புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Poll_c10எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Poll_m10எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Poll_c10 
5 Posts - 63%
heezulia
எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Poll_c10எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Poll_m10எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Poll_c10எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Poll_m10எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.!


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Oct 11, 2020 3:46 pm

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! WhatsApp-Image-2020-10-10-at-3.27.46-PM

சுமதி என் சுந்தரி என்ற படத்திற்காக “பொட்டு வைத்த முகமோ” என்ற பாடலை பாட வைக்க மெல்லிசை மன்னர், எஸ்பிபியை தேர்ந்து எடுத்தார். விஷயம் கேள்விப்பட்ட எஸ்பிபி மகிழ்ச்சி அடைவதை விட மிகவும் டென்ஷன்தான் ஆகிவிட்டார். காரணம் படத்தின் ஹீரோ சிவாஜி.
அந்தக் காலத்தில் சிவாஜி என்பதும் டிஎம்எஸ் என்பதும் வேறு வேறு அல்ல. டிஎம்எஸ்ஸில் ரசிகர்கள் சிவாஜியை பார்த்தார்கள். சிவாஜியிடம் ரசிகர்கள் டிஎம்எஸ்ஸை ரசித்தார்கள்.

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Sivaji-and-tms

அப்படிப்பட்ட சிவாஜிக்கு தன்னுடைய மென்மையான குரலில் பாடல் பாடினால் சிவாஜியை திருப்தி படுத்த முடியுமா? இல்லை சிவாஜி ரசிகர்களிடம் தான் தான் பெயரெடுக்க முடியுமா? பெயர் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் திட்டுக்கும் ஆளாக நேரிடுமே என்ற பயம் எஸ்பிபிக்கு.

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! WhatsApp-Image-2020-10-10-at-3.24.45-PM

அந்த நாளும் வந்தது. எஸ்பிபி சிவாஜிக்கு தன் முதல் பாடல் என்ற அந்த பயத்தோடவே ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சென்றார். ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்ற பாலுவுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கு நடிகர் திலகம் ஒரு நாற்காலியில் ஹாயாக அமர்ந்திருந்தார். எஸ்பிபிக்கு அவரை பார்த்தவுடன் அதிர்ச்சி. எக்ஸாம் ஹாலுக்குள் ஹெட் மாஸ்டரே வந்தது போல் ஒரு பயம்.

எஸ்பிபியை அருகே அழைத்த சிவாஜி, சிறிது நேரம் கேஷுவலாக பேசிவிட்டு சரி போய் பாடு என அனுப்பி விட்டார். “அப்பா எஸ்கேப்” என்ற மனநிலையுடன் எஸ்பிபி ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களில் ஓடிச்சென்று புகுந்துகொண்டார்.

உண்மையில் சிவாஜி அவரின் எந்த பாடல் ரெக்கார்ட்டிங்கிற்கும் பொதுவாக வருவதில்லை. ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கே இது பெரிய ஆச்சரியம். யார் பாடல் பதிவுக்கும் வராத சிவாஜி, இந்தச் சின்ன பையனின் ரெக்கார்டிங்கிற்கு ஏன் வந்தார் என்பது அனைவருக்கும் ஆச்சரியம்.

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! Sppb-odl

எஸ்பிபி டென்ஷன் எல்லாம் கொஞ்சம் விட்டுவிட்டு பாடல் பாட ஆரம்பித்தார். திடீரென ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் ஒரு தலை எட்டிப்பார்க்கிறது எஸ்பிபி திரும்பி பார்க்கிறார். அது சிவாஜியின் தலை கை கால்கள் வெட வெடக்க ஆரம்பிக்கின்றது. பாடல்கள் பாட முடியாமல் நாக்கு உளறர ஆரம்பிக்கின்றது. ரெக்கார்ட்டிங் நிறுத்தப்படுகின்றது.

சிவாஜி ரெக்கார்டிங் ரூமிற்குள் சென்றார். எஸ்பிபியிடம் சொன்னார். சில பேர் உன்னை குழப்பி இருப்பார்கள். சிவாஜிக்கு டிஎம்ஸ் குரல் தான் பொருத்தமாக இருக்கும் என்று. அதனால் டிஎம்எஸ் ஸ்டைலில் எனக்காக பாட முயற்சிக்காதே. உன் இயல்பான குரல், ஸ்டைல் எப்படியிருக்குமோ அதே குரலிலயே பாடு. உன்னுடைய குரலுக்கு நான் எப்படி நடிக்கிறேன் என்று நீ படத்தில் வந்து பாரு என்று சொன்ன சிவாஜி, எம்எஸ்வியிடமும் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

சுமதி என் சுந்தரியில் வரும் பொட்டு வைத்த முகமோ பாடலை இன்றும் பாருங்கள், வழக்கமான எல்லா படத்தைவிட இளமை துள்ளலுடன் மிக ஸ்டைலாக சிவாஜி நடித்து இருப்பார்.

அதற்கு சிவாஜி பயன்படுத்திய டெக்னிக் என்ன தெரியுமா. அந்தக் காலகட்டத்தில் வழக்கமாக எஸ்பிபி முத்துராமன், சிவகுமார் போன்றவர்கள் தான் அதிகமாக பாடிக்கொண்டிருந்தனர். சிவாஜி என்ன செய்தார் தெரியுமா முத்துராமனின் மேனரிசங்களையும் நடையும் சற்று இமிடேட் பண்ணி அந்தப் படத்தில் சிவாஜி பண்ணியிருப்பார்.

அதுவே ஒரு புதிய ஸ்டைலாக தோன்றும். இந்த காலத்தில், படத்துக்குப்படம் தன் குரலை கூட மாற்ற முடியாமல், எல்லா படத்திலும் எல்லா கேரக்டர்களுக்கும் ஒரே குரலில் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் கால நடிகர்களுக்கு மத்தியில், சிவாஜிகணேசன் அந்த காலத்திலேயே குரலுக்கு ஏற்றவாரெலாம் நடித்திருந்தார்.

அதுதான் அவர் நடிகர் திலகம்.

(ஜேம்ஸ் டேவிட்- ttnews.cinema)



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 7:11 am

எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! 103459460 எனக்காக மெனக்கிட வேண்டாம்… எஸ்.பி .பி க்கு வேண்டுகோள் வைத்த நடிகர் திலகம்.! 3838410834
-

படம்: சுமதி என் சுந்தரி
பாடியவர்கள்: s.p.பாலசுப்ரமணியம், p.சுசீலா


பொட்டு வைத்த முகமோ…
கட்டி வைத்த குழலோ…
பொன்மணிச் சரமோ…..
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…

பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ……
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…

தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தால்
புன்னகைப் புரிந்தால்….

(பொட்டு வைத்த…..)

ஆஆஆஆஆஆஆஅ………
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைப் போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தால்
லலாலலாலலாலலா…
என்னுடன் கலந்தால்…. லலாலலாலலாலலா…

ஆஆஆஆஆஆஆஆ……. ஹொஹொஹொஹோ…
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலாலலாலலாலலா…
நிழல் போல் மறைந்தாள்…. லலாலலாலலாலலா…

பொட்டு வைத்த முகமோ… ஓஓஓஓஓ….
கட்டி வைத்த குழலோ… ஓஓஓஒ…..
பொன்மணிச் சரமோ…..
அந்தி மஞ்சள் நிறமோ… லலாலலாலலாலலா…
அந்தி மஞ்சள் நிறமோ… லலாலலாலலாலலா…

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக