ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரை நூற்றாண்டுகால நடிப்பு பயணம்: காலத்தை வென்ற மனோரமாவின் திரைவாழ்க்கை

Go down

அரை நூற்றாண்டுகால நடிப்பு பயணம்: காலத்தை வென்ற மனோரமாவின் திரைவாழ்க்கை Empty அரை நூற்றாண்டுகால நடிப்பு பயணம்: காலத்தை வென்ற மனோரமாவின் திரைவாழ்க்கை

Post by ayyasamy ram Sun 11 Oct 2020 - 17:31

நடிகை மனோரமாவின் ஐந்தாம் ஆண்டு (2015 - 2020)
நினைவு தினம் இன்று. இந்த தினத்தில் அவர்
குறித்த சில சுவாரசியமான தொகுப்பை தற்போது
பார்க்கலாம்.
-
அரை நூற்றாண்டுகால நடிப்பு பயணம்: காலத்தை வென்ற மனோரமாவின் திரைவாழ்க்கை Manorama
-
இணையற்ற நடிப்பாற்றல், இசையமைப்பாளர்கள் கொண்டாடும் குரல் வளம், முந்தைய கதாபாத்திரத்தை பிரதி எடுக்காத நேர்த்தியான நடிப்பு என தமிழ் சினிமாவை அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக ஆட்சி செய்த நடிப்பு ராட்சசி, அனைவராலும் ஆச்சி என செல்லமாக அழைக்கப்பட்ட மனோரமா.

ஏழ்மையின் காரணமாக நாடக கொட்டகைக்குள் தின்பண்டம் விற்கும் சிறுமியாக வாழ்க்கையை தொடங்கிய மனோரமா, பின்னர் தன் வாழ்க்கை முழுவதையும் நாடகம், திரைப்படம் என கலைத்துறைக்காக அர்பணித்தார்.

கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தன் கலைப் பயணத்தை தொடங்கிய மனோரமா மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானர். பின்னர் களத்தூர் கண்ணம்மா, தில்லானா மோகனாம்பாள் என தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கவே அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

கிடைக்கும் கதாபாத்திரத்தில் ஒப்பற்ற நடிப்பை வெளிப்படுத்தும் மனோரமா தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் ஜில்ஜில் ரமாமணி கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தியிருந்த உடல் மொழி அவருக்கு சிவாஜிக்கு நிகரான ஈர்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்தது.

செந்தமிழ், கொங்கு தமிழ், இலங்கை தமிழ், சென்னை தமிழென அனைத்து வட்டார மொழிகளிலும் பேசும் வல்லமை பெற்றிருந்தது மனோரமாவிற்கு மாபெரும் பலமாக அமைந்தது.

கதாநாயகியாக நடித்து இருந்தாலும் 10 ஆண்டுகள் மட்டுமே வாய்ப்புகள்
கிடைத்து இருக்கும். ஆனால் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானதால்
தான் ஐந்து தலைமுறை கடந்து 50 ஆண்டுகளாக நடிக்கும் வாய்ப்பு
கிடைத்தது என ஆரம்பத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு
கிடைக்காததற்காக மகிழ்ச்சி வெளியிட்டார் மனோரமா.

மனோரமா திரையில் தோன்றினால் உடன்நடிக்கும் வேறெந்த நடிகர் மீதும் கவனம் திரும்பாது அளவிற்கு ரசிகர்களை தன் நடிப்பாற்றலால் கட்டிப் போடும் வல்லமை பெற்றிருந்தார் என்பதற்கு சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் மனோரமா நடித்திருந்த கண்ணம்மா கதாபாத்திரம் நல்ல உதாரணம்.

நாகேஷ் உடன் அதிக திரைப்படத்தில் ஜோடியாக நடித்த மனோரமா
சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, கஞ்சா கருப்பு
என பல தலைமுறைகள் கடந்தும் நகைச்சுவை காட்சிகளில் நடித்து
அசத்தினார்.

குறிப்பாக சின்ன கவுண்டர் திரைப்படத்தில் கவுண்டமணியுடன் மனோரமா நிகழ்த்தும் உரையாடல் இன்றளவும் ரசிகர்கள் நினைவில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரை நூற்றாண்டுகால நடிப்பு பயணம்: காலத்தை வென்ற மனோரமாவின் திரைவாழ்க்கை Empty Re: அரை நூற்றாண்டுகால நடிப்பு பயணம்: காலத்தை வென்ற மனோரமாவின் திரைவாழ்க்கை

Post by ayyasamy ram Sun 11 Oct 2020 - 17:31


வா வாத்தியாரே வூட்டாண்ட, மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் போன்ற பாடல்கள் இன்றளவும் மனோரமா குரலில் ரசிகர்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் மிக முக்கியமான பாடல்கள்.

நவராத்திரி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்தது போல கண்காட்சி திரைப்படத்தில் 9 வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் மனோரமா.

அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, என்டிஆர் என ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமைக்குரிய மனோரமா 1500 திரைப்படங்களிலும் 5 ஆயிரம் மேடை நாடகங்களிலும் நடித்து அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

உலகில் வேறு எந்த நடிகையும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டு மனோரமா மறைவிற்கு நேரில் வந்து இரங்கல் தெரிவித்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, மனோரமா தனது மூத்த சகோதரி என்றும் தன்னை அம்மு என பாசமுடன் எப்போதும் அழைப்பவர்
என்றும் கண்கலங்க பேசியது பலரையும் மனம் உருக செய்தது.

தலைமுறைகள் கடந்து அனைவர் மனதிலும் இடம் பிடித்த மனோரமா இன்னும் பல நெஞ்சங்களில் தாயாக, சகோதரியாக, பாட்டியாக தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் ஏதோ ஒரு வடிவில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.
-
தமிழ் நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum