழுதும் தெரியக் கூடாது என்றும் சொன்னாள். பிறகே தந்தாள்.
இது வரை அவளுக்கு அவர்களுடைய வீடு எங்கிருக்கிறது வீட்டு விலாசம் என அவர்கள் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாது அவன் சொன்னதை வைத்து அவன் ஒரே மகன் அவன் அப்பா அம்மா செங்கல்பட்டுக்கு பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருக்கிறார்கள் இவ்வளவு தான் தெரியும்.
அட்ரஸ் உடன் ஒரு லேண்ட் லயனின் நம்பரும்கிடைத்தது. ஆசையாக அந்த லேண்ட்லைன் நம்பருக்கு போன் செய்தாள். அப்போது அங்கே எடுத்துப் பேசியவர் ஒரு வயதான மனிதர். இவள் இது சாந்தகுமார் வீடுதானே என்று கேட்டாள்.அவரும், ஆமா ஆமா இது சாந்தகுமார் வீடுதான் என்று சொன்னார் இவளுக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது. அவரைக்கொஞ்சம் கூப்பிடுங்கள் என்று சொன்னாள். அவரும் நீ யாரும்மா என்று கேட்டார். இவளும், தில்லி இல் இருந்து அவரின் ஆபீஸ் தோழி. என்று சொன்னாள். அவர் சிரித்தவாறே, ஆபீஸ் தோழி எங்கிறாய், அவன் ஆஸ்திரேலியாவுக்கு போனது தெரியாதாமா என்றார்.
இவளுக்கு ஸ்ருதி கொஞ்சம் இறங்கி விட்டது. என்றாலும். ஆஸ்திரேலியா போகிறார் என்று தெரியும், ஆனால் என்று கிளம்புகிறார் என்று தெரியாது அதுதான் கேட்கலாம் என்று என இழுத்தாள். அவன் போய் மாசம் ஒன்னாச்சுமா என்றார்.
இவளுக்கு பயங்கர அதிர்ச்சி, என்றாலும் விடாமல், போன் நம்பர் தர முடியுமா அங்கிள் என்று கேட்டாள். அது இன்னும் தெரியவில்லை அம்மா ,அவன் தான் பேசிக்கொண்டு இருக்கிறான். வெளியில் வந்து பப்ளிக் போனில் இருந்து தான் பேசிக் கொண்டிருக்கிறான் அதனால் எங்களுக்கே இன்னும் நம்பர் கிடைக்கவில்லை அம்மா என்று சொன்னார்.
காலயில் தான் பேசினான், சின்னவனுக்கு காய்ச்சலாம் , புது ஊர் இல்லையா அதுதான் பாவம் குழந்தை என்றார்.
என்னது குழந்தையா என்றாள் இவள்.. என்னமா, எல்லாமே என்னக் கேட்கிறாய், நீ அவன் ஆபீஸில் தானே வேலை செய்கிறாய், அவனுக்கு கல்யாணம் ஆகி 2 பசங்க இருப்பது உனக்குத் தெரியாதா என்று கேட்டார். அவ்வளவுதான் இவள் தன் போனை கீழே நழுவ விட்டாள். அடப்பாவி என்று வாய்விட்டு கத்தினாள்.
இப்போது இதைக்கேட்ட அப்பாவும் அம்மாவும் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்கள். அவர்கள் ஆசையாக, அருமையாக வளர்த்த மகள் இப்படி ஆகிவிட்டாளே என்று அலறியபடியே பத்மனாபன், தன் நெஞ்சில் கை வைத்து கீழே விழுந்தார். என்னங்க என்றபடி, லலிதா அவரைத்தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.
இதற்குள் அக்காவின் அறைக் கதவை ஒருவர் தட்ட, ஒருவர் டாக்டருக்கு போன் பண்ணுங்க, அல்லது அம்புலன்ஸுக்கு பண்ணுங்க என்று கத்த வீடு களேபரம் ஆகி விட்டது. இவர்களுக்கு அதாவது பிள்ளை வீட்டாருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை முழித்துக் கொண்டு நின்றார்கள்.
ரோஷனி, சிலையாக நின்றாள். அங்கு அவமானம் தாங்க முடியாமல் தான் இங்கே வந்தாள்; இங்கு வந்து அதை மறக்கலாம் என்று பார்த்தால், விதி மாப்பிள்ளை வீட்டார் ரூபத்தில் வந்து, மிகவும் பூதாகரமாக எடுத்து எல்லோரையும்கொடுமை படுத்தி விட்டது.
அப்பா நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்துவிட்டார் என்று கேட்டதும், கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்த கிருஷ்ணா, அப்பா அப்பா என்று உலுக்கினாள்.
யாரோ ஆம்புலன்சுக்கு போன் செய்தார்கள். ஆனாலும் அதற்குள் நிலைமை கை மீறிவிட்டது அவர் அப்படியே ஒரு நிமிடத்தில் சரிந்து விட்டார். நிச்சயதார்த்தம் என்று சந்தோஷமாக கூடிய சொந்தங்கள் இப்பொழுது துக்கத்திற்கு வந்தது போல் ஆகிவிட்டது. ஆளாளுக்கு பேசத்துவங்கினார்கள்.
முதலில் அத்தை தான் ஆரம்பித்தாள். ஒரே ஒரு
பெண் கொஞ்சம் சுயநலமாக மற்றவரைப் பற்றி அல்ல தன்னுடைய எதிர்காலத்தை பற்றி கூட கொஞ்சம் கூட சிந்திக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்த ஒரு முடிவு என் தம்பியை சாய்த்துவிட்டதே.. என்று அழுதாள்.

உன் ஒருத்தியால இந்தக் குடும்பம் எப்படி ஆகிவிட்டது என்று பார். உன் செய்கை உன்னை மட்டும் அல்லாமல், கூட இருப்பவர்களையும் எந்த அளவு பாதிக்கிறது பாருடி… என்று கத்தினாள். அதுக்குத்தான் சொல்வார்கள், அரதப் பழசாக இருந்தாலும் கூட துணி மேல் முள் விழுந்தாலும் முள்ளில் துணி விழுந்தாலும் பாதிப்பு என்னவோ துணிக்குத் தான் என்று. நீ எத்தனை தான் படித்தாலும் அடிப்படை இது தான் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி என்ன பேசி என்ன ஆகப்போகிறது, என் தம்பி மானஸ்தன், சட் என்று போய்விட்டான். இனி உங்க அக்காவை யார் கட்டுவா, இல்ல உன்னத்தான் யார் கட்டுவா என்று மீண்டும் பெரும் குரலெடுத்து அழஅரம்பித்தாள்.
என்னம்மா இது, எப்பொழுதுமே, மானம் போனால் சகலமும் போச்சே, எப்படி மறந்தாய் இதை?.. ஊரைவிட்டு வெளியே இருக்கும் பொழுது இதை மனதில் வைத்துக் கொண்டு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டாமா?..இப்பொழு து பார் நிலமையை.. என்று கண்ணீர்விட்டார்.. கல்யாணம் செய்து கொடுக்கும் பொழுதே எத்தனை விசாரிக்கிறார்கள் அப்பாவும் அம்மாவும், அப்படி இருக்கும் போது எப்படி அம்மா இப்படி ஏமார்ந்தாய் என்று அழுகைனூடே கேட்டார் தாய்மாமன்.
இது எதுவுமே புரியாமல் சிலையாக அமர்ந்து இருந்தாள் ஹரிணி. அவளால் இங்கு நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் காட்சிகளை காணச் சகிக்கமல் பிள்ளை வீட்டார் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அதே நேரம் ஆஸ்திரேலியாவில் தன் பெண் பிள்ளை மற்றும் மனைவியுடன் எந்த ஒரு குறைவுமில்லமல் சந்தோஷமாக வார இறுதியைக் கொண்டாடிக்கொண்டிருந்தான் சாந்த குமார். அவன் தன் குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் விளையாடும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. இது போன்ற கணவன் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னாள் அவள்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
என்னம்மா இது, எப்பொழுதுமே, மானம் போனால் சகலமும் போச்சே, எப்படி மறந்தாய் இதை?.. ஊரைவிட்டு வெளியே இருக்கும் பொழுது இதை மனதில் வைத்துக் கொண்டு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டாமா?..இப்பொழு து பார் நிலமையை.. என்று கண்ணீர்விட்டார்.. கல்யாணம் செய்து கொடுக்கும் பொழுதே எத்தனை விசாரிக்கிறார்கள் அப்பாவும் அம்மாவும், அப்படி இருக்கும் போது எப்படி அம்மா இப்படி ஏமார்ந்தாய் என்று அழுகைனூடே கேட்டார் தாய்மாமன்.
இது எதுவுமே புரியாமல் சிலையாக அமர்ந்து இருந்தாள் ஹரிணி. அவளால் இங்கு நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் காட்சிகளை காணச் சகிக்கமல் பிள்ளை வீட்டார் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அதே நேரம் ஆஸ்திரேலியாவில் தன் பெண் பிள்ளை மற்றும் மனைவியுடன் எந்த ஒரு குறைவுமில்லமல் சந்தோஷமாக வார இறுதியைக் கொண்டாடிக்கொண்டிருந்தான் சாந்த குமார். அவன் தன் குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் விளையாடும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. இது போன்ற கணவன் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னாள் அவள்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65336
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
பாவம் ரோஷினி கிருஷ்னாம்மா. ஆர்வத்தில் செய்துவிட்டு துன்ப்படுகிரால். சாந்தாவுக்கு தண்டனை இல்லையா. நல்ல கதை.
lakshmi palani- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 21/10/2018
மதிப்பீடுகள் : 28
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1335567lakshmi palani wrote:பாவம் ரோஷினி கிருஷ்னாம்மா. ஆர்வத்தில் செய்துவிட்டு துன்ப்படுகிரால். சாந்தாவுக்கு தண்டனை இல்லையா. நல்ல கதை.
ம்ம்.. அது தான் கதை இன் ஆரம்பத்திலேயே சொன்னேன் , " சேலை முள்ளில் விழுந்தாலும் , முள் சேலையில் விழுந்தாலும், நஷ்டம் சேலைக்குத்தான்" என்று.. இது பழயதாய் இருந்தாலும், இன்றுவரை சரியாகவே இருக்கிறது பாருங்கள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65336
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
உன்மைதான். ரோஷினிக்கு சாகும்வரை தண்டனை. சாந்தாவுக்கு குற்ற உனர்ச்சி கூட இல்லை. என்ன செய்வது. நன்றி.
lakshmi palani- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 21/10/2018
மதிப்பீடுகள் : 28
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1335756lakshmi palani wrote:உன்மைதான். ரோஷினிக்கு சாகும்வரை தண்டனை. சாந்தாவுக்கு குற்ற உனர்ச்சி கூட இல்லை. என்ன செய்வது. நன்றி.
@lakshmi palani நன்றி லக்ஷ்மி.... உங்களை என் அடுத்த கதை இல் (போட்டுவிட்டேன்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65336
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|