ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

2 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  Empty நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

Post by krishnaamma Mon Oct 19, 2020 10:04 pm

நிதர்சனம்!

டிவியைத் திருப்பிக் கொண்டே வந்தவள் இந்த சானலில் அப்படியே வைத்தாள். அதில் எழுத்தாளர் ஒருவர் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தார். என்ன தான் சொல்கிறார் கொஞ்சம் கேட்போமே என்று அப்படியே வைத்தாள் லலிதா.

“பெரும்பாலும் ஆணோ பெண்ணோ திருமணத்தை படிப்போ அல்லது வேலை விஷயத்திற்காக தள்ளிப் போடுவதை பார்க்கலாம். உங்கள் வீட்டில் அப்படியாரேனும் சொன்னால் கொஞ்சம் கவனியுங்கள் பெற்றவர்களே, என்று சிரிப்புடன் சொன்னார்.
தொடர்ந்து, ஏனென்றால் அவர்கள், சரியான வயதில் தனக்கான துணையை சேர்த்துக்கொண்டு இரண்டையும் ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் ஒன்றுக்கொன்று இடைஞ்சல் வராமல் அனுபவிக்கலாம்; தனது வேலைக்கோ அல்லது படிப்புக்கோ இது சரிப்பட்டு வராது எனில் டாடா சொல்லி விடை பெறலாம்; அனாவசிய தடங்கல்கள் இல்லை; எங்கிற எண்ணத்தில் அவர்கள் இருக்கக் கூடும். அதிர்ச்சி அடையாதீர்கள். நான் சொல்லும் இந்த வாழும் முறை கண்டிப்பாக பரவிக்கொண்டு இருக்கிறது…மேலும் பரவவும் செய்யும்.

இந்த கலாச்சாரம் பரவக்காரணம், திருமணத்தில் பிரிய நினைக்கும்போது அதற்கு தடை கற்களாக நிற்கும் சமுதாயமும், சட்டமும், விவாகரத்து ஆனவர் என்ற பட்டமும் தான். Living in இல் இத்தடைகள் எதுவும் இல்லை. பிரிய நினைத்தால் அடுத்த நிமிடம் புது மாப்பிள்ளை, புது பெண் தான். பிடிக்காதவர் கூட வாழ யாரும் நிர்பந்திக்க முடியாது இதில். ஆனால் என்ன, ஆண் எப்பொழுதுமே ஆண் தான், ஆனால் பெண்ணுக்கு???? ஏற்கனவே  எத்தனை எத்தனை பெயர்கள் உண்டு???? அவர்கள் இந்தப் பெண்களுக்கு என்ன பெயர் வைப்பார்களோ?


இதில் நன்மை என்று எதுவும் எனக்குத் தோன்றவில்லை, தீமை என்று பார்த்தால், எந்த நம்பிக்கையில் வாழ்க்கை நகர்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. அங்கே உண்மையான காதலோ விட்டுக்கொடுத்தலோ இல்லை. வெறும் கொடுத்தல் எடுத்தல் உறவு மட்டுமே. எந்த நேரத்திலும் தன் துணை தன்னிடம் இருந்து விடை பெறலாம் என்றால் பிறகு என்ன வாழ்க்கை. அங்கே கண்டிப்பாக மிகுந்த மன உளைச்சலுக்கு இடம் உள்ளது.

எது எப்படியோ, அவர் விருப்பத்திற்கு வாழ்வது அவர் உரிமை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் யாரிடமும் நிலையாக இல்லாமல் பல பேருடன் வாழ்ந்து விட்டு, கடைசியில எல்லா உண்மையும் மறைத்து ஒரு அப்பாவி ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து அவர் வாழ்கையில் விளையாடாமல் இருந்தால் சரி. என்றார்.

அவரின் பேச்சைக் கேட்டவர்கள் எல்லோருமே சிரித்தர்கள். அவர் தொடர்ந்தார்…

இந்த முறையால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டி வரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள்.

தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.

வெளி நாட்டில் இது போல் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக் கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும் பொருந்தும்.

மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு தெரியுமோ?... ஒரு ஒழுங்கு உண்டு. அவற்றை அவை மீறுவது இல்லை பாருங்கள். பக்கத்துத் தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும். அது போல் அது அவர்கள் நாட்டுக் கலாசாரம், இது நம் நாட்டு கலாசாரம்.

அவர் பேச்சை மேலும் கேட்க முடியவில்லை அவளால், அதற்குள் ஒரு போன் வந்து விட்டது. டிவி இன் சத்தத்தைக் குறைத்துவிட்டு பேசினாள். ஏதோ விளம்பர கால். சே ! என்று சொல்லிவிட்டு டிவி பேச்சைக் கேட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க சானலை மாற்றினாள். ஏதோ ஆர்வமாகக் கேட்கப் போய் இப்படியெல்லாம் நடக்குமா என்று பதட்டப்பட்டாள். அவளுக்கும் 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்களே, பின் பதட்டம் வராதா என்ன?

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  Empty Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

Post by krishnaamma Mon Oct 19, 2020 10:06 pm

முழுவதுமாக எல்லா சானல்களையும் ஒர் சுற்று சுற்றி வந்தாள். இந்த சானல் வந்ததும் அனிச்கையாக மீண்டும் நிறுத்தி, அவரின் பேச்சை கேட்கலானாள். ஆம் அவர் இன்னும் பேசிக்கொண்டிருந்தார்.

இப்போதெல்லாம் பெண்கள் இதற்கெல்லாம் அச்சமடைவதில்லை. அறிவு வளர வளர, அன்பின் தன்மை குறையும்..அது தான் இயல்பு.அறிவு என்று நான் இங்கு குறிப்பிடுவது, knowledge (accumulation of information) இவ்விதமான அறிவுப் பசியோடு தான் உலகம் போய் கொண்டிருக்கிறது. அறிவு சேர சேர துணிவும், தன்னம்பிக்கையும் மேலோங்குகிறது. இவ்விரண்டும் மேலோங்கினால், தனித்துவம் மேலோங்குகிறது. தனித்துவம் மேலோங்கினால், மற்றவரிடம் இயைந்து போவது என்பது முடியாத காரியம் ஆகிறது.

நான், என் வாழ்க்கை, என் நலம் இவற்றிற்கு முன்னுரிமை தந்து, பிறர் நலம், பிறர் வாழ்க்கை என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதில் பிறர் என்பது சொந்த அப்பா அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் தான்.  ஆண் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாறி, இப்போது பெண்களும், சரி நிகர் சமானம் என்ற நிலையில், தனித்துவம் என்பது அவர்களையும் விட்டு வைக்கவில்லை.


நான் இப்படிச் சொல்வதால், பெண்ணை குற்றம் சொல்கிறேன் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளாதீர்கள். முன்பு போல், ஆணுக்கு கீழே அடங்கி இருந்த காலத்தில், ஒரு கை ஓசை போல, பிரச்சனை என்று வரும் போது, ஆணின் கை மேலோங்கியும், பெண் என்பவள் அதற்கு, அடங்கிப் போவதும் நடக்க ஏதுவாயிற்று. அதனால், குடும்பத்தில், சண்டை, சச்சரவு என்று வந்தாலும், ஒருவர் மட்டுமே அதை பெரிது படுத்திக் கொண்டிருப்பார்.மற்றொருவர், தழைந்து போயிருப்பார். ஒருமுறை இவர் தழைந்து போவார் மறுமுறை அவர் தழைந்து போவார்.

அதனால், மனஸ்தாபம் இருந்தாலும் , எப்படியும், ஆணைச் சார்ந்து தான் பெண் இருக்க வேண்டும் , ஆதலால், விவாகரத்து என்பது மட்டுப்பட்டிருந்தது.இப்போது, இருவருமே கோல் எடுக்கிறார்கள். ஆட குரங்காக யாருமே இல்லை என்பது தான் பிரச்சனையே. வாழ்க்கையை சகிப்புத்தன்மையோடு ஓட்டத் தெரியவில்லை. இம்மாதிரியான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இல்லாமல் வாழ ஆசைப்படும், பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கும் ஆண் பெண் நிறைய பேர்.

தங்கள் வாழ்க்கையில் தங்கள் பெற்றோர்கள், தங்கை, அக்கா, அண்ணண் என்று அவர்கள் வாழும் வாழ்கையை பார்த்து இப்படியெல்லாம் சகித்துக் கொண்டு அவனோடோ, அவளோடோ வாழ்ந்துதான் ஆக வேண்டுமா என்று பயந்து போனவர்கள் என்றே நினைக்கிறேன். எதற்கடா வம்பு, இப்படியே இருந்துவிட்டுப் போகலாம் என்று எண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள். அது ஆபத்து என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

ஆனால் பாருங்கள், அதிலும் இவர்களுக்குள் என்ன ஒரு திருட்டுத்தனம் இருக்கிறது. வீடு பார்க்கும் போதோ வெளியே செல்லும்போதோ அல்லது தங்கள் குடும்பத்துகேவோ இது தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.  , தமது இணையின் பெயரையோ ஊரையோ சொல்ல மறுக்கிறார்கள். அண்மையில் இந்த மாதிரியான வாழ்க்கை நடத்தும் சிலருடனான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன்.

சொல்லி வைத்தமாதிரி அவர்களிடையேயும் தமது வாழ்க்கை இதுதான் என்று சொல்ல முடிகிறது ஆனால் பெயரை வெளியிட மறுக்கிறார்கள். அனைவரும் மேஜராகிவிட்டதால் அது தமது உரிமை என்கிறார்கள். சரி, உரிமை என்றே வைத்துக் கொள்ளுங்கள், ஆசைப்பட்டுதானே வாழ்கிறீர்கள்?.. அபோழுது தாராளமாக வெளியில் சொல்லிக் கொள்ளலாமே.. அது ஏன் முடியவில்லை உங்களால்?.. ஸோ, ஏதோ அதில் விரும்பத்தகாத ஒன்று உள்ளது என்று தானே அர்த்தம்?...

முடிவாக ஒன்று சொல்கிறேன், ஒரு பழமொழி உண்டு. முள் சேலையில் விழுந்தாலும் சேலை முள்ளில் விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான் என்று. இங்கு சேலை என்பது யாரைக் குறிக்கும். முள் என்பது யாரைக் குறிக்கும் என்று விளங்கியிருக்கும். பார்த்து நடந்து  கொள்ளுங்கள், என்று அவர் தன் உரையை முடித்துக் கொண்டார்.

இந்த முறை வாசலில் யாரோ கூப்பிடும் ஒலி கேட்கவே, டிவியை அணைத்து விட்டு வாசலுக்கு விரைந்தாள் லலிதா.

தொடரும்.....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  Empty Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

Post by lakshmi palani Wed Oct 21, 2020 1:56 pm

கதை படிக்க ஆர்வத்தை தூண்டுகிரது கிரிஷ்னாம்மா. தொடரட்டும். நன்றி.
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்


பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Back to top Go down

நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  Empty Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

Post by krishnaamma Wed Oct 21, 2020 7:32 pm

lakshmi palani wrote:கதை படிக்க ஆர்வத்தை தூண்டுகிரது கிரிஷ்னாம்மா. தொடரட்டும். நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1333570

நன்றி லக்ஷ்மி, இதோ தொடருகிறேன்....புன்னகை..... அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  Empty Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

Post by krishnaamma Wed Oct 21, 2020 7:34 pm

லலிதா ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். அவளுடைய கணவர் ஒரு தனியார் கம்பெனியில் நல்ல உத்யோகத்தில் இருக்கிறார். அவர்களுக்கு மணி மணியாக 3 பெண்
குழந்தைகளும் ஆசை ஆசையாகப் பெற்ற ஒரு ஆண் குழந்தையும் உண்டு.
லலிதா மிக அழகி. நல்ல சிவப்பு. ஆனால் அவள் கணவர் பத்மனாபன் நல்ல
கறுப்பு. பெண்பார்த்துத்தான் கல்யாணம் நடந்தது அவர்களுக்கு.

இருவருக்கும் ஒருவரை ஒருவருக்குப் பிடித்திருந்தது, கல்யாணத்துக்கு
சம்மதித்தார்கள், கல்யாணமும் செய்து கொண்டார்கள். ஆனால், இவர்களைப்
பார்ப்பவர்கள் ஆளாளுக்கு கமெண்ட் அடிப்பார்கள்.

அரிசியும் எள்ளும் கலந்தது போல இருக்கிறார்கள், காக்காய் எலுமிச்சையை
தூக்கிக் கொண்டுவந்து விட்டது… இது போல் நிறைய.. ஆனால் அவைகள்
இவர்களைப் பாதித்தது இல்லை.

முதல் பெண் கிருஷ்ணா, அப்பாவைப் போல கருப்பு…இரண்டாவது பெண்
ரோஷனிமிக அழகு அம்மாவைப் போல. மூன்றாமவள் ஹரிணி மாநிறம்.
முதல் பெண் டீச்சர் வேலை பார்க்கிறாள். அடுத்தவள் ஐடி கம்பெனி இல்
தில்லி இல் வேலைக்கு சேரப்போகிறாள். அடுத்தவள் டிகிரி முதலாம் ஆண்டு
படிக்கிறாள். அவர்களின் ஆசை மகன் மகேஷ் +2 படிக்கிறான். அமைதியான
அன்பான குடும்பம்.

லலிதா கொஞ்சம் கண்டிப்பான பேர்வழி. அனாவசியமாக யாருடனும் பேச்சு
வைத்துக் கொள்ள மாட்டாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்கிற
டைப். தன் பெண்களையும் அப்படியே வளர்த்தாள். அனாவசியமாக ஊர்
சுற்றுவது, போனில் அரட்டை அடிப்பது எல்லாம் கிடையாது.

பத்மனாபனும் தன் ஒய்வு நேரங்களைத் தன் குடும்பத்துடன் மட்டுமே
செலவழிப்பார். எந்த கெட்ட பழக்கமும் இல்லதவர். குடும்பத்தை விட்டு
யாரும் தனியாக எங்கும் சென்றதில்லை, தங்கியதில்லை. இந்த நிலமையில்
தான் ரோஷனிக்கு தில்லிக்கு போஸ்டிங்க் வந்துள்ளது.

அது தான் இவர்களின் பெரும் கவலை இப்போழுது. வந்த வேலையை எப்படி
வேண்டாம் என்று சொல்வது?.. யாரைப் பார்த்தாவது இதே ஊருக்கு அந்த
வேலையை வாங்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவளோ தில்லி
போகத் துடிக்கிறாள். ‘3 மாதம் டிரெய்னிங்க் முடிந்ததும் போஸ்டிங் வேறு
இடத்திற்கு கிடைக்க வாய்ப்பு உண்டுமா, ப்ளீஸ், 3 மாதங்கள் தானே, நான்
போகிறேன் அம்மா “ என்று நச்சரிக்கிறாள்.

இந்த நிலமை இல் தான் லலிதா அந்த டிவி நிகழ்ச்சியைப் பார்த்தாள்
பதட்டப்பட்டாள். என்றாலும் யாரிடமும் எதுவும் அது பற்றிப் பேச்சே
எடுக்கவில்லை அவள். நம் வளர்ப்பு அப்படியெல்லம் போகாது என்று
நம்பினாள்.

பத்மனாபனும், அவள் போகட்டும் லலிதா, என்றாவது ஒரு நாள் நாம்
பெண்குழந்தைகளை விட்டுப் பிரியத்தானே வேண்டும், அதற்கு இது ஒரு
ஒத்திகையாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று சம்மதித்தார்.
இப்படியாக ரோஷனி தில்லி கிளம்பினாள். இவளுடன், தில்லி செல்லும்
அவளின் இரண்டு தோழிகளும் இருந்தது, பெற்றவர்களுக்கு நிம்மதியாக
இருந்தது. அவர்களில் ஒருத்திக்கு தெரிந்தவர் ஒருவர் மூலம் ஒரு PG இல் தங்க
ஏற்பாடு செய்து கொண்டார்கள்.

ரயில் வண்டி இல் ஏறினதுமே இவளுக்கு ஏதோ ஜெயிலில் இருந்து வெளியே
வந்து சுதந்திர வானில் பறப்பது போல இருந்தது. எல்லாமே மிக அழகாக
இருப்பது போலப் பட்டது. காற்றை இழுத்து முழுவதுமாக சுவாசித்தாள்.
தேவை இல்லாமல் சிரித்தாள். ரயிலடில் கூட அவள் குடும்பத்தார்தான்
கண்களில் நீர் கோர்க்க நின்றிருந்தார்கள். இவள் மிகவும் சந்தோஷமாகவே
கிளம்பினாள்.

தோழிகள் இருவரும் இவளைப்பர்த்து சிரித்தனர். என்னடி என்னப் பார்த்தால்
லூஸு போலத்தெரிகிறதா? என்றாள் இவள். அதற்கு அவள் லூஸு போல
இல்லை நீ லூஸேதான் என்றாள்.. இவள் உடனே, இல்லடி இது நாள் வரை
நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் விட்டு வெளியே போனது இல்லை, மிகவும்
கட்டுப்பாடு என்று சொல்ல முடியாவிட்டலும், எதோ ஒரு விதத்தில் நம் மீது
அவர்களின் கண்கள் இருப்பதாகவே பட்டது. இப்பொழுது அது இல்லாதது
போல இருக்கிறதா, அந்த அனுபவம் மிகவும் இனிமையாக இருக்கிறது
அவ்வளவுதான் என்றாள்.

ஏற்பாடு செய்திருந்த PG போய் சேர்ந்தார்கள். அங்கு அத்தனை வசதிகள்
இல்லை என்றாலும், முதலில் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டுமே என்று
ஒப்புக் கொண்டார்கள். மூவரும் ஒன்றாக வந்தாலும் வேறு வேறு
அலுவலகத்திற்கு போக வேண்டியவர்கள்.

தொடரும்.....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  Empty Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

Post by krishnaamma Wed Oct 21, 2020 7:36 pm

முதல் முதலாக அந்த பள பளப்பான பெரிய கட்டிடத்தில் காலடி
எடுத்துவைக்கும்போதே இனம் புரியாத சந்தோஷம் வந்தது அவளுக்கு. இனி
இங்கு தான் வேலை செய்யப் போகிறோம் என்கிற நினைவே அவள்
மகிழ்வுக்கு காரணம். இந்த ஆபீஸ் எப்படி இருக்குமோ, கூட வேலை
செய்பவர்கள் எப்படி இருப்பர்களோ என்கிற இயல்பான 'பட பட' ப்பு
அவளுள் இருந்தது. என்றாலும், அதை மீறிய ஒரு சந்தோஷம் இருந்தது
அவளுக்கு. நேரே மானேஜர் அறைக்கு சென்று தன் appointment ஆர்டர் ஐக்
காட்டினாள். அவரும் பெற்றுகொண்டு அவளை டீம் லீடர் க்கு அறிமுகப்
படுத்தி வைத்தார்.

அவனைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது இவளுக்கு. மிகவும்
கண்ணியமானவனாகத் தெரிந்தான். தன் பெயர் சாந்தகுமார் என்று அறிமுகம்
செய்து கொண்டான். இவளும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

அவன் பெயரைக் கேட்டதுமே, அவன் தமிழ் நாட்டை சேர்ந்தவன் என்று
புரிந்துகொண்டாள். ஆனால் அவன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினான். மிக
அழகான ஆங்கிலத்தில் இவளுடைய வேலைகள் என்னவென்று சொல்லி
கொடுத்தான். இவள் அவனுடன் பேச முயற்சித்து, அவனை சார் என்று
கூப்பிட்ட பொழுது தன்னை பேர் சொல்லிக் கூப்பிடும்படி சொன்னான்.
இன்றய கால கட்டத்தில் இது தான் வழக்கம் என்றும் சொன்னான்.

இவளுடன் அன்று மேலும் மூன்று பேர் புதியவர்கள் வந்திருந்தார்கள்
அவர்கள் மூவரும் ஆண்கள் வேறுவேறு மாநிலத்தவர்கள், அவர்கள் மூவருமே
ஆங்கிலத்திலேயே பேசினார்கள் அதனால் அவளால் சாந்தகுமார் இடம்
தமிழில் எதுவும் பேச முடியவில்லை. சரி உணவு இடைவேளையின் போது
பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள்.

இவளுக்கு அன்று காலை பிஜியிலிருந்து கிளம்பும் பொழுதே
கையிலேயே மதிய உணவுக்காக, சப்பாத்தியும் சப்ஜியும்
கொடுத்திருந்தார்கள். இரவும் அங்கு சப்பாத்தி சப்ஜி கிடைக்கும் என்று
சொன்னார்கள்.

அவளின் பிஜி யைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும். அங்கு
தினமும் வேறு வேறு காலை உணவு கொடுப்பார்களாம். போஹா என்று
சொல்லப்படும் அவல் உப்புமா, பிரட் சாண்ட்விச் மற்றும் பல பழங்கள் கலந்த
ஓட்ஸ் உணவு, தோசை, இட்லி என்று தினமும் ஒரு வகை தருவார்களாம்.
மதிய உணவிற்காக கையில் கட்டிக் கொடுத்து விடுவார்களாம். இரவும்
சப்பாத்தி சப்ஜி தான்.


எப்பொழுதாவது ஒரு வேளை உணவு வேண்டாம் என்றாலும் முன்பே
சொல்லிவிடலாமாம். இவை எல்லாமே அவளுக்கு புதியதாக இருந்தாலும்
பழகிக்கொள்ளத்தான் வேண்டும். இல்லை என்றால் தனி வீடு தான் பார்த்துக்
கொள்ள வேண்டும் என்று சொன்னர்கள். சாதம் வாரம் ஒரு முறைதான்
என்றும் சொன்னர்கள்.

உணவு இடைவேளையின் பொழுது இவள் சாந்தகுமாரிடம் தமிழில்
பேசினாள். அவனுக்கு அது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது நீங்கள் தமிழா
என்று கேட்டான். ஆமாம் என்று சொன்னாள் உங்களுடைய பெயரை
கொண்டு நான் நீங்கள் கன்னடப் பெண் என்று நினைத்து விட்டேன் என்று
சொன்னான். ரோஷினி என்ற பெயரைப் பார்த்ததுமா என்று சொல்லி
சிரித்தாள் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் அழகாகவும் சிரிக்கிறீர்கள்
என்று ‘சட்’டென்று சொன்னான். பிறகு உடனே மன்னிக்கவும் முதல் முறை
பார்த்த போதே இப்படி பேசுவதற்கு, நான் யாரையும் பார்த்து இப்படிப்
பேசியது இல்லை என்று சொல்லி மீண்டும் மன்னிப்பு கேட்டான். இவள்
இட்ஸ் ஓகே என்று சொன்னாள். ஆனால் மனத்திற்குள் பட்டாம் பூச்சி
பறந்தது.

தொடரும்.....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  Empty Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

Post by krishnaamma Sun Nov 01, 2020 8:21 pm

@lakshmi palani உங்களின் பதிவுக்காகக் காத்திருக்கிறேன் லக்ஷ்மி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  Empty Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

Post by krishnaamma Sun Nov 01, 2020 8:25 pm

பேச்சை மாற்ற விரும்பி, நீங்கள் மிக அழகாக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள், அருமையாக விளக்குகிறீர்கள். என்று சொன்னாள். இருவரும் தங்களின் குடும்பங்களைப் பற்றி பேசிக் கொண்டார்கள் இவள் சொன்னாள் தனக்கு ஒரு அக்கா ஒரு தம்பி ஒரு தங்கை இருப்பதாக அப்பாவும் அம்மாவும் எல்லோருமாக சேர்ந்து பெங்களூரில் இருப்பதாக சொன்னாள். அவன் அதே போல தான் ஒரே மகன் என்றும் தன்னுடைய தாய் தந்தையர் செங்கல்பட்டு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருப்பதாகவும் விவசாய குடும்பம் என்றும் சொன்னான்.

அவ்வளவுதான் இதற்குப் பிறகு சரளமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்படியாக அவர்கள் பேச்சு துவங்கியது சில நேரங்களில் மற்றவர்ளுக்கு எதிரில் கூட இவர்கள் தமிழில் பேசி சிரிக்கத் தொடங்கினார்கள் .
சின்ன சின்னதாக மற்றவர்களைப் பற்றி கமென்ட் அடிக்கக் துவங்கினார்கள். இப்படி அவர்களின் நெருக்கம் அதிகமானது.

சமைக்கும் வேலை இல்லாததாலும், வேறு பொறுப்புகள் இல்லாததாலும், தினமும் மாலை வேளைகளில் ஆஃபீஸ் விட்டதும் தோழிகளுடன் டெல்லியில் ஒவ்வொரு இடமாக சுற்றி வந்தாள். சனி ஞாயிறுகளில் நேரம் கழித்து எழுந்தாள். துணி துவைத்தாள். அந்த பிஜியில் துணி துவைக்க மெஷின் வைத்திருந்தார்கள் அதேபோல அயன் செய்து கொள்ளவும் வசதி இருந்தது. எனவே எந்த ஒரு வேலைக்காகவும் யாரையும் சார்ந்து இல்லாமல் தானாகவே செய்து கொள்ள முடிந்தது.

இது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது தன்னுடைய வேலையை தானே செய்வது அதுவும் தனக்கு பிடித்த போது செய்வது என்பது அவளுக்கு சுகமாகவே இருந்தது. அம்மா சொல்வது போல இதை இங்கே வைக்காதே அதை அங்கே வைக்காதே சீக்கிரமே எழுந்திரு என்றெல்லாம் சொல்வதற்கு ஆள் இல்லை இங்கு அவள் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எப்பொழுது வேண்டுமானாலும் வெளியில் போய் வரலாம், யாருடனும் போகலாம் என்பது மிகமுக்கியமானது.

தோழிகளுடன் வெளியே போகும்பொழுது தான் இவள் பார்த்தாள் நிறைய பேர் தோழர்களுடன் ஜோடி ஜோடியாகச் சுற்றுவதை. இவளுக்கும் அந்த ஆசை வந்தது. தன் கருப்பு அக்காவுக்கு எப்பொழுது கல்யாணம் ஆவது, அப்புறம் தனக்கு ஆகி, கணவனுடன் இப்படி சுற்றுவது?....ஹூம்… அவளுக்கு கல்யாணம் ஆக எப்படியும் இன்னும் 3 -4 வருடங்களாவது ஆகும். அவளுக்கு இப்பொழுது பார்க்க ஆரம்பித்தாலே லேட் ஆகும். ஆனால் அவளோ இன்னும் 2 வருடங்கள் போகட்டும், தங்கையின் படிப்பு முடியட்டும் என்று சொல்லி இருக்கிறாள்.

அவள் அப்படி சொன்னதால், தானும் இப்பொழுது தன் சம்பளத்தின் ஒரு பகுதியை ஊருக்கு அனுப்பியாகவேண்டிய கட்டத்தில் தள்ளப்பட்டு இருக்கிறாள். இத்தனை நாள் அப்பா தானே எல்லாம் பார்த்துக் கொண்டார், தன்னையும் சேர்த்து..இப்பொழுது தான் என் செலவு இல்லையே அவர்களுக்கு… அது போதாதா?... நான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை அங்கு வேறு அனுப்ப வேண்டுமா?....அவளுக்குத் தேவையே இல்லாமல் அக்கா மேலும் பெற்றவர்கள் மீதும் கோபம் வந்தது. தான் இத்தனை குறுகிய இடைவேளி இல் இத்தனை சுயநலவாதியானதைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை.
தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  Empty Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

Post by krishnaamma Sun Nov 01, 2020 8:27 pm

ஸோ, அக்காவின் ஜாதகம் எடுக்கவே இன்னும் 2 – 3 வருடங்கள் ஆகும் பிறகு, அவள் கலருக்கு யார் அவளைப் பண்ணிக் கொள்வானோ… அப்புறம் அந்தக் கடன் அடைபடவேண்டும், பிறகு தான் தன் முறை வரும். அதற்கு குறைந்தது 5 – 6 வருடங்களாவது ஆகிவிடும். அதற்குள் தான் கிழவியாகிவிடுவோம், இந்த இள வயதில் அனுபவிக்காமல் எப்பொழுது அனுபவிப்பது என்று தோன்றியது அவளுக்கு. இந்த அற்புதமான வெதரில், ஒரு ஆணுடன் கை கோர்த்துக் கொண்டு, அணத்துக் கொண்டு நடப்பது எத்தனை சுகம் தரும் என்று யோசித்தாள். யோசித்ததே சுகமாய் இருந்தது அவளுக்கு.

இப்படியே ஒரு மாதம் போனது இவளுக்கு கை நிறைய சம்பளம் வந்தது. எல்லோரும் ட்ரீட் கேட்டார்கள். அவ்வளவு பணத்தை அவள் இதற்கு முன் தன் கைகளில் பார்த்ததில்லை. இதிலிருந்து ஊருக்கு அனுப்பவே அவளுக்கு மனம் இல்லை. என்றாலும் போனில் பேசும்போது அம்மாவைக் கேட்டாள். அதற்கு, அம்மாவும் அப்பாவும், “ நீ தில்லி இல் தனியாக இருப்பதால் சம்பளம் எதுவும் எங்களுக்கு அனுப்ப வேண்டாம். நீயே வைத்துக் கொள். ஆத்திர அவசரத்துக்கு உதவும். உனக்கே ஏதாவது ஒரு நெருக்கடி வரும்போது தேவையாக இருக்கும். எனவே நீயே வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டர்கள். அது இவளுக்கு பெரும் நிம்மதியைத் தந்தது.

அதனால் இஷ்டப்படி, கண்டதையும் வாங்கிக் கொள்ள முடிவு செய்தாள். அலுவலகத்தில் எல்லோருக்கும் ட்ரீட் கொடுத்தாள். இந்த முறை தோழிகளுடன் செல்வதற்கு பதிலாக, சாந்தகுமாருடன் போகலாமா என்று யோசித்தாள். தனக்கான சேஃபான ஜோடி, சாந்தகுமார் என்று யோசித்தாள்.

மேலும் இரவு நேரம் கழித்து வருவதற்கு அவன் துணை உபயோகமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள் அதனால் அவனிடம் கேட்டாள் அவன் முதலில் கொஞ்சம் ‘பிகு’ செய்தான், பிறகு யோசித்துவிட்டு ஒப்புக் கொண்டான் என்றாலும் அதிக நேரம் வேண்டாம் 8 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

எனவே இந்த வாரம் இவள் சாந்தகுமாருடன் டெல்லியைச் சுற்றிவந்தாள். தனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டாள். இருவருமாக வெளியே உணவு அருந்தினார்கள். மிகவும் மகிழ்ச்சியாக ரூமுக்கு திரும்பினாள். அவளுடைய தோழிகள் யாருடன் சென்றாய் என்று கேட்டபொழுது சாந்தா உடன் என்று சொல்லிவிட்டாள்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  Empty Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

Post by lakshmi palani Sun Nov 01, 2020 10:09 pm

பறவைக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. இனி என்னாகுமோ. நல்ல முடிவாக தருக கிருஷ்னாமா. வனக்கம்.
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்


பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Back to top Go down

நிதர்சனம்! சிறு கதை  by Krishnaamma :)  Empty Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum