ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:52 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

+2
ரஞ்சனி செல்வராஜ்
sncivil57
6 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Post by sncivil57 Tue Sep 22, 2020 7:14 pm

தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Post by sncivil57 Tue Sep 22, 2020 7:17 pm


சாவித்திரி கலைகளில் ஓவியம்



இப்போது மட்டுமல்ல, அப்போதும் தமிழ் சினிமா என்பது ஆண்களால் ஆளப்படும் உலகம் தான். கதாநாயகர்களை திருவுருக்களாகவும், நாயகியரை அழகு பதுமைகளாகவும் பார்க்கும் செல்லுலாயிட் சிற்பம்.

இப்போதை விட, 60 ஆண்டுகளுக்கு முன்னால், நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்போதும் கதாநாயகர்களே, சினிமா உலகை ஆண்டு கொண்டிருந்தனர். ஏறக்குறைய முடிசூடா மன்னர்களைப் போல. அதனால், உச்ச நடிகர்களோடு நடிக்க பெரும் போட்டியே நடக்கும்.


கதாநாயகன் தாத்தாவின் வயதில் இருந்தாலும், அவரோடு நடித்தால், பெரிய அளவில் வெளிச்சம் கிடைக்கும் என்பதால், உச்ச நாயகர்களோடு நடிக்க பெரும் போட்டி நடக்கும்.
குறிப்பாக, எம்.ஜி.ஆரோடு நடிக்க பலரும் தவம் கிடந்தனர். ஆனால், எம்.ஜி.ஆரே பலமுறை தன்னோடு நடிக்க கூப்பிட்டும், ஒரு நடிகை, அதை தவிர்த்தார் என்பதை நம்ப முடிகிறதா? அதை நிகழ்த்தி காட்டினார் ஒரு நடிகை.


அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
‘படப்பிடிப்பு தளத்தில் என்னால், ‘உம்’மென்று இருக்க முடியாது. படத்தில் அழகு பதுமையாக வந்து செல்லும் பாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது. என் நடிப்பு பசிக்கு தீனி போடும் பாத்திரங்கள் வேண்டும். அதனால் தான் அதை தவிர்த்தேன்’
இப்படி ஒரு வார்த்தையை இந்த கால நடிகையர் சொன்னால் கூட, தமிழ் சினிமா பார்வையாளர்கள் வியந்து பார்த்திருப்பர். ஆனால், 60 ஆண்டுகளுக்கு முன்னால் இதை சொன்னவர், நடிகை சாவித்திரி. அந்த துணிச்சல் தான், அவரை, அவரின் நடிப்பை, கடைசி வரை உயிர்ப்போடு வைத்திருந்தது.




இப்படித் தான், ஆந்திராவில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த ஒரு பெண், தமிழ் திரை உலகை தன்னுடைய நடிப்பால் ஆட்டுவித்தார். எதிலும் தேங்கி நிற்காமல், அடுத்தடுத்த புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவருடைய துடிப்பு தான், அவரை நடிப்போடு நிறுத்தி விடாமல், படங்களை இயக்கி மூன்று ‘ஹிட்’ படங்களை கொடுக்க உதவியது.


சாவித்திரி, துணிச்சலானவர். சிவாஜியுடன் போட்டி போடும் நடிகையர் திலகம். வாரி வழங்குவதில் ஏறக்குறைய பெண் வடிவிலான என்.எஸ்.கிருஷ்ணன். கணவருக்காக உயிரையே தரும் வகையில் அன்பு கொண்டவர். ஏழைகளுக்கு இரங்குபவர். நிறைய நல்ல குணங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறார்.


அதெல்லாம் சரி தான். ஆனால், எவரையும் கண்ணை மூடிக் கொண்டு நம்பினால், பெரும் சாம்ராஜ்யமும் மண்ணாகிப் போகும் என்பதற்கும் அவரே எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
அதனால் தான், இந்தியாவிலேயே முதல் முதலாக சிலை வைக்கப்பட்ட நடிகை, சொந்த வீட்டை விற்று, அண்ணாநகரில் ஒண்டிக்குடித்தனம் சென்றார். சாவித்திரியை அறிய முயலும் போது, ஜெமினி கணேசனின் வேறொரு முகம், இதில் நமக்கு கிடைக்கிறது. அது யாரும் அறியாத அவரின் இருண்ட முகம். நமக்கு அதிர்ச்சி தரும் முகம்.


சாவித்திரியை ஒரு நடிகை என்பதை தாண்டி, மேலும் அறிய முயல்வோருக்கு இந்த நூல் துணைபுரியும். அதிலும், அவர் படத்தில் இடம் பெற்ற பாடல்களின் வரியிலிருந்து அத்தியாயம் பிரித்திருப்பது, அழகு.


ஆனால், காட்சிகளை விவரிக்கும் விதங்களில், பழைய மொழிநடையே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இது புதிய வாசகனுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தும். பல இடங்களில், சாவித்திரிக்கு வக்காலத்து வாங்குவதற்காகவே, நூல் எழுதப்பட்டது போன்ற தோன்றத்தை ஏற்படுத்துகிறது.


சாவித்திரியின் தவறுகளை மேம்போக்காகவும், நியாயங்களை ஆழமாகவும் பார்க்கிறது. அதுமட்டுமின்றி, மிக முக்கியமான பிரச்னைகளில் சம்பந்தப்பட்டோரின் பெயர்களை நேரடியாக குறிப்பிடாமல் பூசி மொழுகுவதால், அந்த கால சம்பவங்கள் தெளிந்த நீர் போல் இல்லாமல், புகைமூட்டமாகவே மனதில் படிகின்றன.


மட்டுமின்றி எல்லாவற்றிலும் சார்பு பார்வையே உள்ளது. இதனால், ஆசிரியரின் கண்கள் வழியாக, சாவித்திரியை பார்க்க வேண்டிய நிலைமைக்கு வாசகன் தள்ளப்படுகிறான். இருந்தாலும், நாயகர்களை மட்டுமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தமிழ் சினிமாவில், ஒரு நாயகியின் வரலாற்றை வாசகனுக்கு முன் வைத்த விதத்தில், இந்த நூல் முக்கிய இடத்தை பெறுகிறது.


சாவித்திரியின் வீழ்ச்சிக்கு அவர் பக்கம் ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும், அவர் எப்போதும் தன்னுடன் குடி வைத்திருந்த ‘குடி’, அவருக்கு பேரழிவை தந்தது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ‘குடி’ குடியை கெடுக்கும் என்பதற்கு, அந்த அழகு சாம்ராஜ்யம் சரிந்ததும் ஒரு சாட்சி. சாம்ராஜ்யமே சிதையும் போது, சாமான்யம் எம்மாத்திரம்?



பதிவிறக்க இங்கு சொடுக்கவும்-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Post by sncivil57 Wed Sep 23, 2020 3:45 pm

தமிழ் நாவல்கள்



கங்காபுரிக் காவலன்பாகம்1&2 விக்கிரமன்

தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) 6126-M8c9-m-L-SX322-BO1-204-203-200





பாகம்-1-
தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG






பாகம்-2;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Post by sncivil57 Thu Sep 24, 2020 4:40 pm

சங்கதாரா-காலச்சக்கரம்’ நரசிம்மா


சங்கதாரா – ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?


என்.டி. ராமராவை போலத்தான் கிருஷ்ணன் இருப்பார்! கே.ஆர். விஜயாவை போல்தான் அம்மன் இருப்பாள்! சிவாஜி கணேசனை போல்தான் கட்டபொம்மன் இருப்பான் - என்று தாங்களாகவே இவர்களை உருவகப்படுத்திக் கொண்டு, உண்மையான இறை சொரூபம் தங்கள் முன் தோன்றினாலும், அவை தங்கள் மனதில் உருவகப்படுத்திக் கொண்ட ரூபங்களுக்கு அப்பாற்பட்டு இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்! அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அம்மன் கே.ஆர். விஜயா போன்று இல்லை என்று நாம் சொன்னால், எதை ஆதாரமாக வைத்து இப்படிக் கூறுகிறீர்கள் என்று நம்மைக் கேட்டால், நாம் என்ன பதில் கூறமுடியும்!



பொன்னியின் செல்வன் படித்து சோழர்குல செம்மல்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று உருவகப்படுத்திக் கொண்டு விட்டவர்கள் பலர்! பத்மினியை குந்தவையாகவும், வைஜெயந்தி மாலாவை நந்தினியாகவும் இருத்தியிருக்கிறேன் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்! வக்கீல் என்றால் வரதாச்சாரி, க்ளப் டான்சர் என்றால் ரீட்டா, அடியாள் என்றால் ஜம்பு என்று தமிழ் திரையுலகம் நமக்கு போதித்து விட்டது! வரதாச்சாரி என்று அடியாள் வந்தாலும் ஏற்க மாட்டோம்! ஜம்பு, முனியன் என்று வக்கீல்கள் வந்தாலும் ஏற்க மாட்டோம்! இப்படிப்பட்ட வாசகர்களுக்காக சங்கதாரா எழுதப்படவில்லை.



photo









சோழர் சரித்திரத்தில் துண்டு துண்டாக மர்மங்கள். சம்பவங்களுக்கு காரணகர்த்தா யார் என்று கூற இயலாதபடி அடுக்கடுக்காக பல நிகழ்வுகள்! இவற்றைக் கையாள பல எழுத்தாளர்கள் முன்வரவில்லை என்றே கருதுகிறேன். விஞ்ஞானம் உலகையே ஆளும் இன்று, MH-370 என்கிற மலேசிய விமானம் காணாமல் போய் விட்டது! விபத்து என்று கூற இயலாதபடி அதன் நொறுங்கிய உதிரி பாகங்களும் கிடைக்கவில்லை. விஞ்ஞானமும், பகுத்தறிவும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள இதே காலகட்டத்தில்தான், அமானுஷ்யமும், மர்மமும் வெற்றிகரமாக இன்னொரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.



மீண்டும் கூறுகிறேன்! சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலின், பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) ஆதித்த கரிகாலனின் கொலைதான்! பல எழுத்தாளர்களும், சரித்திரப் பேராசிரியர்களும் நுழைய மறுத்த இந்தப் பகுதிக்கு ‘சங்கதாரா’ என்னும் தோணியில் சென்றுவிட்டு, பத்திரமாக திரும்பி வந்திருக்கிறேன்.



விரைவில் இன்னும் பல சோழ மர்மங்களை விடுவிக்க எண்ணும்




பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Post by sncivil57 Fri Sep 25, 2020 8:14 pm


நேதாஜி மர்ம மரணம்


நேதாஜி என்ன ஆனார்? இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும், எத்தனையோ விசாரணை ஆணையங்களை நியமித்த பிறகும், பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆய்வுகளும் விசாரணைகளும் நடத்தப்பட்ட பிறகும் சுபாஷ் சந்திர போஸ் குறித்த மர்மம் நீங்கியபாடில்லை.

இந்திய விடுதலைக்காக நேதாஜி வடிவமைத்த ரகசியத் திட்டம் என்ன? இனவெறி கொண்ட ஹிட்லருடன் அவர் கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்பினாரா? ஹிட்லருடனான அவர் சந்திப்பு எப்படி இருந்தது? முசோலினியிடம் என்ன பேசினார்? ஜப்பானுடன் அவர் நெருக்கமானது எப்படி? ரஷ்யாவோடு அவருக்கு இருந்த தொடர்பு எத்தகையது? காந்தியின் தலைமையை நிராகரித்துவிட்டுதான் ஆயுத வழியை அவர் தழுவிக்கொண்டாரா?

photo

‘சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்துவிட்டார்’ என்னும் அறிவிப்பு முதல்முதலில் செய்தித்தாளில் வெளிவந்த நாள் தொடங்கி இன்று வரையில் அவரை முன்னிறுத்தி நடைபெறும் சர்ச்சைக்குரிய விவாதங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகம் விரிவாகப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களையும் விரிவாக அறிமுகப்படுத்துகிறது.

ரமணனின் விரிவான தேடுதலும் விறுவிறுப்பான எழுத்தும் புத்தகத்துக்குக் கூடுதல் வலு சேர்க்கின்றன.



பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Post by sncivil57 Fri Sep 25, 2020 8:31 pm


மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்-பா.ராகவன்



நக்ஸல்பாரியில் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி, தேசம் முழுவதும் பரவிப் படர்ந்த வரலாறை இந்நூல் கண்முன் நிறுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளைத்தான் அரசு கருதுகிறது. அவர்களோ தேசத்தின் முதல் விரோதி அரசாங்கமே என்கிறார்கள்


photo



பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG






இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Post by sncivil57 Sat Oct 24, 2020 3:45 pm



கல்யாணிபுரத்துக் காவலன்: சரித்திர நாவல்-ஆர். எம். இணுவில் கிருபாகரன்



இலங்கை தீவில் இருக்கும் நாக நாட்டையும் கல்யாணிபுரத்தையும் மையமாகக் கொண்டு எதிரிகளின் சூழ்ச்சியை அவர்கள் முறியடித்த விதத்தையும் மறைந்திருந்த அரசியல் உண்மைகள் வெளிப்பட வேண்டிய சூழலையும் சொல்கிறது.

நாகநாட்டு படைதளபதி செம்பருத்தியன் அரசுமுறை பயணமாகக் கல்யாணிபுரத்திற்கு வந்தவன் இளவரசி பூவழகியிடம் மயங்கினாலும் அரச பரம்பரையில் சேராத தன்னை மன்னன் ஏற்றுக்கொள்வாரோ என்ற தயக்கத்திலே நாட்களைக் கடத்துகிறான்.







photo




கல்யாணிபுரத்து அரசனின் வாரிசு தான் செம்பருத்தியன் என்ற உண்மை வெளிவரும் போது அனைத்தும் சுமூகச் சூழலை எட்டி விடுகிறது.

எதிரிகளிடம் நாட்டை விட்டு நாகநாட்டின் காட்டில் தஞ்சமடைந்த செம்பருத்தியனின் பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு அவன் தவசியாரிடம் தஞ்சமடைந்த உண்மை வெளிவருகிறது.

சரித்திர புதினத்தில் போர் இல்லாமல் எழுதப்படுவது சுவாரசியமில்லை அதற்கேற்ப இரு நாடுகளையும் சுற்றி இருக்கும் சிற்றரசுகள் கையாளும் தந்திரத்தை இவர்களின் வாள் வீச்சில் முறியடித்த பகுதி விவரிக்கிறது




பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Post by sncivil57 Sat Oct 24, 2020 4:17 pm



இராஜகேசரி கோகுல்-சேஷாத்ரி


இப்புதினத்தின் கதைநிகழ் காலம் கிபி 1003. ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளன்று விமரிசையான கொண்டாட்டத்திற்குத் தயராகிக் கொண்டிருந்தது சோழர் தலைநகரம்.. அரசரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள, நாட்டின் பிறபகுதிகளிலிருந்து மக்கள் தலைநகரை நோக்கி வந்து குவிந்தனர்.



photo-2






ஓராண்டுக்கு முன் ராஜராஜனால் திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்ட ராஜராஜேஸ்வரம் (பிரகதீசுவரர் கோயில்) உருவாகிக் கொண்டிருந்தது. . பெரிய பெரிய கற்கள் யானைகளால் இழுக்கப்பட்டப் பாரவண்டிகளிலிலிருந்து இறக்கப்பட்டன. திட்டத் தலைமைக் கணக்கர் ஆதித்தன் சூரியன், அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பல வகையான பணிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். சிற்பிகள், சித்திரக்காரர்கள், தொழில் வல்லுநர்கள், சமயக் குரவர்கள் என பலதுறை வல்லுநர்களால் நிறைந்திருந்தது அந்த வளாகம். கடவுளுக்குப் பணிசெய்ய தேவரடியார் எனப்படும் 400 நடன மங்கையர் நாட்டின் பலபாகங்களிலிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருந்தனர். பிறந்த நாள் விழாவில் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட “ராஜராஜ விஜயம்” என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற விஜயராஜ ஆச்சாரியரின் தலைமையில் முனைப்பாக ஒத்திகைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தன


சோழநாட்டின் தலைநகரம் இவ்வாறு பிறந்த நாள் விழாக் கொண்டாட்ட ஏற்பாடுகளில் மகிழ்ச்சியோடு மூழ்கியிருக்க,


பலநூறு காதங்களுக்கு அப்பால், சேரநாட்டு எல்லைகுட்பட்ட காட்டுப்பகுதியில் ராஜராஜ சோழனுக்கு எதிராக சதித் திட்டம் உருவானது. சதித்திட்டத்தை நிறைவேற்றச் சதிகாரர்கள் சோழர் தலைநகருக்குள் ஊடுருவி தக்க தருணத்தை நோக்கிக் காத்திருந்தனர். அதே சமயம் போரில் ஏற்பட்ட காயத்தால் படையிலிருந்து விலகி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மூத்த வீரன் கண்முன் ஒருவன் கொலை செய்யப்படுகிறான். கொலையுண்டவன் இறக்குமுன் அவ்வீரனிடம் சோழ அரசனைக் கொல்ல உருவாகும் சதியைப் பற்றித் தெரிவித்துவிட்டு மாண்டு போகிறான்.



அதன் பின் அவ்வீரன் அரசியல் சதிச் சூழலில் சிக்கி மேற்கொள்ளும் பயணமும் விளைவுகளுமே இக்கதை.


பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG


இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Post by sncivil57 Sat Oct 24, 2020 5:37 pm


பாண்டிய நெடுங்காவியம் -ஸ்ரீஜா-பாகம்-1,2 &3




கோவலனுக்கு தவறான தீர்ப்பு சொல்லியதால் தன் உயிரையே போக்கிக்கொண்ட ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் வரலாறும் கண்ணகி மதுரையை எரித்த பிறகு நடந்த வரலாறும் தான் பாண்டிய நெடுங்காவியம்.



பாகம்-1



photo



மதுரையின் மாண்பு, அப்போதிருந்த வாழ்க்கை முறை, கல்விச்சாலை ஆகியவை விளக்கமாக இடம் பெறுகின்றன. அதோடு எழுவர் சேர்ந்து பாண்டியனின் மகன் மீது இக்கட்டான சூழலில் படையெடுத்து வருகிறார்கள். அதனை செய்வித்தது குவளை மாறன் என்னும் பாண்டிய நாட்டான் தான். ஏன் அப்படிச் செய்தான்? எதிர் நாயகனான குவளை மாறனின் அறிவு நுட்பத்தை கண்டு மகிழுங்கள். மாங்கிடி மருதனாரின் இனிய மகளான செண்பகக் குழலியின் அழகும் வீரமும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். புலவர் மகள், மன்னன் மகன் காதல் என்னவானது? நமது பண்டைத்தமிழர் நாகரீகத்தைம் வரலாற்றையும் புரிந்து கொள்ள படியுங்கள் பாண்டிய நெடுங்காவியம்






பாகம்-2




photo




இந்த படலத்தில்




குவளை மாறன் போட்ட திட்டங்கள் நிறைவேறியதா? இளவரசன் என்ன ஆனான் எனத் தெரிந்து கொள்ளலாம். இப்புத்தகத்தில் செண்பகக் குழலியின் மனதில் பெருத்த மாற்றம் ஏற்படுகிறது. அவளது காதலை பின்னுக்குத் தள்ளி விட்டு கடமை உணர்வு நெஞ்சில் இடம் பிடிக்கிறது. அதற்குக் காரணமான நிகழ்வு என்ன?




தெரிந்து கொள்ள படியுங்கள் பாண்டிய நெடுங்காவியம் முதல் பாகம் இரண்டாம் படலம்




பாகம்-3




photo




பழந்தமிழரின் தியாக மனப்பான்மை, நாட்டுக்காக உயிரையும் கொடுக்கத்துணிந்த வீரம், தன் நலத்தை விட பிறர் நலத்தைப் பேணும் பண்பு ஆகியவை அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் அன்புக்கு உரியவளான செண்பகக் குழலியும் அவளது காதலனும் என்ன ஆனார்கள் என மிகச் சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது




பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;-



பாகம்-1-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG





பாகம்-2;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG






பாகம்-2;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG








இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Post by sncivil57 Mon Oct 26, 2020 7:12 pm



அந்தப்புரம்-தாமரை மணாளன்-3.6 mb





photo



பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) F4OQenG



இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Back to top Go down

ஈகரை Re: தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum